Wednesday 13 July 2016

paal vannam paruvam

8 comments:

  1. ஆண்: பால் வண்ணம் பருவம் கண்டு
    வேல் வண்ணம் விழிகள் கண்டு
    மான் வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்

    பெண்: கண் வண்ணம் அங்கே கண்டேன்
    கை வண்ணம் இங்கே கண்டேன்
    பெண் வண்ணம் நோய் கொண்டு வாடுகிறேன்

    கன்னம் மின்னும் மங்கை வண்ணம்
    உந்தன் முன்னம் வந்த பின்னும்
    அள்ளி அள்ளி நெஞ்சில் வைக்க ஆசை இல்லையா? (2)

    கார் வண்ண கூந்தல் தொட்டு
    தேர் வண்ண மேனி தொட்டு
    பூ வண்ண பாடம் சொல்ல எண்ணம் இல்லையா?

    ஆண்: பால் வண்ணம் பருவம் கண்டு
    வேல் வண்ணம் விழிகள் கண்டு
    மான் வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்

    மஞ்சள் வண்ன வெய்யில் பட்டு
    கொஞ்சும் வண்ண வஞ்சி சிட்டு
    அஞ்சி அஞ்சி கெஞ்சும் போது ஆசையில்லையா?(2)

    நேர் சென்ற பாதை விட்டு
    நான் சென்ற போது வந்து
    வா வென்று அள்ளிக் கொண்ட மங்கை இல்லையா?

    பெண்: கண் வண்ணம் அங்கே கண்டேன்
    கை வண்ணம் இங்கே கண்டேன்
    பெண் வண்ணம் நோய் கொண்டு வாடுகிறேன்

    பெண்: பருவம் வந்த காலம் தொட்டு
    பழகும் கண்கள் பார்வை கெட்டு
    என்றும் உன்னை எண்ணி எண்ணி ஏங்கவில்லையா?

    ஆண்: நாள் கண்டு மாலையிட்டு
    நான் உன்னை தோளில் வைத்து
    ஊர்வலம் போய் வர ஆசை இல்லையா?

    பெண்: கண் வண்ணம் அங்கே கண்டேன்
    கை வண்ணம் இங்கே கண்டேன்
    பெண் வண்ணம் நோய் கொண்டு வாடுகிறேன்

    ஆண்: பால் வண்ணம் பருவம் கண்டு
    வேல் வண்ணம் விழிகள் கண்டு
    மான் வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்

    ReplyDelete
  2. ஆண்டு: 1962

    படம் : பாசம்

    இசை : விஸ்வநாதன்

    பாடல் : கண்ணதாசன்

    பாடியவர்கள் : பி.சுசீலா, பி.பி.ஸ்ரீநிவாஸ்

    ReplyDelete
  3. கும்மென்ற மல்லிகை மணத்துடன் கூடிய அழகான இனிமையான வெட்கம் கலந்த அற்புதமான பாடல் காட்சிகள். பகிர்வுக்கு முதலில் என் நன்றிகள்.

    >>>>>

    ReplyDelete
  4. தலை நிறைய பூச்சரம் ....

    அந்த நெற்றிச்சுட்டி .....

    காதுகளில் எனக்கு மிகவும் பிடித்தமான ஜிமிக்கிகளுடன் போட்டுள்ள காதணிகள் .....

    மூக்குத்தி + உதடுகளை உரசிடும் அந்த புல்லக்கு ....

    மலைகளுக்கு நடுவே பளிச்சிடும் கொடி மின்னல் போல நெஞ்சினில் தவழ்ந்திடும் விதமாகத் தொங்கிடும் அந்த ஹாரம்

    என எல்லாமே ’சும்மா’ ஜொலிக்குதும்மா ... ஜொலிக்குது ...

    முழு ஆடைகளுடன் மொத்த உருவமும் மயக்குதும்மா ...

    மனதைச் ’சும்மா’ மயக்குது ... :)

    என்னைச் சொக்கவைத்த தங்கமான பகிர்வுக்கு, மீண்டும் என் அன்பான இனிய நன்றிகள்.

    ReplyDelete
  5. ஓ... ப்ளாக&ஒயிட்டுதா...பாட்டு காட்சி அமைப்பு நல்லாதான் இருக்கு...

    ReplyDelete
  6. பாட்டு நல்லா இருக்கு முன்னா

    ReplyDelete
  7. தலை நிறைய பூச்சரம் ....

    அந்த நெற்றிச்சுட்டி .....

    காதுகளில் எனக்கு மிகவும் பிடித்தமான ஜிமிக்கிகளுடன் போட்டுள்ள காதணிகள் .....

    மூக்குத்தி + உதடுகளை உரசிடும் அந்த புல்லக்கு ....

    மலைகளுக்கு நடுவே பளிச்சிடும் கொடி மின்னல் போல நெஞ்சினில் தவழ்ந்திடும் விதமாகத் தொங்கிடும் அந்த ஹாரம்

    என எல்லாமே ’சும்மா’ ஜொலிக்குதும்மா ... ஜொலிக்குது ...

    முழு ஆடைகளுடன் மொத்த உருவமும் மயக்குதும்மா ...

    மனதைச் ’சும்மா’ மயக்குது ... :)

    என்னைச் சொக்கவைத்த தங்கமான பகிர்வுக்கு, மீண்டும் என் அன்பான இனிய நன்றிகள்.

    கோபூஜி ரசனையே சூப்பர்தான்... அணு அணுவா ரசிக்குறீங்க....
    ( ஆமா...அணு...அணுவான்னா என்னாது).....

    ReplyDelete
    Replies
    1. சிப்பிக்குள் முத்து. 18 July 2016 at 04:56

      **தலை நிறைய பூச்சரம் ....

      அந்த நெற்றிச்சுட்டி .....

      காதுகளில் எனக்கு மிகவும் பிடித்தமான ஜிமிக்கிகளுடன் போட்டுள்ள காதணிகள் .....

      மூக்குத்தி + உதடுகளை உரசிடும் அந்த புல்லக்கு ....

      மலைகளுக்கு நடுவே பளிச்சிடும் கொடி மின்னல் போல நெஞ்சினில் தவழ்ந்திடும் விதமாகத் தொங்கிடும் அந்த ஹாரம்

      என எல்லாமே ’சும்மா’ ஜொலிக்குதும்மா ... ஜொலிக்குது ...

      முழு ஆடைகளுடன் மொத்த உருவமும் மயக்குதும்மா ...

      மனதைச் ’சும்மா’ மயக்குது ... :)

      என்னைச் சொக்கவைத்த தங்கமான பகிர்வுக்கு, மீண்டும் என் அன்பான இனிய நன்றிகள்.**

      -oOo-

      //கோபூஜி ரசனையே சூப்பர்தான்...//

      மிக்க நன்றீங்க :)

      நான் இரண்டு வயதுக் குழந்தையாய இருந்தபோது, நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த முதல் படமான ‘பராசக்தி’ 1952-இல் வெளியானது. அந்தப்படத்தினை பிறகு எனக்கு 20 வயது ஆகும்போது தியேட்டரில் போய்ப் பார்த்து வந்தேன்.

      அதில் விலைமாது ஒருத்தி நடனமாடிப் பாடிடும் மிக அழகான பாடலாக வரும் ஒரு பாடல் இதோ (பாடியவர்: எம்.எஸ்.ராஜேஸ்வரி, இசை: ஆர்.சுதர்சனம் - அடிக்கோடு இட்டுள்ள வரிகளை நன்கு கவனியுங்கள்.)

      -=-=-=-

      ஓஓஓஒ ஓ ஹோஹோ ஓஹோ
      ஓ… ரசிக்கும் சீமானே வா

      ஜொலிக்கும் உடையணிந்து
      களிக்கும் நடனம் புரிவோம்

      அதை நினைக்கும் பொழுது மனம்
      இனிக்கும் விதத்தில் சுகம்
      அளிக்கும் கலைகள் அறிவோம்.

      கற்சிலையின் சித்திரமும் கண்டு
      அதன் கட்டழகிலே மயக்கம் கொண்டு
      கற்சிலையின் கட்டழகிலே மயக்கம் கொண்டு

      வீண் கற்பனையெல்லாம்
      மனதில் அற்புதமே என்று
      மகிழ்ந்து விற்பனை செய்யாதே மதியே

      தினம் நினைக்கும் பொழுது மனம்
      இனிக்கும் விதத்தில் சுகம்
      அளிக்கும் கலைகள் அறிவோம்.

      ஓ… ரசிக்கும் சீமானே வா ...

      வானுலகம் போற்றுவதை நாடி
      இன்ப வாழ்க்கையை இழந்தவர்கள் கோடி
      பெண்கள் இன்ப வாழ்க்கையை இழந்தவர்கள் கோடி

      வெறும் ஆணவத்தினாலே
      ==========================================
      பெரும் ஞானியைப் போலே நினைந்து
      ==========================================
      வீணிலே அலைய வேண்டாம்!
      ==========================================

      தினம் நினைக்கும் பொழுது மனம்
      இனிக்கும் விதத்தில் சுகம்
      அளிக்கும் கலைகள் அறிவோம்.

      ஓ… ரசிக்கும் சீமானே வா ...

      -=-=-=-

      //அணு அணுவா ரசிக்குறீங்க....//

      :) மிகவும் சந்தோஷம். மிக்க நன்றீங்கோ. :)

      -ooooOoooo-

      //( ஆமா...அணு...அணுவான்னா என்னாது).....//

      அணுஅணுவான்னா ..... இஞ்ச்-பை-இஞ்ச் அல்லது செண்டீமீட்டர்-பை-செண்டீமீட்டர் என வைத்துக்கொள்ளலாம்.

      அழகான, மிக அழகான, அன்பான, மிக அன்பான, தன் மனைவியின் அருமை பெருமைகளை + மெல்லிய இனிய தாப உணர்வுகளைக்கூட மதிக்காமல் + புரிந்து கொள்ளாமல், அணு அணுவாக சித்திரவதை செய்யக்கூடிய ஒருசில கணவன்மார்களும் இவ்வுலகில் உண்டு. :(

      Delete