Friday 8 July 2016

dil thera diwana hai sanam

55 comments:

  1. ரொம்ப நல்ல பாட்டு...அர்த்தம்லாம் சொல்ல போறதில்ல.......

    ReplyDelete
  2. வெரி நைஸ் ஸாங்க்.. பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  3. மிகவும் மெல்லிய ஆடைகளுடன் ஆனந்த மழையில் நனைவதும், ஒருவர் மேல் ஒருவர் சும்மாச் சும்மா தண்ணீரைப் பீய்ச்சு அடிப்பதும் எக்ஸலெண்ட் ஆக உள்ளது.

    >>>>>

    ReplyDelete
  4. ’தில் தேரா திவானா’ என்றால் ’மனதைக்கொடுத்துப்பார்’ என்று அர்த்தமாக இருக்குமோ? யாரு கண்டா?

    அதன்பிறகு ’ஹை ஸனம்’ என்றும் எழுதப்பட்டுள்ளது.

    மொத்தத்தில் ஒன்றுமே அர்த்தம் புரியாவிட்டாலும் பாடலும், காட்சிகளும் ’சும்மாச் சும்மா’க் குளுகுளுவென்று உள்ளது.

    மழைக்காட்சிகளாகவும், ஒரே தண்ணியாகவும் உள்ளதால் எனக்கு நிறைய ’சளி’ தேங்கி விட்டது. உடனே இன்று சளியை சப்ஜாடாக வெளியேற்றியே ஆக வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. தில் தேரா திவானா ஹை ஸனம்..... என் மனது உன்மேல பைத்தியமா இருக்கு மை டியர்.... அர்த்தம் சொல்ல வேணாம்னு பாத்தா வாய பிடுங்கி அர்த்தம் சொல்ல வைக்கிறிங்களே....)))))

      Delete
    2. பூந்தளிர் 9 July 2016 at 06:53

      //தில் தேரா திவானா ஹை ஸனம்..... என் மனது உன்மேல பைத்தியமா இருக்கு மை டியர்.... அர்த்தம் சொல்ல வேணாம்னு பாத்தா வாய பிடுங்கி அர்த்தம் சொல்ல வைக்கிறிங்களே....))))) //

      ஆஹா, “என் மனது உன்மேல பைத்தியமா இருக்கு மை டியர்....” ..... அதனால் வாயைப்பிடுங்கி இருப்பேனோ என்னவோ. :)

      ’தில் தேகே தேகோ’ என்று ஒரு ஹிந்தி பாடல் ஆரம்பிக்கும்.

      அதற்குத்தான் ‘மனதைக் கொடுத்துப் பார்’ என்று அர்த்தம் என நினைக்கிறேன்.

      இதைத்தான் போட்டு வாங்குவது என்று சொல்வார்கள். :)

      Delete
    3. எஸ்... கரெக்ட்தான்...

      Delete
    4. பூந்தளிர் 9 July 2016 at 22:10

      //எஸ்... கரெக்ட்தான்...//

      ஆஹா, கிருஷ் ஆகிய V.G க்கு இன்று எங்கட டீச்சர் VG ... அதாவது VERY GOOD போட்டுட்டாங்கோ.

      ’தில் தேகே தேகோ’ .... கித்னா பஹூத் ப்யார் ஹை ! அச்சா ... பஹூத் அச்சா. சுக்கிரியா ... தந்யவாத்.

      Delete
  5. இன்றைய இனிய பாடல் பகிர்வுக்கு இருவருக்கும் என் நன்றிகள்.

    ReplyDelete
  6. ’முன்னா’ பார்வையில்
    ’முருகு’வின் நிக்காஹ்
    பகுதி-2 - By VGK

    பகுதி-1 படிக்காதவர்களுக்கு இதோ இணைப்பு:
    http://htpsipikulmuthu.blogspot.in/2016/07/blog-post_6.html

    -oOo-

    ReplyDelete
  7. (12)

    மிகச்சரியாக 03.07.2016 ஞாயிறு மாலை ஆறு மணிக்கு (ராகு காலம் முடிந்த பிறகு என்பதில் எனக்கு ஓர் சிறிய மகிழ்ச்சியாக உள்ளது) *ஹாஜி ஐயா .. மெளல்வி ஐயா* அவர்கள் வந்தார்கள்.

    (*எங்கட ஐயர் வீட்டுக்கல்யாணங்களில் கலந்துகொண்டு சுப முஹூர்த்தங்களைச் சிறப்பாக நடத்திக்கொடுக்கும் வேத சாஸ்திரங்கள் படித்த பண்டிதர்கள் - வாத்யார் - சாஸ்திரிகள் போல இருக்கும் போலிருக்குது*).

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. எங்கட கல்யாணம் இதில் ஏதுமே சேராத ஸ்பெஷல் கல்யாணம்.....)))))))

      Delete
    2. ப்ராப்தம் 9 July 2016 at 22:29

      //எங்கட கல்யாணம் இதில் ஏதுமே சேராத ஸ்பெஷல் கல்யாணம்.....))))))) //

      ஆனால் எங்கட தங்கம், வைரம், வைடூர்யம், கோமேதகம், புஷ்பராகம், நீலம், மரகதம், மாணிக்கம், முத்து, பவழம் ஆகிய நவரத்தினங்களும் ஒட்டுமொத்தமாக சேர்ந்த ஸ்பெஷலோ ஸ்பெஷல் கல்யாணம் அல்லவா அது!

      ’ரோஜா+கிருஷ்’ என ஜோடியாக என் பெயரைத் தன் பெயருடன் இணைத்துக்கொண்டு (அட்லீஸ்ட் இதிலாவது இணைத்துக்கொண்டு) சொல்லிக் கொடுக்கப்பட்ட ஓர் ஜோடி அன்பளிப்புகளில் அவளின் பேரன்பு எத்தனை ஆழமாக, அகலமாக, நீளமாக, நேர்மையாக இருந்துள்ளது. :)))))

      அவள் கைராசியால் கொடுக்கப்பட்ட வாஸனைப் புஷ்பங்களின் மேல் சயனம் செய்ததில், உனக்குக் கைமேல் பலன் கிடைத்துள்ளதாகக் கேள்விப்படுகிறோம். :)))))

      கொடுத்து வைத்தவள் நீயே !!

      Delete
    3. இதையெல்லாம் இங்க சொல்லணுமா கிருஷ்.....

      Delete
    4. பூந்தளிர் 10 July 2016 at 22:08

      //இதையெல்லாம் இங்க சொல்லணுமா கிருஷ்.....//

      வேறு எங்குதான் சொல்வது?

      எல்லாம் சரியான விஷயங்களை, சரியான இடத்தில், சரியான முறையில்தான் சொல்லியுள்ளேனாக்கும்.

      எல்லாம் ’கொடுத்து வைத்தவளான சாரூஊஊஊ’வுக்குத் தெரியும் + புரியும். அவள் சமத்தோ சமத்தூஊஊஊஊஊ உன்னைப்போலவே.

      Delete
  8. (13)

    கல்யாணப் பெண்ணையும், மாப்பிள்ளையையும், நன்கு அலங்கரித்து, ஒருபக்கம் ஆண்கள், மறுபக்கம் பெண்கள் புடைசூழ அமர வைத்து நடுவில் மிகப் பெரிய திரை ஒன்று கட்டி விட்டார்கள்.

    கல்யாணப் பெண்ணுக்கும், பிள்ளைக்கும், மல்லிகைப்பூச் சரத்தாலேயே பர்தா போட்டு முகத்தையே முழுவதும் மறைந்துவிட்டார்கள்.

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு பழக்க வழக்கங்கள்....

      Delete
    2. ப்ராப்தம் 9 July 2016 at 22:30

      //ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு பழக்க வழக்கங்கள்....//

      ஆமாம். நல்லவேளையாக கும்மென்ற அந்த மல்லிகை மணத்தில், உன்னைப்போல, நம் முருகு மயக்கம் போட்டு விழாமல் மிகவும் ஸ்டெடியாகவே இருந்திருக்கிறாள். :)

      Delete
  9. (14)

    அவர்களின் வேத புத்தகமான ‘திருக் குரான்’ னிலிருந்து சில பக்கங்கள் .... பாத்திஹா .... ஓதி, தூ....ஆ.... செய்தார்கள். அதாவது நிக்காஹ் (கல்யாண) மந்திரங்கள் ஓதி, பிரார்த்தனைகள் / வேண்டுதல்கள் செய்துள்ளார்கள்.

    >>>>>

    ReplyDelete
  10. (15)

    பிறகு, கல்யாணப் பெண் மற்றும் பிள்ளையிடம், இவனை / இவளை நிக்காஹ் (கல்யாணம்) செய்து கொள்ள முழு மனஸோடு சம்மதிக்கிறீங்களா? ன்னு, கேட்டு சத்திய சபதம் வாங்கிக்கொண்டுள்ளார்கள்.

    இந்த ஃபார்மாலிடீஸ்கள் எல்லாம் முடிய ஒரு மணி நேரம் ஆகியுள்ளது.

    >>>>>

    ReplyDelete
  11. (16)

    அதன்பின் அவர்கள் இருவரையும் மறைத்துக் கட்டப்பட்டிருந்த அந்த மிகப்பெரிய திரையை அவிழ்த்து விட்டுள்ளார்கள்.

    புதுப் பாய் விரித்து, அதில் நிறைய பூக்கள் தூவி, அதிலே பொண்ணு மாப்பிள்ளை இருவரையும் ஜோடியாக அருகே நெருக்கமாக உட்கார வைத்து விட்டார்கள்.

    இருவரும் ஒருவருக்கொருவர் மோதிரம் மாற்றிக்கொண்டார்கள். அதனை தாயத்து போல ஒரு கருப்புக் கயிற்றில் கோர்த்துக் கட்டினார்கள்.

    கூடியிருந்த பெரியோர்கள் எல்லாம் பூத்தூவி மணமக்கள் இருவரையும் ஆசீர்வாதம் செய்தனர்.

    >>>>>

    ReplyDelete
  12. (17)

    கிஃப்ட் பரிசுப்பொருட்கள், மொய்ப்பணம் முதலியன கொடுக்க விரும்பியவர்கள் வரிசையாக க்யூவில் நின்று, கொடுத்துவிட்டு, மணமக்களை வாழ்த்தினார்கள்.

    அங்கேயே முக்கியமான அதிகாரிகள் வந்திருந்து இவர்களின் திருமணத்தைப் பதிவு செய்து கொண்டார்கள். (REGISTRATION OF MARRIAGE BY THE GOVERNMENT AUTHORITIES)

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. இது ரொம்ப அவசியமான ஒரு விஷயம்தான்..

      Delete
    2. ப்ராப்தம் 9 July 2016 at 22:31

      //இது ரொம்ப அவசியமான ஒரு விஷயம்தான்..//

      உன்னிடமும், அவளிடமும் இதுபோன்ற அவசியமான ஒருசில விஷயங்களை முன்கூட்டியே நான் சொல்லிக்கொடுத்து எச்சரிக்கை செய்து இருந்தேனே ! :)

      Delete
    3. ஓ........ அப்படியா....... இருக்கட்டும்.... இருக்கட்டும்.....

      Delete
    4. பூந்தளிர் 10 July 2016 at 22:09

      //ஓ........ அப்படியா....... இருக்கட்டும்.... இருக்கட்டும்.....//

      அடடா. நான் மேரேஜ் ரிஜிஸ்ட்ரேஷன் மிகவும் அவசியம் என்பதை மட்டுமே சொல்லி எச்சரிக்கை செய்திருந்தேனாக்கும்.

      மீதி எல்லா வில்லங்க விஷயங்களும் நீங்கள் அவளுக்குச் சொல்லிக்கொடுத்துள்ளது மட்டுமேவாக்கும்.

      நான் எப்படி மீதி அதையெல்லாம் சொல்லிக்கொடுத்திருக்க முடியும்?

      நம்புங்கோ. ’சும்மாச் சும்மா’ முறைக்காதீங்கோ.

      Delete
  13. (18)

    முருகுவின் அம்மா வழி உறவினர்கள், அப்பா வழி உறவினர்கள் என சுமார் 100 பேர்கள், திருமணத்தில் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தார்கள்.

    எல்லா ஏற்பாடுகளும், செலவுகளும், மாப்பிள்ளை வீட்டாரே செய்து சிறப்பித்துள்ளனர் என அறியப்படுகிறது.

    [ இதில் நிகர இலாபமாக அவர்களுக்குக் (குறிப்பாக அந்த மாப்பிள்ளைக்குக்) கிடைக்கப்போவது நம் ’மின்னலு முருகு’ என்ற தங்கச் சுரங்கம் அல்லவா !

    அதன்முன் இந்த ஏற்பாடுகளும், செலவுகளும் அவருக்குப் பெரிசா என்ன? இதெல்லாம் வெறும் சுண்டைக்காய் அளவு மட்டும்தானே, வெளிநாட்டுப் பணக்காரரான அவருக்கு :))))) ]

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. இது ரொம்ப நல்ல விஷயம்தான்... பொண்வீட்டு தலையிலேயே எல்லா செலவையும் கட்டாம அவரே பண்ணி இருக்கிறாரே.......

      Delete
    2. பூந்தளிர் 10 July 2016 at 22:11

      //இது ரொம்ப நல்ல விஷயம்தான்... பொண்வீட்டு தலையிலேயே எல்லா செலவையும் கட்டாம அவரே பண்ணி இருக்கிறாரே.......//

      ஆமாம், இதற்காக நாம் அவரைப் பாராட்டத்தான் வேண்டும்.

      ஆனாலும் .....

      ‘ஆதாயமில்லாமல் செட்டியார் ஆற்றில் இறங்க மாட்டார்’ என்று ஒரு பழமொழியும் உண்டு.

      Delete
  14. (19)

    முருகுவுடன் கூடப்பிறந்தவர் ஒரே ஒரு அண்ணன் மட்டுமே.

    முருகுவோ, முருகுவின் அம்மாவோ நேரில் சென்று கலந்துகொள்ள முடியாமல், அவருக்கு சமீபத்தில் (16.01.2016) வெளிநாட்டில் ரிஜிஸ்டர் மேரேஜ் நடந்தது.

    அதனால் முருகுவின் அண்ணனையும், அண்ணியையும் சேர்த்து மனையில் அமர வைத்து, ஹாஜி ஐயாவிடம் சொல்லி, குரானிலிருந்து பாத்திஹா .... தூ...ஆ... ஓதி அவர்களின் நிக்காஹ் வும் மீண்டும் முறைப்படி இங்கு ஒருமுறை, முருகுவின் அம்மா கண்குளிரப் பார்க்க வேண்டி நிகழ்த்தப்பட்டது.

    முருகுவின் அம்மாவுக்கு இதனால், தன் பிள்ளையின் நிக்காஹ் வை நேரில் பார்க்க முடியாமல் போனதே என்ற மனக் குறை நீங்கி மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட்டது.

    >>>>>

    ReplyDelete
  15. (20)

    இதில் நான் மட்டுமே அறிந்துள்ள ஓர் இரகசியம் .... இப்போது உங்களுக்கும் சொல்லி மகிழ விரும்புகிறேன்:

    முருகுவின் அண்ணியே (அண்ணனின் மனைவியே) முருகுவுக்கு நாத்தனார் ஆகிறார்கள்.

    அதேபோல

    முருகுவின் அண்ணிக்கு (அண்ணனின் மனைவிக்கு) நம் முருகுவே நாத்தனார் ஆகிறாள்.

    இரு குடும்பத்தாரும் தங்களுக்குள், பெண் கொடுத்துப் பெண் வாங்கிக்கொண்டுள்ளனர்.

    [ ’நாத்தனார்’ என்றால் ’கணவரின் சகோதரி’ என்ற உறவு முறையை குறிக்கும் ]

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. நம்ம பக்கம் தான் உறவு முறை கல்யாணங்கள் நடக்கும்னு நினைச்சேன்.. பாட்டியே மாமியார்... அம்மாவே நாத்தனார்....... இவங்கள்லயும் இப்படி நடக்குதே....

      Delete
    2. பூந்தளிர் 9 July 2016 at 06:56

      //நம்ம பக்கம் தான் உறவு முறை கல்யாணங்கள் நடக்கும்னு நினைச்சேன்.. பாட்டியே மாமியார்... அம்மாவே நாத்தனார்.......//

      இதை ’யாரோ’கூட என்னிடம் சொல்லியிருக்காங்கோ. நன்கு நினைவில் உள்ளது. அந்த பாட்டி/தாத்தா அதாவது மாமியார்/மாமனார் போட்டோக்கள் கூட என் மனதில் அப்படியே இன்னும் பசுமையாகப் பதிந்து உள்ளது.

      //இவங்கள்லயும் இப்படி நடக்குதே....//

      நானே என் சொந்த அத்தையின் பெண்ணின் பெண்ணை அல்லவோ மணந்திருக்கிறேன். இதெல்லாம் ஆங்காங்கே நடப்பது மிகவும் சகஜம் தான்.

      Delete
    3. அப்போ இவ அவளை அண்ணினு சொல்வா அவ இவளை அண்ணினு சொல்வா இல்லையா.....

      Delete
    4. ப்ராப்தம் 9 July 2016 at 22:33

      //அப்போ இவ அவளை அண்ணினு சொல்வா அவ இவளை அண்ணினு சொல்வா இல்லையா.....//

      பொதுவாக ’அண்ணி’ என்று எல்லோராலும் சொல்லப்படுகிறது.

      எங்கட ஐயர்களில் மட்டும் ’மன்னி’ என்று சொல்லுவோம்.

      முகமதியர்களான இவர்கள் ‘மயினி’ என்று சொல்லுகிறார்கள்.

      Delete
  16. (21)

    வெளிநாட்டில் சொந்தமாகக் கம்பெனி வைத்து ஏதோ இலாபகரமான தொழில் நடத்துபவராக முருகுவின் கணவர் இருப்பதால், முருகுவின் மாமியார் மற்றும் முருகுவின் நாத்தனார் ஆகியோர்களின் முகங்களிலேயே, ஒருவித பணக்காரக் களையும், கம்பீரமும் [ RICHNESS + COMMANDING POWER ] தெரிவதாக நேரில் பார்த்து வந்தவர்கள் சொல்லி மகிழ்ந்துள்ளார்கள்.

    முருகுவின் கணவரின் அலுவலக நெருங்கிய நண்பர்கள் எனச்சொல்லி ஒரு பத்து பேர்கள், இந்தத் திருமணத்தை நேரில் கண்டு களிப்பதற்காக மட்டுமே, வெளிநாட்டிலிருந்து இங்கு வந்துள்ளார்கள், எனவும் கேள்விப்பட்டு மகிழ்கிறோம்.

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. எங்க கல்யாணத்துல மொத்தமே 8---- பேர்கள்தான்.......

      Delete
    2. ப்ராப்தம் 9 July 2016 at 22:34

      //எங்க கல்யாணத்துல மொத்தமே 8---- பேர்கள்தான்.......//

      சிம்பிள் மேரேஜ் .... எப்போதும் மிகச் சிறப்பானதேயாகும். தனிச் சிறப்பானதேயாகும். பாராட்டுகள். வாழ்த்துகள்.

      அந்த 8-இல் எங்கட ரோஜாவும் ஒன்று. ஒரே ஒரு ஒற்றை ரோஜாவே ஆனாலும், அதில் இதழ்கள் மிக அதிகமாகும்.

      அதுபோல ஆசையுடன், மிகவும் கஷ்டப்பட்டு அந்த ஒரு ரோஜா வந்ததே 800 அல்லது 8000 இதழ்களுக்கு (நபர்கள் வந்து கலந்து கொண்டதற்கு) சமமாகும்.

      எட்டு என்றால் அது அஷ்ட லக்ஷ்மிகளைக் குறிக்கும் மிகச் சிறந்த எண் ஆகும். (நான் பிறந்த தேதியும் எட்டு அல்லவா) அதனால், என் சார்பில் அவள் ஒருத்தி .... என் ராஜாத்தி அங்கு பிரஸன்னமாகி உள்ளதே

      ஆதி லக்ஷ்மி, மகாலக்ஷ்மி, தன லக்ஷ்மி, தான்ய லக்ஷ்மி, சந்தான லக்ஷ்மி, வீர லக்ஷ்மி, விஜய லக்ஷ்மி, கஜ லக்ஷ்மி ஆகிய அஷ்ட லக்ஷ்மிகளும் வந்ததற்கு சமமே ஆகும்.

      தங்கள் வாழ்க்கையில் அனைத்து சம்பத்துக்களும் கிடைத்து அமர்க்களமாக வாழ்வீர்கள் என்பது நிச்சயம். :)))))

      எல்லாமே இரட்டை இரட்டையாகவும் கிடைக்கும் வாய்ப்புகள் மிக அதிகமாகவே உள்ளது. பார்ப்போம்.

      Delete
  17. (22)

    இரவு எட்டு மணி முதல் விருந்து சாப்பாடு ஆரம்பித்துள்ளார்கள்.

    பெரியவர்கள் எல்லோரும் முதல் பந்தியில் சாப்பிட உட்கார்ந்துள்ளனர்.

    சின்னஞ்சிறுசுகள் + குறிப்பாக முருகு கணவரின் வெளிநாட்டு நண்பர்கள் எல்லோரும், மாப்பிள்ளை + பெண்ணைச் சுற்றி அமர்ந்து, செய்துள்ள வேடிக்கை விளையாட்டுக்கள் + கலாட்டாக்கள் சொல்லி மாளாது எனக் கேள்விப்படுகிறோம்.

    {எங்கள் ஐயர் வீட்டுக்கல்யாணங்களில், மாலை நேரத்தில், 4 மணி முதல் ஏழு அல்லது எட்டு மணி வரைகூட, நலங்கு என்ற ஒரு நிகழ்ச்சி நடைபெறும். அதிலும் இதுபோல பல கலாட்டாக்கள் நடைபெறும். அதைப்பற்றியெல்லாம் தனியே ஓர் பதிவுதான் நான் வெளியிட வேண்டும். இங்கு என்னால் சுருக்கமாகச் சொல்லவே முடியாது.}

    முருகு கல்யாணத்தில் அன்று நடந்துள்ள பல்வேறு கலாட்டாக்களில் மிகவும் ‘சிரிப்பாணி பொத்துக்கொள்ளும்’ ஒன்றே ஒன்றை மட்டும் இப்போதைக்கு சாம்பிளாகக் கீழே கொடுத்துள்ளேன்:

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. கிருஷ்.... உங்க கல்யாணத்திலும் நலுங்கு ஃபங்க்ஷன் நடந்ததா... ரொம்ப ஜாலியா இருக்குமில்லயா..

      Delete
    2. பூந்தளிர் 9 July 2016 at 06:58

      //கிருஷ்.... உங்க கல்யாணத்திலும் நலுங்கு ஃபங்க்ஷன் நடந்ததா... ரொம்ப ஜாலியா இருக்குமில்லயா..//

      அதெல்லாம் .... எல்லாமே மிகவும் ஜோராகவே நடந்தது.

      எங்களுக்கு வைதீக சாஸ்திர முறைப்படி நான்கு நாட்கள் கல்யாணம். 03.07.1972 முதல் நான்கு நாட்கள். முதல் நான்கு நாட்களும் சுத்தபத்தமாக இருந்து, அக்னி சாட்சியாக, இரண்டு வேளைகளும் அக்னியில் ஒளபாஸனம் செய்ய வேண்டும். அதன்படியே நாங்களும் செய்தோம்.

      பிறகு ஒருநாள் 07.07.1972 வெள்ளிக்கிழமை பெயருக்கு சாந்தி முஹூர்த்தம் என்று ஒன்று வைத்து, அன்றும் நள்ளிரவு வரை ஏதேதோ மந்திரங்கள் சொல்லி, கும்ப தீர்த்தத்தை எங்கள் தலையில் ஊற்றி குளிப்பாட்டி, பிறகு வெள்ளித்தட்டில் பால் சாதம் சாப்பிடச்சொல்லி, உள்ளே அனுப்பினார்கள். :)

      அதன்பிறகும் ஒருமாதம்வரை மிகவும் சுத்தபத்தமாகவே நாங்கள் இருந்தோம் .... கிணற்று நீரை வெள்ளமா கொண்டுபோய்விடப் போகிறது என்று.

      உனக்குத் தெரியாத கதைகளா? :)))))

      Delete
    3. ஹா ஹா.... எனக்கு தெரிந்த கதைதான் கிருஷ்....

      Delete
    4. நலங்கு எப்படி நடந்தது சொல்லவே இல்லையே........

      Delete
    5. பூந்தளிர் 9 July 2016 at 22:11

      //ஹா ஹா.... எனக்கு தெரிந்த கதைதான் கிருஷ்....//

      இதற்கு மேல் ஏதேனும் இங்கு நீ கதை சொல்லியிருந்தால் .......

      பிச்சுப் புடுவேன் பிச்சு :) ஜாக்கிரதை !

      Delete
    6. ப்ராப்தம் 9 July 2016 at 22:35

      //நலங்கு எப்படி நடந்தது சொல்லவே இல்லையே........//

      அதெல்லாம் மிகப்பெரிய கதைகள் ஆச்சே ! மேலும் அவை எல்லாமே பழங்கதைகளும் அல்லவா ! HOWEVER OLD IS GOLD. நினைவை விட்டு என்றுமே நீங்காத பசுமையான கிளுகிளுப்பான நிகழ்ச்சிகள்தான்.

      நான் எதை எப்போது சொன்னாலும் அவை எல்லாம் சுவைபட மிகவும் சுவாரஸ்யமாகவே இருக்கும்தான். இங்கு அதையெல்லாம் விரிவாகச் சொல்ல இயலாதும்மா.

      மேலும் எதையும் மிகச் சுருக்கமாகவும் எனக்குச் சொல்லத்தெரியாதும்மா. ஸாரிம்மா. உங்களின் இந்த ஆர்வத்திற்கு நன்றீம்மா.

      Delete
  18. (23)

    மாப்பிள்ளை ஆஷிக் கண்களை ஒரு துணி போட்டு இறுக்கமாகக் கட்டிவிட்டனர், அவரின் நெருங்கிய நண்பர்கள்.

    முருகு கையில் ஓர் தைக்கும் தையல் ஊசி.

    ஆஷிக் கையில் நூல்.

    முருகு கையில் இருக்கும் ஊசியில் ஆஷிக் அந்த நூலைக் கோர்க்க வேண்டும். அதாவது கண்கள் கட்டப்பட்ட நிலையில் மிகச்சரியாக, அந்த முருகு கையில் உள்ள ஊசித் துவாரத்திற்குள் நூலை அவர் நுழைக்க வேண்டும். இவள் அவருக்கு அதற்கான டைரக்‌ஷன் சொல்ல வேண்டும்.

    இதில் முருகுவின் கையை மட்டும் மாப்பிள்ளை பிடித்துக் கொள்ளலாம்.

    அவர் நூலை ஊசி கிட்டே கொண்டு வரும்போது, இவள் ...... கீழே .... இன்னும் மேலே .... இந்த ஸைடுலே .... ஓட்டை அங்கே இல்லை .... இங்கே இந்தப்பக்கம் அந்த ஓட்டை உள்ளது .... சரியாப்போட்டு நுழை .... என டைரக்‌ஷன் சொல்லச் சொல்ல .... அந்த மேரேஜ் ஹாலில் உள்ள அனைவருக்குமே சிரிப்பாணி பொத்துக்கொண்டுள்ளதாம்.

    அவ்வளவு கும்மாளம் ..... சிரிப்பு ..... சந்தோஷம். :)

    இந்த நிகழ்ச்சிகள் பற்றியெல்லாம் முன்பே தெரிந்திருந்தால் நாமும் நம் ‘மின்னலு முருகு’ கல்யாணத்திற்கு நேரில் சென்று வந்திருக்கலாமே என நினைக்கத் தோன்றி இருக்கும் ... இரண்டு டீச்சர் அம்மாக்களுக்கும். :)))))

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. ஓ..ஹோ...ஹோ... படிக்கும்போதே அமர்க்களமா இருக்கே.....தம்பதிகளின் வெட்கத்தை குறைக்கதான் இப்படிலாம் கலாட்டா காமெடிலாம் வச்சிருக்காங்கபோல.....

      Delete
    2. பூந்தளிர் 9 July 2016 at 07:00

      //ஓ..ஹோ...ஹோ... படிக்கும்போதே அமர்க்களமா இருக்கே.....தம்பதிகளின் வெட்கத்தை குறைக்கதான் இப்படிலாம் கலாட்டா காமெடிலாம் வச்சிருக்காங்கபோல.....//

      அதெல்லாம் எனக்கு ஒன்றுமே தெரியாதூஊஊஊஊ. நான் மிகவும் நல்ல பையனாக்கும். ஆனால் எனக்கு இப்போ வெட்கமாக ஒரே ‘ஷை’ ஆக உள்ளதாக்கும்.

      Delete
    3. ஓஹ்ஹோ...... நல்ல பையனோ... இருக்கட்டும் அப்படியே இருக்கட்டும்.....

      Delete
    4. பூந்தளிர் 9 July 2016 at 22:12

      //ஓஹ்ஹோ...... நல்ல பையனோ... இருக்கட்டும் அப்படியே இருக்கட்டும்.....//

      :))))) நாம் நேரில் சந்திக்கும் வரையிலாவது :)))))

      Delete
    5. //நாம் நேரில் சந்திக்கும் வரையிலாவது :)))))//

      அப்படி ஒரு சந்தர்ப்பம் கிடைக்குமாஆஆஆஆஆஆஆ.....

      Delete
    6. பூந்தளிர் 10 July 2016 at 22:13

      **நாம் நேரில் சந்திக்கும் வரையிலாவது :)))))**

      //அப்படி ஒரு சந்தர்ப்பம் கிடைக்குமாஆஆஆஆஆஆஆ.....//

      அது என்னவோ தெரியவில்லை ... அப்படி ஒரு சந்தர்ப்பம் கிடைக்காமல் இருப்பதே மிகவும் நல்லது என எனக்கு நினைக்கத் தோன்றுகிறது.

      வெளிப்படையாக என் மனதில் பட்டதை அப்படியே சொல்லிவிட்டதற்காக என்னை தயவுசெய்து கோச்சுக்காதீங்கோ, ப்ளீஸ்.

      ’மனம் ஒரு குரங்கு மனித மனம் ஒரு குரங்கு
      அதைத் தாவ விட்டால் தப்பி ஓட விட்டால்
      நம்மைப் பாபத்தில் ஏற்றி விடும்
      அது பாசத்தில் தள்ளி விடும் ....’

      என்று ஒரு சினிமா பாடலே உள்ளது.

      Delete
  19. (24)

    நல்லவேளை நம் ’முன்னாப் பார்க்’ நட்புகளில், கல்யாண வயசில், அடுத்து மிகவும் துடி துடிப்புடன் தயாராக இருக்கும் நம் முன்னா பார்க் ஓனராவது, இதையெல்லாம் நேரில் கண்டு மகிழ்ந்து, நம்முடன் கொஞ்சம் கொஞ்சமாகப் பகிர்ந்து கொள்வது, நாமே நேரில் சென்று கண்டு களித்ததுபோல, மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

    நம் முன்னாவிடமிருந்து, இதுபோன்ற மேலும் பல சுவாரஸ்யமான விஷயங்களை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன் ...... எனக்காக அல்ல ...... நம் டீச்சர்கள் இருவருக்காகவும் மட்டுமே. :)))))


    ooooooooooooooooooooooooooo

    மேலும் தொடரும் .......

    ReplyDelete
  20. நாங்களும் தொடரும் கலாட்டாவை ரசிக்க காத்துண்டுருக்கோம்..

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர் 9 July 2016 at 07:01

      //நாங்களும் தொடரும் கலாட்டாவை ரசிக்க காத்துண்டுருக்கோம்..//

      மிக்க நன்றீங்கோஓஓஓஓஓஓ :)

      Delete