Friday 29 July 2016

mera dil bi kithana pagal hai

12 comments:

  1. பாடலும் காட்சிகளும் நல்லா இருக்குது.

    ஒருவன் ‘இலவு காத்த கிளி’ போல காத்திருக்க, வேறொருவன் அவளைத் தள்ளிக்கொண்டு போவது போலவும் நினைக்கத் தோன்றியது.

    இருவனும் ஒருவனாகவே இருந்து ப்ளாஷ் பேக் காட்சியாக இருக்குமோ எனவும் நினைக்க வைக்கிறது.

    MERA DIL BHI KITNA PAGAL HAI SAAJAN என்றால் என்னவோ? இதிலுள்ள ஒரு சில வார்த்தைகளுக்கு மட்டுமே எனக்கு அர்த்தம் தெரிகிறது.

    ”சாரூ .... நீ .... வாராயோ .... ஒரு பதில் கூறாயோ !”

    ReplyDelete
  2. முன்னா பார்க் உறுப்பினர்கள் அனைவரின் கவனத்திற்கும்.
    ===========================================================

    நம் மின்னலு முருகுவிடமிருந்து நீண்ட நாட்களுக்குப்பின் இன்று (30.07.2016) ஓர் உருக்கமான மிகப்பெரிய மெயில் எனக்குக் கிடைத்துள்ளது.

    அதிலுள்ள ஆரம்ப வரிகளில் சிலவற்றை மட்டும் இங்கு கொடுத்துள்ளேன்:

    -=-=-=-=-=-

    குருஜிஇஇஇஇஇஇஇஇஇஇஇ.......
    கும்புட்டுகிடுதன்..... நல்லாருக்கீங்களா......... எங்கட குருஜி............ ரோஜா டீச்சரு....சாரூஜி...முன்னா....... முன்னா பார்க் கமண்டு அல்லாத்தியும் ரொம்ப ரொ....ம்....ப....... மிஸ் பண்ணுறேனே.....குருஜி.....

    புது ஊரு புது எடம்... புது லைஃப்பு.... ஏதுமே சரியா வெளங்கி கிட ஏலலியே...குருஜி...

    -=-=-=-=-=-

    ReplyDelete
  3. மேரா தில் பி கித்னா பாஹல் ஹை......... என் மனது உன்மேல பைத்தியமா இருக்கு.. ஆனா நீங்க எதிரே வந்ததும் சொல்ல பயம்மா இருக்கு.... அர்த்தம்.......

    ReplyDelete
    Replies
    1. ப்ராப்தம் 30 July 2016 at 06:20

      //மேரா தில் பி கித்னா பாஹல் ஹை......... என் மனது உன்மேல பைத்தியமா இருக்கு.. ஆனா நீங்க எதிரே வந்ததும் சொல்ல பயம்மா இருக்கு.... அர்த்தம்.......//

      ஆஹா, எங்கட டீச்சர்-1 அவர்களே நேரில் வந்து என்னிடம் அர்த்தம் சொன்னது போலவே இருக்குது.

      டீச்சர்-2 அவர்களுக்கு மிக்க நன்றி. மிக்க மகிழ்ச்சி !

      Delete
    2. இருக்கும்.....இருக்கும்......

      Delete
    3. பூந்தளிர்

      //இருக்கும்.....இருக்கும்......//

      :)))))))))))

      ’நினைவெல்லாம் நித்யா’ போல என் நினைவெல்லாம் எப்போதும் டீச்சர்-1 மட்டுமேவாக்கும்.

      இது டீச்சர்-1 & டீச்சர்-2 உள்பட இந்த உலகில் அனைவருக்குமே தெரியுமாக்கும். :)

      Delete
  4. ஆஹா எங்க போனாலும் குருஜியின் நினைச்சுகிட்டே இருக்குது இந்த பொண்ணு.... குட் கேர்ள்.....

    ReplyDelete
    Replies
    1. ப்ராப்தம் 30 July 2016 at 06:28

      //ஆஹா எங்க போனாலும் குருஜியின் நினைச்சுகிட்டே இருக்குது இந்த பொண்ணு.... குட் கேர்ள்.....//

      தங்களைப்போலவே அவளும் மிகவும் குட் கேர்ள் .... தான்.

      இருவருமே தங்கள் வாழ்க்கையில், இதுவரை, வெவ்வேறு விதமாக எதிர்நீச்சல் போட்டுள்ளீர்கள்.

      இன்று புதுவாழ்க்கையில், நீங்கள் இருவருமே, ஸ்ரீ லக்ஷ்மி கடாக்ஷத்தால், சகலவிதமான ஐஸ்வர்யங்களும் கிடைத்து செளக்யமாக சந்தோஷமாக உள்ளீர்கள்.

      அதே சமயம், என்னைப்போலவே, உங்கள் இருவராலுமே நம் கடந்தகால பழைய வாழ்க்கையை மறக்கவும் முடியாமல் மனதில் அவ்வப்போது நினைத்து அசை போட்டுப் பார்க்கவும் முடிகிறது. பழசையெல்லாம் என்றுமே மறக்காமல் இருக்கும் அந்தகுணம்தான் எப்போதும் நல்லதாகும். அதுவே நம்மை வாழ்க்கையில் மென்மேலும் செம்மைப்படுத்தக்கூடும்.

      அவளின் மெயிலினை முழுவதுமாகப் படித்து எனக்குள் மிகவும் சிரித்துக்கொண்டே சந்தோஷம் அடைந்தேன்.

      அவளுக்கு இன்று கிடைத்துள்ள வசதி வாய்ப்புகளை அவளுக்கே உரித்தான மிக எளிய நடையில் பிரமாதமாக எழுதியிருக்கிறாள்.

      அவளுக்கும் இந்த புதுவாழ்க்கை இன்னும் மிகவும் பிரமிப்பாகவும், புதுவாழ்க்கையுடன் தன்னாலும், தன் அம்மியாலும் இன்னும் ஒட்டிப்போக முடியாமலும் இருப்பதாகவும் ஒருசில உதாரணங்களுடன் சொல்லி இருக்கிறாள்.

      எனக்கு ஏனோ உடனே தங்கள் ஞாபகமே வந்தது. தாங்கள் கல்யாணம் ஆன பிறகு என்னுடன் பகிர்ந்துகொண்ட (குறிப்பாக பழைய லைஃப் + புதிய லைஃப் ஒப்பீடுகள் பற்றிய) ஒருசில விஷயங்கள் நினைவுக்கு வந்தன.

      தங்களைப்போலவே, போகப்போக எல்லாம் நாளடைவில் அவளுக்கும் பாந்தமாகிப் பழகிப்போய்விடும் என நம்புகிறேன்.

      இருவரும் எங்கிருந்தாலும் வாழ்க என ஆசீர்வதிக்கிறேன்.

      Delete
  5. இன்னும்கூட என்னால இந்த லைஃப்புக்கு பொறுந்தி போகமுடியல.. ஆசிரம வாழ்க்கை நினைவில் வந்துகிட்டேதான் இருக்கு..

    ReplyDelete
    Replies
    1. ப்ராப்தம் 31 July 2016 at 05:02

      //இன்னும்கூட என்னால இந்த லைஃப்புக்கு பொறுந்தி போகமுடியல.. ஆசிரம வாழ்க்கை நினைவில் வந்துகிட்டேதான் இருக்கு..//

      புரிகிறது. அது எப்போதும் நினைவில் இருப்பது ஒருவிதத்தில் நல்லதுதான். நமக்குத் தலைக்கனம் ஏற்படாமலும், பிறரிடம் நாம் இரக்கம் காட்டவும், அந்த நினைவுகள் நமக்கு என்றும் உதவிடக்கூடும்.

      வாழ்க்கையில் மிகவும் கஷ்டப்பட்டவர்கள் ஒருநாள் சுகப்படலாம்.

      ஆனால் சுகப்பட்டவர்களால், வசதி வாய்ப்புக்களை அனுபவித்தவர்களால், திரும்ப பழைய வாழ்க்கை முறைக்குத் திரும்பி கஷ்டப்படுவது என்பது மிகவும் கொடுமையான விஷயமாக இருக்கும். அதுபோன்ற நிலை மட்டும் யாருக்குமே வரக்கூடாது.

      Delete
  6. பணம் வசதி பங்களா நகை துணிமணிகள் மட்டும் சந்தோஷமான வாழ்க்கையை திறந்துவிட முடியாது..

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர்

      //பணம் வசதி பங்களா நகை துணிமணிகள் மட்டும் சந்தோஷமான வாழ்க்கையை திறந்துவிட முடியாது..//

      சுதந்திரமாகப் பறக்க முடியாமல், மிக விலையுயர்ந்த தங்கக்கூட்டுக்குள் அடைபட்டுக்கிடக்கும், எங்கட செல்லக்கிளி சொல்லும் கிள்ளை மொழி எனக்கும் நன்றாகப் புரிகிறது.

      காலம் ஒரு நாள் மாறும். அனைத்து சந்தோஷங்களும் கிடைத்துவிடும். கவலை வேண்டாம். நானும் உனக்காகப் பிரார்த்திக்கிறேன்.

      Delete