Tuesday 19 July 2016

மலர்ந்தும் மலராத

7 comments:

  1. இது சோகபாட்டுதான் ஆனாகூட வார்த்தைகள் எப்படி யோசிச்சு மனதை உருக்கும்படியாக இருக்கு.. கண்ணதாசன் க்ரேட்...

    ReplyDelete
  2. ஆமாங்க கண்ணதாசனுக்கு தான் கவி பேரரசு பட்டம் பொறுத்தமா இருக்கும்..

    ReplyDelete
  3. பெண்:

    மலர்ந்தும் மலராத பாதி மலர்
    போல வளரும் விழி வண்ணமே

    வந்து விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக
    விளைந்த கலையன்னமே

    நதியில் விளையாடி கொடியின் தலை சீவி நடந்த
    இளம்தென்றலே

    வளர் பொதிகை மலை தோன்றி மதுரை நகர்
    கண்டு பொலிந்த தமிழ் மன்றமே

    ஆண்:

    மலர்ந்தும் மலராத பாதி மலர் போல
    வளரும் விழி வண்ணமே

    வந்து விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக
    விளைந்த கலையன்னமே

    நதியில் விளையாடி
    கொடியில் தலை சீவி
    நடந்த இளம்தென்றலே

    வளர் பொதிகை மலை தோன்றி மதுரை நகர்
    கண்டு பொலிந்த தமிழ் மன்றமே

    ஆண்:

    யானைப் படை கொண்டு சேனை பல வென்று
    ஆளப் பிறந்தாயடா
    புவி ஆளப் பிறந்தாயடா

    அத்தை மகளை மணம் கொண்டு
    இளமை வழி கண்டு வாழப் பிறந்தாயடா

    அத்தை மகளை மணம் கொண்டு...
    இளமை வழி கண்டு...
    வாழப் பிறந்தாயடா

    பெண்:

    தங்கக் கடிகாரம் வைர மணியாரம்
    தந்து மணம் பேசுவார்
    பொருள் தந்து மணம் பேசுவார்

    மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக
    உலகை விலை பேசுவார்.. உலகை விலை பேசுவார்

    மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக
    உலகை விலை பேசுவார்

    ஆண்:

    நதியில் விளையாடி
    கொடியில் தலை சீவி
    நடந்த இளம்தென்றலே

    வளர் பொதிகை மலை தோன்றி
    மதுரை நகர் கண்டு
    பொலிந்த தமிழ் மன்றமே

    பெண்:

    சிறகில் எனை மூடி அருமை மகள் போல
    வளர்த்த கதை சொல்லவா

    கனவில் நினையாத காலம் இடை வந்து
    பிரித்த கதை சொல்லவா..
    பிரித்த கதை சொல்லவா

    ஆண்:

    கண்ணில் மணி போல
    மணியின் நிழல் போல
    கலந்து பிறந்தோமடா

    இந்த மண்ணும் கடல் வானும் மறைந்து
    முடிந்தாலும் மறக்க முடியாதடா

    உறவைப் பிரிக்க முடியாதடா
    ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

    பெண்:

    அன்பே ஆரிராரோ ஆரிராரோ
    ஆரிராராரிரோ

    அன்பே ஆரிராரிரோ..
    அன்பே ஆரிராரிரோ

    ReplyDelete
  4. படம்: பாசமலர்

    வருடம் 1961

    பாடியவர்கள்: T.M.S & P.சுசீலா

    நடிப்பு:
    நடிகர் திலகம் சிவாஜி கணேசன்
    (பாசமுள்ள அண்ணனாக) &

    நடிகையர் திலகம் திருமதி. சாவித்திரி
    (பாசமுள்ள தங்கையாக)

    ReplyDelete
  5. என் மிகச்சிறிய வயதில் (11 வயதில்) பலமுறை பார்த்த படம்.

    என் அம்மாவுடன் ஒரு முறை, என் இரு அக்காக்களுடன் தனித்தனியே இரு முறை. என் இரு அண்ணன்களுடனும் தனித்தனியே இருமுறை என சுமார் ஐந்துமுறைகளுக்கு மேல் பார்த்துள்ள அருமையான படம்.

    அன்றைய காலக்கட்டத்தில் இந்தப்படத்தை ரஸித்துக் கண்கலங்காதவர்களே யாரும் இல்லை என்று சொல்லலாம்.

    அத்தனை அழகாக எடுக்கப்பட்டுள்ள குடும்பக்கதை. அண்ணன் தங்கை பாசத்தினை எடுத்துச்சொல்லும் கதை.

    உழைப்பால் மட்டுமே உயர்ந்து உன்னத நிலையை அடையும் பணக்கார சிவாஜியிடம் மிகவும் செல்லமாக வளர்ந்துள்ள தங்கை சாவித்ரி, தன் திருமணத்திற்குப்பின், ஏழ்மையான அவள் புகுந்த வீட்டில் பல்வேறு கஷ்டங்களை அனுபவிக்க நேரிடும்.

    அண்ணன் - தங்கை பாசமே அறுபட்டுப்போகும் சூழ்நிலைகள், அவளின் புகுந்த வீட்டினரால் அவ்வப்போது உருவாக்கப்படும்.

    படத்தின் கடைசி காட்சியில், கண் பார்வை பறிபோன சிவாஜியைப் பார்த்து, கண்கலங்காதவர்கள் இருக்கவே முடியாது.

    அப்போதும் தன் தங்கையின் பெண் குழந்தையைக் காப்பாற்றுவதற்காகவே தன் கண்களை இழந்திருப்பார், சிவாஜி.

    அருமையானதோர் பாடல் பகிர்வுக்கு என் நன்றிகள்.

    வரும் தை மாதம், [பிப்ரவரி 2017-இல்], இதுபோல சிலர் தங்களின் குழந்தைகளைக் கொஞ்சி மகிழ்ந்து கொண்டிருப்பார்கள் என நினைக்கும்போது, என் மனம் பூராவும் மகிழ்ச்சியாக உள்ளது. :))

    ReplyDelete
  6. படம் பேரு பாடினவங்க பேரெல்லாம் போட்டிங்க முக்கியமான ஆளு கண்ணதாசன் பேர போடாமல் மறந்துட்டிங்களே.. கோபூஜி....

    ReplyDelete
    Replies
    1. சிப்பிக்குள் முத்து. 20 July 2016 at 21:42

      //படம் பேரு பாடினவங்க பேரெல்லாம் போட்டிங்க முக்கியமான ஆளு கண்ணதாசன் பேர போடாமல் மறந்துட்டிங்களே.. கோபூஜி....//

      ஸாரி ..... வெரி வெரி ஸாரி ..... :(

      எனக்கு மிகவும் பிடித்தமான எங்கட கவிஞர் ’கண்ணதாஸன்’ அவர்களைப்போய் நான் இங்கு குறிப்பிட மறந்துள்ளது மிகப் பெரிய தப்புதான்.

      எங்கட கவிஞரும் என்னை மன்னிப்பாராக !

      Delete