Saturday 2 July 2016

pojanam seya varungal


12 comments:

  1. போஜனம் செய்ய வாருங்கள்
    போஜனம் செய்ய வாருங்கள், ராஜ
    போஜனம் செய்ய வாருங்கள்
    ராஜ போஜனம் செய்ய வாருங்கள்

    மீனாக்ஷி சுந்தரேச கல்யாண மண்டபத்தில்
    போஜனம் செய்ய வாருங்கள்

    மீனாக்ஷி சுந்தரேச கல்யாண மண்டபத்தில்
    போஜனம் செய்ய வாருங்கள்

    சித்திரமான, நவ சித்திரமான
    கல்யாண மண்டபத்தில்

    வித விதமாகவே வாழைகள் கட்டி
    வெட்டி வேர் கொழுந்து தோரணங்களும்

    மாட்டிய கூடமும், பவழ ஸ்தம்பவும்
    பச்சை மரகதங்கள், தல கதி செய்களும்,

    முத்து முத்தாகவே நுனி வாழைகளும்,
    பசும் பொன்னால் செய்த பஞ்ச பாத்ரங்களும்

    பன்னீர் ஜலத்துடன் உத்ஹிரனியுமே ,
    முத்து முத்தாகவே முன்னே தெளிக்க

    போஜனம் செய்ய வாருங்கள்
    ராஜ போஜனம் செய்ய வாருங்கள்

    மும்மூர்த்தி சகல தேவர்களும் கூட,
    அன்னம், பார்வதி, ஆதி பரா சக்தி,

    அருந்ததி, இந்த்ராணி, அகல்யா, கௌசல்யா ,
    திரௌபதி, சீதா, தாரா, மண்டோதரி ,

    இந்திரா தேவி, ரம்பை, திலோத்தமை,
    கந்தர்வ பத்தினி, கின்னர தேவி ,

    அஷ்ட திக் பாலகர்கள் பாரியாள் உடனே,
    சப்த மகா முனி ரிஷி பத்தினிகளும்,

    பந்தடித்தார் போல் பட்டுக்கள் கட்டி,
    கச்சை மெட்டுக்கள் கொள்ளு கொள்ளுவென,

    பசும் பொன் தட்டிலே பாயசங்கள் எடுத்து,
    பரிந்து பரிந்து பரிமாறிட வந்தார்

    போஜனம் செய்ய வாருங்கள்
    செய்ய வாருங்கள்

    ReplyDelete
  2. போஜனம் செய்ய வாருங்கள் – பாடல் வரிகள்:

    போஜனம் செய்ய வாருங்கள்
    மீனாக்ஷி சுந்தரேச கல்யாண மண்டபத்தில்
    போஜனம் செய்ய வாருங்கள்

    நவ சித்ரமானதோர் கல்யாண மண்டபத்தில்
    போஜனம் செய்ய வாருங்கள்

    வாழை மரத்துடன் வெட்டி வேர் கொழுந்து
    மாவிலைத் தோரணம் பவழ ஸ்தம்பம்

    நாட்டிய கூடம் பச்ச மரகதம்
    பதித்த செவர்களும் பசும்பொன் தரையில்

    பலவர்ண பொடியினால் பதித்த கோலத்தில்
    நட்ட நடுவே குத்து விளக்கேற்றி

    தூண்கள் தோறும் தூண்டா விளக்கும்
    சுற்றிலும் தீபங்கள் மணிகளும் அசைய

    பந்திபந்தியாய் பாயை விரித்து
    உத்தரணியுடன் ஜலபாத்திரங்களும்

    தலைவாழை இலை போட்டு தப்பாமல் இடம்பண்ணி
    போஜனம் செய்ய வாருங்கள்

    மும்மூர்த்திகளுடன் முனிவர்கள் தேவர்கள்
    யக்ஷகின்னரர் கந்தர்வர்களும்

    அஷ்டதிக்கு பாலகர்கள் சூழ
    அந்தணர்களும் முன்பந்தியிலே

    அணிஅணியாக அவரவர் இடத்தில்
    அழகாய் இருந்தார்

    அகல்யை திரௌபதி சீதை தாரை
    மண்டோதரியுடன் பந்தடித்தார்போல் பட்டுகள் கட்டி

    கெஜ்ஜை மெட்டிகள் கிலுகிலுங்கவே
    முத்திரை மோதிரம் விரலில் கொண்டு

    பசும்பொன் தூக்கில் பாயாசத்தை எடுத்து
    பார்த்து பார்த்து பரிமாறவே வந்தார்

    போஜனம் செய்ய வாருங்கள்
    மாந்தயிர் பச்சடி தேங்காய்பூ கோசுமல்லி

    இரங்கிக்காய் கிச்சடி பரங்கிக்காய் பச்சடி
    விதம்விதமாகவே வற்றல் அப்பளம்

    பாங்குள்ள கூட்டு டாங்கர் பகுத்தெடு
    சிலாபிஞ்சு கறியும் பலாபிஞ்சு கறியும்

    பாகற்காய் கசக்கல் கத்திரிக்காய் துவட்டல்
    வாழைக்காய் வருவல் வாழைப்பூ துருவல்

    குங்குருக்கு சுகமான சம்பா அரிசியென
    மொத்த பருப்பும் புத்துருக்கு நெய்யும்

    போஜனம் செய்ய வாருங்கள்

    பொரிச்ச குழம்பு பூசணிக்காய் சாம்பார்
    வெண்டைக்காய் மோர்க்கடி வெங்காய சாம்பார்

    வாய்க்கு மிக ருசிக்கும் மிளகு ஜீரா ரசம்
    மதுரமாய் இருக்கும் மைசூர் ரசமும்

    பருப்புகள் சேர்த்த பன்னீர் ரசமும்
    வேணுவோர்க்கெல்லாம் வேப்பம்பூ ரசமும்

    குடிக்க மிக ருசிக்கும் கொட்டு ரசமும்
    சூர்ய உதயம்போல் சீரும் அப்பளம்

    சுக்ல உதயம் போல் ஜெவ்வரிசி கருவடாம்
    அக்கார வடிசல் சக்கரைப் பொங்கல்

    என்னென்ன சுண்டல் வகையான வடை
    சுமசாலா வடை வெங்காய வடை

    சொஜ்ஜி வடையுடன் நல்லெண்ணை வடை
    தயிர் வடையும் பால் போளிகளும்

    அனாரசம் அதிரசம் பதிர் பேணியுடன்
    சேமியா ஹல்வா ஜிலேபி லட்டு

    முத்து முத்தாய் இருக்கும் முந்திரி லாடு
    ரம்மியமாய் இருக்கும் ரவா லாடு

    பேஷா இருக்கும் பேசரி லாடு
    குண்டுகுண்டாய் இருக்கும் குஞ்சா லாடு

    பளபளவெனருக்கும் பயத்தமா லாடு
    மைசூர் பாகுடன் பர்ஃபியும் சேர்த்து

    போஜனம் செய்ய வாருங்கள்

    பொரிகனி வர்கங்கள் பச்சை நாடாம்பழம்
    தேன்கதளி பழம் செவ்வாழை பழம்

    நேந்திரம் பழத்துடன் மாம்பழ தினுசுகள்
    பலாப் பழத்துடன் வாடை பரிமளிக்கும்

    ஆடைதயிர் வெண்ணை தங்காமல் சேர்த்து
    பகாளாபாத், பல தினுசான சித்திரான்னங்களும்

    ரஞ்சிதமாகிய இஞ்சி ஊறுகாய்
    வெடுக்கென கடிக்கும் மாவடு ஊறுகாய்

    பாவக்காய் ஊறுகாய் வேப்பிலைக்கட்டி
    கொத்தமல்லிச் சட்னி மிளகாய்ப் பொடியுடன்

    மிளகாய் பச்சடி
    பந்தியில் பரிமாறினார்

    மீனாக்ஷி சுந்தரேச கல்யாண மண்டபத்தில்
    பார்த்துப் பரிமாறினார்…

    ReplyDelete
  3. மிகவும் அருமையான அழகான வேடிக்கையான பாடல்.

    பகிர்வுக்கு நன்றிகள்.

    இரண்டாவதாக நான் அனுப்பியுள்ளதில்தான், முழுப் பாடலும் இடம் பெற்றுள்ளது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    ReplyDelete
  4. https://www.youtube.com/watch?v=y8_AvoUIBd0

    மேற்படி இணைப்பினில் ராஜ் டி.வி. ’ஸ்வர்ண சங்கீதம்’ நிகழ்ச்சியில் செல்வி: ’ஸ்வேதா’ என்ற இளம் பெண், பலவித பக்க வாத்யங்களுடன், இதே பாடலை, திருமதி. நித்யஸ்ரீ போன்ற பல்வேறு பிரபல பாடகர்கள் (ஜட்ஜ்கள்) முன்னிலையில், மிக அருமையாகப் பாடுகின்றாள். :)))))

    அனைவரும் அதனை அவசியமாகக் கேட்டு மகிழுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    ReplyDelete
  5. அந்தப்பெண் இந்த மிக நீண்ட அழகான பாடலைப்பாடி அப்படியே தம்கட்டிப் பாடி முடித்ததும், அனைவரும் கைத்தட்டி பாராட்டும்போது, முகம் மலர்ந்து, ஒருவித வெட்கத்துடன், ’அந்தப்பெண்ணின் கன்னத்தில் குழி விழுந்து அவள் சிரிப்பது’ எனக்கு மிகவும் பிடித்துள்ளது. :)

    ReplyDelete
  6. ஒ..... இது கிருஷ் அனிவர்ஸரிக்காக போட்டியா.. குட்.. சாப்பிட வரவா????

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர் 3 July 2016 at 05:24

      //ஓ..... இது கிருஷ் அனிவர்ஸரிக்காக போட்டியா.. குட்..//

      யாரைக் கேட்கிறீர்கள் ?

      //சாப்பிட வரவா????//

      ஒருவேளை என்னிடம் சாப்பிட வந்தால் உங்களுக்குப் ’பஹூத் படா கானா’ விருந்தே என்னிடம் கிடைக்குமாக்கும்.

      அனைத்தையும் பார்த்த மாத்திரத்தில் மயங்கிப்போய் சொக்கிப்போய் விழுந்துடுவீங்கோ என்பது நிச்சயம். :)

      நேற்று எங்கள் குடும்பத்தில் உள்ள மொத்தம் 12 நபர்களில், தற்சமயம் வெளிநாட்டில் உள்ள நால்வர் தவிர, மீதி உள்ளூரில் உள்ள 8 நபர்களும், ஓர் மிகப்பெரிய ஸ்டார் ஹோட்டலில் இரவு விருந்து சாப்பிட்டு மகிழ்ந்தோம்.

      உங்கள் எல்லோரையும் மனதில் நினைத்துக்கொண்டேதான் சாப்பிட்டேன். நேற்றைய ’மின்னலு முருகு’ கல்யாண நினைவும் மனதில் அவ்வப்போது நிழலாடியது.

      Delete
    2. //ஒருவேளை என்னிடம் சாப்பிட வந்தால் உங்களுக்குப் ’பஹூத் படா கானா’ விருந்தே என்னிடம் கிடைக்குமாக்கும்.//

      ஆசைதான் விருந்து சாப்பிட......

      Delete
    3. //ஒருவேளை என்னிடம் சாப்பிட வந்தால் உங்களுக்குப் ’பஹூத் படா கானா’ விருந்தே என்னிடம் கிடைக்குமாக்கும்.//

      ஆசைதான் விருந்து சாப்பிட......

      Delete
    4. பூந்தளிர் 4 July 2016 at 05:43

      **ஒருவேளை என்னிடம் சாப்பிட வந்தால் உங்களுக்குப் ’பஹூத் படா கானா’ விருந்தே என்னிடம் கிடைக்குமாக்கும்.**

      //ஆசைதான் விருந்து சாப்பிட......//

      எனக்கும் ஆசையோ ஆசைதான், என்மீது ஓர் ஆத்மார்த்த பிரியம் வைத்துள்ள ’ஸத்பாத்திரம்’ ஆகிய உங்களுக்கு மட்டுமாவது விருந்தளித்து உங்களையும் மகிழ்வித்து நானும் மகிழ. :)

      ’அந்த நாளும் வந்திடாதோ’

      இது நான் எழுதியுள்ளதோர் கவிதையின் தலைப்பாக்கும். http://gopu1949.blogspot.in/2011/04/blog-post.html

      Delete
  7. போஜனம் செய்ய திருச்சிக்கே வர ஆசைதான்...))))

    ReplyDelete
    Replies
    1. ப்ராப்தம் 3 July 2016 at 21:53

      //போஜனம் செய்ய திருச்சிக்கே வர ஆசைதான்...))))//

      ஆஹா, வாங்கோ ..... வாங்கோ. WELCOME TO YOU ! :)

      ஆத்துக்காரருடனும், குழந்தை குட்டிகளுடனும் அடுத்த வருஷம் வாங்கோ. எல்லோரையும் ஒரேயடியாக, ஒரே நேரத்தில் ஆசைதீரப் பார்த்ததுபோல இருக்கும்.

      எனக்கும் கூட நாசிக் வழியாக பயணம் மேற்கொண்டு, அங்கிருந்து தகுந்ததோர் துணையுடன் மும்பைக்கு வரணும் போல மிகவும் ஆசையாகத்தான் உள்ளது.

      நாம் ஆசைப்படுவதெல்லாம் உடனுக்குடன் நடந்து விடுமா என்ன?

      அததற்கு ஒரு நேரம், காலம், ப்ராப்தம் எல்லாம் கூடி வரணுமோள்யோ ! :)))))

      Delete