Wednesday 6 July 2016

இறைவனிடம் கையேந்துங்கள்


72 comments:

  1. இன்று ரம்ஜான் பண்டிகை. அனைவருக்கும் ஈகைப் பெருநாள் நல் வாழ்த்துகள்

    ReplyDelete
  2. இறைவனிடம் கையேந்துங்கள் அவன்
    இல்லையென்று சொல்லுவதில்லை

    பொறுமையுடன் கேட்டுப்பாருங்கள் அவன்
    பொக்கிஷத்தை மூடுவதில்லை

    இறைவனிடம் கையேந்துங்கள் அவன்
    இல்லையென்று சொல்லுவதில்லை

    இல்லையென்று சொல்லும் மனம் இல்லாதவன்
    ஈடு இணையில்லாத கருணையுள்ளவன்

    இன்னல்பட்டு எழும் குரலைக் கேட்கின்றவன்
    எண்ணங்களை இதயங்களைப் பார்க்கின்றவன்

    இறைவனிடம் கையேந்துங்கள் அவன்
    இல்லையென்று சொல்லுவதில்லை

    ஆசையுடன் கேட்பவர்க்கு அள்ளித்தருபவன்
    அல்லல் துன்பம் துயரங்களைக் கிள்ளியெறிபவன்

    பாசத்தோடு யாவரையும் பார்க்கின்றவன்
    பாவங்களைப் பார்வையினால் மாய்க்கின்றவன்

    அல்லல்படும் மாந்தர்களே அயராதீர்கள்
    அல்லாவின் பேரருளை நம்பி நில்லுங்கள்

    அவனிடத்தில் குறையனைத்தும் சொல்லிக்காட்டுங்கள்
    அன்பு நோக்குத் தருகவென்று அழுது கேளுங்கள்

    இறைவனிடம் கையேந்துங்கள் அவன்
    இல்லையென்று சொல்லுவதில்லை

    தேடும் நேயர் நெஞ்சங்களில் குடியிருப்பவன்
    தேடாத மனிதருக்கும் உணவளிப்பவன்

    வாடும் இதயம் மலர்வதற்கு வழிவகுப்பவன்
    வாஞ்சையோடு யாவருக்கும் துணை நிற்பவன்

    அலைமுழங்கும் கடல்படைத்து அழகுபார்ப்பவன்
    அலையின் மீதும் மலையின் மீதும் ஆட்சி செய்பவன்

    தலைவணங்கிக் கேட்பவர்க்குத் தந்து மகிழ்பவன்
    தரணியெங்கும் நிறைந்து நிற்கும் மகா வல்லவன்

    இறைவனிடம் கையேந்துங்கள் அவன்
    இல்லையென்று சொல்லுவதில்லை

    ReplyDelete
  3. பாடல் : இறைவனிடம் கையேந்துங்கள்

    பாடலாசிரியர்: ஆர். அப்துல் சலாம்

    பாடியோர்: : நாகூர் ஈ.எம். ஹனீபா

    ReplyDelete
  4. ஈகைப் பெருநாளுக்கு ஏற்ற இனிமையான பக்திப் பாடலை வெளியிட்டுள்ளதற்கு என் மனம் நிறைந்த இனிய பாராட்டுகள் + நன்றிகள்.

    ரம்ஜான் பண்டிகைக்காக அனைவருக்கும் என் ஈகைப் பெருநாள் நல் வாழ்த்துகள்.

    ReplyDelete
  5. இந்தப்பாடலை இனிமையாகப் பாடிய நாகூர் ஈ.எம். ஹனீபா அவர்கள் 1925-இல் பிறந்து, சமீபத்தில் சென்ற ஆண்டு 2015-இல் இறைவனடி சேர்ந்தவர்.

    ReplyDelete
  6. காலையில் தெரிந்த இந்தப் பாடல் காட்சி (ஆடியோ + வீடியோ) இப்போது தெரியாமல் சொதப்புது.

    எனினும் கீழ்க்கண்ட ஏதேனும் ஒரு இணைப்புகளில் அந்தப்பாடலைக் கேட்கலாம்.

    https://www.youtube.com/watch?v=-39DaF4_MbU

    https://www.youtube.com/watch?v=_D-PAPMgALI

    https://www.youtube.com/watch?v=KCMobr_NEsc

    https://www.youtube.com/watch?v=fi7s4J40Fqg

    ReplyDelete
  7. https://www.youtube.com/watch?v=M1A8nKBxZ2g

    இதே பாடலை எங்கட ஐயர் ஒருவர், தனது பஜனை கோஷ்டிகளுடன், புதுமாதிரியாக மாற்றிப் பாடுவது என்பது மிகச்சிறப்பாகும்.

    ஆடியோ + வீடியோ அவஸ்யமாகக் கேட்டு மகிழவும்.
    https://www.youtube.com/watch?v=M1A8nKBxZ2g

    ’ஸ்ரீ ஜெய கிருஷ்ண பாகவதர்’ என்ற பெயரில் முன்பு விளங்கிய பிரபலம் இவர்.

    இப்போது இவரின் பெயர்:

    கோவிந்தபுரம் ஸ்ரீ பாண்டுரங்க விட்டல் மஹராஜ்

    ReplyDelete
    Replies
    1. கோபூஜி இந்த லிங்குல கேட்டேன் சூப்பரா இருக்குது.. நன்றி கோபூஜி.....

      Delete
    2. சிப்பிக்குள் முத்து. 8 July 2016 at 22:20

      //கோபூஜி இந்த லிங்குல கேட்டேன் சூப்பரா இருக்குது.. நன்றி கோபூஜி.....//

      மிக்க மகிழ்ச்சி.

      இவர்தான் கும்பகோணம் அருகே உள்ள கோவிந்தபுரம் என்னும் சிற்றூரில், பலகோடி ரூபாய் செலவில் மிகவும் பிரும்மாண்டமாகவும், அழகாகவும் கட்டப்பட்டுள்ள, ஸ்ரீ பாண்டுரங்கன் கோயில் எழும்ப முக்கியமாக இருந்து செயல் பட்ட புண்யாத்மா ஆவார்.

      வட இந்தியாவில் பண்டரிபுரம் என்ற புண்ணிய ஸ்தலத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பாண்டுரங்கன் கோயிலைப்போலவே இங்கு நம் தமிழ்நாட்டில் கலை நுணுக்கங்களுடன் மிகச் சிறப்பாகக் கட்டியுள்ளார்கள்.

      வடக்கே சந்திரபாஹா நதிக்கரையில் அமைந்துள்ள பண்டரீபுர க்ஷேத்ரத்திற்கும் நான் போய் வந்துள்ளேன்.

      இவரை நான் பலமுறை நேரில் சந்தித்துள்ளேன். பேசியுள்ளேன். :)

      இவரால் கட்டப்பட்டுள்ள கோவிந்தபுரம்
      கோயிலுக்கும் நான் சென்று வந்துள்ளேன்.

      இவர் இந்தப்பாடலைப்பாடும்போது கீழ்க்கண்ட வரியில் வரும் ’அல்லா’ என்ற வார்த்தையை மட்டும் ‘ஆண்டவன்’ என்று மாற்றிப்பாடியுள்ளார்.

      //அல்லல்படும் மாந்தர்களே அயராதீர்கள்
      அல்லாவின் பேரருளை நம்பி நில்லுங்கள்//

      =

      //அல்லல்படும் மாந்தர்களே அயராதீர்கள்
      ஆண்டவனின் பேரருளை நம்பி நில்லுங்கள்//

      இது தங்களின் தகவலுக்காக மட்டுமே.

      Delete
  8. ’முன்னா’ பார்வையில்
    ’முருகு’வின் நிக்காஹ்
    பகுதி-1
    By VGK

    -oOo-

    முன்னா பார்க் நண்பர்களில் எல்லோரையும் சப்ஜாடா அழைத்துக்கொண்டு தன் நிக்காஹ் வுக்கு வருமாறு குருஜியாகிய என்னிடம் முருகு ஓர் கோரிக்கை வைத்திருந்தாள்.

    அதெல்லாம் ப்ராக்டிகலாக சரியாக வராது என்றும், யார் யாரை எப்படி எப்படி அழைக்க வேண்டும் எனவும் ஒருசில டிப்ஸ்கள் முருவுக்கு குருஜியால் முன்கூட்டியே கொடுக்கப்பட்டது.

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. எனக்கும் தனியா மெயில் அனுப்பி இருந்தா..

      Delete
    2. ப்ராப்தம் 8 July 2016 at 23:19

      //எனக்கும் தனியா மெயில் அனுப்பி இருந்தா..//

      அப்படியா, சந்தோஷம். திருமதி. ஜெயந்தி ஜெயா உள்பட நம் ஐவருக்கும் அழைப்பிதழ் மெயிலில் அனுப்பியுள்ளதாக என்னிடம் சொல்லியிருந்தாள்.

      இதில் நம் முன்னா பார்க் ஓனருக்கு மட்டும் ஸ்பெஷலாக ஒருமுறைக்கு இருமுறையாக (இரட்டை மேளத்துடன்) அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. :))

      Delete
    3. என்னை மட்டும் மறந்துட்டா... எனக்கு அழைப்பே வரலை.. (((((

      Delete
    4. பூந்தளிர் 9 July 2016 at 07:04

      //என்னை மட்டும் மறந்துட்டா... எனக்கு அழைப்பே வரலை.. ((((( //

      14.06.2016 அன்றே என்னிடமிருந்து தங்கள் எல்லோருடைய மெயில் ஐ.டி.க்களையும் முருகு, மெயில் மூலம் வாங்கிக்கொண்டாள்.

      அன்று நான் அவளுக்கு அனுப்பி வைத்த மெயிலினை இப்போது இன்றுகூட தங்களுக்கு Forward செய்துள்ளேன்.

      அனைவருக்கும் மெயிலில் அழைப்பு அனுப்பி விட்டதாகப் பிறகு என்னிடம் ஒருநாள் சொல்லியும் இருந்தாள்.

      தங்களுக்கும் அது கிடைத்திருக்கும் என நான் நினைத்துக்கொண்டு இருந்து விட்டேன்.

      ஸாரி .... எப்படி விட்டுப்போனது எனத் தெரியவில்லை டீச்சர்.

      எனினும் தப்புதான். நம் மின்னலு முருகு சார்பில் நான் தங்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்.

      Delete
    5. சே...சே..... கல்யாண பிஸில சில மறதிகள் ஏற்படத்தானே செய்யும்....

      Delete
    6. பூந்தளிர் 9 July 2016 at 22:15

      //சே...சே..... கல்யாண பிஸில சில மறதிகள் ஏற்படத்தானே செய்யும்....//

      இல்லை. அப்படியெல்லாம் இல்லை. இதில் ஏதோ உள்நோக்கம் இருக்கிறது என நான் நினைக்கிறேன். இதனால் முருகு மீது எனக்கு இப்போது கொஞ்சூண்டு கோபமாகவும் வருகிறது.

      ஏற்கனவே உங்களுக்கு நான் முக்கியத்துவம் கொடுத்துப் பேசினாலே அவளுக்குக் ’காண்ட்’ ஆகி விடுகிறது’ எனச் சொல்லி இருக்கிறாள்.

      உங்கள் இருவரின் குழாயடிச் சண்டைகள் இதோ இந்த என் பதிவின் பின்னூட்டங்களில் உள்ளன. மீண்டும் ஒருமுறை படிச்சுப்பாருங்கோ, ப்ளீஸ்:

      http://gopu1949.blogspot.in/2015/12/blog-post_27.html

      அப்படியும் என் ராஜாத்தியான நீ

      //சே...சே..... கல்யாண பிஸில சில மறதிகள் ஏற்படத்தானே செய்யும்....//

      என வெகு சுலபமாக அழகாகச் சொல்லியிருக்கிறாய். You are so Great ... I like you very very very very MUCH. :)))))

      Delete
  9. (2)

    அதிலும் குறிப்பாக நம் முன்னா குடும்பத்தார் அனைவரையும் எப்படி மரியாதையாக அழைத்தால், அவர்கள் அந்த சிறப்பு அழைப்பிதழைப் படித்து, தங்களுக்குள் நெகிழ்ந்துபோய், அட்லீஸ்ட் முன்னாவை மட்டுமாவது அனுப்பி வைப்பார்கள் என நான் முருகுவுக்கு ஒருசில இரகசிய ஐடியாக்கள் கொடுத்திருந்தேன்.

    என் சொல்படியே நம் மின்னலு முருகு அப்படியே செய்திருக்கிறாள்.

    நான் நினைத்தது நினைத்தபடியே அழகாக நடந்து முடிந்துள்ளது.

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. ஆமா கோபூஜி எங்கட வீட்ல எல்லாரையும் கூட்டிட்டு வரணும்னு எங்கட அம்மிக்கே அழகா மெயில் அனுப்பி இருந்தா அத பார்த்த பிறகுதான் நம்ம முஸ்லிம் பொண்ணு நிக்காஹ்.. நாம மூணுபேருமே போலாம்னு சொன்னாங்க...

      Delete
    2. ரொம்ப சந்தோஷம்..முன்னா...

      Delete
    3. சிப்பிக்குள் முத்து. 8 July 2016 at 22:23

      //ஆமா கோபூஜி எங்கட வீட்ல எல்லாரையும் கூட்டிட்டு வரணும்னு எங்கட அம்மிக்கே அழகா மெயில் அனுப்பி இருந்தா .. அத பார்த்த பிறகுதான் நம்ம முஸ்லிம் பொண்ணு நிக்காஹ்.. நாம மூணுபேருமே போலாம்னு சொன்னாங்க...//

      மிகவும் சந்தோஷம்.

      எங்கு போனாலும் மூவராகச் சேர்ந்து போகக் கூடாது என எங்கள் சாஸ்திரங்களில் சொல்லியுள்ளது.

      பேச்சுத்துணைக்கு என்னையும் நீங்கள் உங்களுடன் கூட்டிச் சென்று இருந்திருக்கலாம்.

      எனக்கும், முன்பின் தெரியாத இடத்துக்கு, நான் மட்டும் தனியாகப் புறப்பட்டுப் போகிறோமே என்ற ‘ஷை’ ஏதும் இல்லாமல் இருந்திருக்கும்.

      நான் நேரில் வராததற்கு, முருகுவும் என்னை அன்புடன் .. நல்லா பாட்டு விட்டு, நேற்று மெயில் கொடுத்திருக்கிறாள்.

      சரி, ஏதோ இது நடந்து முடிந்த விஷயமாகி விட்டது. பரவாயில்லை.

      நீங்களாவது போய் கலந்துகொண்டதில் எனக்கும் முருகுவுக்கும் மகிழ்ச்சியோ மகிழ்ச்சிதான்.

      Delete
  10. (3)

    முன்னா வீட்டில் முன்னாவையும் சேர்த்து மொத்தம் ஏழு நபர்கள். அதாவது அப்பா, அம்மா, ஓர் அக்கா, ஓர் தங்கை, ஓர் அண்ணன் + அண்ணி, அவர்களுக்கு ஓர் குழந்தை.

    முருகு அனுப்பியுள்ள இரண்டாவது அழைப்பிதழ் நேரிடையாக முன்னாவின் அம்மாவுக்கு எழுதப்பட்டுள்ளதால், அந்த முன்னாவின் அம்மா மிகவும் மனம் மகிழ்ந்து, தானே தன் முதல் இரண்டு பெண்களையும் அழைத்துக்கொண்டு, முருகு கல்யாணத்திற்குக் கிளம்பி விட்டார்கள்.

    அவர்களுக்கு என் ஸ்பெஷல் நன்றிகள் இங்கு பதிவு செய்துகொள்கிறேன்.

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. //மொத்தம் ஏழு நபர்கள். அதாவது அப்பா, அம்மா, ஓர் அக்கா, ஓர் தங்கை, ஓர் அண்ணன் + அண்ணி, அவர்களுக்கு ஓர் குழந்தை.//

      மொத்தமா 8--- பேரு... அண்ணனுக்கு ஆண்ல ஒன்னு... பெண்ல ஒன்னு..... ரெண்டு குழந்தைக.. கோபூஜி
      ... நான் உங்களுக்கு அனுப்பிய மெயிலையே இங்கே ஷேர் பண்ணிகிட்டதுக்கு நன்றி.. டீச்சரம்மா ரெண்டு பேரும் இங்கியே விவரங்கள் தெரிஞ்சிக்கிடலாம்... நன்றி கோபூஜி.

      Delete
    2. சிப்பிக்குள் முத்து. 7 July 2016 at 05:13

      **மொத்தம் ஏழு நபர்கள். அதாவது அப்பா, அம்மா, ஓர் அக்கா, ஓர் தங்கை, ஓர் அண்ணன் + அண்ணி, அவர்களுக்கு ஓர் குழந்தை.**

      //மொத்தமா 8--- பேரு... அண்ணனுக்கு ஆண்ல ஒன்னு... பெண்ல ஒன்னு..... ரெண்டு குழந்தைக.. கோபூஜி//

      ஆஹா, அப்படியா ! மிகவும் சந்தோஷம் முன்னா.

      நீங்கள் எப்போதாவது என்னிடம் இதைப்பற்றியும்கூட சொல்லியிருந்திருப்பீர்கள். நான் ஒருவேளை அதனை சரியாக மனதில் வாங்கிக்கொள்ளாமல் இருந்திருக்கலாம். அதற்காக ..... வெரி வெரி ஸாரி, முன்னா.

      //நான் உங்களுக்கு அனுப்பிய மெயிலையே இங்கே ஷேர் பண்ணிகிட்டதுக்கு நன்றி..//

      தங்களின் மெயிலினை அப்படியே டிட்டோவாக ஷேர் செய்துகொள்ளாமல், ஆங்காங்கே கொஞ்சம் எழுத்தினில் மட்டும் (EDITING செய்து) திருத்தங்களுடன், பல கமெண்ட்ஸ் களாக இங்கு நான் கொடுத்து வருகிறேன்.

      சொல்லக்கூடிய விஷயங்களை மட்டும், கொஞ்சம் சுருக்கி, கொஞ்சம் பெருக்கி, கொஞ்சம் சுவை சேர்த்துச் சொல்லி வருகிறேன். :)

      //டீச்சரம்மா ரெண்டு பேரும் இங்கியே விவரங்கள் தெரிஞ்சிக்கிடலாம்...//

      நான் இவ்வாறு கஷ்டப்படுவதெல்லாம் எங்கட டீச்சரம்மா-1 மற்றும் டீச்சரம்மா-2 வுக்காக மட்டும் தானே :))))))))

      ஆனால் அதுங்க இரண்டும், அவர்களுக்கு மட்டுமேவான, என் இந்தக் கடின உழைப்பினைக் கண்டு கொண்டதாகவே தெரியவில்லையே. :(

      இதுவரை அவர்கள் இருவரையும் ஆளையும் காணும் ... அட்ரஸையும் காணுமே.

      எனக்கு ஒரே கவலையாக்கீதேஏஏஏஏ.

      //நன்றி கோபூஜி.//

      நான்தான் தங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்.

      ‘மின்னலு முருகு’வின் திருமணத்திற்கு தாங்களும், தங்கள் குடும்பத்தாரும் நேரில் சென்று வந்ததற்கும், அங்கு நடந்தவற்றை ஓரளவுக்கு ரன்னிங் கமெண்ட்ரி போல எனக்கு மெயிலில் சொல்லி வருவதற்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், முன்னா.

      Delete
    3. This comment has been removed by a blog administrator.

      Delete
    4. முருகு ரொம்ப சந்தோஷப்படுவா.. என் மேரேஜுக்கு.. ரோஜா டீச்சர் வருவாங்கனு எதிர் பார்க்கவே இல்ல.. அவங்க வந்தது மட்டுமில்லாம பல விதத்திலும் ஹெல்ப் பண்ணினாங்க.. இப்ப கூட நெனச்சு நெனச்சு சந்தோஷபட்டுகிட்டுருக்கேன்...

      Delete
    5. பூந்தளிர் 8 July 2016 at 22:54

      //This comment has been removed by a blog administrator.//

      அடடா, இங்கு ஒரிஜினலாக என்ன எழுதப்பட்டிருந்தது எனத் தெரியாமல் என் மஸாலா இல்லாத மண்டையே வெடித்துச் சிதறிவிடும்போல அல்லவா உள்ளது. :(

      இப்படி எனக்கு ‘அல்வா’ கொடுத்துவிட்டாங்களே, அந்த எங்கட ராஜாத்.......தீ ! (தீ = FIRE)

      Delete
    6. ப்ராப்தம் 8 July 2016 at 23:23

      //என் மேரேஜுக்கு.. ரோஜா டீச்சர் வருவாங்கனு எதிர் பார்க்கவே இல்ல..//

      நானும்தான்.

      //அவங்க வந்தது மட்டுமில்லாம பல விதத்திலும் ஹெல்ப் பண்ணினாங்க..//

      அவங்க .... தங்கம், வைரம், வைடூர்யம், மாணிக்கம், மரகதம், புஷ்பராகம், முத்து, பவழம், நீலம், கோமேதகம் என நவரத்தினங்களுக்கு மேலும் ஜொலிக்கும் கோ-மாதா எந்தன் குலமாதாவாக்கும்.

      //இப்பக் கூட நெனச்சு நெனச்சு சந்தோஷபட்டுகிட்டுருக்கேன்...//

      உங்களுக்காவது அந்த கோ-மாதாவை நேரில் தரிஸிக்கும் வாய்ப்புக் கிட்டியுள்ளதே!

      எப்போதுமே நெனச்சு நெனச்சு சந்தோஷபட்டுகிட்டே இருக்கலாம்தான். கொடுத்து வெச்ச மஹராஜி. :)

      Delete
    7. இல்ல கிருஷ் மேல போட்ட கமெண்ட்ல ரொம்ப ஸ்பெலிங்க் மிஸ்டேக் ஆயிடிச்சு. அதான் டெலிட் பண்ணினேன்....

      Delete
    8. பூந்தளிர் 9 July 2016 at 07:07

      //இல்ல கிருஷ் ... மேல போட்ட கமெண்ட்ல ரொம்ப ஸ்பெலிங்க் மிஸ்டேக் ஆயிடிச்சு. அதான் டெலிட் பண்ணினேன்....//

      ஓஹோ, நான் வேறு ஏதேனும் வில்லங்கமாக இருக்குமோன்னு நினைச்சுப்போட்டேன். :)

      மேலே போட்டது சரியாக இல்லை என்றால் கீழே மீண்டும் சரியாகப் போட்டிருக்கக்கூடாதா?

      Delete
    9. ))))))))))....... போட்டுட்டேன்....போறுமா......

      Delete
    10. பூந்தளிர் 9 July 2016 at 22:17

      //:))))))))))....... போட்டுட்டேன்....போறுமா......//

      ஆஹா ..... மீண்டும் கீழே போட்டுள்ளதில் திருப்தியோ திருப்தியாக உள்ளது. மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி. :)

      ”போடச்சொன்னா .... போட்டுக்கறேன் ....
      போதும் வரை ........ கன்னத்திலே” ன்னு

      ஒரு பாட்டே உள்ளது.

      Delete
  11. (4)

    அன்று விடியற்காலம் நான் கண்ட *என் கனவு* அப்படியே பலித்துவிட்டதில் எனக்கோர் தனி மகிழ்ச்சியாக உள்ளது.

    * http://htpsipikulmuthu.blogspot.in/2016/07/pojanam2.html *

    முன்னாவின் அக்காவுக்கும் திருமணம் நிச்சயமாகி வரும் செப்டம்பர் மாதம் மிகச் சிறப்பாக நடக்க உள்ளதே! அதனால் அந்தக் கல்யாணப்பெண்ணையும் இந்தக் கல்யாணத்தினைப் பார்க்க அழைத்துச் சென்றுள்ளது மிகச்சிறப்பாக அமைந்துள்ளது.

    மேலும் செப்டம்பர் மாதம் முன்னாவின் அக்காவுக்குக் கல்யாணம் முடிந்ததும், நம் முன்னாவுக்கு லைன் கிளிர் ஆகிவிடும். :)))))

    அடுத்து அவளின் கல்யாணமும் இந்த ஆண்டோ அல்லது அடுத்த ஆண்டோ மிகச்சிறப்பாக நடைபெற உள்ளது என்பதை இங்கு அனைவருக்கும் சூசகமாகத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறார் ...... இந்த உங்கள் கல்யாண கோபூஜீ :)

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. முன்னாவுக்கு லைன் கிளிர் ஆகிவிடும். :))))) =

      முன்னாவுக்கு லைன் கிளியர் (CLEAR) ஆகிவிடும். :)))))

      Delete
    2. போங்க கோபூஜி...... பகடி பண்ணாதிங்க ( முருகு பாஷை..))))......

      Delete
    3. இதுல என்ன பகடி இருக்கு முன்னா..... கிருஷ் சொன்னாங்கன்னா அப்படியே பலிச்சுடும்.. தெரியுமா.....

      Delete
    4. கோபால்ஜி எதையோ மனசுல வச்சு தான் இப்படி சொல்றாங்கனு நல்லாவே புரியுது...

      Delete
    5. நம் முன்னா பார்க் நண்பர்களுக்கும், அவர்களின் வீட்டில் கல்யாண வயதில் உள்ள மற்ற சிலருக்கும் வரிசையாகக் கல்யாணம் நடைபெற்று வருகின்றன. எனக்கும் மிகவும் சந்தோஷமாகவே உள்ளது.

      அடுத்து க்யூவில் இருப்போர் முன்னாவின் அக்காவும், நம் முன்னா பார்க் ஓனர் முன்னா அவர்களும் மட்டுமே.

      முன்னாவின் அக்காவுக்கும் வரும் செப்டம்பரில் கல்யாணம் என இப்போது சமீபத்தில் முடிவாகி விட்டது.

      அடுத்து நம் முன்னா ஒருத்திதானே இப்போதைக்கு பெண்டிங். அவள் விருப்பப்படியே அவள் திருமணமும் முடிந்துவிட்டால், எங்க ஊர் பிள்ளையாருக்கு இரட்டை சதிர் தேங்காய்களாக உடைக்கணும் என நான் நினைத்து வேண்டிக்கொண்டுள்ளேன்.

      அந்தப் பிள்ளையார் (பிள்ளை....யார்?) என்ன செய்யப்போகிறாரோ?

      ஒரே கவலையாக்கீதூஊஊஊஊ.

      Delete
    6. ஆமா....... அந்த....பிள்ளை.....யார்.....???????

      Delete
    7. ப்ராப்தம் 9 July 2016 at 22:39

      //ஆமா....... அந்த....பிள்ளை.....யார்.....???????//

      எங்கட முன்னாவைக் கட்டிக்கொள்ளப்போகிறவன், இனி புதிதாகப் பிறந்து இந்த பூமிக்கு வரப்போவது இல்லை.

      எங்கேயோ, ஏற்கனவே நிச்சயமாகப் பிறந்து, வளர்ந்துகொண்டு வருகிறான் அந்த அதிர்ஷ்டசாலி.

      அந்தப் பிள்ளையை யார் என்று அந்தப் பிள்ளையார் தான் நமக்கு அடையாளம் காட்டிட வேண்டும். உரிய நேரத்தில் காட்டி மகிழ்விப்பார் என்ற நம்பிக்கையும் உள்ளது. பார்ப்போம்.

      கடவுளே .... கடவுளே .... ஒவ்வொருத்தர் கேள்விகளுக்கும் ஒவ்வொரு விதமாக பதில் சொல்லி தப்பிப்பதற்குள் எனக்குப் போதும் போதும் என்று ஆகிவிடுகிறது.

      “போதுமோ இந்த இடம் ....
      கூடுமோ அந்த சுகம் ........
      எண்ணிப்பார்த்தால் சின்ன இடம் .....
      இருவர் கூடும் நல்ல இடம் ......”ன்னு

      ஒரு மிகச் சிறந்த பாடல் “நான்” என்ற படத்தில் வருகிறது.

      கொட்டும் மழையில் ஓர் வெள்ளை நிற FIAT CAR உள்ளே மாட்டியுள்ள ஒரு ஜோடி பாடும் மிகவும் அருமையான பாடல் அது. :)))))

      Delete
  12. (5)

    03.07.2016 ஞாயிறு காலை தங்கள் வீட்டிலிருந்து புறப்பட்டு, மிகச்சரியாக 10 மணிக்குக் கிளம்பும் இரயிலில் முன்னா + அவங்க அக்கா + அவங்க அம்மா ஆகியோர் ஏறியுள்ளார்கள்.

    ஏழு மணி நேர இரயில் பயணத்திற்குப் பிறகு அன்று மாலை 5 மணிக்குக் கடய நல்லூரில் பத்திரமாகப்போய் இறங்கியுள்ளார்கள்.

    கல்யாண வீட்டை விசாரித்துக் கண்டு பிடித்து விட்டார்கள். அந்த வீட்டு வாசலில் பெரிய ஷாமியான (பந்தல்) போட்டு ஷெனாய் வாசித்துக்கொண்டு அமர்க்களமாக இருந்துள்ளது.

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. முன்னா எப்படி சொன்னாளோ தெரியாது கிருஷ் நீங்க சொல்லி போகும் விதம் வெரி இன்ட்ரஸ்டிங்க்...

      Delete
    2. குட்... வெரி குட்...

      Delete
    3. பூந்தளிர் 8 July 2016 at 22:57

      //முன்னா எப்படி சொன்னாளோ தெரியாது. கிருஷ் நீங்க சொல்லி போகும் விதம் வெரி இன்ட்ரஸ்டிங்க்...//

      யாருக்கு எப்படியோ தெரியாது .... ஆனால் என் எழுத்துக்கள் எங்காளுக்கு இண்ட்ரஸ்டிங்க் ஆக இருப்பது கேட்கத்தான் எனக்கும் ஓர் தனி இண்ட்ரஸ்ட் ஆக உள்ளது.

      Delete
    4. ப்ராப்தம் 8 July 2016 at 23:24

      //குட்... வெரி குட்...//

      எதற்கு இந்த ‘குட்... வெரி குட்...’?

      எனக்கா, முன்னாவுக்கா அல்லது வேறு ‘யாரோ’ வுக்கா?

      எனினும் யாருக்காக இருப்பினும் குட்... வெரி குட்... மிக்க நன்றீங்கோ. :)

      Delete
    5. வெரிகுட்.... எங்கட கோபால்ஜிக்குதான்......

      Delete
    6. ப்ராப்தம் 9 July 2016 at 22:40

      //வெரிகுட்.... எங்கட கோபால்ஜிக்குதான்......//

      ஹைய்ய்ய்ய்யோ, வெரி குட் சமாளிப்பூஊஊஊஊஊ.

      எனினும் அனைவர் சார்பிலும் மிக்க நன்றீங்கோ. :)

      Delete
  13. (6)

    முன்னே பின்னே ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டதே இல்லாத முன்னாவும் முருகுவும் நேரில் சந்திக்க இருக்கும் சுவாரஸ்யமான கட்டம் இப்போது:

    கல்யாண பொண்ணு அலங்காரத்துல ஜொலிச்சுகிட்டிருந்த முருகுவ முன்னா அடையாளம் கண்டுகொண்டு விட்டாள் ....

    ஓடிப்போய் “ ஹாய் முருகு” ன்னு போயி கட்டி பிடிச்சுகிட்டாள்.

    ”ஏய் ஏய் ஆரு நீ....” ன்னு முதலில் மொறச்சிருக்கா நம் முருகு ... )))))

    ”முன்னா பார்க் முன்னா”....ன்னு சொன்னதுமே..... அவளும் முன்னாவைக் கட்டி பிடிச்சு கிஸ்ஸடிக்க ஆரம்பித்து விட்டாள் :)))))))

    ”நம்பவே முடியல.... நெசம்மா நீதானா, ஒங்கூட ஆரு வந்திருக்காங்க”ன்னு..... முருகு கேட்டிருக்கா.

    தன் அம்மாவையும் அக்காவையும் முருகுவுக்கு முதலில் அறிமுகம் செய்து வைத்திருக்கிறாள், முன்னா.

    இவர்களைப்பார்த்ததும் முருகுவுக்கு ஒரேயடியா சிரிப்பாணி பொத்துகிச்சி...

    “வா வா” ன்னு எல்லாரிடமும் இவர்களை அறிமுகம் பண்ணி வைத்திருக்கிறாள், முருகு.

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. ரியலி சூப்பர் முன்னா.. முருகுவ நெனச்சாலே சந்தோஷமா இருக்கு....

      Delete
    2. முருகு முன்னாவ கட்டி பிடிச்சு கிஸ்ஸடிக்கும்போது ஆஷிக் பக்கத்துல இல்லயா...))))

      Delete
    3. ப்ராப்தம் 8 July 2016 at 23:25

      //முருகு முன்னாவ கட்டி பிடிச்சு கிஸ்ஸடிக்கும்போது ஆஷிக் பக்கத்துல இல்லயா...))))//

      அதைப்பற்றி முன்னா என்னிடம் தெளிவாகச் சொல்லவில்லை. அதனால் எனக்குத் தெரியவில்லை.

      ஒருவேளை முருகுவிடம் முத்தம் வாங்கிக்கொண்ட முன்னாவுக்கு, என்னிடம் சொல்ல ஒரே வெட்கமாக இருந்திருக்கலாம்.

      ‘சும்மா’ ஏதேதோ சொல்லியிருக்கிறாளே தவிர ’சும்மா’ வைப்பற்றி முழுவிபரம் சொல்லவில்லை. எந்த இடத்தில் ‘சும்மா’ கொடுக்கப்பட்டது என்றும்கூடச் சொல்லவில்லை. :(

      ஆனால் உங்களின் இந்தக்கேள்வியில் நியாயமும் குறும்பும் கொப்பளிக்கிறது. மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி. :)))))

      Delete
  14. (7)

    முருகுவின் அம்மி (அம்மா) ரொம்பவே வெள்ளந்தியா அப்பாவிதனமா இருந்திருக்காங்க.

    உடனே, அந்த முருகுவின் அம்மி (அம்மா) முன்னாவிடம்

    “ஏம்மா அந்த ஐயரு சாமி ஒங்கூட வந்திருக்காகளா”ன்னு கேட்டிருக்காங்க”

    இதைக்கேட்டதும், நம் முன்னாவுக்கு, உடனே ஒன்றுமே சரியாகப் புரியவில்லை. ஸ்தம்பித்து நின்று விட்டாள். பிறகு .....

    ”உன் அம்மி என்னிடம் என்ன கேட்கிறாங்க, முருகு?” என முன்னா முருகுவைப்பார்த்து விழித்திருக்கிறாள்.

    முருகு சொல்லியிருக்கு:

    ”எங்கட குருஜிப்பற்றி கேக்குது என் அம்மி” ன்னு

    இப்போ நம் முன்னாவுக்கும் சிரிப்பாணி பொத்துகிச்சி..)))

    ”அம்மா அவங்க (அந்த குருஜி ஐயர்) வேற ஊரு, நாங்க வேற ஊரு; அதனால் அவங்க எங்ககூட வரவில்லை” ன்னு முன்னா சொல்லியிருக்குது.

    “ஐயரு மேல இந்த மக்கு ஒரே பைத்தியமா இருக்குது. குருஜி வரும் வரும்னு சொல்லிகிட்டே இருந்திச்சு. வந்திருந்தா நல்லா இருக்கும்.. ஆனாக்க அவுகல்லாம் ஐயருமாருக. நம்மட முஸ்லிம் வூட்டு நிக்கவுக்கெல்லா வர மாட்டாகதானு. அவுக நல்ல மனசால தானு எங்கட வூடே சந்தோசமா இருக்குதுன்னு” அந்த முருகுவின் அம்மா என்னைப்பற்றி ரொம்பவும் பெருமையா சொல்லிகிட்டே போனாங்களாம்.

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. இந்த ஐயரு மேல முருகு மட்டுமா பைத்தியமா இருக்கு...??)))))

      Delete
    2. அதானே கோபால்ஜி மேல... பைத்தியமா இன்னும்.. நி....ற....ய...பேரு இருக்காங்களே......

      Delete
    3. பூந்தளிர் 8 July 2016 at 22:59

      //இந்த ஐயரு மேல முருகு மட்டுமா பைத்தியமா இருக்கு...??)))))//

      ப்ராப்தம்8 July 2016 at 23:27

      //அதானே கோபால்ஜி மேல... பைத்தியமா இன்னும்.. நி....ற....ய...பேரு இருக்காங்களே......//

      ஆஹா, கொஞ்சம் சந்து கிடைத்தால் போதும், இருவரும் இப்படி சிந்து பாடி விடுகிறீர்களே !!!!!

      இது நியாயமா?

      Delete
    4. நியாயமே இல்லதான்...)))))

      Delete
    5. உண்மைய சொன்னா ஒத்துக்கவே மாட்டீங்களே.........

      Delete
    6. பூந்தளிர் 9 July 2016 at 22:18

      //நியாயமே இல்லதான்...)))))//

      ப்ராப்தம் 9 July 2016 at 22:41

      //உண்மைய சொன்னா ஒத்துக்கவே மாட்டீங்களே.........//

      மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் அடிதான்/இடிதான் ன்னு அன்னிக்கே எங்கட சாரூஊஊஊ சொன்னாள். அவள் வாய்க்குச் சர்க்கரை தான் போடணும்.

      இருவருக்கும் (என் இரு கண்களுக்கும்) என் நன்றிகள்.

      Delete
  15. (8)

    பெத்தச்சி, அவுக பையங்க, மயினிக, முருகுவோட அண்ணன் மயினி னு எல்லார்கிட்டாலவும் முன்னாவையும், அவளின் அம்மா + அக்காவையும் அறிமுகம் செய்தாளாம் முருகு.

    பிறகு தன் கணவர் ஆஷிக்கிடம் முருகு இவர்களைக் கூட்டிக் கொண்டுபோய் ”இவள் தான் முன்னா பார்க் முன்னா”ன்னு அறிமுகம் செய்திருக்கிறாள்.

    ஆஷிக் சரியான ஸென்ஸ் ஆஃப் ஹ்யூமர் ஆசாமியாம்.

    “அடேங்கப்பா, பார்க் ஓனரு போல பெரிய ஆளுகள் எல்லாம் கூட நம்மட நிக்காவுக்கு வந்திருக்காகளே”ன்னு சொல்லியிருக்கிறார்.

    “ஐயோ.. அப்படியெல்லாம் இல்லை; கம்ப்யூட்டர்ல ப்ளாக் வைத்திருக்கிறேன்; அதுல கமெண்டு போடற இடத்தை நாங்களெல்லாம் ’முன்னா பார்க்’ன்னு சொல்லி கலாச்சிகிடுவோம்”ன்னு முன்னா அவரிடம் விவரித்துச் சொல்லி இருக்கிறாள்.

    செம ரகளையா .... ரொம்ப ஜாலியா சிரிச்சு பேசிக்கிட்டு இருந்திருக்காங்க எல்லோருமே.

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. ஆஹா... சூப்பர்... பார்க் ஓனர் முன்னா அவர்களே..........

      Delete
    2. ஹா..ஹா.... முன்னா பார்க் ஓனரே....கங்க்ராட்ஸ்...))))))

      Delete
  16. (9)

    அன்றைய கல்யாணப்பொண்ணு முருகு பற்றி முன்னாவின் வர்ணனைகள் .... அப்படியே இதோ:

    1) முருகு எழுத்துல தான் கொச்சதனமா இருப்பானு நினைச்சேன்.

    2) குணத்துலேயும் பச்ச புள்ளனா பச்சபுள்ளதனமாத்தான் இருக்கா.

    3) கல்யாண அலங்காரத்துல அழகு ஜொலிக்கறா..

    4) கையில முழங்கை வரை மெஹந்தி போட்டு நிறைய கண்ணாடி + கவரிங்க் வளையல்கள்.

    5) முதல் நாள் ஃபேஷியல் பண்ணி, ஐ ப்ரோ திருத்தி பெடிக்யூர் மெனிக்யூரெல்லாம் பண்ணி விட்டிருக்கா.

    6) ஜரிக வச்ச டிரஸ் போட்டிருக்கா..

    7) ஆளுதான் 22 --- வயசுக்கு வளந்திருக்கா.

    8) குழந்தை முகம் குழந்தை தனம் போகவே இல்ல....

    9) அழகு சொட்டறா நல்ல கலருவேற .....

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. படிக்கும்போதே நாம கூடவே இருந்து ரசிக்கறது போல இருக்கு....

      Delete
    2. ஆமா அவ குழந்தையே தான்.... இந்த குழந்தை ஆஷிக் க எப்படில்லாம் "ஆட்டி" வைக்க போகுதோ.....)))

      Delete
    3. பூந்தளிர் 8 July 2016 at 23:01

      //படிக்கும்போதே நாம கூடவே இருந்து ரசிக்கறது போல இருக்கு....//

      மிக்க மகிழ்ச்சி. :)

      ப்ராப்தம் 8 July 2016 at 23:29

      //ஆமா அவ குழந்தையே தான்.... இந்த குழந்தை ஆஷிக் க எப்படில்லாம் "ஆட்டி" வைக்க போகுதோ.....))) //

      அது என்ன “ஆட்டி” ? காருக்கு கியர் மாற்றுவது போலவா? :)))))

      அனுபவம் அழகாப் பேச வைக்குது. சந்தோஷம்.

      Delete
    4. ஹா ஹா..... ஆமா.... செம்ம அனுபவம்தான்....))))))

      Delete
    5. ப்ராப்தம் 9 July 2016 at 22:42

      //ஹா ஹா..... ஆமா.... செம்ம அனுபவம்தான்....))))))//

      தெரிகிறது. புரிகிறது சந்தோஷம்.

      அதுவும் உங்களிடம் உள்ளது ஒரு காரா என்ன? இரண்டு முரட்டுக் கார்கள் அல்லவா?

      அதைத் தவிர தனியா ஒரு ஆத்துக்’கார்’ வேறு ..... அனுபவங்கள் சும்மா செமையாகத்தான் இருக்கும். ENJOY !

      Delete
  17. (10)

    முன்னா ஆஷிக்கிடம் போய் ....

    ”இவளை எப்படி நீங்க சமாளிக்க போறிங்கன்னு” கேட்டிருக்கிறாள்.

    அதற்கு அவர் ......

    ”இந்த குழந்தை தனமும் இவளோட இன்னஸன்டும் தான் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. ஸ்கைப்ல கூட தெரியல.. நேத்து முதன் முதலா நேரில பாத்ததுமே மனசுக்குள்ள வந்து ஜம்முனு உக்காந்துகிட்டா. பாருங்க அவளுக்குதான் நிக்காஹ் நடக்குதுனு கொஞ்சமாவது வெக்கப்படுதா..”ன்னு கேட்டு சிரித்திருக்கிறார்.

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. குட்... வெரி குட்....

      Delete
    2. வெக்கப்படக்கூட சொல்லியா கொடுக்க முடியும்.. இது நல்ல கதையா இருக்குதே.....

      Delete
  18. (11)

    முன்னா குடும்பத்தாரின் பார்வையில், ஆஷிக் பார்க்கவும் நல்ல ஹாண்ட்ஸம்மா அழகா இருந்திருக்காங்க. குணமும் ரொம்ப நல்லமாதிரியா தெரிந்திருக்காங்க. ஜோடி பொருத்தம் சூப்பர்... ஆக இருந்துள்ளது. மேட் ஃபார் ஈச்... அதர்.... போல இவர்கள் பார்வைக்குத் தெரிந்துள்ளது.

    அதுதானே நமக்கு முக்கியம்.

    ooooooooooooooooooooooooooo

    மேலும் தொடரும் .......

    ReplyDelete
  19. ஆஷிக் நல்ல மாதிரியா இருப்பது முருகுவுக்கு கிருஷோட ஆசிர்வாதம்தான்......

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர் 8 July 2016 at 23:02

      //ஆஷிக் நல்ல மாதிரியா இருப்பது முருகுவுக்கு கிருஷோட ஆசிர்வாதம்தான்......//

      என் ஆசீர்வாதங்கள் அவளுக்கு மட்டுமல்ல .... உங்கள் எல்லோருக்குமே நிறையவே உண்டு. இருப்பினும் இன்று போல என்றும் மகிழ்ச்சிகள் தொடர்ந்து நீடிக்க இறைவன் அருள் புரிய வேண்டும்.

      ஆதரவான ஆச்சர்யமான தங்களின் கருத்துக்களுக்கு என் நன்றிகள், ரா ஜா த் தி. :)

      Delete