Wednesday 27 July 2016

oor aayiram parvaiyile


8 comments:

  1. ஓர் ஆயிரம் பார்வையிலே உன் பார்வையை நான் அறிவேன்
    உன் காலடி ஓசையிலே உன் காதலை நான் அறிவேன்

    இந்த மானிட காதல் எல்லாம் ஒரு மரணத்தில் மாறி விடும்
    அந்த மலர்களின் வாசம் எல்லாம் ஒரு மாலைக்குள் வாடி விடும்

    நம் காதலின் தீபம் மட்டும் எந்த நாளிலும் கூட வரும்..
    ஓர் ஆயிரம் பார்வையிலே உன் பார்வையை நான் அறிவேன்

    உன் காலடி ஓசையிலே உன் காதலை நான் அறிவேன்
    ஓர் ஆயிரம் பார்வையிலே உன் பார்வையை நான் அறிவேன்

    இந்த காற்றினில் நான் கலந்தேன் உன் கண்களைத் தழுவுகின்றேன்
    இந்த ஆற்றினில் ஓடுகின்றேன் உன் ஆடையை நாடுகின்றேன்

    நான் போகின்ற பாதை எல்லாம் உன் பூ முகம் காணுகின்றேன்
    ஓர் ஆயிரம் பார்வையிலே உன் பார்வையை நான் அறிவேன்

    உன் காலடி ஓசையிலே உன் காதலை நான் அறிவேன்
    ஓர் ஆயிரம் பார்வையிலே உன் பார்வையை நான் அறிவேன்

    ReplyDelete
  2. கதாநாயகன் அருமையாகவும் மிகப்பொருத்தமாகவும் பாடும் பாடல் அருமை.

    அந்தக் கதாநாயகியின் தவிப்பினையும் நன்கு அறிந்துகொள்ள + புரிந்துகொள்ள முடிகிறது.

    பாடல் பகிர்வுக்கு நன்றிகள். வேறு என்ன சொல்ல ?

    ReplyDelete
  3. ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நான் அறிவேன்

    படம்: வல்லவனுக்கு வல்லவன் [1968 ]

    பாடியவர் : டி.எம் சௌந்தரராஜன்

    இசை : வேதா

    கானடா ராகத்தின் சாயலைக் கொண்ட கௌசிக்கானடா என்ற ராகத்தில் அமைக்கப்பட்டது.

    ReplyDelete
  4. பிஸியான இருந்தாலும் இங்கேயும் மறக்காமல் வறிங்களே கோபூஜி... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. சிப்பிக்குள் முத்து. 29 July 2016 at 07:18

      //பிஸியாக இருந்தாலும் இங்கேயும் மறக்காமல் வறிங்களே கோபூஜி... நன்றி...//

      ஏதோ நடுவில் கொஞ்ச நேரம் இடைவெளி கிடைத்தது. அதனைப் பயன்படுத்திக்கொண்டேன். அதுவும் தங்களின் இன்னொரு பதிவுக்கு இன்று என்னால் வர முடியாமல் போய் விட்டது. இனிமேல்தான் எனக்கு ஒழிந்தபோது அதற்கு நான் வர வேண்டும்.

      நான் அழைப்பு விடுத்தும் என்னுடைய லேடஸ்ட் பதிவுக்கு https://gopu1949.blogspot.in/2016/07/2-of-2.html நீங்களும், நம் சாரூவும் இன்னும் வராமல் இருப்பதில் எனக்குக் கொஞ்சம் வருத்தம் மட்டுமே.

      என்னால் உங்களைப்போலெல்லாம் எப்போதுமே பாராமுகமாகக் கண்டும் காணாமலும் இருக்க முடியாதாக்கும்.

      Delete
  5. ரொம்ப நல்லா இருக்கு மென்மையான பாடல்

    ReplyDelete
  6. யாரு யாருகிட்ட பாராமுகமாக இருக்காங்க
    ......

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர்

      //யாரு யாருகிட்ட பாராமுகமாக இருக்காங்க ......//

      அதுதான் எனக்கும் தெரியவே இல்லை, டீச்சரம்மா ..... எங்கட ’சும்மா’ ! :)

      Delete