Tuesday 12 July 2016

eeramana rojave

10 comments:

  1. ஈரமான ரோஜாவே என்னைப்பார்த்து மூடாதே
    ஈரமான ரோஜாவே என்னைப்பார்த்து மூடாதே

    கண்ணில் என்ன சோகம் போதும் ஏங்காதே
    என் அன்பே ஏங்காதே

    ஈரமான ரோஜாவே என்னைப்பார்த்து மூடாதே
    கண்ணில் என்ன சோகம் போதும் ஏங்காதே
    என் அன்பே ஏங்காதே


    என்னைப் பார்த்து ஒரு மேகம்
    ஜன்னல் சாத்திவிட்டுப் போகும்

    என்னைப் பார்த்து ஒரு மேகம்
    ஜன்னல் சாத்திவிட்டுப் போகும்

    உன் வாசலில் எனைக் கோலம் இடு
    இல்லை என்றால் ஒரு சாபம் இடு
    பொன்னாரமே…

    தண்ணீரில் மூழ்காது காற்றுள்ள பந்து
    என்னோடு நீ பாடிவா சிந்து


    ஈரமான ரோஜாவே என்னைப்பார்த்து மூடாதே
    கண்ணில் என்ன சோகம் போதும் ஏங்காதே
    என் அன்பே ஏங்காதே


    நேரம் கூடிவந்த வேலை
    நீ நெஞ்சை மூடிவைத்த கோழை

    நேரம் கூடிவந்த வேலை
    நீ நெஞ்சை மூடிவைத்த கோழை

    என் நெஞ்சிலே இனி ரத்தம் இல்லை
    கண்ணீருக்கே நான் தத்துப் பிள்ளை
    என் காதலி…

    உன் போல என்னாசை தூங்காது ராணி
    தண்ணீரில் தள்ளாடுதே தோனி


    ஈரமான ரோஜாவே ஏக்கம் என்ன ராஜாவே
    கண்ணில் என்ன சோகம் தீரும் ஏங்காதே
    என் அன்பே ஏங்காதே
    என் அன்பே ஏங்காதே

    ReplyDelete
  2. படம் : இளமை காலங்கள்

    பாடல் : ஈரமான ரோஜாவே

    இசை : இளையராஜா

    பாடலாசிரியர்: வைரமுத்து

    பாடியவர்கள் : கே.ஜே.யேசுதாஸ்

    ஆண்டு: 1983

    ReplyDelete
  3. தன் காதலியை ஓர் ரோஜாவாக நினைத்து மிகவும் உருக்கமாகப் பாடப்படும் இந்தப்பாடல் வரிகளும், இசை அமைப்பும் எனக்கு எப்போதுமே மிகவும் பிடிக்கும்.

    >>>>>

    ReplyDelete
  4. எதற்காகவோ வேலை மெனக்கட்டு இந்த இனிய (சோகப்) பாடலைத் தேர்ந்தெடுத்து இன்று வெளியிட்டுள்ள ’கொ.எ.கு.’ அவர்களுக்கு என் நன்றிகள்.

    >>>>>

    ReplyDelete
  5. அடுத்தடுத்து எனக்கு வரிசையாகப் பிறந்து, பள்ளிகளில் படித்து வந்த என் மூன்று குழந்தைகள் + என் மனைவி + என் வயதான தாயார் ஆகியோருடன் என் ஒருவன் சம்பளத்தில் மட்டும் ஏதோ கெளரவாகவும் சிக்கனமாகவும் BHEL QUARTERS இல் நான் வாழ்ந்துவந்த காலத்தில், அன்று என் வீட்டிலிருந்த மிகச்சிறிய பிலிப்ஸ் ப்ளாக் அண்ட் டி.வி. க்கு பதிலாக, ஸ்டேட் பேங்க் லோன் போட்டு, ரூ. 14000 கொடுத்து சற்றே பெரிய BPL கலர் T.V. புத்தம் புதிதாக வாங்கி வந்திருந்தேன்.

    பொதுவாக கடன் வாங்கவே மிகவும் தயங்குபவன் நான்.

    அன்று இரவு முழுவதும் கண் விழித்து இந்தப்புது கலர் டி.வி. நிகழ்ச்சிகளைக் கண்டு களித்து வந்தேன்.

    நான் கலர் டி.வி. வாங்கிய வந்த முதல் நாளான அன்று இரவு இதே படம் முழுவதுமாக நான் வாங்கிய கலர் டி.வி.யில் ஒளிபரப்பப் பட்டது.

    (இப்போதுபோல அப்போது கேபிள் கனெக்‌ஷன் எல்லாம் வராமல், காக்கைகள் வந்து அமர செளகர்யமான, ஆண்டனா மட்டுமே வைக்கப்பட்டிருந்த காலம் அது)

    அன்று எனக்கு மிகப்பெருமையாகவும், அதே சமயம் ஒரு பெருந்தொகையை இதற்காகக் கடனில் வாங்கியுள்ளோமே என்ற கவலையாகவும் இருந்து வந்தது.

    இன்று அதைவிட மிகப்பெரிய டி.வி. என் வீட்டில் இருப்பினும், இப்போது சற்றே என் பொருளாதார நிலைகள் உயர்ந்திருப்பினும், அன்றைய என் கஷ்டங்களை நினைவு படுத்தும் இந்தப் படத்தையும் பாடலையும் என்றும் என்னால் மறக்கவே இயலாது.

    அதே போலவே இன்றைய ‘என் ஈரமான ரோஜா’வையும் என்னால் என்றுமே மறக்க இயலாது.

    பகிர்வுக்கு மீண்டும் என் நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. மிகச்சிறிய பிலிப்ஸ் ப்ளாக் அண்ட் டி.வி. க்கு பதிலாக, = தவறு

      மிகச்சிறிய பிலிப்ஸ் ப்ளாக் அண்ட் ஒயிட் டி.வி. க்கு பதிலாக, = சரி.

      -=-=-=-=-

      நான் கலர் டி.வி. வாங்கிய வந்த = தவறு

      நான் கலர் டி.வி. வாங்கி வந்த = சரி

      -=-=-=-=-

      அவசரத்தில் ஏற்பட்டுவிட்டுள்ள ஒருசில எழுத்துப்பிழைகளுக்கு வருந்துகிறேன்.

      Delete
    2. எனக்கு தெரியாத என்னிடம் சொல்ல தொணாத விஷயங்களை இங்க தெரிஞ்சுக்கோங்கனு முடியுது...நான் தான் சரியான ஓட்ட வாய்... இதுதான் சொல்லணும்னும் இல்லாம "எல்லாமே" சொல்லிருக்கேன்...

      Delete
    3. பூந்தளிர் 13 July 2016 at 22:31

      //எனக்கு தெரியாத என்னிடம் சொல்லத் தோணாத விஷயங்களை இங்க தெரிஞ்சுக்க முடியுது... நான் தான் சரியான ஓட்ட வாய்... இதுதான் சொல்லணும்னும் இல்லாம "எல்லாமே" சொல்லிருக்கேன்...//

      ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் மகிழ்ச்சி + துயரம் என்ற இரண்டு பக்கங்களும் இருக்கத்தான் இருக்கும். எனக்கும் அது போல, பிறரிடம் பகிர்ந்துகொள்ளவே முடியாத பல வருத்தங்கள் + துயரங்கள் என்னிடமும் உண்டுதான்.

      உங்களிடம் சொல்லக்கூடாது என்பது என் நோக்கம் அல்ல. உங்களிடம் எதையும் சொன்னால் எனக்கு ஒரு ஆறுதலாகவும் இருக்கும்தான்.

      நேரில் சந்திக்கும் சமயம் கிடைத்தால் சொல்லி புலம்பி அழலாம் என நினைத்திருந்தேன்.

      தயவுசெய்து இதற்கு மேல் ஒன்றும் என்னிடம் இங்கு கேட்க வேண்டாம்.

      எனக்குத் தெரிந்து, நீங்கள் ஒன்றும் ஓட்ட வாயே அல்ல. உதடுகள் மிகவும் அழகாக ஒட்டியுள்ள சூப்பரான ’ரோஜா’ இதழ் போன்ற வாய் மட்டுமே. :)

      Delete
  6. நெகிழ்ச்சியான நினைவுகள்

    ReplyDelete
    Replies
    1. சிப்பிக்குள் முத்து. 13 July 2016 at 05:15

      //நெகிழ்ச்சியான நினைவுகள்//

      மிக்க நன்றீங்கோ.

      Delete