Friday 29 July 2016

aval paranthu ponale


15 comments:

  1. அவள் பறந்து போனாளே என்னை மறந்து போனாளே
    நான் பார்க்கும் போது கண்கள இரெண்டைக் கவர்ந்து போனாளே

    அவள் பறந்து போனாளே என்னை மறந்து போனாளே
    நான் பார்க்கும் போது கண்களிரண்டைக் கவர்ந்து போனாளே

    என் காதுக்கு மொழியில்லை
    என் நாவுக்கு சுவையில்லை

    என் நெஞ்சுக்கு நினைவில்லை
    என் நிழலுக்கு உறக்கமில்லை
    என் நிழலுக்கு உறக்கமில்லை

    இந்த வீட்டுக்கு விளக்கில்லை
    சொந்தக் கூட்டுக்கு குயிலில்லை

    என் அன்புக்கு மகளில்லை
    ஒரு ஆறுதல் மொழியில்லை
    ஒரு ஆறுதல் மொழியில்லை

    அவள் பறந்து போனாளே என்னை மறந்து போனாளே
    நான் பார்க்கும் போது கண்கள இரண்டைக் கவர்ந்து போனாளே

    என் இதயத்தில் பூட்டிவைத்தேன்
    அதில் என்னையே காவல் வைத்தேன்

    அவள் கதவை உடைத்தாளே
    தன் சிறகை விரித்தாளே

    அவள் எனக்கா மகளானாள்
    நான் அவளுக்கு மகனானேன்

    என் உரிமைத் தாயல்லவா
    என் உயிரை எடுத்துச் சென்றாள்
    என் உயிரை எடுத்துச் சென்றாள்

    அவள் பறந்து போனாளே என்னை மறந்து போனாளே
    நான் பார்க்கும் போது கண்களிரண்டைக் கவர்ந்து போனாளே

    ReplyDelete
  2. //அவள் பறந்து போனாளே//

    :((((((((((((((((((((((((((((((

    திரைப்படம்: பார் மகளே பார்

    பாடியவர்: P.B. ஸ்ரீனிவாஸ், T.M. சௌந்தரராஜன்

    இயற்றியவர்: ?

    இசை: ?

    ReplyDelete
  3. நல்ல படம். மிகவும் அருமையான கதை. சொல்லத்தான் ஆசை.

    நல்ல அர்த்தமுள்ள பாடல்.

    பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  4. இதுவும் சோகப்பாட்டுதான்.. இருவரின் குரலும் இணைந்து பாடல் ரசிக்கும்படி இருக்கு.

    ReplyDelete
  5. கதை சொல்ல நேரமில்லையாஜி....

    ReplyDelete
    Replies
    1. ப்ராப்தம் 30 July 2016 at 06:29

      //கதை சொல்ல நேரமில்லையாஜி....//

      ஆர்வத்துடன் கதை கேட்க விரும்பும் எங்கட அன்புக்குரிய சாரூஜிக்காக, எப்படியும் தன் நேரத்தை ஒதுக்கி, இந்த கோபால்ஜி எதையும் செய்வானாக்கும். :)

      -=-=-=-=-=-

      பார் மகளே பார் 1963 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. பீம்சிங் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், லட்சுமியாக சௌகார் ஜானகி, ஆரவள்ளியாக மனோரமா, சேகராகமுத்துராமன், காந்தாவாக புஷ்பலதா, நட்ராஜாக எம். ஆர். ராதா, சுந்தரமாக ஏவி.எம்.ராஜன், சோ ராமசாமி, ராமசாமியாக வி. கே. ராமசாமி, சந்திரவாக விஜயகுமாரி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

      -=-=-=-=-=-

      >>>>>

      Delete
    2. இந்தப்படத்தினை நான் என் சிறுவயதில் (13 வயதில்) ஒரேயொரு முறை மட்டுமே என் குடும்பத்தாருடன் பார்த்துள்ளேன் என்பது மட்டும் என் நினைவுக்கு வருகிறது.

      இருப்பினும் இன்றும் என் நினைவில் உள்ள அந்த மெயின் கதையின் சுருக்கத்தை மட்டும், இங்கு நான் உங்களுக்காக + உங்களின் ஆர்வத்திற்காகச் சொல்கிறேன்.

      >>>>>

      Delete
    3. என் நினைவில் உள்ள கதை இதோ:

      ooooooooooooooooooo

      ஒரு பிரஸவ ஆஸ்பத்தரியில், சிவாஜியின் மனைவிக்கு ஓர் பெண்குழந்தை பிறக்கும்.

      எக்ஸாக்டாக அதே நேரத்தில் அவளுக்கு அடுத்த ’பெட்’ இல் படுத்துள்ள ஓர் பெண்மணிக்கும் ஒரு பெண் குழந்தை பிறக்கும்.

      பெட் நம்பர்களை குழந்தைகள் இருவரின் கைகளிலும் அடையாள டோக்கன்களாகக் கட்டிக்கொண்டு, வெவ்வேறு இரு நர்ஸ்கள் குழந்தையை வெதுவெதுப்பான வெந்நீரில் குளிப்பாட்ட பாத் ரூமுக்கு எடுத்துச் செல்வார்கள்.

      கையில் கட்டப்பட்டுள்ள டோக்கன்கள் பிரித்து அவிழ்க்கப்பட்ட நிலையில் குழந்தைகள் இரண்டும் பாத் ரூமில் தனித்தனியே படுத்துக்கொண்டு அழுதுகொண்டு இருக்கையில், அந்தக்குழந்தைகளை எடுத்துச்சென்ற நர்ஸ்கள் இருவரும் ஓர் எதிர்பாராத எலெக்ட்ரிக் ஷாக்கினால் மேல் உலகம் போய்ச் சேர்ந்து விடுவார்கள்.

      ஒவ்வொரு குழந்தைக்கும் அவர்களின் தாய் யார் என்பது இந்தப் படத்தில் / கதையில், கடைசிவரை யாருக்குமே தெரியாததோர் மாபெரும் மர்மமாகும்.

      பக்கத்து ’பெட்’ இல் பிரஸவம் ஆன தாயும், பிரஸவித்தபின் மேல் உலகம் சென்று விடுவாள்.

      சிவாஜியின் குழந்தையை பிரஸவித்த மனைவி நீண்ட நேரம் மயக்கத்திலேயே சுயநினைவு வராமல் கிடப்பாள்.

      >>>>>

      Delete
    4. கதையின் தொடர்ச்சி ....... இதோ:
      ======================================

      இரண்டு குழந்தைகளில் எது தன்னுடையது என்பது புரியாத நிலையிலும், அங்கு இவற்றையெல்லாம் உணர்ந்துகொண்ட சிவாஜி, ஆஸ்பத்தரி நிர்வாகத்துடன் ஓர் இரகசிய ஒப்பந்தம் செய்துகொண்டு, இரு குழந்தைகளும் தன் மனைவிக்கே இரட்டைக்குழந்தைகளாகப் பிறந்ததாகச் சொல்லச் சொல்லி, தன் மனைவியையும், மற்றவர்களையும் நம்ப வைத்து விடுவார்.

      இதில் குழப்பம் + சந்தேகம் ஏதும் இருந்தால் அதனைத் தன் மனைவியாலும் தன்னாலும் கடைசிவரைத் தாங்கிக்கொள்ளவே முடியாது என்பதால் இதுபோன்ற ஓர் அவசர அவசிய முடிவினை சிவாஜி எடுத்துவிடுவார்.

      இரு குழந்தைகளையும், தானே தன் சொந்த மகள்களாக நினைத்து வளர்க்கத் தயாராகியும் விடுவார்.

      அந்த இரு பெண் குழந்தைகளும் வளர்ந்து பெரியவர்களாகிடும் போது, ஒவ்வொருவரும், ஒவ்வொரு சமயத்தில் கண்ணியமாகவும், ரோஷமாகவும், கோபமாகவும், நாகரீகமாகவும், ஸ்டைலாகவும் நடந்துகொள்வது ..... ’இவள்தான் தன் மகளாக இருக்க முடியும்’ என சிவாஜியை நினைக்க வைக்கும்படியான சம்பவங்கள் ..... ஏராளமாக இந்தக்கதையினில் அவ்வப்போது வந்துகொண்டே இருக்கும்.

      மிகவும் ஆச்சர்யமான புதுமையான கதைக் கருவை கையில் எடுத்துக்கொண்டு, திரைப்படத்தைப் பின்னிப் பெடலெடுத்துள்ளனர்.

      பிரஸவத்தில் தன் குழந்தையைப் பெற்றுப்போட்டுவிட்டு இறந்துபோன அந்த மற்றொரு பெண்மணியைப்பற்றியோ, அவளின் குழந்தையைப் பற்றியோ விசாரிக்கவோ, கவலைப்படவோ, க்ளைம் செய்துகொண்டு வரவோ யாரும் இல்லாத நிலையில், வில்லன் எம்.ஆர்.ராதா மட்டும், அவளுக்கு தான் ஒரு வகையில் அண்ணன் முறை உறவு என்று சொல்லி, தனக்கு நடந்ததெல்லாம் தெரியும் என்று சொல்லி, இதைப்பற்றியெல்லாம் உன் மனைவியிடம் சொல்லிவிடுவேன் என சிவாஜியை அவ்வப்போது மிரட்டி, ப்ளாக் மெயில் செய்து, பணத்தைப் பறித்துக்கொண்டு செல்வது மிகவும் வேடிக்கையாகவும் வேதனையாகவும் இருக்கும்.

      கடைசிவரை தந்தையாக நடிக்கும் சிவாஜிக்கோ, படம் பார்க்கும் நமக்கோ இரு மகள்களில் யார் சிவாஜியின் மனைவிக்குப் பிறந்த ஒரிஜினல் பெண் என்ற உண்மையே தெரியாமல், மிகவும் விறுவிறுப்பாக அந்தப் படம் முடிந்துவிடும்.

      சிவாஜியின் மனைவியும் ... பாவம் ... தனக்கு ஒரே பிரஸவத்தில் இரு பெண் குழந்தைகள் பிறந்துள்ளதாக கடைசிவரை இந்தப் படத்தில் நம்பிக்கொண்டு இருப்பார்.

      அந்த இரு பெண்களில் ஒருத்தி, தன் தந்தை சிவாஜியிடம் செல்லமாகக் கோபித்துக்கொண்டு, வீட்டை விட்டு வெளியேறியுள்ள நிலையில் இந்தப்பாடல் பாடப்படுகிறது என்பது என் நினைவில் உள்ளது.

      இந்தக்காலம் போல மரபணு சோதனைகள் எதுவும் வராத காலத்தில் எடுக்கப்பட்டுள்ள படம் இது என்பதையும், வயிற்றில் வளரும் குழந்தைகள் ஒன்றா அல்லது இரண்டா என ஸ்கேன் செய்து இன்றுபோல முன்கூட்டியே கண்டு பிடிக்க இயலாத காலத்தில் எடுக்கப்பட்ட படம் இது என்பதையும் நாம் இங்கு யோசித்து கவனத்தில் கொள்ள வேண்டும். :)

      ooooooooooooooooooo

      ஏதோ என் நினைவில் உள்ளவரை கதை சொல்லியுள்ளேன். இது போதுமா ...... சாரூஊஊஊஊஊ? :)))))

      Delete
  6. போதுமாவா........ இதுக்கு மேலும் விளக்கமா சொல்ல முடியுமாஜி........

    ReplyDelete
    Replies
    1. ப்ராப்தம் 1 August 2016 at 05:50

      //போதுமாவா........ இதுக்கு மேலும் விளக்கமா சொல்ல முடியுமாஜி........//

      :) புரிதலுக்கு மிக்க நன்றீங்கோ. இதையெல்லாம் நினைத்து நீங்க ஒன்றும் பயப்படாதீங்கோ. அதனால்தான் எழுதவே சற்று தயங்கினேன். மேலும் இதெல்லாம் மிகவும் பழங்கதைகளாகும்.

      இன்று மருத்துவ விஞ்ஞானம் நன்கு வளர்ந்து விட்டது. எல்லாமே மிகச்சுலபமாக அழகாக ஆரோக்யமாக நொடிப்பொழுதினில் நடந்து விடுகிறது. :)

      ஆல் தி பெஸ்ட். :)))))

      Delete
  7. சிவாஜியின் உண்மையான மகள் யார் என்பதை சொல்லாமல் நீங்களும் ஸஸ்பென்ஸாவே விட்டுட்டீங்களே..

    ReplyDelete
    Replies
    1. ப்ராப்தம் 1 August 2016 at 21:54

      //சிவாஜியின் உண்மையான மகள் யார் என்பதை சொல்லாமல் நீங்களும் ஸஸ்பென்ஸாவே விட்டுட்டீங்களே..//

      சிவாஜியின் ரியல் லைஃப்பில் அவருக்கு சாந்தி என்ற பெயரில் ஓர் மகள் உண்டு. அவள் பெயரிலேயே சென்னையில் ‘சாந்தி தியேட்டர்’ அவரால் அந்தக்காலத்தில் கட்டப்பட்டது.

      இந்தப்படத்தில் + திரைக் கதையில் அது கடைசிவரை அவருக்கே தெரியாததோர் சஸ்பென்ஸ் மட்டுமே.

      Delete
  8. கதை சுவாரசியமா இருக்கு..ஞாபக சக்தி அதைவிட சுவாரசியமா இருக்கு.

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர்

      //கதை சுவாரசியமா இருக்கு.. ஞாபக சக்தி அதைவிட சுவாரசியமா இருக்கு.//

      மிகவும் நன்றி....டா என் தங்கமே ! வைரமே !! அச்சு வெல்லமே ...... :)

      Delete