Saturday 16 July 2016

pasumai niraintha ninaivukale

10 comments:

  1. பசுமை நிறைந்த நினைவுகளே
    பாடித்திரிந்த பறவைகளே

    பழகிக் கழித்த தோழர்களே
    பறந்து செல்கின்றோம்

    பசுமை நிறைந்த ....

    குரங்குகள் போலே மரங்களின் மேலே
    தாவித்திரிந்தோமே (2)

    குயில்களைப் போலே இரவும் பகலும்
    கூவித் திரிந்தோமே (2)

    வரவில்லாமல் செலவுகள்
    செய்து மகிழ்ந்திருந்தோமே (2)

    வாழ்க்கைத் துன்பம் அறிந்திடாமல்
    வாழ்ந்து வந்தோமே

    நாமே வாழ்ந்து வந்தோமே

    பசுமை நிறைந்த ....

    எந்த ஊரில் எந்த நாட்டில் என்று காண்போமோ (2)
    எந்த அழகை எந்த விழியில் கொண்டு செல்வோமோ (2)

    இந்த நாளை வந்த நாளில் மறந்து போவோமோ (2)
    இல்லம் கண்டு பள்ளி கொண்டு மயங்கி நிற்போமோ
    என்றும் மயங்கி நிற்போமோ

    பசுமை நிறைந்த நினைவுகளே ....

    ReplyDelete
  2. படம்: இரத்தத்திலகம்

    பாடியவர்கள்: டி.எம்.செளந்தரராஜன் + பி. சுசிலா

    இசை: கே.வி. மஹாதேவன்

    பாடலாசிரியர்: கண்ணதாசன்

    நடிப்பு: சிவாஜி கணேசன் + சாவித்ரி

    படம் வெளியான ஆண்டு: 1963

    ReplyDelete
  3. //எந்த ஊரில் எந்த நாட்டில் என்று காண்போமோ?//

    //இந்த நாளை வந்த நாளில் மறந்து போவோமோ?//

    என்ற வரிகள் நம் ’முன்னா பார்க்’ நட்புகளுக்கும் மிகவும் பொருத்தமாகவே உள்ளன.

    இந்த வரிகளைப்படித்ததும் என் கண்கள் கலங்கின.

    ReplyDelete
  4. அழகான இனிமையான ... இன்றைக்கு நமக்கும் ... பொருத்தமானதோர் பாடல் பகிர்வுக்கு என் நன்றிகள்.

    ReplyDelete
  5. //இல்லம் கண்டு பள்ளி கொண்டு மயங்கி நிற்போமோ
    என்றும் மயங்கி நிற்போமோ//

    அதே.... அதே.... வேறு வழி? :(

    பசுமை நிறைந்த நினைவுகளே .... !!!!! :)

    ReplyDelete
  6. நேத்து ஹிந்தி ஃபேர்வெல் ஸாங்க்.. இன்று தமிழ்...... வரிகள் வார்த்தைகள்.. எவ்வளவு நல்லா இருக்கு....

    ReplyDelete
    Replies
    1. ப்ராப்தம் 17 July 2016 at 05:20

      //நேத்து ஹிந்தி ஃபேர்வெல் ஸாங்க்.. இன்று தமிழ்...... வரிகள் வார்த்தைகள்.. எவ்வளவு நல்லா இருக்கு...//

      சிலர் இந்த நம் ’முன்னா பார்க்’லிருந்து தாங்களாகவே ஃபேர்வெல் வாங்கிக்கொண்டுள்ளார்கள் என, இன்று இப்போது சற்று நேரம் முன்பு என் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது !!!!!

      அதை நினைக்கத்தான் எனக்கு மிகவும் அழுகையாக வருகிறது. :(((((

      Delete
  7. என்ன பண்ணமுடியும் கோபூஜி...நீங்கள்தான் என் லிங்க்ஸெல்லாம் கொடுத்து எங்களை இணைச்சீங்க.... முருகுலை ஏதும் சொல்ல முடியாது புது பொண்ணு வேர நாட்டு வாசம்... இங்க வர நேரம் இருக்காதுதான்... ஆனா டீச்சரம்மா பாடல் லிஸ்டெல்லாம் அனுப்பி ஆருவமா வந்து கமெண்ட் போயிட்டாங்க... இனிமேல் வர முடியாதுன்னு விலகிட்டாங்க.. என்னப்ராப்லம்னு தெரியல..யாரையும் கட்டாயப்படுத்த முடியாதுல்ல....

    ReplyDelete
    Replies
    1. சிப்பிக்குள் முத்து. 18 July 2016 at 04:47

      //என்ன பண்ணமுடியும் கோபூஜி... நீங்கள்தான் என் லிங்க்ஸெல்லாம் கொடுத்து எங்களை இணைச்சீங்க.... முருகுவை ஏதும் சொல்ல முடியாது புது பொண்ணு வேற நாட்டு வாசம்... இங்க வர நேரம் இருக்காதுதான்... ஆனா டீச்சரம்மா பாடல் லிஸ்டெல்லாம் அனுப்பி ஆர்வமா வந்து கமெண்ட் போட்டாங்க... இனிமேல் வர முடியாதுன்னு விலகிட்டாங்க.. என்னப்ராப்லம்னு தெரியல.. யாரையும் கட்டாயப்படுத்த முடியாதுல்ல....//

      எல்லாமே எனக்கும் ஓரளவு புரிகிறது. இங்கு என்னால் ஒவ்வொன்றையும், வார்த்தைகளில் வடித்துச் சொல்லத்தான் முடியவில்லை.

      அவர்கள் இன்று எங்கிருந்தாலும், எப்படியிருந்தாலும், நம்மையெல்லாம் அவர்களால் என்றும், எப்போதும் மறக்கவே முடியாது. அவர்களின் தங்கமான மனஸு அப்படி.

      அவர்களின் தங்கமான குணத்திற்கு ஒரு குறையும் வரவே வராது.

      ஒருவேளை, ஏதோ சந்தர்ப்ப சூழ்நிலைகள் தற்சமயம் சாதகமாக இல்லாமல் இருக்கக்கூடும்.

      பிறகு என்றாவது ஒருநாள் ‘பூந்தளிர்’ மீண்டும் இங்கே புதுப்பொலிவுடன் பூத்துக்குலுங்கக்கூடும் என்ற நம்பிக்கை எனக்குள் இருக்கிறது.

      அவர்களின் நலனுக்காகவும், மன நிம்மதிகளுக்காகவும் நாம் அனைவரும் நமக்குள் பிரார்த்தித்துக்கொள்வோம்.

      Delete