Saturday 9 July 2016

ஆஹா மெல்ல நட


13 comments:

  1. கோபூஜியின் நேயர் விருப்பம்....

    ReplyDelete
  2. ஹா ஹா... பாட்டு நல்லாதான் இருக்கு...

    ReplyDelete
  3. ஆஹா கோபால்ஜியின் நேயர் விருப்பம்னா நல்லாதான் இருக்கும் ஆனா அவங்களுக்கு பிடிக்காத பாட்டுனு எதுவுமே இருக்காதுபோல இருக்கே......))))

    ReplyDelete
    Replies
    1. ப்ராப்தம் 9 July 2016 at 22:28

      //ஆஹா கோபால்ஜியின் நேயர் விருப்பம்னா நல்லாதான் இருக்கும்.//

      சந்தோஷம். மிக்க நன்றி.

      //ஆனா அவங்களுக்கு பிடிக்காத பாட்டுனு எதுவுமே இருக்காதுபோல இருக்கே......))))//

      அப்படியெல்லாம் இல்லை. பாட்டெல்லாம் கேட்க எனக்கு என்னவோ எப்போதுமே பொறுமை இருப்பது இல்லை.

      பாட்டு கேட்பதைவிட, கவிஞர் எழுதியுள்ள அர்த்தமுள்ள பாடல் வரிகளை நான் மிகவும் ரஸிப்பது உண்டு.

      அதுபோல ஒருசில பாடல் காட்சிகளை மட்டும் நான் மிகவும் ரஸிப்பது உண்டு.

      இப்போது நம் முன்னாப் பார்க்கில்தான், கொஞ்ச நாளாக நான் எல்லாவற்றையுமே ஒட்டு மொத்தமாக ரஸித்து, பின்னூட்டமிட வேண்டிய நிர்பந்தமாக உள்ளது .... அதுவும் உங்கள் யார் யாருக்காகவோ :)

      Delete
    2. என்ன கோபூஜி.... நிர்பந்தத்துலதான் இங்க வரீங்களா... விரும்பி வரலியா......ஸோ ஸேட்... ((((

      Delete
    3. சிப்பிக்குள் முத்து. 12 July 2016 at 07:28

      //என்ன கோபூஜி.... நிர்பந்தத்துலதான் இங்க வரீங்களா... விரும்பி வரலியா......ஸோ ஸேட்... (((( //

      விரும்பியும் + வேறு ஒருசில நிர்பந்தங்களுக்காகவும் என வைத்துக்கொள்ளுங்கோ, ப்ளீஸ் .....

      என்ன சொல்வேன் ..... அதை நான் எப்படிச் சொல்வேன்?

      எங்கெங்கும் திரும்பினும், நான் எதைச்சொன்னாலும், ஆங்காங்கே மிக ஷார்ப்பான, நீண்ட கொம்புகளுடன் மாடுகள் இப்படி என்னைத் துரத்துகின்றனவே. :)))))

      கடவுளே ! கடவுளே !!

      Delete
  4. ஆஹா மெல்ல நட மெல்ல நட மேனியென்னாகும்?
    ஆஹா மெல்ல நட மெல்ல நட மேனியென்னாகும்?

    முல்லை மலர்ப் பாதம் நோகும் உன்தன்
    சின்ன இடை வளைந்தாடும் வண்ண

    சிங்காரம் குலைந்துவிடும் ஹோ ஓஓ ஓ ஓ
    ஹொஹோ ஹோ

    ஆஹா மெல்ல நட மெல்ல நட மேனியென்னாகும்?

    படுக்கையை இறைவன் விரித்தான் வரும்
    பனித்திரையால் அதை மறைத்தான்

    படுக்கையை இறைவன் விரித்தான் வரும்
    பனித்திரையால் அதைத் தடுத்தான்

    பருவத்தில் ஆசையைக் கொடுத்தான் வரும்
    நாணத்தினாலதைத் தடுத்தான் வரும்

    நாணத்தினால் அதைத் தடுத்தான்

    ஆஹா மெல்ல நட மெல்ல நட மேனியென்னாகும்?

    அடிக்கடி சிரிக்கும் சிரிப்பு அதில்
    அழகிய மேனியின் நடிப்பு

    அடிக்கடி சிரிக்கும் சிரிப்பு அதில்
    அழகிய மேனியின் நடிப்பு

    படபடவென வரும் துடிப்பு இன்று
    பதுங்கியதே என்ன நினைப்பு? இன்று
    பதுங்கியதே என்ன நினைப்பு?

    ஆஹா மெல்ல நட மெல்ல நட மேனியென்னாகும்?

    முல்லை மலர்ப் பாதம் நோகும் உன்தன்
    சின்ன இடை வளைந்தாடும் வண்ண

    சிங்காரம் குலைந்துவிடும் ஹோ ஓஓ ஓ
    ஹோ ஹொஹோ ஹோ

    திருமணம் என்றதும் அடக்கம் கண்கள்
    திறந்திருந்தாலும் உறக்கம்

    வருவதை நினைத்தால் நடுக்கம் பக்கம்
    வந்து விட்டாலோ மயக்கம் பக்கம்
    வந்து விட்டாலோ மயக்கம்

    ஹாயா மெல்ல நட மெல்ல நட மேனியென்னாகும்?
    முல்லை மலர்ப் பாதம் நோகும் உன்தன்

    சின்ன இடை வளைந்தாடும் வண்ண
    சிங்காரம் குலைந்துவிடும் ஹோ ஓஓ ஓ ஓ
    ஹொஹோ ஹோ

    ஆஹா மெல்ல நட மெல்ல நட மேனியென்னாகும்?

    ReplyDelete
  5. பாடல்: ஆஹா மெல்ல நட ......

    திரைப்படம்: புதிய பறவை

    பாடலாசிரியர்: கவிஞர் கண்ணதாசன்

    இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி

    பாடியோர்: : டி.எம். சௌந்தரராஜன்

    ஆண்டு: 1964

    ReplyDelete
  6. இது அந்தக்காலத்தில் [என்னுடைய 14வது வயதில்] வந்த மிகவும் அருமையான படம். ஈஸ்ட்மென் கலரில் வந்தப்படம்.

    இங்கு ஏனோ ப்ளாக் + ஒயிட்டில் இந்த வீடியோ தெரிகிறது.

    இங்க்லீஷ் படம் போல சுருக்கமாகவும் சுவையாகவும் எடுத்தப்படம்.

    ஒரே மர்மங்கள் நிறைந்த வெகு அருமையான கதை. டிடெக்டிவ் ஸ்டோரி. பாடல்கள் எல்லாமே இனிமையாக இருக்கும். கதையில் நகைச்சுவைக் காட்சிகளுக்கும் பஞ்சமே இல்லை.

    இதில் வரும் முதல் பாடல் சரோஜாதேவி வாய் அசைத்துப்பாடும்: ‘உன்னை ஒன்று கேட்பேன் .... உண்மை சொல்ல வேண்டும் .... என்னைப் பாடச் சொன்னால் .... என்ன பாடத்தோன்றும்’

    இந்தப்படத்தை பிறகு நான் சுமார் 10 முறைகளுக்கு மேல் பார்த்து மகிழ்ந்துள்ளேன். இப்போதும் எனக்கு அந்த முழுக்கதையும் தெரியும் ..... சொல்லத்தான் நினைக்கிறேன்.

    சிவாஜி மிகவும் நல்லவராக இருப்பினும், ஒரு சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால், தன் முதல் மனைவியைத் தானே கொன்றுவிட்டு, அவள் உடலை இரயில் தண்டவாளத்தில் போட்டுவிட்டு வந்துவிடுவார்.

    அவரை இப்போது படத்தில் காதலிக்கும் சரோஜாதேவி ஓர் டிடெக்டிவ் போலீஸ் அதிகாரி. இருப்பினும் ஒருவரையொருவர் உண்மையிலேயே காதலிக்கிறார்கள்.

    தான் செய்த கொலைக் குற்றத்தை சிவாஜி அவரின் வாயாலேயே ஒத்துக்கொள்ள வேண்டும் என்பதே போலீஸ் அதிகாரியான சரோஜா தேவியின் எதிர்பார்ப்பு. கடைசியில் க்ளைமாக்ஸில், தன் காதலியான சரோஜாதேவியிடம், என்ன நடந்தது, அது தான் எதிர்பாராமல் எப்படி நடந்தது என்பதை அப்படியே ஒத்துக்கொள்வார். அவரால் உடனே கைது செய்யப்படுவார்.

    முதல் மனைவி செளகார்ஜானகியின் டபுள் ஆக்ட் நடிப்பும் மிகப்பிரமாதமாக இருக்கும்.

    அவள் வாய் அசைத்துப் பாடும் மற்றொரு அருமையான பாடல்:

    -=-=-=-=-=-
    ஆஹா ஆஆஆஹாஹா
    ஆஹா ஆஆஆஹாஹா
    ஆஹா ஆஆஆஹாஹா

    பார்த்த ஞாபகம் இல்லையோ?
    பருவ நாடகம் தொல்லையோ?

    பார்த்த ஞாபகம் இல்லையோ?
    பருவ நாடகம் தொல்லையோ?

    வாழ்ந்த காலங்கள் கொஞ்சமோ?
    மறந்ததே இந்த நெஞ்சமோ?

    பார்த்த ஞாபகம் இல்லையோ?
    பருவ நாடகம் தொல்லையோ?

    -=-=-=-=-=-

    எனக்கு மிகவும் பிடித்தமான இந்த இன்றைய பாடல் பகிர்வுக்கு என் அன்பு நன்றிகள்.

    ReplyDelete
  7. 14--- வயதுல பாத்த படத்த இப்பவும் நினைவில் வச்சிக்க முடியுதா.. க்ரேட்.....

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர் 10 July 2016 at 22:07

      //14--- வயதுல பாத்த படத்த இப்பவும் நினைவில் வச்சிக்க முடியுதா.. க்ரேட்.....//

      என் 14 வயதில் வந்தபடமே தவிர, அதன் பிறகு 24 வயதுவரை நான் அதே படத்தினைப் பலமுறை பார்த்திருப்பேன் அல்லவா.

      ஒருசில படங்களும் கதைகளும் மட்டும் அப்படியே மனதில் தங்கிப்போய்விடும். அதில் இதுவும் ஒன்று.

      Delete
  8. இந்த ஞாபக சக்தி இருப்பதால்தானே பிரபல எழுத்தாளராக இருக்காங்க.....

    ReplyDelete
    Replies
    1. ப்ராப்தம் 10 July 2016 at 22:32

      //இந்த ஞாபக சக்தி இருப்பதால்தானே பிரபல எழுத்தாளராக இருக்காங்க.....//

      அடடா .... இது வேறையா? எனினும் மிகச் சாதாரணமானவனாகிய என்னைப்போய், பிரபல எழுத்தாளர் எனத் தங்கள் வாயால் (வஞ்சப்புகழ்ச்சி அணியாகப்) புகழ்ந்து சொல்லியுள்ளதற்கு மிக்க நன்றீங்கோ.

      Delete