Saturday, 30 July 2016

உயிரே உயிரே....


9 comments:

 1. உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு
  உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு

  நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு
  நிலவே நிலவே இந்த விண்ணோடு கலந்துவிடு

  காதல் இருந்தால் எந்தன் கண்ணோடு கலந்துவிடு
  காலம் தடுத்தால் என்னை மண்ணோடு கலந்துவிடு

  உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு
  உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு

  நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு

  என் சுவாசக் காற்று வரும் பாதை பார்த்து
  உயிர்தாங்கி நானிருப்பேன்

  மலர்கொண்ட பெண்மை வாராமல் போனால்
  மலை மீது தீக்குளிப்பேன்

  என் உயிர் போகும் போனாலும் துயரில்லை கண்ணே
  அதற்காகவா பாடினேன்

  வரும் எதிர்காலம் உன் மீது பழிபோடும் பெண்ணே
  அதற்காகத்தான் வாடினேன்

  முதலா முடிவா அதை உன் கையில் கொடுத்துவிட்டேன்

  உயிரே உயிரே இன்று உன்னோடு கலந்துவிட்டேன்
  உறவே உறவே இன்று என் வாசல் கடந்துவிட்டேன்

  நினைவே நினைவே உந்தன் நெஞ்சோடு நிறைந்துவிட்டேன்
  கனவே கனவே உந்தன் கண்ணோடு கரைந்துவிட்டேன்

  காதல் இருந்தால் எந்தன் கண்ணோடு கலந்துவிடு
  காலம் தடுத்தால் என்னை மண்ணோடு கலந்துவிடு

  உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு
  நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு

  ஓர் பார்வை பார்த்தே உயிர் தந்த பெண்மை
  வாராமல் போய்விடுமா

  ஒரு கண்ணில் கொஞ்சம் வலி வந்த போது
  மறு கண்ணும் தூங்கிடுமா

  நான் கரும்பாறை பல தாண்டி வேராக வந்தேன்
  கண்ணாளன் முகம் பார்க்கவே

  என் கடுங்காவல் பலதாண்டி காற்றாக வந்தேன்
  கண்ணா உன் குரல் கேட்கவே

  அடடா அடடா இன்று கண்ணீரும் தித்திக்கின்றதே

  உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு
  உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு

  நினைவே நினைவே உந்தன் நெஞ்சோடு கலந்துவிடு
  நிலவே நிலவே இந்த விண்ணோடு கலந்துவிடு

  மழை போல் மழை போல் வந்து மண்ணோடு விழுந்துவிட்டேன்
  மனம் போல் மனம் போல் உந்தன் ஊனோடு உறைந்துவிட்டேன்

  உயிரே உயிரே இன்று உன்னோடு கலந்துவிட்டேன்
  நினைவே நினைவே உந்தன் நெஞ்சோடு நிறைந்துவிட்டேன்

  ReplyDelete
 2. படம் : பம்பாய்

  இசை : A.R.ரஹ்மான்

  பாடியவர் : ஹரிஹரன், K.S. சித்ரா

  பாடல் வரி : வைரமுத்து

  ReplyDelete
 3. இன்றைய சூழலுக்கு மிகவும் பொருத்தமான அருமையான அர்த்தமுள்ள இனிய பாடல் பகிர்வுக்கு நன்றிகள்.

  தவிர்க்க முடியாமல் என்னால் ஏதேதோ நினைக்கத்தான் தோன்றுகிறது.

  ReplyDelete
 4. கோபூஜி..... உ..ங்..க..ளு..க்...கு...மா.......

  ReplyDelete
 5. சிப்பிக்குள் முத்து. 31 July 2016 at 00:07

  //கோபூஜி..... உ..ங்..க..ளு..க்...கு...மா.......//

  ஏன் எனக்கும் ஏதேதோ நினைக்கத் தோன்றக்கூடாதா?

  இன்று யாருமே என்னிடம் எதையுமே பகிர்ந்துகொள்வது இல்லையே. :(

  எனக்கும் இப்போதெல்லாம் நாட்டு நடப்பே சுத்தமாகத் தெரிவது இல்லையே. :(

  சிலரின் WHERE-ABOUT + செளக்யங்கள்கூடத் தெரிந்துகொள்ள முடியாமல் வேதனையில் அல்லவா மூழ்கியுள்ளேன். :(

  என்னவோ போங்கோ .... எப்படியோ போங்கோ .... என்றல்லவா நினைக்கும்படியாக உள்ளது என் இன்றைய நிலைமை.

  யாரிடமும் ஓரளவுக்கு மேல் அதீதப் பிரியம் வைக்கக்கூடாது என்ற புத்திக்கொள்முதல் ஏற்பட்டுள்ளது.

  நன்கு பழகியபின், யாராவது பாராமுகமாக இருந்தால், என்னால் ஏனோ அதனைத் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. :(

  ReplyDelete
  Replies
  1. புரியுதுல்ல...யாரு பாராமுகமாக இருக்காங்க....மத்தவங்களால மட்டும் தாங்கிக்கொள்ள முடியுதா...

   Delete
  2. பூந்தளிர்

   //புரியுதுல்ல... யாரு பாராமுகமாக இருக்காங்க.... மத்தவங்களால மட்டும் தாங்கிக்கொள்ள முடியுதா...//

   ’தங்கள் ஸித்தம் .... என் பாக்யம்’

   முடிந்தால், இனியாவது பாராமுகமாக இருக்காம இருக்கப்பாருங்கோ. எனக்கும் சம்மதமே.

   ஏதோ உங்கள் நன்மைகளை மட்டுமே உத்தேசித்து சில ஆலோசனைகளை நான் கூறியிருந்தேன்.

   அது நம் கண்களையே சமயத்தில் நம் விரல்களால் குத்திக்கொள்வோமே ... அது போல ஆகிவிட்டது. :(

   [’ராணியின் முகமே .... ரஸிப்பதில் சுகமே ....
   பூரண நிலவோ .... புன்னகை மலரோ ..........’ என்ற பாடல் வரிகள் ஏனோ நினைவுக்கு வருகின்றன. :) ]

   Delete
 6. கோபால்ஜி... என்ன இது.. எனக்கும் சொல்ல நிறையவே விஷயங்கள் இருக்குதான். உங்கவீட்ல குழந்தைகள்லாம் வந்திருக்காங்க. அவங்களோட சந்தோஷமா எஞ்சாய் பண்ணிட்டிருப்பீங்க. அந்த நேரம் மெயில் அனுப்பி டிஸ்டர்ப் பண்ண வேணாம்னுதானே அமைதியா இருக்கேன்.. உங்களவிட்டா வேற யாருகிட்ட என் புலம்பலெல்லாம் சொல்லுவேன்.......

  ReplyDelete
  Replies
  1. ப்ராப்தம் 31 July 2016 at 04:58

   //கோபால்ஜி... என்ன இது..//

   கோச்சுக்காதீங்கோ. நான் மேலே எழுதியுள்ள எதுவும் உங்களுக்கானது அல்ல.

   //எனக்கும் சொல்ல நிறையவே விஷயங்கள் இருக்குதான்.//

   ஆஹா, கதை கேட்பதென்றால் எனக்கும் மிகுந்த ஆசை உண்டுதான். மிக்க மகிழ்ச்சிம்மா.

   //உங்கவீட்ல குழந்தைகள்லாம் வந்திருக்காங்க. அவங்களோட சந்தோஷமா எஞ்சாய் பண்ணிட்டிருப்பீங்க. அந்த நேரம் மெயில் அனுப்பி டிஸ்டர்ப் பண்ண வேணாம்னுதானே அமைதியா இருக்கேன்..//

   தாங்கள் சொல்வது மிகவும் கரெக்ட்தான்.

   இருப்பினும் யாருடைய எந்த மெயிலையும் நான் எப்போதுமே டிஸ்டர்பன்ஸ் ஆக நினைப்பது இல்லை. நான் அதற்கு பதில் எழுத மட்டும் சற்றே தாமதமாகலாம். அவ்வளவுதான்.

   //உங்களவிட்டா வேற யாருகிட்ட என் புலம்பலெல்லாம் சொல்லுவேன்.......//

   அடடா, என்னே ஒரு அன்பு, பிரியம், பாசம், ஆத்மார்த்தம் ! தன்யனானேன். மிக்க மகிழ்ச்சி. :) மிக்க நன்றீங்கோ. :))

   Delete