Sunday 10 July 2016

neerodum vaigaiyile

நீரோடும் வைகையிலே நின்றாடும் மீனே
நெய்யூறும் கானகத்தில் கை காட்டும் மானே
தாலாட்டும் வானகத்தில் பாலூட்டும் வெண்ணிலவே
தெம்மாங்கு பூந்தமிழே தென்னாடன் குலமகளே
நீரோடும் வைகையிலே நின்றாடும் மீனே
நெய்யூறும் கானகத்தில் கை காட்டும் மானே
தாலாட்டும் வானகத்தில் பாலூட்டும் வெண்ணிலவே
தெம்மாங்கு பூந்தமிழே தென்னாடன் குலமகளே
மகளே உன்னைத் தேடி நின்றாளே மங்கை இந்த மங்கல மங்கை
வருவாய் என்று வாழ்த்தி நின்றாரே தந்தை உன் மழலையின் தந்தை
நான் காதலென்னும் கவிதை சொன்னேன் கட்டிலின் மேலே அந்தக்
கருணைக்கு நான் பரிசு தந்தேன் தொட்டிலின் மேலே
நான் காதலென்னும் கவிதை சொன்னேன் கட்டிலின் மேலே அந்தக்
கருணைக்கு நான் பரிசு தந்தேன் தொட்டிலின் மேலே
ஆரிரோ ஆரிரோ ஆரிரோ ஆராரோ
நீரோடும் வைகையிலே நின்றாடும் மீனே
நெய்யூறும் கானகத்தில் கை காட்டும் மானே
தாலாட்டும் வானகத்தில் பாலூட்டும் வெண்ணிலவே
தெம்மாங்கு பூந்தமிழே தென்னாடன் குலமகளே
குயிலே என்று கூவி நின்றேனே உன்னை என் குலக்கொடி உன்னை
துணையே ஒன்று தூக்கி வந்தாயே எங்கே உன் தோள்களீல் இங்கே
உன் ஒரு முகமும் திருமகளின் உள்ளமல்லவா
உங்கள் இரு முகமும் ஒரு முகத்தின் வெள்ளமல்லவா
ஆரிரோ ஆரிரோ ஆரிரோ ஆராரோ
நீரோடும் வைகையிலே நின்றாடும் மீனே
நெய்யூறும் கானகத்தில் கை காட்டும் மானே
தாலாட்டும் வானகத்தில் பாலூட்டும் வெண்ணிலவே
தெம்மாங்கு பூந்தமிழே தென்னாடன் குலமகளே
ஆராரோ ஆரிரரோ ஆராரோ ஆரிரரோ ஆராரோ ஆரிரரோ
- See more at: http://www.thamizhisai.com/tamil-film-songs/paar-magale-paar/neerodum-vaigaiyile.php#sthash.B7rCGV6H.dpuf
Read more at http://www.thamizhisai.com/tamil-film-songs/paar-magale-paar/neerodum-vaigaiyile.php#8V0YdQREfhcyssSS.99

29 comments:

  1. ஆஹா பாட்டு ரொம்ப நல்லா இருக்கு.. கிருஷ்கு வேலை வைக்கலாமா நீயே பாட்டும் போட்டிருக்கியே.....

    ReplyDelete
  2. ரொம்ப நல்ல பாட்டு.. ஸாஃப்ட் ம்யுஸிக். அர்த்தமுள்ள வார்த்தைகள்

    ReplyDelete
  3. கோபூஜி..... என்னாச்சி... இன்னும் உங்கள காணோமே........
    ஏன் முன்னா ப்ளாக&ஒயிட் போட்டு போரடிக்கறேன்னு கேக்க அவளும் வரமாட்டா.....

    ReplyDelete
    Replies
    1. சிப்பிக்குள் முத்து. 11 July 2016 at 04:33

      //கோபூஜி..... என்னாச்சி... இன்னும் உங்கள காணோமே........//

      இன்றும் நான் எழுந்ததே மிகவும் லேட். அதன்பின் 1 கிலோ அவரைக்காய்களை நார் உரித்து, உள்ளே பூச்சி புழுக்கள் உள்ளதா என பிரித்துப்பார்த்து, கத்தியால் பொடிப்பொடியாக நறுக்கிக்கொடுக்கும் வேலையை எடுத்துக்கொண்டு உதவினேன்.

      பிறகு ஷேவிங் செய்துகொண்டு, பாத்ரூம் போய் குளிக்கப்போனேன்.

      பக்கத்துவீட்டுக்காரருக்கு ஓர் பேரக் குழந்தை பிறந்து, மருமகளையும் சின்ன ஒரு மாத குழந்தையையும் இங்கு அழைத்து வந்துள்ளார்கள். அதைப் போய் பார்த்துவிட்டு கிஃப்ட் கொடுத்துவிட்டு வந்தேன்.

      எங்கள் அடுக்கு மாடி வளாகத்தில் முதல் மாடியில் உள்ள ஒருவரின் பையனுக்கு நேற்று கும்பகோணம் அருகே உள்ள உப்பிலியப்பன் கோயிலில் திருமணம். என்னால் நேரில் சென்று கலந்துகொள்ள முடியவில்லை.

      இன்று புதுமண தம்பதியான மாப்பிள்ளை + பெண் இங்கு வந்துள்ளார்கள். நாளை ஊருக்குப் போய் விடுவார்கள். அவர்களைப்போய் பார்த்துவிட்டு கிஃப்ட் கொடுத்துவிட்டு வந்தேன்.

      இதுபோன்ற சில எதிர்பாராத உபரி வேலைகளால் இங்குவர சற்றே தாமதமாகிவிட்டது.

      //ஏன் முன்னா ப்ளாக் & ஒயிட் போட்டு போரடிக்கறேன்னு கேக்க அவளும் வரமாட்டா.....//

      ஆமாம். கொஞ்ச நாட்களுக்கு மட்டுமாவது வர மாட்டாள் என நானும் நினைக்கிறேன். அவள் அங்கு ஜாலியாக இருந்தாலும் நமக்குத்தான் இங்கு கொஞ்சம் போரடிக்கும். பார்ப்போம்.

      Delete
  4. நீரோடும் வைகையிலே நின்றாடும் மீனே
    நெய்யூறும் கானகத்தில் கை காட்டும் மானே

    தாலாட்டும் வானகத்தில் பாலூட்டும் வெண்ணிலவே
    தெம்மாங்கு பூந்தமிழே தென்னாடன் குலமகளே

    நீரோடும் வைகையிலே நின்றாடும் மீனே
    நெய்யூறும் கானகத்தில் கை காட்டும் மானே

    தாலாட்டும் வானகத்தில் பாலூட்டும் வெண்ணிலவே
    தெம்மாங்கு பூந்தமிழே தென்னாடன் குலமகளே

    மகளே உன்னைத் தேடி நின்றாளே மங்கை
    இந்த மங்கல மங்கை

    வருவாய் என்று வாழ்த்தி நின்றாரே தந்தை
    உன் மழலையின் தந்தை

    நான் காதலென்னும் கவிதை சொன்னேன்
    கட்டிலின் மேலே அந்தக்

    கருணைக்கு நான் பரிசு தந்தேன்
    தொட்டிலின் மேலே

    நான் காதலென்னும் கவிதை சொன்னேன்
    கட்டிலின் மேலே அந்தக்

    கருணைக்கு நான் பரிசு தந்தேன்
    தொட்டிலின் மேலே

    ஆரிரோ ஆரிரோ ஆரிரோ ஆராரோ

    நீரோடும் வைகையிலே நின்றாடும் மீனே
    நெய்யூறும் கானகத்தில் கை காட்டும் மானே

    தாலாட்டும் வானகத்தில் பாலூட்டும் வெண்ணிலவே
    தெம்மாங்கு பூந்தமிழே தென்னாடன் குலமகளே

    குயிலே என்று கூவி நின்றேனே உன்னை
    என் குலக்கொடி உன்னை

    துணையே ஒன்று தூக்கி வந்தாயே எங்கே
    உன் தோள்களில் இங்கே

    உன் ஒரு முகமும் திருமகளின் உள்ளமல்லவா
    உங்கள் இரு முகமும் ஒரு முகத்தின் வெள்ளமல்லவா

    ஆரிரோ ஆரிரோ ஆரிரோ ஆராரோ

    நீரோடும் வைகையிலே நின்றாடும் மீனே
    நெய்யூறும் கானகத்தில் கை காட்டும் மானே

    தாலாட்டும் வானகத்தில் பாலூட்டும் வெண்ணிலவே
    தெம்மாங்கு பூந்தமிழே தென்னாடன் குலமகளே

    ஆராரோ ஆரிரரோ
    ஆராரோ ஆரிரரோ
    ஆராரோ ஆரிரரோ

    ReplyDelete
  5. திரைப்படம்: பார் மகளே பார்

    பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா

    இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்

    இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி

    ஆண்டு: 1963

    ReplyDelete
  6. அந்தக்காலத்தில் வந்த மிகவும் நல்ல படம். பாடலும் இனிமை. பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  7. சில பொதுவான விஷயங்களை உங்கள் அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.
    =========================================================

    பொதுவாக அந்தணர்கள் (வேதம் + சாஸ்திரங்கள் படித்த ஐயர்கள்) தனக்காக மட்டும், கடவுளிடம் பிரார்த்தனை செய்யக்கூடாது.

    உலகத்தில் உள்ள அனைவரும் + அனைத்து ஜீவராசிகளும் க்ஷேமமாக செளக்யமாக சந்தோஷமாக இருக்கவேண்டி “லோகா ஸமஸ்தா சுகினோ பவந்து” எனச் சொல்லி மட்டுமே பிரார்த்திக்க வேண்டும்.

    தினமும் வேதம் சொல்ல வேண்டும். யாராவது ஒருவருக்காவது, தான் கற்ற வேதங்களையும் சாஸ்திரங்களையும் தினமும் சொல்லித்தர வேண்டும். அவர்களுக்கு விதித்துள்ள நித்ய கர்மானுஷ்டானங்களை விடாமல் தினமும் செய்துவர வேண்டும்.

    விடியற்காலம் எழுந்திருத்தல், ஸ்நானம் செய்தல் (தலை முழுகிக் குளித்தல்), நெற்றியில் அவரவர்கள் முன்னோர் காலம் காலமாகக் கடைபிடித்து வந்த வழக்கப்படி விபூதிப்பட்டைகளோ, நாமமோ, கோபிச் சந்தனமோ இட்டுக்கொள்ளுதல் முதலியன.

    அதிகாலை சூர்யன் உதிக்கும்போது, பிராத ஸந்தியாவந்தனம், மதியம் உச்சிப் பொழுதில் மாத்யான்னிஹம் + பிரும்மயக்ஞம், மாலை சூரிய அஸ்தமனத்திற்குள் சாயங்கால ஸந்தியாவந்தனம், நித்தியப்படி காயத்ரி ஜபங்கள், ஒளபாஸன ஹோமங்கள், பூஜை புனஷ்காரங்கள், வேத பாராயணங்கள் முதலியன செய்து, உடலும் உள்ளமும் மடி ஆச்சாரமாக சுத்தபத்தமாக இருக்க வேண்டும்.

    அந்தணர்கள் பணம் சம்பாதிப்பதோ, பணத்தின் மீது ஆசை கொள்வதோ, அடுத்த வேளை சோற்றுக்கு என எதுவும் தன்னிடம் சேர்த்து வைத்துக்கொள்வதோ கூடாது.

    எளிமையான வாழ்க்கை வாழ்ந்து, லோக க்ஷேமத்திற்காக பிரார்த்தனைகள் செய்வது மட்டுமே அந்தணர்களுக்கான பிரதான வேலையாக இருந்து வந்தது.

    அந்தணர் அல்லாத மற்ற இனத்தவரும், செல்வந்தர்களும், நாட்டை ஆளும் ராஜாக்கள் போன்றவர்களும், இவர்களின் + இவர்கள் குடும்பத்தின் அன்றாட பொருளாதாரத் தேவைகளை கவனித்து வந்தனர்.

    இதுபோன்று பிறருக்காக மட்டுமே அந்தணர்கள், ஜபங்கள், ஹோமங்கள், பூஜைகள், யாகங்கள் எனச் செய்து வாழ்ந்து வந்த அந்தக்காலத்தில் மாதம் மும்மாரி பொழிந்து உலகமே சுபிட்சமாக, செளக்யமாக, நிம்மதியாக இருந்து வந்தது.

    நான் சொல்லும் இவைகளெல்லாம் இன்றிலிருந்து சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு வரைகூட ஒழுங்காகவே நடந்து வந்துள்ளன.

    என் தந்தை + தந்தைக்கு முன்பு இருந்த சுமார் பத்து தலைமுறைக்கும் மேல் வேதம் படித்த மஹா பண்டிதர்கள் மட்டுமே என்பதால் என்னால் இவற்றையெல்லாம் நன்கு ஆராய்ந்து அறிந்து சொல்ல முடிகிறது.

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. நீங்க சொல்லற விஷயங்கள் கேட்கவே பிரமிப்பா இருக்கு.. ஆச்சரியமாகவும் இருக்கு. பணத்தின் மீது ஆசை இல்லாதவங்க இப்ப யாராவது இருக்காங்களா...... காலம் மாறிப்போச்சு....கடைப்பிடிக்க வேண்டிய கடமைகளும் மாறிப்போச்சு...

      Delete
    2. சிப்பிக்குள் முத்து. 11 July 2016 at 07:56

      //நீங்க சொல்லற விஷயங்கள் கேட்கவே பிரமிப்பா இருக்கு.. ஆச்சரியமாகவும் இருக்கு. பணத்தின் மீது ஆசை இல்லாதவங்க இப்ப யாராவது இருக்காங்களா......//

      ஒரேயடியாக இல்லை என்று நாம் சொல்லிவிட முடியாது. இன்றும் லட்சத்தில் ஒருவர் ஆங்காங்கே எங்கேயாவது இதுபோலவே இருக்கக்கூடும். அவர்களை ஒருவேளை நமக்கு அடையாளம் தெரியாமல் இருக்கலாம்.

      அதுபோன்று எனக்குத் தெரிந்தே ஒருவர் 2004 வரை இருந்தார். அவரைப்பற்றி நான் ஒரு பதிவே தொடராக எழுதியுள்ளேன். அதன் ஆரம்பப்பகுதிகான இணைப்பு:

      http://gopu1949.blogspot.in/2012/02/blog-post_14.html

      அவரிடம் எனக்கு 1972 முதல் 2004 வரை, சுமார் 32 ஆண்டுகளுக்கு மேல் பழக்கம் உண்டு. மிகவும் எளிமையானவர். நிறைய விஷய ஞானங்கள் உள்ளவர். பக்தி, சிரத்தை + கருணையுள்ளம் கொண்ட மிகப்பெரிய போற்றப்பட வேண்டிய மஹான்.

      //காலம் மாறிப்போச்சு....கடைப்பிடிக்க வேண்டிய கடமைகளும் மாறிப்போச்சு...//

      ஆமாம். வாட் யூ ஸே ஈஸ் வெரி கரெக்ட்.

      Delete
    3. கிருஷ்..... எவ்வளவு விஷயங்கள்.... சொல்லி இருக்கீங்க...

      Delete
    4. பூந்தளிர் 13 July 2016 at 22:37

      //கிருஷ்..... எவ்வளவு விஷயங்கள்.... சொல்லி இருக்கீங்க...//

      எல்லாமே எங்கட டீச்சரம்மா எனக்குச் சொல்லிக்கொடுத்தது மட்டுமேவாக்கும்.

      Delete
  8. இப்போது ஒரு சின்ன கதை சொல்ல விரும்புகிறேன்.
    =======================================================

    அந்தக்காலத்தில், நன்கு வேதம் + சாஸ்திரங்கள் படித்து, மேலே நான் சொல்லியுள்ளதுபோலவே மிகவும் எளிமையாக வாழ்ந்து வந்த ஓர் அந்தணர் இருந்து வந்தார்.

    அந்த ஊர் ராஜாவுக்கு தீராத வயிற்று வலி ஏற்பட்டு வந்தது. எவ்வளவோ வைத்தியர்களை வரவழைத்து, எவ்வளவோ பணம் செலவழித்தும், அவரின் வயிற்று வலி தீரவே இல்லை.

    கடைசியில் இந்த அந்தணரை அரண்மனைக்கு வரவழைத்து, ஏதேதோ பிரார்த்தனைகள் செய்யச்சொல்லி, அவர் கையால் மந்திரம் சொல்லி இட்டுவிட்ட திருநீரைப் பூசிவிட்டதும் (திருநீர் = விபூதி) அந்த ராஜாவின் வயிற்றுவலி நீங்கியது.

    அந்த அந்தணர், பொன்-பொருள், கிராமங்கள், வீடுகள், நிலங்கள் என எது கேட்டாலும், எவ்வளவு கேட்டாலும், ராஜா உடனே கொடுக்க சித்தமாகவே இருந்தார். அவர் வயிற்று வலியினால் பட்டுள்ள சிரமம் அவருக்கு மட்டுமே தெரியும் அல்லவா.

    ”நான் தங்களுக்கு இப்போது என்ன செய்ய வேண்டும்?” என ராஜா மிகவும் பெளவ்யமான அந்த வேதம் படித்த பண்டிதரிடம் வேண்டிக்கேட்டுக்கொண்டார்.

    “தங்களுக்கு நவக்கிரஹ தோஷத்தினால் வயிற்றுவலி வந்துள்ளது. அதற்குப் பரிகாரமாகவும், இனி அதுபோல வராமல் இருக்கவும், நான் சொல்வதைச் செய்யுங்கோ” என்கிறார்.

    உடனே ராஜா ”சொல்லுங்கோ, எது சொன்னாலும் தங்களின் உத்தரவுப்படி செய்யக்காத்திருக்கிறேன்; எவ்வளவு பணம் செலவானாலும் நான் செய்யத் தயாராக இருக்கிறேன்” என்கிறார்.

    ”ஒரு சனிக்கிழமையன்று ஸத் பாத்திரங்களான ஒன்பது வைதீக பிராம்மணர்களுக்கு போஜனம் (உணவு) அளிக்க வேண்டும்”

    “அப்புறம்” ..... ஆவலுடன் ராஜா கேட்கிறார்.

    “போஜனத்தில் எள்ளுருண்டையும் போடப்பட வேண்டும்”

    “அப்புறம்” ..... மேலும் ஆவலுடன் ராஜா கேட்கிறார்.

    “அத்துடன் போஜனத்தில் கொஞ்சம் எள்ளுஞ்சாதமும் போட வேண்டும்”

    “அப்புறம்” ..... மேலும் மேலும் ஆவலுடன் ராஜா கேட்கிறார்.

    “ஆளுக்கு ஒன்பது ரூபாய் வீதமாவது போஜன தக்ஷணையும் தர வேண்டும்”

    “அப்புறம் வேறு என்ன செய்ய வேண்டும் ... சொல்லுங்கோ” என ராஜா, ஏதோ மிகப்பெரியதாக எதிர்பார்த்து செய்யவும் காத்திருந்து வினவுகிறார்.

    ”அவ்வளவு தான் .... இதைச்செய்தாலே போதும்” எனச் சொல்லி விடைபெறுகிறார், அந்த அந்தணர்.

    அந்த அந்தணர் தனக்காக ஏதும் ராஜாவிடம் கேட்கவே இல்லை. மிகவும் எளிமையாக வாழ்ந்துவரும் நல்லவரான அவருக்கு அதுபோலெல்லாம் எதுவும் உபரியாகவும், தனக்காகவும் கேட்கவும் தெரியாது.

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. வலைப் பதிவு பக்கம் போவதை நிறுத்தி இருந்தாலுள் இங்க நல்ல ஒரு கதை கிடைத்தது

      Delete
    2. பூந்தளிர் 11 July 2016 at 20:55

      //வலைப் பதிவு பக்கம் போவதை நிறுத்தி இருந்தாலும் இங்க நல்ல ஒரு கதை கிடைத்தது//

      நிஜமாவேச் சொல்றீங்களோ .... அல்லது ’சும்மா’க் கதை விடுறீங்களோ .... எனினும் உங்களுக்கு என் நன்றிகள்.

      Delete
    3. நான் என்ன சொன்னாலும் கதை விடுவது போலவா இருக்கு.....

      Delete
    4. பூந்தளிர் 13 July 2016 at 22:38

      //நான் என்ன சொன்னாலும் கதை விடுவது போலவா இருக்கு.....//

      நோ... நோ... அப்படியெல்லாம் இல்லை.

      நீங்கள் சொல்லிடும் ஒவ்வொரு கதையும் என்னை அப்படியே சொக்க வைத்தது உண்டு.

      உதாரணமாக அந்த வண்ணாத்தி கதை ஒன்றே போதுமே .... எவ்வளவு சூப்பரோ சூப்பராகச் சொல்லி மகிழ்வித்திருந்தீர்கள் .... டீச்சர்.

      என்னால் மறக்கவே முடியாது.

      நினைத்து நினைத்து சிரித்து மகிழ்ந்.....தேன்.

      Delete
  9. நம் செல்லக்குட்டி ‘மின்னலு முருகு’விடமிருந்து எனக்கு 09.07.2016 அன்று இரவு ஓர் உருக்கமான கடிதம் மெயிலில் வந்தது என்று சொல்லியிருந்தேன் அல்லவா!

    அதிலுள்ள ஒருசில வரிகளை மட்டும் நீக்கி விட்டு, அப்படியே கீழே கொடுத்துள்ளேன்.

    >>>>>

    ReplyDelete
  10. Some of the lines of the Mail Received
    from MURUGU to me (VGK) on 09.07.2016

    -=-=-=-=-=-=-

    குருஜிஇஇஇஇஇஇஇஇஇஇ.........
    நானு... ஆஷிக்... ஒங்கட காலுல மனப்பூர்வமா வுளுந்து கும்பிட்டுகிடுதம்........

    நீங்க என்னிய ஒங்கட செல்ல பொண்ணுனு சொல்லினிங்கல்லா..... எந்த வாப்பா வாது தங்கட பொண்ணு நிக்காவுக்கு வராம இருந்துகிடுவாகளா........

    ரொம்ப எதிர் பார்த்தேன் குருஜி.... அம்மி கிட்டால ஆஷிக் கிட்டால குருஜி கண்டிப்பா வந்துகிடுவாகனுல்லா சொல்லிகினன் .. இப்படி ஏமாத்தி போட்டீகளே... குருஜி....

    ரொம்பவே வருத்தம்தா...

    முன்னா அவ அம்மி அக்கா வந்தாக .. எம்பூட்டு சந்தோசமா இருந்திச்சு வெளங்கிச்சா.. ஆரு வந்தாலும் எங்கட குருஜி வராம இருந்துகிட்டது ரொம்ப பெரிய கொற தான்...

    இந்த நிக்காஹ் .. சந்தோசமான வாழ்க்கை எல்லாம் நீங்க கொடுத்தது குருஜி.....

    நாங்க அல்லா பேரும் பத்தாம் தேதில மஸ்கட் கெளம்புறோம்.. சென்னையில இரவு 12--- மணிக்கு ப்ளேனு ஏறோணும்...

    நாலாம் (நானெல்லாம்) ஏரோப்ளேனு பறக்குற சத்தம் கேட்டாவே வாசலுல ஓடிபோயி வாய பொளந்துகிட்டு ஆகாசத்தயே பாத்துகிட்டு இருப்பேன்.. கிட்டத்துல ப்ளேனெல்லா பாத்துகிட்டதே கெடயாது..

    ஆனா இப்ப ப்ளேனுலயே பறக்க போறேன் குருஜி...

    அம்மிய கூட்டிபோறத நெனச்சி ரொம்ப சந்தோசமா இருக்குது....

    ஆஷிக் என்கிட்டால ஒனக்கு இன்னா வேணும்னு கேட்டாக...

    ”ஸீ.ஏ. பரீச்ச எளுதிபோடவே பாஸ் பண்ணி போடோணும்...

    அதுவும் குருஜி எனிக்காக ஒரு பார்க்கரு பேனா வாங்கி வச்சிருக்காங்க...

    குருஜிகிட்டால போயி அந்த பேனா வாங்கியாரணோம் ... அதுலதான் பரீச்ச எளுதணும்”ன்னு சொல்லிகினேன்..

    "டைம் ரொம்ப கம்மிடா .. சொந்த பிஸினஸ மத்தவங்க பொறுப்புல அதிக நாளுக்கு விட ஏலாது .. நாளை கிளம்ப டிக்கட்டெல்லாம் ஏற்கனவே புக் பண்ணிட்டேன்.. குருஜியின் பாக்க போக டைமில்லடா அம்மிய கூட்டி போறதால வாடகை வூட்டுகாரவுகளும் காலி பண்ணி சாமான்செட்டெல்லா பேக் பண்ணோணும் .. நம்ம எல்லாரோட சாமான்களும் பேக் பண்ணோணும் .. நெறய வேலை இருக்குதுடா .. அடுத்தவாட்டி இந்தியா வரப்போகிறது கண்டிப்பா குருஜியின் நேருல போயி பாக்கலாம்”ன்னு சொல்லினாக...

    எனிக்கு சமாதானமே ஆவலை.. குருஜி...

    நீங்க நல்லா இருக்கீகளா குருஜி....

    -=-=-=-=-=-=-

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. எவ்வளவு டச்சிங்கா எழுதி இருக்கா... புரிய தான் டைம் எடுக்குது....

      Delete
    2. பூந்தளிர் 13 July 2016 at 22:39

      //எவ்வளவு டச்சிங்கா எழுதி இருக்கா...//

      ஆமாங்க டீச்சர். ரொம்பவும் டச்சிங்தான்.

      //புரிய தான் டைம் எடுக்குது....//

      அதுதான் அவளின் ஸ்டைல் ஆஃப் ரைட்டிங் + ஸ்பெஷாலிடி. :)

      Delete
  11. Please refer these Links before reading this passage:

    http://gopu1949.blogspot.in/2015/11/blog-post_11.html

    http://gopu1949.blogspot.in/2015/12/blog-post_21.html

    -oOo-

    ”குருஜியைப் போய் நேரில் பார்க்க வேண்டும். அவர் கால்களில் விழுந்து நாம் இருவரும் ஜோடியாக நமஸ்கரிக்க வேண்டும். அவரிடம் நாம் ஆசி வாங்க வேண்டும். அவர் எனக்காகக் கொடுக்க வேண்டி வாங்கி, தன்னிடம் ரெடியாக வைத்துள்ள பார்க்கர் பேனாவை வாங்கிக்கொண்டு வர வேண்டும். அந்தப் பேனாவினால் மட்டுமே நான் ஸீ.ஏ. பரீக்ஷை எழுதி பாஸ் செய்ய வேண்டும்” என நம் முருகுப்பொண்ணு தன் மனதில் உள்ள ஆசையை தன் இன்றைய கோடீஸ்வரக் கணவர் ‘ஆஷிக்’ இடம் கேட்டுக்கொண்டு இருக்கிறாள்.

    நம் ஆஷிக் அவர்கள் மேற்படிக் கதையில் வரும் ராஜா போல எனக்குக் காட்சியளிக்கிறார்.

    ராஜாவின் வயிற்றுவலியைத் தீர்த்து வைத்த ஏழை எளிய அந்தணராக என் குழந்தை முருகு எனக்குக் காட்சியளிக்கின்றாள்.

    அவளின் அன்பு அலாதியானது. தன் நான்கு வயதினிலேயே தன் வாப்பாவை (அப்பாவை) இழந்துள்ள குழந்தை முருகு, என் உருவத்திலேயே இன்று தன் வாப்பாவைக் கண்டு மகிழ்வதாகக் கேட்க, எனக்கே மிகவும் ஆச்சர்யமாக உள்ளது.

    அவள் எங்கிருந்தாலும் வாழ்க என வாழ்த்தி மகிழ்கிறேன்.

    >>>>>

    ReplyDelete
  12. எங்கள் பரம்பரையில், ஏதோ நான் மட்டும் வேதம் + சாஸ்திரம் என ஏதும் படிக்காவிட்டாலும்கூட, என் கடந்த பத்து தலைமுறைக்கும் மேற்பட்ட முன்னோர்களும் வேத சாஸ்திரங்கள் படித்த மஹா பண்டிதர்களாக இருந்துள்ளபடியால், அவர்களின் அருளால் மட்டுமே, நான் பிறருக்காகச் செய்துகொள்ளும் பிரார்த்தனைகள், இன்றும் அப்படியே பலித்து வருகின்றன என்பது கண்கூடாக இந்த நம் முருகு விஷயத்திலும் இன்னும் சிலரின் விஷயங்களிலும் தெரிவதில் எனக்கு மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

    ”லோகா ஸமஸ்தா சுகினோ பவந்து”

    -oOo-

    ReplyDelete
  13. கோபூஜி.... முருகுவோட வாப்பா மவுத்தானப்ப அவளுக்கு ரெண்டு வயசுதான்னு அவ அம்மி சொன்னாங்க... அப்பா இல்லாத குறை தெரிய வேணாம்னு நானும் என் மகனும் அவளுக்கு அதிக செல்லம் கொடுத்துட்டோம் அதான் இப்பவும் குழந்தயாவே நடந்துக்கறான்னு சொன்னாங்க..
    முருகு மெயிலு கொச்ச தமிழுல இருந்தாலும் சொல்ல வந்தத தெளிவாகவே சொல்லி இருக்கா.. உங்க மேல தனி பாசம் பிரியம் வச்சிருக்கா.. உங்க நட்பு கிடைத்த பிறகுதான் அவங்க வாழ்க்கையில் பலவிதமான சந்தோஷமான நிகழ்ச்சிகள் நடக்குது.உங்கள பத்தி பேசாத நேரமே இல்ல வாய தொறந்தா குருஜி பேச்சுதான் அதுமட்டுமில்ல.. எங்கட குருஜி ஆசையா எனிக்கு முருகுன்னு பேரு வச்சிருக்காக அவங்க மட்டிலும்தான் அப்புடி கூப்டுகிடலாம் வேர ஆரும் முருகுனு கூப்டுகிட கூடாதுன்னு வேர சொல்லிடுவா...

    ReplyDelete
    Replies
    1. சிப்பிக்குள் முத்து. 11 July 2016 at 07:41

      //முருகு மெயிலு கொச்ச தமிழுல இருந்தாலும் சொல்ல வந்தத தெளிவாகவே சொல்லி இருக்கா..//

      ஆமாம். இன்னும் இதற்கு மேலும் சொல்லியிருந்தாள் அவள் தன்னுடைய உருக்கமான மெயிலில். நான்தான் இங்கு சிலவற்றை நீக்கிவிட்டு, சுருக்கமாகக் கொடுத்துள்ளேன்.

      //உங்க மேல தனி பாசம் பிரியம் வச்சிருக்கா.. உங்க நட்பு கிடைத்த பிறகுதான் அவங்க வாழ்க்கையில் பலவிதமான சந்தோஷமான நிகழ்ச்சிகள் நடக்குது.//

      எல்லாம் அல்லாவின் அருள் மட்டுமே. யாருக்கு, எதை, எப்போது, எவ்வளவு, எப்படிக் கொடுக்க வேண்டும் என்பதைத் தீர்மானிப்பது கடவுள் மட்டுமே.

      வாழ்க்கையில் இதுவரை ஏதோ கஷ்டத்தை மட்டுமே பார்த்து வந்துள்ளவர்களுக்கு, இதுபோல .... புதையல் கிடைத்தது போல .... ஓர் புது வாழ்க்கை அமைவதை நினைக்க எனக்கும் மிக மிக சந்தோஷம் மட்டுமே.

      பிரார்த்தனைகள் வீண் போகாமல் இருப்பதில் மேலும் மேலும் எனக்கும் ஓர் தனி மகிழ்ச்சியே.

      //உங்கள பத்தி பேசாத நேரமே இல்ல வாய தொறந்தா குருஜி பேச்சுதான் அதுமட்டுமில்ல.. எங்கட குருஜி ஆசையா எனிக்கு முருகுன்னு பேரு வச்சிருக்காக அவங்க மட்டிலும்தான் அப்புடி கூப்டுகிடலாம் வேர ஆரும் முருகுனு கூப்டுகிட கூடாதுன்னு வேர சொல்லிடுவா...//

      ஏற்கனவே முருகுவைப்பற்றி ஓரளவுக்கு அனைத்தையும் அறிந்துள்ள எனக்கு, இதையெல்லாம் ஒரு மூன்றாம் நபரான தங்கள் மூலம் இப்போது இங்கு கேட்பதில் என் மகிழ்ச்சி இரட்டிப்பாக ஆகிறது.

      தங்களின் தங்கமான தகவல்களுக்கு மிக்க நன்றீங்கோ.

      Delete
  14. கோபூஜி... உங்க மனப்பூர்வமான பிரார்த்தனைகள் நீங்க உங்களுக்காக பண்ணுவதில்ல... உங்க மேல அன்பும் பாசமும் வச்சிருக்கற உங்க அன்பு குழந்தை நட்புகளுக்காக பண்ணுறீங்க. முதலில் சாரூஜி மேரேஜ் சந்தோஷமான வாழ்க்கை... இப்ப முருகு... அப்புறம் என் அக்காவுக்கு 28--- வயசாகுது கல்யாணம் கூடி வரலைனு உங்க காதுல விஷயத்த போட்டேன் எங்க அக்கா உங்க நட்பு வட்டத்துக்குள்ள இல்லைனாலும் நான் கேட்டுகிட்டதுக்காக அவளுக்காகவும் வேண்டி இருக்கீங்க. இல்லைனா இவ்வளவு வருஷமா தட்டிபோன கல்யாணம் உங்க கிடட்ட சொன்னதுமே எப்படி கூடி வந்திச்சி... உங்க நல்ல மனசால எங்க எல்லாருக்குமே பலன் கிடைக்குது......பெருமையாவும் சந்தோஷமாவும் இருக்குது...

    ReplyDelete
    Replies
    1. சிப்பிக்குள் முத்து. 11 July 2016 at 08:07

      //கோபூஜி... உங்க மனப்பூர்வமான பிரார்த்தனைகள் நீங்க உங்களுக்காக பண்ணுவதில்ல... உங்க மேல அன்பும் பாசமும் வச்சிருக்கற உங்க அன்பு குழந்தை நட்புகளுக்காக பண்ணுறீங்க.//

      நமக்காக நாமே செய்துகொள்ளும் பிரார்த்தனைகளை பகவான் விரும்பவே மாட்டார்.

      எதை, எப்போது, யாருக்கு, எவ்வளவு அளவு, எப்படிக் கொடுக்க வேண்டும் என்பது அந்த பகவானுக்கு மிக நன்றாகவே தெரியும்.

      அதே நேரம் கொஞ்சமும் சுயநலம் இல்லாமல், நாம் பிறரின் நன்மைக்காக மட்டுமே வேண்டிக்கொள்ளும்போது, பக்தனாகிய நம் கோரிக்கைக்கு இறைவன் உடனடியாக செவி சாய்த்து அதனை எளிதாகவும் விரைவாகவும் நிறைவேற்றிக்கொடுப்பார்.

      >>>>>

      Delete
    2. கோபூஜி >>>>> சிப்பிக்குள் முத்து (2)

      //முதலில் சாரூஜி மேரேஜ் சந்தோஷமான வாழ்க்கை... இப்ப முருகு... அப்புறம் என் அக்காவுக்கு 28--- வயசாகுது கல்யாணம் கூடி வரலைனு உங்க காதுல விஷயத்த போட்டேன். எங்க அக்கா உங்க நட்பு வட்டத்துக்குள்ள இல்லைனாலும் நான் கேட்டுகிட்டதுக்காக அவளுக்காகவும் வேண்டி இருக்கீங்க. இல்லைனா இவ்வளவு வருஷமா தட்டிபோன கல்யாணம் உங்க கிட்டச் சொன்னதுமே எப்படி கூடி வந்திச்சி...//

      யார் மீதும் எள்ளளவும் பொறாமை கொள்ளாமல், எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என நாம் நம் மனதால் முதலில் நினைக்கப் பழக வேண்டும். இதற்கு காசோ, பணமோ, உடல் உழைப்போ எதுவும் தேவையே இல்லை. நல்ல மனமும், கடவுளிடம் முழு நம்பிக்கை வைத்து பிறருக்காகப் பிராத்தனைகள் செய்யும் பழக்கமும் மட்டும் நம்மிடம் இருந்தால் போதுமானது.

      ஏதோ அதுபோல என்னிடம் கொஞ்சம் இன்றுவரை இருந்து வருவதால், மேலே தாங்கள் சொல்லியுள்ளதெல்லாம் நல்லபடியாக நிறைவேறி வருகின்றன.

      முன்னா பார்க் குடும்பத்தினர் என எடுத்துக்கொண்டால், தங்களின் அக்கா போலவே, யாரும் சற்றும் எதிர்பாராத விதத்தில் சமீபத்தில் 16.01.2016 திருமணம் ஆன நம் முருகுவின் அண்ணனையும்கூட இந்த லிஸ்டில் நாம் இங்கு சேர்த்துக்கொள்ளலாம்.

      கடவுளிடம் வைக்கும் என் பிரார்த்தனைகள் ஓரளவுக்கு உடனுக்குடன் நிறைவேறி வருவதன் காரணம், பல தலைமுறைகளாக வேத சாஸ்திரங்கள் படித்துள்ள மஹா பண்டிதர்களான என் முன்னோர்களின் ஆசிகள் மட்டுமே என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.

      >>>>>

      Delete
    3. கோபூஜி >>>>> சிப்பிக்குள் முத்து (3)

      //உங்க நல்ல மனசால எங்க எல்லாருக்குமே பலன் கிடைக்குது...... பெருமையாவும் சந்தோஷமாவும் இருக்குது...//

      அடுத்து உங்களுக்கும் அதுபோல விரைவில் திருமணம் ஆக வேண்டும் என்பது என் ஆசை. இறைவன் அருளால் அதுபோல நடக்கும் ப்ராப்தம் விரைவில் அமைந்தால், எனக்கும் உங்களைவிட மிகவும் பெருமையாகவும், சந்தோஷமாகவும் இருக்கத்தான் செய்யும். பார்ப்போம்.

      தங்களின் இதுபோன்ற ஒருங்கிணைத்த சந்தோஷத் தகவல்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

      Delete