Saturday 9 July 2016

ye mera prem pathr padkar

53 comments:

  1. இந்த படம் பேரு சங்கம்... நிறயவாட்டி பாத்த படம்னா இதுதான்.. பாட்டு எல்லாமே சூப்பரா இருக்கும்... ராஜ் கபூர் படங்கள் ரொம்ப பிடிக்கும்....

    ReplyDelete
  2. வெளி நாடுகள் நிறய காட்டுவாங்க எட்டு பாட்டு இருக்கு எல்லாமே நல்லா இருக்கும்...

    ReplyDelete
  3. ’இதோ எந்தன் காதல் கடிதம்’ :))))))))




    என்று அர்த்தமோ?

    ReplyDelete
    Replies
    1. ம்..... ஆமா... என் லவ் லெட்டர் பார்த்து.. நீ.... டென்ஷன் ஆகாதே......... பாட்டோடஅர்த்தம்பா......

      Delete
    2. பூந்தளிர் 10 July 2016 at 21:55

      //ம்..... ஆமா... என் லவ் லெட்டர் பார்த்து.. நீ.... டென்ஷன் ஆகாதே.........//

      அது எப்படி? பொதுவாக் ஆண்களுக்கு டென்ஷன் ஆவது மிகவும் இயல்பு அல்லவோ !

      // பாட்டோட அர்த்தம்பா...... //

      ஓஹோ, ஓக்கே. தேங்க் யூ.

      Delete
  4. இதில் நான் ரஸித்த எதைச் சொல்ல .... எப்படிச் சொல்ல ....

    இடது கன்னத்தில் கண்ணுக்குக் கீழேயுள்ள அவளின் அதிர்ஷ்ட மச்சத்தைச் சொல்வதா?

    முந்தானையை சற்றே நழுவ விட்டபடி அவனுக்கு அருகே அவள் வந்து அமர்ந்ததை சொல்லவா?

    ராஜாத்தி போன்ற அவளின் அழகைச் சொல்லவா?

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. யார பாத்தாலும் ராஜாத்தி போலதான் தோணுதோ.........

      Delete
    2. பூந்தளிர் 10 July 2016 at 21:56

      //யார பாத்தாலும் ராஜாத்தி போலதான் தோணுதோ......//

      ஏன் ஏதேனும் தப்பா? அதுபோல எனக்குத் தோணக்கூடாதா?

      Delete
  5. மிகவும் இனிமையான இயற்கைக் காட்சிகளுடன் கூடிய அருமையான பாடல் பகிர்வுக்கு தங்கள் இருவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

    >>>>>

    ReplyDelete
  6. ’முன்னா’ பார்வையில்
    ’முருகு’வின் நிக்காஹ்
    பகுதி-3 - By VGK

    பகுதி-1 படிக்காதவர்களுக்கு இதோ இணைப்பு:
    http://htpsipikulmuthu.blogspot.in/2016/07/blog-post_6.html

    பகுதி-2 படிக்காதவர்களுக்கு இதோ இணைப்பு:
    http://htpsipikulmuthu.blogspot.in/2016/07/dil-thera-diwana-hai-sanam.html

    -oOo-

    ReplyDelete
  7. (25)

    அப்புறம் அடுத்த விளையாட்டு:

    குடத்துல தண்ணீர் நிரப்பி அதுக்குள்ள மோதிரத்தைப் போட்டு அவங்க இருவரையும் கையை விட்டு தேட சொன்னாங்களாம் ...

    ஒரே நேரம் இருவரும் குடத்துகுள்ளே கையை விட்டாங்களாம்..

    ஆஷிக் சும்மா இருக்காம அவளின் உள்ளங்கைய சொரண்டி, விரல் இடுக்குகளில் எல்லாம், தன் விரலால் ஆசைதீரத் தடவி கலாட்டா பண்ணி இருக்கார்.

    இவள் வாயை வெச்சுகிட்டு சும்மா இருக்காம ”ஏன் ஆஷிக் .... மோதிரத்த தேடாம என் கையைச் சுரண்டிக்கிட்டே இருக்கீங்கன்னு” சத்தமா கேட்டுட்டாள்.

    உடனே ஆஷிக்,

    “ஏய் கத்தி சத்தம்போட்டு என் மானத்தை வாங்காதே .. இதெல்லாம் ஒரு ஜாலி விளையாட்டு .. என்ஜாய் பண்ணிகிடணும்”ன்னு

    அவளின் காதில் மெதுவாகச் சொல்லி இருக்காரு.

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா... சரியான முருகுவா இருக்காளே.......

      Delete
    2. ஹா ஹா... நல்ல காமெடிதான்....

      Delete
  8. (26)

    அவங்க இருவரையும் பலகையிலே உக்காரவெச்சு சாப்பாடு போட்டாங்க... ரெண்டு பேரையும் ஒருவருக்கொருவர் ஸ்வீட் ஊட்டி விடச்சொல்லி கலாட்டா பண்ணியிருக்காங்க நம் முன்னா கோஷ்டியினர்.

    முதல்ல ஆஷிக் அவள் வாயில லட்டு ஊட்டியிருக்கிறார்.

    முன்னாவின் அம்மா சொல்லியிருக்காங்க:

    ”மெஹரு, பாதி நீ தின்னுப் போட்டு மீதி பாதியை மாப்பிள்ளைக்கு ஊட்டிவிடும்மா” ன்னு.

    ”ஐயயோ... அதெல்லா கிடையாது; முழு லட்டுவும் எனக்கு மட்டும்தான். ஆஷிக்கு வேணும்ன்னா வேற தனியா ஒரு லட்டு நீங்க வாங்கிக் கொடுத்துக்குங்க”ன்னு சொல்லிப்போட்டாளாம்.

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. ஹா..... சரியான சாப்பாட்டு ( ராமனோ)..... ராமியா இருப்பாளோ.......

      Delete
    2. பாவம் ஆசை ஆசையா சாப்பிடறா சாப்பிடட்டுமே...

      Delete
  9. (27)

    அப்புறம் ஒருவழியாக அரை மனசுடன், முருகு ஆஷிக் வாயில் லட்டு ஊட்டும்போது, அவர் ஒரு ஜாலிக்காக, செல்லமா அவள் விரலை கடிச்சிருக்கார்.

    இவள் உடனே கத்த ஆரம்பிச்சுட்டாளாம்.

    ”ஏன் ஆஷிக் என் விரலைக் கடிச்சீங்க .... நானு ஒங்கட வெரல கடிச்சுகிட்டனா.. நீங்க ஏன் கடிச்சிங்க”ன்னு கத்தறாளாம்.

    உடனே ஆஷிக்,

    “செல்லம், இந்த லட்டுவை விட உன் விரல் ஸ்வீட்டோ ஸ்வீட்டா இருக்குதுடீ”ன்னு சமாளிச்சாங்களாம். :)

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. ஒவ்வொரு விஷயமும் ரசனையுடன் சொல்லி யிருக்கா.....

      Delete
    2. ஐயயோ விரல தொட்டதுக்கே "இப்படி" ன்னா... மத்ததுக்கெல்லாம் என்ன பண்ணப் போறாளோ...

      Delete
    3. பூந்தளிர் 10 July 2016 at 21:59

      //ஒவ்வொரு விஷயமும் ரசனையுடன் சொல்லியிருக்கா.....//

      முன்னாவா கொக்கா! கொக்கான கொக்கல்லவோ !!

      ப்ராப்தம் 10 July 2016 at 22:25

      //ஐயயோ விரல தொட்டதுக்கே "இப்படி" ன்னா... மத்ததுக்கெல்லாம் என்ன பண்ணப் போறாளோ...//

      அதானே !

      Delete
    4. http://htpsipikulmuthu.blogspot.in/2016/07/blog-post_8.html
      இந்த இணைப்பில் உள்ள மிக அழகான பாடலில் ஒருசில வரிகள் இவ்வாறு வரும்:

      ”அஞ்சு விரல் பட்டால் என்ன ....
      அஞ்சுகத்தைத் தொட்டால் என்ன ....”

      ஒருவேளை அதுபோல ஆஷிக் நம் முருகுவிடம் பாடிக்கொண்டு இருப்பாரோ ! :)))))

      Delete
  10. (28)

    ஆஷிக் அவர்கள், தன் அருகே இருந்த எல்லோரிடமும், இந்தப் பொண்ணு, தன் விரலை லேஸாகக் கடித்ததற்கே, இப்படி ஓபனாப் பேசி, ஊரைக்கூட்டி, என் மானத்தை வாங்குதே ..... இதனுடன் நான் இன்னும் தனிமையில் என்னென்ன பாடு படப்போகிறேனோ ..... ஒரே கவலையா இருக்குதேன்னு ... முகத்தை சோகமாக ஓர் அப்பாவி போல வைத்துக்கொண்டு ஜோக் அடித்துப் புலம்பினாராம்.

    இதைக்கேட்ட நம் முன்னாவுக்கும் மற்றவர்களுக்கும் சிரிப்பாணி பொத்துக்கிச்சாம்.

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. எனக்கும் கூட சிரிப்பாணி பொத்துகிச்சே....

      Delete
    2. ஓ....... இதை படிக்கறதுக்கு முன்னயே நானும் அதையே சொல்லிட்டேனே....
      எங்க கல்யாணத்துல இதுபோல காமெடி கலாட்டா எதுவுமே நடக்கலியே......

      Delete
    3. பூந்தளிர் 10 July 2016 at 22:00

      //எனக்கும் கூட சிரிப்பாணி பொத்துகிச்சே....//

      மிகவும் சந்தோஷம்.

      -oOo-

      ப்ராப்தம் 10 July 2016 at 22:27

      //ஓ....... இதை படிக்கறதுக்கு முன்னயே நானும் அதையே சொல்லிட்டேனே....//

      ஆமாம். சூப்பராச் சொல்லிட்டீங்கோ.

      //எங்க கல்யாணத்துல இதுபோல காமெடி கலாட்டா எதுவுமே நடக்கலியே......//

      அதனால் என்ன? உங்களுக்குள் தினமும் காமெடி கலாட்டா நடக்குது தானே. அதுதானே முக்கியம்.

      Delete
  11. (29)

    முருகு கல்யாணத்தில் இதுவரை நடைபெற்ற காமெடி கலாட்டாக்களைத் தவிர, மேலும் சிலவும் நடந்துள்ளன. இருப்பினும் அவற்றையெல்லாம் தொடர்ந்து பார்க்க நேரம் இல்லாததால் நம் முன்னா க்ரூப் இரவு 9 மணிக்கு விருந்து சாப்பிடச் செல்லும்படி ஆகியுள்ளது.

    >>>>>

    ReplyDelete
  12. (30)

    சேமியா பாயஸம், _ _ _ _ , பூரி மஸால், குலோப்ஜாமூன், ரஸகுல்லா ன்னு அமர்க்களமான விருந்து, சூடாகவும், சுவையாகவும் கிடைத்துள்ளன.

    ரம்ஜான் மாதமாக இருந்ததால் பகல் பூராவும் ஒன்று சாப்பிடாமல் விரதம் இருந்துள்ள, முன்னா க்ரூப் திருப்தியாக வயிறு முட்ட ஒரு பிடிபிடித்துள்ளனர்.

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. பகல் நேரம் பூரா எப்படிதான் சாப்பிடாம இருக்காளோ... மனக்கட்டுப்பாடு சூப்பர்தான்

      Delete
    2. முஸ்லிம்களின் இந்த ரம்ஜான் நோம்பு பல நல்ல விஷயங்களை கத்து கொடுக்குது..

      Delete
    3. பூந்தளிர் 10 July 2016 at 22:01

      //பகல் நேரம் பூரா எப்படிதான் சாப்பிடாம இருக்காளோ... மனக்கட்டுப்பாடு சூப்பர்தான்//

      -oOo-

      ப்ராப்தம் 10 July 2016 at 22:28

      //முஸ்லிம்களின் இந்த ரம்ஜான் நோம்பு பல நல்ல விஷயங்களை கத்து கொடுக்குது..//

      -oOo-

      ஆமாம். ஆமாம். இருவருக்குமாக இரண்டு ஆமாம் போட்டுள்ளேன். சுத்த ’ஆமாம் சாமி’ என என்னைச் சொன்னாலும் சொல்லுவீர்கள். அதனால் என்ன? சொல்லிக்கோங்கோ.

      Delete
  13. (31)

    முன்னாவின் தாயார் அங்குள்ள எல்லோரிடமும் தங்கள் பெரிய மகளுக்கு வரும் செப்டம்பர் மாதம் நிக்காஹ் நடைபெற உள்ளது. எல்லோருமாக வருகைதந்து, நடத்திக்கொடுத்து சிறப்பிக்கணும் என மிகவும் மகிழ்ச்சியுடன் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.

    >>>>>

    ReplyDelete
  14. (32)

    முன்னாவின் அம்மாவுக்கு முருகுவின் நிக்காஹ் வுக்கு வந்ததில் பரம சந்தோஷமாகி விட்டது.

    தன் மூத்த மகளின் கல்யாணத்தை எப்படியெல்லாம் சிறப்பாக நடத்தணும் என ஓர் ஐடியா கிடைத்துள்ளது.

    புது மனிதர்களை சொந்தம்போல நினைத்துப் பழகியதில் மேலும் சந்தோஷமாக இருந்துள்ளது.

    அடுத்த கல்யாணப்பெண்ணான முன்னாவின் அக்காவுக்கு ஏற்பட்டுள்ள சந்தோஷம் பற்றிக் கேட்கவே வேண்டாம். முகம் பூராவும் ஒரே சிரிப்பும். சந்தோஷமும் கூடவே கொஞ்சம் வெட்கமும்..... :)

    >>>>>>

    ReplyDelete
    Replies
    1. ரியலி ரொம்ப சந்தோஷமான விஷயம்தான்

      Delete
    2. பூந்தளிர் 10 July 2016 at 22:02

      //ரியலி ரொம்ப சந்தோஷமான விஷயம்தான்//

      முன்னாவின் அக்கா மிகவும் அடக்கமானவங்க. அழகானவங்க. நல்ல குணமுள்ளவங்க. மிக மிக ருசியாக பல்வேறு சமையல் செய்வதில் எக்ஸ்பர்ட் எனக் கேள்விப் பட்டுள்ளேன்.

      மாப்பிள்ளையாக வர இருக்கும் அந்த அதிர்ஷ்டசாலிக்கு தினமும் நல்ல விருந்தோ விருந்துதான்.

      Delete
  15. (33)

    எல்லோரிடமும் விடைபெற்றுக்கொண்டு இரவு 9.30க்கு கிளம்பியுள்ளனர் நம் முன்னா கோஷ்டியினர்.

    இன்னும் இரண்டு நாட்கள் இருந்துவிட்டுப்போகலாமே என முருகு வீட்டினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

    அதெல்லாம் சரியாக வராது எனச் சொன்னதும், பெரிய பார்ஸலில் நிறைய ஸ்வீட்ஸ் .... மிக்சர் .... சிப்ஸ் என தீனிகளைக் கட்டிக்கொடுத்து, முருகுவின் பெரியப்பா பிள்ளை தன் காரில் முன்னா குடும்பத்தாரை ஏற்றிக்கொண்டு, கடய நல்லூர் ரயில்வே ஸ்டேஷனில் கொண்டுபோய் இரவு 9.40 க்கு இறக்கி விட்டுள்ளார்.

    இரவு 10 மணிக்குக் கிளம்பும் இரயிலைப் பிடித்து ஏறி நிம்மதியாகப் படுத்துவிட்டனர். நல்லதொரு விருந்து சாப்பாடு சாப்பிட்ட மயக்கத்தால் படுத்தவுடன், குறட்டை விட்டு நிம்மதியாகத் தூங்கிப்போனார்கள்.

    நம் முன்னா மட்டும் இன்பக்கனாக்கள் பலவும் கண்டிருப்பாள் என எனக்கு நினைக்கத் தோன்றுகிறது. [ அவள் என்னிடம் இதனிக் குறிப்பிட்டுச் சொல்லாவிட்டாலும் கூட .... :) பாம்பின் கால் பாம்பு அறியுமே :)) ]

    04.07.2016 திங்கட்கிழமை காலை 6 மணிக்கு இவர்கள் ஊர் வந்ததும்தான், கண் விழித்துக்கொண்டு, இரயிலைவிட்டு இறங்கி காலை 7 மணிக்குத் தங்கள் வீட்டுக்கு செளகர்யமாக வந்து சேர்ந்துள்ளனர்.

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. முருகு நிக்காஹை உக்காந்த இடத்திலேந்தே நாங்களும் கண்டு களித்த சந்தோஷம்

      Delete
    2. பூந்தளிர் 10 July 2016 at 22:03

      //முருகு நிக்காஹை உக்காந்த இடத்திலேந்தே நாங்களும் கண்டு களித்த சந்தோஷம்//

      ”உனக்காக .... எல்லாம் உனக்காக .... இந்த உயிரும் உடலும் .... ஒட்டியிருப்பது உனக்காக”ன்னு

      ஒரு பழையபடத்தில் நகைச்சுவை நடிகர் சந்திரபாபு பாடுவார்.

      Delete
  16. (34)

    நம் முருகு தன் கைப்பட எழுதிய மிகவும் உருக்கமான நீண்ட கடிதம் எனக்கு மெயில் மூலம் நேற்று 09.07.2016 இரவு கிடைத்துள்ளது.

    ரம்ஜான் நோன்பு + பண்டிகைகள் முடிந்தபின், 08.07.2016 வெள்ளிக்கிழமை இரவு, ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ’முதலிரவு’ ஃபங்ஷனும் நல்லபடியாக நடைபெற்றிருக்கும் என அவளின் மெயில் மூலம் என்னால் ஓரளவுக்கு யூகிக்க முடிகிறது.

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. அதுக்குள்ள மெயிலும் அனுப்பிட்டாளா... குட குட....

      Delete
    2. பூந்தளிர் 10 July 2016 at 22:04

      //அதுக்குள்ள மெயிலும் அனுப்பிட்டாளா... குட் குட்....//

      கல்யாணம் நல்லபடியாக முடிந்து முதன் முதலாக இந்தியாவைவிட்டு வெளிநாடு போகிறாளே ....... அதனால் என்னிடம் சொல்லிக்கொண்டு போய் இருக்கிறாள்.

      Delete
  17. (35)

    ”புதிதாகக் கல்யாணம் ஆகியுள்ள நீ இனி மிகவும் பொறுப்பாக இருக்கணும்;

    உன் கணவர் மனம் கோணாமல் பிரியமாக நடந்துகொள்ளணும்.

    அவரிடம் மரியாதையாகவும் அன்பாகவும் இருக்கணும்.

    அதுபோல உன் மாமியார் + அண்ணியிடமும் பாசமாகவும் மரியாதையாகவும் அன்பாகவும் பழகணும்.

    எல்லோரிடமும் நல்ல பெயர் வாங்கணும்.

    சமத்தா இருக்கணும்.”

    என பல்வேறு புத்திமதிகள் சொல்லி நானும் அவளுக்கு பதில் எழுதி அனுப்பியுள்ளேன்.

    >>>>>

    ReplyDelete
  18. (36)

    இன்று 10.07.2016 நள்ளிரவு 12 மணிக்கு சென்னையிலிருந்து கிளம்பும் விமானத்தில் ஏறி, கல்யாண கோஷ்டியினர் அனைவரும் மஸ்கட் செல்லப் போகிறார்கள்.

    வாழ்க்கையில் முதன் முதலாக விமானத்தில் பயணம் செல்லப்போகிறாள் நம் முருகு. :)

    மஸ்கட்டுக்கான அவளின் முதல் விமானப்பயணமும், மஸ்கட்டில் அவளின் இல்வாழ்க்கையும், இன்பகரமாக அமைய நாம் அனைவரும் பிரார்த்திப்போமாக !

    ooooooooooooooooooooooooooo

    இதுவரை சொல்ல விட்டுப்போன சமாச்சாரங்கள் ஏதும் இருப்பின்

    மேலும் நாளையும் தொடரும் .......

    ReplyDelete
    Replies
    1. ஓ..... மஸ்கட்டுக்கா போறா சூப்பர்... பெரிய புளியங்கொம்பாதான் பிடிச்சிருக்கா.....

      Delete
    2. எங்கிருந்தாலும் சந்தோஷமாக வாழ்க.......

      Delete
    3. பூந்தளிர் 10 July 2016 at 22:05

      //ஓ..... மஸ்கட்டுக்கா போறா சூப்பர்... பெரிய புளியங்கொம்பாதான் பிடிச்சிருக்கா.....//

      ஒருவேளை ’மஸ்கட்’ புளியமரங்களில் தங்க ’பிஸ்கட்’ களாகக் கிடைக்குமோ? :)

      இங்கெல்லாம் நமக்கு MUNAKKO பிஸ்கட்களேகூடக் கிடைப்பதில்லை. :(

      Delete
    4. ப்ராப்தம் 10 July 2016 at 22:29

      //எங்கிருந்தாலும் சந்தோஷமாக வாழ்க.......//

      ஒரு பரந்த மனத்திடமிருந்து ஒரு திறந்த/சிறந்த வாழ்த்து. கேட்கவே சந்தோஷமாக உள்ளது.

      Delete
  19. கோபூஜி இம்பூட்டு விஷயங்களும் நானா எழுதி இருந்தேன்.... எனக்கே நம்பிக்க வல்ல... உங்க ஸ்டைலில படிக்க எனக்கே சுவாரசியமா இருக்குது.....

    ReplyDelete
    Replies
    1. சிப்பிக்குள் முத்து. 10 July 2016 at 05:13

      //கோபூஜி இம்பூட்டு விஷயங்களும் நானா எழுதி இருந்தேன்.... எனக்கே நம்பிக்க வல்ல...//

      நான் கவனித்த வரையில் உங்களிடம் நிறைய தனித்திறமைகள் உள்ளன. மிகவும் புத்திசாலித்தனமும் சேர்ந்து உள்ளது.

      அவற்றை நீங்கள் நல்ல முறையில் ஆக்கபூர்வமாகப் பயன் படுத்திக்கொள்ள வேண்டும் என்பது எனது விருப்பமாகும்.

      தினமும் பாடல் பதிவு வீடியோக்களை Copy & Paste செய்து வெளியிடுவதுடன், அவ்வப்போது சில சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், சொந்த அனுபவங்கள், பயணங்கள், படித்ததில் பிடித்தது முதலியவற்றை சுருக்கமாகவும் சுவையாகவும் பதிவாக இட்டு மகிழலாம். எங்களையும் மகிழ்விக்கலாம்.

      அங்கு கடய நல்லூரில் நீங்கள் இருந்ததே மொத்தம் 5 மணி நேரங்களுக்குள் மட்டுமே. அதற்குள் அங்கு நடந்த ஐயாயிரம் விஷயங்களைக் கூர்ந்து நோக்கி, மனதில் நன்கு கிரஹித்துக்கொண்டு வந்துள்ளீர்கள்.

      என்னிடம் அவற்றில் சொல்ல முடிந்த சிலவற்றை மட்டும் பகிர்ந்து கொண்டுள்ளீர்கள். :)

      பொதுவாக இதுபோல எல்லோராலும், நேர்முக வர்ணனைகள்போல, நேரேட் செய்து சொல்ல இயலாது.

      உங்களிடம் உள்ள இத்தகையதோர் தனித்திறமை எனக்கு மிகவும் பிடித்துள்ளது. வியப்பளிப்பதாகவும் உள்ளது.

      //உங்க ஸ்டைலில படிக்க எனக்கே சுவாரசியமா இருக்குது.....//

      மிகவும் சந்தோஷம். மிக்க நன்றி.

      இருப்பினும் என் ஒரிஜினல் ஸ்டைலில், என் போக்கில், என்னால் சுதந்திரமாக இங்கு அனைத்தையும் ஓபனாக எழுத முடியவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். :)

      தங்களுக்கு என் பாராட்டுகள். வாழ்த்துகள். நன்றிகள்.

      Delete
    2. முன்னாவுக்கு சரியான அட்வைஸ் தான் கொடுத்திருக்கீங்க கோபால்ஜி....

      Delete
    3. ப்ராப்தம் 10 July 2016 at 22:30

      //முன்னாவுக்கு சரியான அட்வைஸ் தான் கொடுத்திருக்கீங்க கோபால்ஜி....//

      :) அப்படியா, மிக்க நன்றீங்கோ :)

      Delete
  20. கோபூஜி.. என்னன்னமோ சொல்றிங்க... நான் திறமை சாலிலா கெடயாது.... காப்பி& பேஸ்ட் பதிவரு மட்டும்தான்..........

    ReplyDelete
    Replies
    1. சிப்பிக்குள் முத்து. 11 July 2016 at 04:40

      //கோபூஜி.. என்னன்னமோ சொல்றிங்க... நான் திறமை சாலிலா கெடயாது.... காப்பி & பேஸ்ட் பதிவரு மட்டும்தான்..........//

      ஸ்ரீமத் இராமயணத்தில் ஸ்ரீ ஹனுமனின் பெருமை, திறமை, பராக்ரமம், புத்தி சாதுர்யம், விநயம் முதலிய குட் குவாலிடீஸ் அந்த ஹனுமனுக்கே தெரியாது என்பார்கள்.

      அதுபோல தன்னடக்கமாகத்தான் தாங்களும் "நான் திறமைசாலி கிடையாது” என்று சொல்லியுள்ளீர்கள்.

      இதுபோல தன்னடக்கமாக இருப்பதே ஒரு தனித்திறமைதான்.

      தனக்கு ஒன்றும் தெரியாது என்பவருக்கே எல்லாம் தெரிந்திருக்கும். தனக்கு எல்லாம் தெரியும் என அகம்பாவமாகச் சொல்வோருக்கே ஒன்றும் தெரியாது.

      இது மிகச்சாதாரணமானவனாகிய என் கணிப்பு ஆகும்.

      Delete
    2. ஸ்ரீமத் இராமயணத்தில் = தவறு

      ஸ்ரீமத் இராமாயணத்தில் = சரி

      அவசரத்தில் கால் வாங்க விட்டுவிட்டேன். அதனால் எழுத்துப் பிழையாகி காலை வாரிவிட்டுள்ளது.

      தவறுக்கு வருந்துகிறேன். :(

      ஒருக்கால் கால் இல்லாமல் இதனைப் படித்திருந்தால், மீண்டும் ஒருமுறை காலுடன் படிக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். :)

      ஒரு ’கால்’ போட்டு இதனைச் சொல்லிவிடலாம் என்று நினைத்தால் என்னிடம் உங்கள் யாருடைய டெலிபோன் நம்பர்களுமே இல்லை.

      [ பனுமதி, பனுமாதி, பானுமதி .... விசு படத்தில் வரும் நகைச்சுவை எனக்கு நினைவுக்கு வந்து சிரிக்க வைக்கிறது. ”என் பெண்டாட்டி காலை நான் எங்கு போட்டால் உனக்கென்னய்யா ...” என்பான் விசுவிடம் ... அந்த பானுமதி என்ற தன் மனைவிக்குக் கடிதம் எழுதுபவன் :) ]

      Delete