Saturday 23 July 2016

mallihai en mannan mayangum

9 comments:

  1. மல்லிகை என் மன்னன் மயங்கும்
    பொன்னான மலரல்லவோ.....

    எந்நேரமும் உன்னாசைபோல்
    பெண்பாவை நான் பூச்சூடிக் கொள்ளவோ.....

    வான் மேகங்கள் வெள்ளி ஊஞ்சல் போல்
    வான் மேகங்கள் வெள்ளி ஊஞ்சல் போல்

    திங்கள்மேனியைத் தொட்டுத் தாலாட்டுது!
    குளிர் காற்றிலே தளிர் பூங்கொடி!

    கொஞ்சிப்பேசியே அன்பைப் பாராட்டுது
    என் கண்ணன் துஞ்சத்தான்
    என் நெஞ்சம் மஞ்சம்தான்
    கையோடு நானள்ளவோ
    என் தேவனே உன் தேவி நான்
    இவ்வேளையில் உன் தேவை என்னவோ

    [மல்லிகை...]

    பொன் மாங்கல்யம் வண்ணப் பூச்சரம்
    பொன் மாங்கல்யம் வண்ணப் பூச்சரம்
    மஞ்சள் குங்குமம் என்றும் நீ தந்தது!
    ஓராயிரம் இன்பக்காவியம்
    உந்தன் கண்களில் அள்ளி நான் தந்தது!

    நம் இல்லம் சொர்க்கம்தான்
    நம் உள்ளம் வெள்ளம்தான் ஒன்றோடு ஒன்றானது
    என் சொந்தமும் இந்த பந்தமும் உன்னோடுதான்
    நான் தேடிக்கொண்டது

    [மல்லிகை...]

    ReplyDelete
  2. படம்: தீர்க்க சுமங்கலி

    இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்

    பாடியவர்: வாணி ஜெயராம்

    பாடல்: கவிஞர் வாலி

    ReplyDelete
  3. எனக்கு மிகவும் பிடித்தமான மிக அருமையான இனிய பாடல்.

    கும்மென்று வீசிடும் மல்லிகை மணத்தில் சொக்கிப்போனேன்.

    பாடல் பகிர்வுக்கு என் நன்றிகள்.

    ReplyDelete
  4. 1974-இல், வெளிவந்த படம்.

    எனக்கு அப்போது ஸ்வீட்டான 24 வயது.

    எங்கட கே.ஆர்.விஜயா .... எப்போதும் கே.ஆர்.விஜயாதான்.

    மிக நீண்டு வளர்ந்த வெயிட்டான, கனிந்த முழு வெள்ளரிப்பழம் போலவே. :)

    ReplyDelete
  5. ம் ம் ரசிகர் நல்ல ரசிகர்

    ReplyDelete
    Replies
    1. சிப்பிக்குள் முத்து. 24 July 2016 at 05:32

      //ம் ம் ரசிகர் நல்ல ரசிகர்//

      இன்றைய ’புன்னகை அரசி’க்கு என் நன்றிகள். :)))))

      Delete
  6. அதாரது இன்றய புன்னகை அரசி நாளைய அளுமூஞ்சி அரசியோ......

    ReplyDelete
    Replies
    1. சிப்பிக்குள் முத்து. 25 July 2016 at 23:17

      //அதாரது இன்றய புன்னகை அரசி நாளைய அளுமூஞ்சி அரசியோ......//

      நோ ..... நோ ..... அப்படியெல்லாம் சொல்லாதீங்கோ, ப்ளீஸ்.

      நீங்களும் எங்கட கே.ஆர்.விஜயா போலவே நூறு வயது தாண்டினாலும்கூட புன்னகை அரசி மட்டுமே.

      [”இந்தப் புன்னகை என்ன விலை ..... என் இதயம் சொன்ன விலை” என்று ஒரு பாட்டே உள்ளதே.]

      Delete
  7. நல்ல பாடல்...நன்றி முன்னா...

    ReplyDelete