Monday, 25 July 2016

aasaiye alai pole

18 comments:

 1. ஆசையே அலை போலே
  நாமெல்லாம் அதன் மேலே
  ஓடம் போலே ஆடிடுவோமே.....வாழ்நாளிலே

  ஆசையே அலை போலே
  நாமெல்லாம் அதன் மேலே
  ஓடம் போலே ஆடிடுவோமே.....வாழ்நாளிலே

  பருவம் என்னும் காட்டிலே
  பறக்கும் காதல் தேரிலே

  ஆணும் பெண்ணும் மகிழ்வார்...
  சுகம் பெறுவார்...அதிசயம் காண்பார்!
  நாளை உலகின் பாதையை இன்றே......... யார் காணுவார்

  ஆசையே அலை போலே
  நாமெல்லாம் அதன் மேலே
  ஓடம் போலே ஆடிடுவோமே.....வாழ்நாளிலே

  வாழ்க்கை எல்லாம் தீர்ந்ததே
  வடிவம் மட்டும் வாழ்வதேன்...

  இளமை மீண்டும் வருமா.... மணம் பெறுமா.....
  முதுமையே சுகமா...

  காலம் போகும் பாதையை இங்கே...........யார் காணுவார்

  ஆசையே அலை போலே
  நாமெல்லாம் அதன் மேலே
  ஓடம் போலே ஆடிடுவோமே.....வாழ்நாளிலே

  சூறைக்காற்று மோதினால்
  தோணி ஓட்டம் மேவுமோ
  வாழ்வில் துன்பம் வரவு...சுகம் செலவு....இருப்பது கனவு
  காலம் வகுத்த கணக்கை இங்கே........யார் காணுவார்

  ஆசையே அலை போலே
  நாமெல்லாம் அதன் மேலே
  ஓடம் போலே ஆடிடுவோமே.....வாழ்நாளிலே

  ஆஅ...........ஆஅ...........ஆஅ.............

  ReplyDelete
 2. படம்: தை பிறந்தால் வழி பிறக்கும்

  வரிகள்: கண்ணதாசன்

  மிகவும் அர்த்தமுள்ள பழையப் படப் பாடல். பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
 3. Replies
  1. சிப்பிக்குள் முத்து. 25 July 2016 at 22:27

   //வாங்க கோபூஜி.....//

   வந்தேன் .....

   ’வாங்க கோபூஜி.....’ என்றதும் கல்யாணத்துக்கான அழைப்போ என நினைத்து, ஒரு நிமிடம் அப்படி ஆச்சர்யப்பட்டு ஸ்தம்பித்துப்போனேன் !!!!!

   Delete
 4. கல்யாணத்துக்கு அழைப்பாஆஆஆஆ. ஏங்க கடுப்பேத்துறிங்க.....

  ReplyDelete
  Replies
  1. சிப்பிக்குள் முத்து. 25 July 2016 at 23:10

   //கல்யாணத்துக்கு அழைப்பாஆஆஆஆ. ஏங்க கடுப்பேத்துறிங்க.....//

   ஏன் என்ன ஆச்சு? கடுப்பு தீரத்தானே ஒவ்வொருவரும் கல்யாணமே செய்துகொள்கிறோம் !

   லோகத்திலே உள்ள எல்லாப் பொண்குழந்தைகளுக்கும் காலாகாலத்திலே, உரிய வயதில், கல்யாணம் நடந்து அவாஅவா செளக்யமா சந்தோஷமா ஜாலியா இருக்கணும் என்பதே என் பிரார்த்தனையாக்கும்.

   Delete
 5. அதெல்லா சரிதான்.... ஆனா...... மனசுன்னு ஒன்னு இருக்குதுல்லா... அத என்ன பண்ண...

  ReplyDelete
  Replies
  1. சிப்பிக்குள் முத்து. 25 July 2016 at 23:23

   //அதெல்லா சரிதான்.... ஆனா...... மனசுன்னு ஒன்னு இருக்குதுல்லா... அத என்ன பண்ண...//

   மனஸு, மனசாட்சி என்பதெல்லாம் ஏட்டுச்சுரைக்காய் போல. அவை எப்போதுமே கறிக்கு உதவாது.

   ’மனம் ஒரு குரங்கு .... மனித மனம் ஒரு குரங்கு’ என்று ஒரு பாடலே உள்ளது.

   >>>>>

   Delete
  2. ஸ்ரீராமபிரானைப் பிரிந்து, இலங்கை அசோகவனத்தில், ராட்சசிகள் கூட்டத்தின் நடுவே, மிகுந்த துக்கத்தில் ஆழ்ந்திருக்கும் ஸீதா தேவியிடம், தன்னை முதன்முதலாக அறிமுகப்படுத்திக்கொள்ளும்போது ஹனுமன் வெகு அழகாக ஒன்றைச் சொல்கிறார். அதை இங்கு இப்போது தருகிறேன். படியுங்கோ. மனதுக்கு நிம்மதி ஏற்படும்.

   >>>>>


   Delete
  3. ஹனுமனைப்பார்த்து இவனும் இராவணனின் மறு உருவமோ, மாறு வேஷமோ எனக் கலங்கியபடி ஸீதை கேட்கிறாள்: “நீ யார்” என்று.

   ஸ்ரீ ராமர் + லெக்ஷ்மணரின் அங்க அடையாளங்களையெல்லாம் கூறி அடியேன் ஒரு ராமதூதன், ராமபக்தன் தாங்கள் சிறைப்பட்டிருக்கும் இடம் தேடிக்கண்டு பிடிக்கத்தான் இங்கு ஒரு தூதனாக மட்டுமே வந்துள்ளேன் எனக்கூறி, ஸ்ரீராமர் கொடுத்தனுப்பிய அடையாளப்பொருளையும் ஸீதாதேவியிடம் கொடுத்து விட்டு, ஸ்ரீ ராமருக்கும், ஸீதைக்கும் மட்டுமே தெரிந்துள்ள ஓர் தாம்பத்ய இரகசியத்தையும் எடுத்துச் சொல்லி. ஸீதை மனதில் நம்பிக்கையை முதலில் விதைக்கிறார்.

   பிறகு ஸீதா தேவியை கும்பிட்டு நமஸ்கரிக்கிறார்.

   அதன்பிறகு ஹனுமன் சொல்வதாக எனக்கு ஓர் மஹான் சொன்னதுதான் எனக்கு மிகவும் பிடித்ததோர் விஷயமாகும்.

   >>>>>

   Delete
  4. ஹனுமன் ஸீதாதேவியிடம் சொல்வது:
   =======================================

   ”நான் ஒரு குரங்கு இனத்தில் பிறந்தவன்தான்.

   பொதுவாக மனித மனங்கள் ஓரிடத்தில் ஸ்டெடியாக இல்லாமல் இங்குமங்கும் தாவிக்கொண்டே இருக்கக்கூடியது என்பதால், மனித மனங்களை குரங்குகளுக்கு ஒப்பிட்டுச் சொல்வார்கள், இந்த மனிதர்கள்.

   இருப்பினும் இங்குமங்கும் தாவித்தாவிச் செல்லும் பிறவி குணத்தையுடைய குரங்குகளாகிய நாங்களே, இன்று எங்கள் மனதையெல்லாம் கஷ்டப்பட்டு, ஒருமுகப்படுத்தி, ஸ்ரீ இராமருக்கு கைங்கர்யம் செய்ய ஒன்று சேர்ந்துள்ளோம் என்பதே, சத்யத்துக்கும் தர்மத்திற்கும் உதாரண புருஷனாக அவதரித்துள்ள ஸ்ரீ ராமரின், தாமரை போன்ற முகத்தின் அழகுக்கும், தோள் வலிமைக்கும் மயங்கி மட்டுமே” என்கிறார்.

   இதைக்கேட்ட ஸீதா தேவி, மிகவும் சந்தோஷப்பட்டு, சிரித்துக்கொண்டே, ஹனுமனை மனதார ஆசீர்வதிக்கிறாள்.

   இது பொதுவாக எந்த இராமாயணத்திலும் இல்லாததோர் அரிய பெரியதோர், அழகான நிகழ்ச்சியாகும்.

   இதை எனக்குச் சொல்லியுள்ள மஹான் அவர்களின் மஹிமை பற்றியே நான் சுமார் 20 பதிவுகள் தொடராக என் வலைத்தளத்தினில் வெளியிட்டுள்ளேன்.

   முதல் பகுதிக்கான இணைப்பு இதோ:

   http://gopu1949.blogspot.in/2012/02/blog-post_14.html

   தலைப்பு: ”நல்வழி காட்டிய நல்லவர்”

   Delete
 6. எதுக்கு இதை எனக்கு சொல்றிங்க...

  ReplyDelete
  Replies
  1. சிப்பிக்குள் முத்து. 26 July 2016 at 00:21

   //எதுக்கு இதை எனக்கு சொல்றிங்க...//

   நான் செய்யும் எல்லாவற்றிற்குமே ஏதேனும் காரணங்கள் உண்டு. அது உங்களுக்கு இப்போது புரியவே புரியாது.

   வெளியே சொல்லமுடியாத வேதனைகளும், துக்கங்களும் மனதில் குடிகொண்டு நம்மை துன்புருத்தும் போது, ஸ்ரீமத் இராமாயணத்தில் வரும் ’சுந்தரகாண்டம்’ என்ற பகுதியைப் பாராயணம் செய்வது (படிப்பது) எங்கள் வழக்கம்.

   இதனை பக்தியுடன் தினமும் பாராயணம் செய்துவந்தால் எல்லாவிதமான மனக்கஷ்டங்களும் நம்மைவிட்டு பல மைல்களுக்கு அப்பால் விலகி ஓடிவிடும்.

   மேலே நான் சொல்லியிருப்பதெல்லாம், அதே ஸ்ரீமத் இராமாயணத்தில், அதே சுந்தரகாண்டம் பகுதியில் வரும் ஒருசில இனிய நிகழ்ச்சிகள் மட்டுமே.

   தாங்கள் சுந்தரகாண்ட பாராயணமெல்லாம் செய்ய முடியாது என்பதால் நான் அதை மிகச்சிறிய கதையாக (ஜூஸ் போலப் பிழிந்து சாறாக உங்களுக்கு சுலபமாகப் பருக) இங்கு சொல்லியுள்ளேன்.

   அதை அலட்சியப்படுத்தாமல் ஒருமுறைக்கு மூன்றுமுறை சிரத்தையுடன் படியுங்கோ.

   மனதுக்கு நிம்மதியும், ஓர் தெளிவும் நிச்சயமாக ஏற்படும்.

   நடப்பதெல்லாம் நன்மையில் முடியும்.

   அன்பான நல்வாழ்த்துகள்.

   Delete
 7. ஓ..... ஸாரி.... புரியாம கேட்டுட்டேன்.... என் நிம்மதிக்கும் சந்தோஷத்துக்கும் நீங்க கேர் எடுக்கறிங்களேஜி... மனசெல்லாம் மெல்ட்டாகி போகுது....

  ReplyDelete
  Replies
  1. சிப்பிக்குள் முத்து. 26 July 2016 at 00:40

   //ஓ..... ஸாரி.... புரியாம கேட்டுட்டேன்.... என் நிம்மதிக்கும் சந்தோஷத்துக்கும் நீங்க கேர் எடுக்கறிங்களேஜி... மனசெல்லாம் மெல்ட்டாகி போகுது....//


   :)))))))))))))))))))))))))))))))

   ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் !
   ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் !
   ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் !
   ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் !

   ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் !
   ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் !
   ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் !
   ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் !

   ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் !
   ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் !
   ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் !
   ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் !

   :)))))))))))))))))))))))))))))))

   Delete
 8. சுந்தர காண்டம் யாரு வேணா படிக்கலாம் இல்லையா........

  ReplyDelete
  Replies
  1. ப்ராப்தம் 26 July 2016 at 22:12

   //சுந்தர காண்டம் யாரு வேணா படிக்கலாம் இல்லையா........//

   படிக்கலாம். தினமும் ஒருசில ஸ்லோகங்கள் மட்டுமாவது படிக்கலாம்.

   ’சுந்தர்’ அல்லது ‘சுந்தரம்’ அல்லது ’சுந்தரி’ என்றால் அழகு என்று பொருள் என்பது உங்களுக்கே தெரிந்திருக்கும்.

   தாங்கள் ஸ்ரீமத் இராமாயண ’சுந்தர காண்டம்’ படிக்க ஆரம்பிக்க நினைப்பதால், சுந்தரோ அல்லது சுந்தரியோ அல்லது இருவருமோ மிக அழகாகப் பிறக்கட்டும். :))

   அநேக ஆசீர்வாதங்கள்.

   Delete