Friday 15 July 2016

kaathodu than naan pesuven

6 comments:

  1. காதோடுதான் நான் பாடுவேன்
    மனதோடுதான் நான் பேசுவேன்

    விழியோடுதான் விளையாடுவேன்
    உன் மடி மீதுதான் கண் மூடுவேன்

    காதோடுதான் நான் பாடுவேன்
    மனதோடுதான் நான் பேசுவேன்

    விழியோடுதான் விளையாடுவேன்
    உன் மடி மீதுதான் கண் மூடுவேன்

    காதோடுதான் நான் பாடுவேன்...

    வளர்ந்தாலும் நான் இன்னும் சிறு பிள்ளைதான்
    நான் அறிந்தாலும் அது கூட நீ சொல்லித்தான்

    உனக்கேற்ற துணையாக எனை மாற்றவா?
    உனக்கேற்ற துணையாக எனை மாற்றவா?

    குல விளக்காக நான் வாழ வழி காட்டவா?

    காதோடுதான் நான் பாடுவேன்....

    பாலூட்ட ஒரு பிள்ளை அழைக்கின்றது
    நான் படும் பாட்டை ஒரு பிள்ளை ரசிக்கின்றது

    பாலூட்ட ஒரு பிள்ளை அழைக்கின்றது
    நான் படும் பாட்டை ஒரு பிள்ளை ரசிக்கின்றது

    எனக்காக இரு நெஞ்சம் துடிக்கின்றது
    இதில் யார் கேட்டு என் பாட்டை முடிக்கின்றது

    காதோடுதான் நான் பாடுவேன்
    மனதோடுதான் நான் பேசுவேன்
    விழியோடுதான் விளையாடுவேன்
    உன் மடி மீதுதான் கண் மூடுவேன்...

    ReplyDelete
  2. பாடல்: காதோடுதான் நான் பாடுவேன்...

    படம் : வெள்ளி விழா

    இசை : குமார்.V

    பாடல் : வாலி

    பாடியவர் : L.R. ஈஸ்வரி

    ReplyDelete
  3. அழகான அருமையான இனிமையான அர்த்தமுள்ள பாடல்.

    காட்சிகளிலும் இனிமையோ இனிமை.

    பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  4. பாடல் காட்சி அமைப்பு ரொம்ப நல்லா இருக்கு....

    ReplyDelete
  5. எல் ஆர் ஈஸ்வரி எவ்வளவு இனிமையான குரலில் பாடி இருக்காங்க...

    ReplyDelete
    Replies
    1. சிப்பிக்குள் முத்து. 18 July 2016 at 04:51

      //எல் ஆர் ஈஸ்வரி எவ்வளவு இனிமையான குரலில் பாடி இருக்காங்க...//

      ஆமாம். இருப்பினும் எல். ஆர். ஈஸ்வரி என்றாலே என் நினைவுக்கு உடனே வருவது அவள் பாடிய மிகப்பிரபலமான டப்பாங்கூத்து பாட்டு. அதை அன்று தமிழ்நாட்டில் முணு முணுக்காதவர் வாயும் உண்டோ :)

      ‘எலந்த பழம் ... எலந்த பழம் ... எலந்த பழம் ... போடு, செக்க சிவந்த பழம் ... இது தேனாட்ட(ம்) இனிக்கும் பழம் ... எல்லோரும் வாங்கும் பழம் ... இது ஏழைக்கின்னு பிறந்த பழம் ... எத்தனையோ பேருக்கிட்டே எலந்த பழம் பார்த்தையே ... எடுத்துப் பார்த்த பழங்களிலே இம்மா பெரிசு பார்த்தையா ... :) .... என்ன மனுஷன்யா ... எவளுக்கு நீ புருஷன்யா ... வாங்கய்யா .... வந்து வாங்கிப்போட்டு துணிய விரிச்சுத் தூங்கைய்யா’

      {இந்தப்பாடல் இடம்பெற்ற படம் ‘பணமா பாசமா’ 1968 ஆம் ஆண்டு வெளிவந்த மிகச்சிறந்த + எனக்கு மிகவும் பிடித்தமான, தமிழ்த் திரைப்படமாகும்.

      கே. எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், சரோஜா தேவி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

      இசை கே. வி. மகாதேவன், பாடல்கள் கவியரசு கண்ணதாசன்.

      என்னால் என்றுமே மறக்க முடியாத கதை இது. சொல்லத்தான் நினைக்கிறேன் ...... :)

      Delete