Tuesday 26 July 2016

arukil vanthaal

6 comments:

  1. சோகப்பாட்டுதான்... ஆனாலும் ரசிக்க முடியுது....

    ReplyDelete
  2. அருகில் வந்தாள் உருகி நின்றாள் அன்பு தந்தாளே

    அமைதி இல்லா வாழ்வு தந்தே எங்கு சென்றாளோ

    பிரிவாலே மோதும் துயர் போதும் போதுமே

    அருகில் வந்தாள் உருகி நின்றாள் அன்பு தந்தாளே

    மலரே மலரே நீ யாரோ? வஞ்சனை செய்தவர் தான் யாரோ?

    மலரே மலரே நீ யாரோ? வஞ்சனை செய்தவர் தான் யாரோ?

    உனைச் சூடி முடித்ததும் பெண் தானோ பின்

    தூக்கி எறிந்ததும் அவள் தானோ?

    அருகில் வந்தாள் உருகி நின்றாள் அன்பு தந்தாளே

    இதயம் என்பது ஒரு வீடு அன்றும் இன்றும் அவள் வீடு

    அது மாளிகையானதும் அவளாலே பின்

    மண் மேடானதும் அவளாலே

    அருகில் வந்தாள் உருகி நின்றாள் அன்பு தந்தாளே

    அமைதி இல்லா வாழ்வு தந்தே எங்கு சென்றாளோ

    பிரிவாலே மோதும் துயர் போதும் போதுமே

    அருகில் வந்தாள் உருகி நின்றாள் அன்பு தந்தாளே

    ReplyDelete
  3. பாடல்: அருகில் வந்தாள் உருகி நின்றாள்

    திரைப்படம்: களத்தூர் கண்ணம்மா

    பாடியவர்: ஏ.எம். ராஜா

    இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்

    இசை: ஆர். சுதர்சனம்

    ஆண்டு: 1960

    நடிகர்: ‘காதல் மன்னன்’ ஜெமினி கணேசன்

    ReplyDelete
  4. இது இன்று யாரை நினைத்து, யாருக்காக, யாரால் போடப்பட்டுள்ள சோக கீதமோ ..... அவருக்கு / அவர்களுக்கு நம் அனுதாபங்கள்.

    ”பிறந்தாலும் ஆம்பளையாப் பிறக்கக்கூடாது .... ஐயா .... பிறந்துவிட்டால் பொம்பளையை நினைக்கக்கூடாது ........”

    அந்தக்கால பாடல் வரிகள் அருமை .... இனிமை .... இன்றும் நமக்கும் பொருந்தும் உண்மையோ உண்மை.

    பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  5. ஒவ்வொரு சோகப்பாடல் தேர்வினிலும், தங்களின் படு ஷார்ப்பான, புத்திசாலித்தனக் கொம்புகள் நன்கு துருத்திக்கொண்டு தெரிகின்றன.

    இருப்பினும் சோகம் இனி இதற்கு மேலும் வேண்டாம். தாங்கிக்கொண்டு பொறுமையாக இருக்க முடியவில்லை.

    ”அடி தாங்கும் உள்ளம் இது ..... இடி தாங்குமா ?”

    அதனால், பொதுவான உலக நன்மையை உத்தேசித்து, இனி எல்லாமே சுபமாக சுகமான பாடல்களாக மட்டும் தாருங்கள் என வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன். ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.

    ReplyDelete