Sunday 3 July 2016

kaatru vanga ponen

9 comments:

  1. நான் காற்று வாங்கப் போனேன்
    ஒரு கவிதை வாங்கி வந்தேன்

    அதைக் கேட்டு வாங்கிப் போனாள்
    அந்தக் கன்னி என்ன ஆனாள்

    நான் காற்று வாங்கப் போனேன்
    ஒரு கவிதை வாங்கி வந்தேன்

    அதைக் கேட்டு வாங்கிப் போனாள்
    அந்தக் கன்னி என்ன ஆனாள்

    நடை பழகும்போது தென்றல்
    விடை சொல்லிக்கொண்டு போகும்
    விடை சொல்லிக்கொண்டு போகும்

    அந்த அழகு ஒன்று போதும்
    நெஞ்சை அள்ளிக் கொண்டு போகும்

    அதைக் கேட்டு வாங்கிப் போனாள்
    அந்தக் கன்னி என்ன ஆனாள்

    (நான் காற்று)

    நல்ல நிலவு தூங்கும் நேரம்
    அவள் நினைவு தூங்கவில்லை

    அவள் நினைவு தூங்கவில்லை
    கொஞ்சம் விலகி நின்ற போதும்

    என் இதயம் தாங்கவில்லை
    அதைக் கேட்டு வாங்கிப் போனாள்

    அந்தக் கன்னி என்ன ஆனாள்

    (நான் காற்று)

    என் உள்ளம் என்ற ஊஞ்சல்
    அவள் உலவுகின்ற மேடை
    அவள் உலவுகின்ற மேடை

    என் பார்வை நீந்தும் இடமோ
    அவள் பருவம் என்ற ஓடை

    அதைக் கேட்டு வாங்கிப் போனாள்
    அந்தக் கன்னி என்ன ஆனாள்

    நான் காற்று வாங்கப் போனேன்
    ஒரு கவிதை வாங்கி வந்தேன்

    அதைக் கேட்டு வாங்கிப் போனாள்
    அந்தக் கன்னி என்ன ஆனாள்

    ReplyDelete
  2. படம் : கலங்கரை விளக்கம்.

    நடிப்பு: எம்.ஜி.ஆர் + சரோஜாதேவி

    ஆண்டு: 1965

    பாடல் வரிகள்: வாலி.

    இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்

    பாடியவர்: டி. எம். செளந்தரராஜன்

    ReplyDelete
  3. அழகான இனிமையான பாடல் பகிர்வுக்கு நன்றிகள்.

    இரண்டைப்பின்னலுடன், சரோஜாதேவி மூக்கும் முழியுமாக, நம்மாளு போலவே மிகவும் ஸ்லிம்மாக .... அழகாக ..... ம்ம்ம்ம்ம்ம்ம் ..... பெருமூச்சுடன் கண்டு களித்துக்கொண்டேன்.

    ReplyDelete
  4. அதென்ன கோபூஜி... ஹீரோயின மட்டும் இம்பூட்டு..... ரசிக்குறீங்க.......

    ReplyDelete
    Replies
    1. சிப்பிக்குள் முத்து. 4 July 2016 at 05:19

      //அதென்ன கோபூஜி... ஹீரோயின மட்டும் இம்பூட்டு..... ரசிக்குறீங்க.......//

      ஹீரோக்களால் எப்போதும் ஹீரோயின்களை மட்டுமே ரசிக்க முடியும். :)

      மேலும், எங்கட முருகு முன்பு ஒருமுறை சொன்னதுபோல, ஹீரோக்களெல்லாம் பிறக்கும்போதே மிகவும் வயசாளிகளாக உள்ளனர். :))

      Delete
  5. உங்கட " நம்மாளு" வை மிடில்ல இழுக்காம இருக்கவே முடியாதா.......)))))

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர் 4 July 2016 at 05:36

      //உங்கட " நம்மாளு" வை மிடில்ல இழுக்காம இருக்கவே முடியாதா.......)))))//

      ’நம்மாளு’ வின் மிடில்ல எனக்கு அவ்வளவு ஒரு பிரியம் + கவர்ச்சி ’சும்மா’ காந்தசக்திபோல இருக்கும் போலிருக்குது. அவ்வப்போது என்னால் அதனை இழுக்காமல் எப்படி இருக்க முடியும்?

      Delete
  6. ஹா ஹா...நல்ல சமாளிப்பூஊஊஊஊஊ

    ReplyDelete
    Replies
    1. ப்ராப்தம் 4 July 2016 at 05:59

      //ஹா ஹா...நல்ல சமாளிப்பூஊஊஊஊஊ//

      மிடில்ல நீங்க வேற .... கும்முன்னு மணம் வீசும் பூவாகத் தூவி விட்டுப்போறீங்களே .... நியாயமா, இது நியாயமா?

      :)))))))))))))) ஒருவேளை எதிர் மரியாதையோ ?

      எனினும் என் நன்றிகள்.

      Delete