Tuesday 19 July 2016

இரண்டு மனம் வேண்டும்

11 comments:

  1. குடிப்பதற்கு ஒரு மனம் இருந்தால்
    அவளை மறந்து விடலாம் - அவளை
    மறப்பதற்கு ஒரு மனம் இருந்தால்
    குடித்து விடலம் - ஆனால்
    இருப்பதோ ஒரு மனம்...
    நான் என்ன செய்வேன்?

    >>>>>

    ReplyDelete
  2. இரண்டு மனம் வேண்டும் இறைவனிடம் கேட்டேன்
    நினைத்து வாட ஒன்று மறந்து வாழ ஒன்று

    (இரண்டு மனம் வேண்டும்...)

    சிறிய காயம் பெரிய துன்பம்
    ஆரும் முன்னே அடுத்த காயம்

    உடலில் என்றால் மருந்து போதும்
    உள்ளம் பாவம் என்ன செய்யும்?

    (இரண்டு மனம் வேண்டும்...)

    இரவும் பகலும் இரண்டானால்
    இன்பம் துன்பம் இரண்டானால்

    உறவும் பிரிவும் இரண்டானால்
    உள்ளம் ஒன்று போதாதே

    (இரண்டு மனம் வேண்டும்...)

    கண்களின் தண்டனை காட்சி வழி
    காட்சியின் தண்டனை காதல் வழி

    காதலின் தண்டனை கடவுள் வழி
    கடவுளை தண்டிக்க என்ன வழி?

    (இரண்டு மனம் வேண்டும்...)

    ReplyDelete
  3. படம் : வசந்த மாளிகை.

    இசை : K.V.மகாதேவன்.

    பாடலாசிரியர் : கவியரசு கண்ணதாசன்.

    பாடியவர் : டி.எம்.செளந்தரராஜன்.

    >>>>>

    ReplyDelete
  4. மிகப்பொருத்தமான இந்தப் பாடல் பகிர்வுக்கு என் நன்றிகள்.

    ReplyDelete
  5. ஓ...... சரி...சரி... பாட்டு அருத்தமுள்ளதாகத்தான் இருக்கு...

    ReplyDelete
  6. கோபூஜி மூடு தெரியாம இந்த பாடல போட்டுட்டேன்.. ஸாரிங்க...

    ReplyDelete
    Replies
    1. சிப்பிக்குள் முத்து. 19 July 2016 at 21:49

      //கோபூஜி மூடு தெரியாம இந்த பாடல போட்டுட்டேன்.. ஸாரிங்க...//

      அதனால் பரவாயில்லை.

      YOURS TWO TOO, ARE TOO SHARP என்பது எனக்கு மிக நன்றாகவே தெரியும். :)

      இந்த நேரத்தில் இந்தப்பாடல் மிகவும் பொருத்தம்தான்.

      Delete
  7. Replies
    1. சிப்பிக்குள் முத்து. 20 July 2016 at 22:16

      //இதானே வேணாங்குது....//

      ஏன் ? எது வேணாம் ?

      சிறுமூளை + பெருமூளை இரண்டும் மிகவும் முக்கியமாச்சே. இரு மூளைகளுமே கூர்மையாக இருக்க வேண்டுமே.

      அவ்வாறு மிகக்கூர்மையாக உள்ளது உங்களுக்கு என்று தானே நான் சொல்ல வந்தேன். அதற்குள் ஏதோ ஒரு அவசரத்தில் என் மூளை மழுங்கி சொல்ல வந்ததைச் சரியாகச் சொல்லாமல் விட்டுவிட்டேன் போலிருக்குது. ஸாரி.....ம்மா.

      >>>>>

      Delete
    2. எனது நேயர் விருப்பமாக கீழ்க்கண்ட பாடலை வெளியிடலாம்:-

      உங்கள் அழகென்ன அறிவென்ன
      உங்கள் அழகென்ன அறிவென்ன
      மனமென்ன குணமென்ன கோபம் வரலாமா

      இரு கண்ணிருக்க கண்ணெதிரே பெண்ணிருக்க
      பெண்ணெதிரே கொஞ்சம் வரலாமா
      கோபம் வரலாமா கொஞ்சம் வரலாமா

      காதளவு கண்கள்.. காலளவு கூந்தல்
      பெண்ணழகு எங்கே வரும் எங்கே வரும்

      அந்திப்பகல் துணையிருக்க
      ஆருயிராய் நான் இருக்க

      கோபங்கள் எங்கே வரும்
      கோபங்கள் எங்கே வரும்

      அழகென்ன அறிவென்ன
      உங்கள் அழகென்ன அறிவென்ன

      மனமென்ன குணமென்ன கோபம் வரலாமா
      இரு கண்ணிருக்க கண்ணெதிரே பெண்ணிருக்க
      பெண்ணெதிரே கொஞ்சம் வரலாமா

      திங்களுக்குத் தங்கை
      தென்றலுக்குத் தோழி
      வஞ்சியிவள் வந்தேன் என்றாள்
      வந்தேன் என்றாள்

      திங்களுக்குத் தங்கை
      தென்றலுக்குத் தோழி
      வஞ்சியிவள் வந்தேன் என்றாள்
      வந்தேன் என்றாள்

      திங்களுக்குத் தங்கை
      தென்றலுக்குத் தோழி
      வஞ்சியிவள் வந்தேன் என்றாள்
      வந்தேன் என்றாள்

      முத்துநகை சிந்தி விழ
      முந்தானை முந்திவிழ
      ஆசைகள் தந்தேன் என்றாள்
      ஆசைகள் தந்தேன் என்றாள்

      அழகென்ன அறிவென்ன
      உங்கள் அழகென்ன அறிவென்ன
      மனமென்ன குணமென்ன கோபம் வரலாமா

      இரு கண்ணிருக்க கண்ணெதிரே பெண்ணிருக்க
      பெண்ணெதிரே கொஞ்சம் வரலாமா

      ஆயிரத்தில் ஒன்று ஆணழகன் என்று
      கன்னிமனம் இங்கே வரும் இங்கே வரும்

      ஆயிரத்தில் ஒன்று ஆணழகன் என்று
      கன்னிமனம் இங்கே வரும் இங்கே வரும்

      கொத்து மலர் பூத்திருந்தும்
      கொய்யாமல் காத்திருந்தால்

      காலங்கள் சென்றே விடும்
      காலங்கள் சென்றே விடும்

      அழகென்ன அறிவென்ன
      உங்கள் அழகென்ன அறிவென்ன
      மனமென்ன குணமென்ன கோபம் வரலாமா

      இரு கண்ணிருக்க கண்ணெதிரே பெண்ணிருக்க
      பெண்ணெதிரே கொஞ்சம் வரலாமா
      கோபம் வரலாமா கொஞ்சம் வரலாமா

      >>>>>

      Delete
    3. திரைப் படம்: அன்புக் கரங்கள்

      சிவாஜி கணேசன் + தேவிகா நடித்தது

      பாடகர்கள்: பி. சுசிலா + ?

      பாடலாசியர்: வாலி

      இசை: ஆர். சுதர்ஸனம்

      வெளியான ஆண்டு: 1965

      Delete