Thursday 21 July 2016

kodi asainthathum katru vanthathaa

12 comments:

  1. என்ன ஒரு வார்த்தை விளையாட்டு....ரொம்ப நல்லா இருக்கு..

    ReplyDelete
  2. பாடியவர்கள்:
    டி.எம்.சௌந்தர ராஜன் - பீ.சுசீலா

    -=-=-=-=-

    சுசீலா:
    கொடி அசைந்ததும்

    டி.எம்.எஸ்: ம்ம்

    சுசீலா:
    காற்று வந்ததா
    காற்று வந்ததும்

    டி.எம்.எஸ்: ம்ஹூம்

    சுசீலா: கொடி அசைந்ததா

    டி.எம்.எஸ்:
    நிலவு வந்ததும்

    சுசீலா: ம்ம்

    டி.எம்.எஸ்:
    மலர் மலர்ந்ததா

    சுசீலா: ம்ஹூம்
    மலர் மலர்ந்ததால்

    சுசீலா: ம்ம்ம்

    டி.எம்.எஸ்: நிலவு வந்ததா

    சுசீலா:
    கொடி அசைந்ததும் காற்று வந்ததா
    காற்று வந்ததும் கொடி அசைந்ததா

    சுசீலா:
    பாடல் வந்ததும் தாளம் வந்ததா
    பாடல் வந்ததும் தாளம் வந்ததா
    தாளம் வந்ததும் பாடல் வந்ததா

    டி.எம்.எஸ்:
    பாவம் வந்ததும் ராகம் வந்ததா
    பாவம் வந்ததும் ராகம் வந்ததா
    ராகம் வந்ததும் பாவம் வந்ததா

    சுசீலா:
    கண் திறந்ததும் காட்சி வந்ததா
    காட்சி வந்ததும் கண் திறந்ததா

    டி.எம்.எஸ்:
    பருவம் வந்ததும் ஆசை வந்ததா
    ஆசை வந்ததும் பருவம் வந்ததா

    சுசீலா:
    கொடி அசைந்ததும் காற்று வந்ததா
    காற்று வந்ததும் கொடி அசைந்ததா

    சுசீலா:
    வார்த்தை வந்ததும் வாய் திறந்ததா
    வார்த்தை வந்ததும் வாய் திறந்ததா
    வாய் திறந்ததும் வார்த்தை வந்ததா

    டி.எம்.எஸ்:
    பெண்மை என்பதால் நாணம் வந்ததா
    பெண்மை என்பதால் நாணம் வந்ததா
    நாணம் வந்ததால் பெண்மை ஆனதா

    சுசீலா:
    ஓடி வந்ததும் தேடி வந்ததும்
    பாடி வந்ததும் பார்க்க வந்ததும்

    டி.எம்.எஸ்:
    காதல் என்பதா
    பாசம் என்பதா
    கருணை என்பதா
    உரிமை என்பதா

    சுசீலா:
    கொடி அசைந்ததும் காற்று வந்ததா
    காற்று வந்ததும் கொடி அசைந்ததா

    இருவரும்:
    நிலவு வந்ததும் மலர் மலர்ந்ததா
    மலர் மலர்ந்ததால் நிலவு வந்ததா
    ம்ஹூம் .... ஹூம்
    ஒஹோ ஹோ..
    ம்ஹூம் .... ம்ஹூம் .... ஹூம்

    ..ஓஹோஹோஹோஹ்ஹோ

    ReplyDelete
  3. பாடல்: கொடி அசைந்ததும் காற்று வந்ததா

    படம்: பார்த்தால் பசி தீரும் (ஆண்டு 1962)

    இசை: MS விஸ்வநாதன் & ராமமூர்த்தி

    பாடியவர்கள்: P சுசீலா, TM சௌந்தர்ராஜன்

    பாடல் வரிகள்: கண்ணதாசன்

    ReplyDelete
  4. எனக்கு மிகவும் பிடித்த இனிமையான பாடல் பகிர்வுக்கு என் நன்றிகள்.

    மிகவும் பிடித்த வரிகள்:-
    ==========================

    பெண்மை என்பதால் நாணம் வந்ததா
    நாணம் வந்ததால் பெண்மை ஆனதா

    காதல் என்பதா
    பாசம் என்பதா
    கருணை என்பதா
    உரிமை என்பதா

    மனதை மயக்கும் ..... சொக்கவைக்கும் வரிகள். :)

    ReplyDelete
  5. முட்டை வந்ததா...முதலில் கோழி வந்ததா...)))))

    ReplyDelete
    Replies
    1. சிப்பிக்குள் முத்து. 22 July 2016 at 05:25

      //முட்டை வந்ததா...முதலில் கோழி வந்ததா...)))))//

      நல்லதொரு மிகப்பொருத்தமான உதாரணம்தான் இது. :)))))

      ஆனாலும் இந்த சேவலுக்கு (ஐயருக்கு) கோழியுடனோ அல்லது முட்டையுடனே இதுவரை பரிச்சயமே ஏதும் இல்லை.

      சு-த்-த-ம் ..... மிகவும் படு சு-த்-த-ம் ஆக்கும் .... ISI முத்திரையுடன் கூடிய யாரோவின் அடுப்படி போல. :)

      Delete
  6. ஹா ஹா இவளை பாருங்க கோபால்ஜி.. கண்ணதாசனுக்கு போட்டியா வரா...))))

    ReplyDelete
    Replies
    1. ப்ராப்தம் 22 July 2016 at 05:38

      //ஹா ஹா இவளை பாருங்க கோபால்ஜி.. கண்ணதாசனுக்கு போட்டியா வரா...)))) //

      இவளுடன் நன்கு பழகிப் பார்த்துட்டேன். மஹா மஹா கெட்டிக்காரியாக இருக்கிறாள். சமத்தோ சமத்துதான். நம் எல்லோரையும் தூக்கி சாப்பிட்டு விடுவாள், இந்த முன்னா.:)

      கடந்த 11 வாரங்களாக, ஞாயிறுதோறும் வெளியாகும் தினமலர்-வாரமலரில், தேவிபாலா என்பவர் (ஆண் எழுத்தாளர்) எழுதிவரும் ‘மனக்கணக்கு’ என்றோர் தொடர்கதை வெளியாகி வருகிறது.

      08.05.2016 ஆரம்பித்தது. 17.07.2016 முடிய 11 அத்யாயங்கள் தொடராக வெளியாகி உள்ளன. இன்னும் அந்த விறுவிறுப்பான தொடர் முடியவில்லை.

      அதில் வரும் கதாநாயகி பெயர் சந்த்யா. அவளும் ஒரு மிடில் க்ளாஸ் மிகப்பெரிய ஃபேமிலியில் பிறந்துள்ள மூன்று பெண்களில் நடுப்பெண்ணாகப் பிறந்திருக்கிறாள், நம் முன்னா போலவே.

      அவளின் அந்தக்கதையைப் படிக்கும் போதெல்லாம், இந்த நம் முன்னாதான் என் நினைவில் வந்து நிற்கிறாள்.

      அந்தத்தொடரை நான் மிகவும் ஆர்வத்துடன் படித்து, என்னிடம் சேகரித்தும் வருகிறேன். அது முழுவதும் வெளியாகி, நானும் படித்து முடிந்ததும், உங்கள் இருவருக்கும் கூட நான் அதனை போட்டோக்களாக எடுத்து அனுப்பி வைக்கலாம் என நினைக்கிறேன்.

      அவ்வளவு ஒரு சுவாரஸ்யமான தொடர் கதையாகவும், குடும்பக்கதையாகவும், பொதுவாக பெண்களுக்கு ஏற்படக்கூடிய பிரத்யேகப் பிரச்சனைகள் + ஆபத்துகள் பற்றியுமான கதையாகவும் உள்ளது.

      சந்த்யா அந்தப்பிரச்சனைகள் ஒவ்வொன்றையும் மிகுந்த எதிர்நீச்சல் போட்டபடி சமாளிப்பது, எனக்கு நம் முன்னாவை ஞாபகப்படுத்துவது போலவே உள்ளது. :)

      Delete
  7. கோபூஜி என்னபத்தி ஓவரா நினைச்சிருக்கீங்க... நான் ஒரு பிக் ஜீரோ மட்டுமே...

    ReplyDelete
    Replies
    1. சிப்பிக்குள் முத்து. 23 July 2016 at 05:33

      //கோபூஜி என்னபத்தி ஓவரா நினைச்சிருக்கீங்க...//

      ஆமாம். பிறரில் சிலரைப்பற்றிய என் நினைப்பெல்லாம், எப்போதும் மிகவும் ஒஸத்தியாக மட்டுமே இருக்கும் .... மனக்கணக்கு கதாநாயகி சந்த்யா போலவே.

      //நான் ஒரு பிக் ஜீரோ மட்டுமே...//

      ஜீரோ தெரியும். அது என்ன பிக் ஜீரோ?

      ஒருவேளை கொழுகொழுன்னு, மொழுமொழுன்னு, தளதளன்னு .... முழு வெள்ளரிப்பழம் போல நல்ல வெயிட்டாக .... படா ஜோராக இருப்பீங்களோ ?

      Delete
  8. ஹா ஹா கூடவே பிறந்த குறும்புத் தனம்...))))

    ReplyDelete
    Replies
    1. சிப்பிக்குள் முத்து. 24 July 2016 at 05:37

      //ஹா ஹா கூடவே பிறந்த குறும்புத் தனம்...))))//

      யாருக்கு? உங்களுக்குத்தானே.

      குறும்புத்தனம் உள்ள குழந்தைகளைத்தான் எனக்கு மிகவும் பிடிக்குமாக்கும்.

      Delete