Thursday 14 July 2016

antha naal nyabagam

15 comments:

  1. அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே
    நண்பனே! நண்பனே! நண்பனே!

    இந்த நாள் அன்று போல் இன்பமாய் இல்லையே
    அது ஏன்? ஏன்? ஏன்? நண்பனே!

    பாடம் படிப்பு ஆட்டம் பாட்டம்
    இதைத் தவிர வேறெதைக் கண்டோம்

    புத்தகம் பையிலே
    புத்தியோ பாட்டிலே

    பள்ளியைப் பார்த்ததும்
    ஒதுங்குவோம் மழையிலே

    நித்தமும் நாடகம்
    நினைவெல்லாம் காவியம்

    உயர்ந்தவன் தாழ்ந்தவன்
    இல்லையே நம்மிடம்

    பள்ளியை விட்டதும் பாதைகள் மாறினோம்
    கடமையும் வந்தது கவலையும் வந்தது

    பாசமென்றும் நேசமென்றும்
    வீடு என்றும் மனைவி என்றும்

    நூறு சொந்தம் வந்த பின்பும்
    தேடுகின்ற அமைதியெங்கே?

    நூறு சொந்தம் வந்த பின்பும்
    தேடுகின்ற அமைதியெங்கே?

    அமைதி எங்கே?

    (அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே)

    அவனவன் நெஞ்சிலே ஆயிரம் ஆசைகள்
    அழுவதும் சிரிப்பதும் ஆசையின் விளைவுகள்

    பெரியவன் சிறியவன்
    நல்லவன் கெட்டவன்

    உள்ளவன் போனவன்
    உலகிலே பார்க்கிறோம்

    எண்ணமே சுமைகளாய்
    இதயமே பாரமாய்

    எண்ணமே சுமைகளாய்
    இதயமே பாரமாய்

    தவறுகள் செய்தவன் எவனுமே
    தவிக்கிறான் அழுகிறான்

    (அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே)

    ReplyDelete
  2. படம்: உயர்ந்த மனிதன்

    இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்

    பாடல் எழுதியவர் : வாலி

    பாடியவர்: டி.எம்.செளந்திரராஜன்

    ReplyDelete
  3. நடிகர் திலகமும் மேஜர் சுந்தரராஜனும் இணைந்து தங்கள் பால்யகால நட்பு முதல் பள்ளிப் படிப்பு என – இன்றைய வாழ்வு வரை அலசிடும் அழகையெல்லாம் அப்படியே எழுதிக் காட்டிய வாலி அவர்களையும் அதற்கு அப்படியே இசை அமைத்த மெல்லிசை மன்னரையும் மெச்சலாம்!

    பலவித உணர்வுகளை ஒன்றிணைத்துத் தன் குரலில் வழங்கிய டி.எம்.சௌந்தரராஜன் அவர்களை மறக்க முடியுமா?

    இளமையில் தொடங்கி.. முதுமை வரை ஓடுகின்ற இல்வாழ்க்கையில் எத்தனை எத்தனை விருப்பங்கள்? எத்தனை எத்தனை திருப்பங்கள்?

    எல்லாம் நடந்தேற இணைபிரியா நண்பர்கள் இருவர் சந்திக்கும்போது அவர்களின் பரிமாற்றம் இப்படித்தான் இருக்குமோ?

    அழகிய மறுபதிவாக அல்லாமல் வாழ்க்கையை ஒருமுறை திருப்பிப் பார்த்து பெருமூச்சு விடுதல் அலாதியானது! இது நம் அனைவரின் வாழ்விலும் இடம்பெறக் கூடிய ஒன்றுதான்! அதை நாம் எழுதி வைப்பதில்லை! யாரும் இசை அமைப்பதில்லை! நாமும் அதற்குக் குரல் கொடுப்பதில்லை!

    இது மிகவும் அருமையானதொரு படத்தில் வரும் புதுமையான பாடல் முயற்சியாகும்.

    இந்த ‘உயர்ந்த மனிதன்’ படத்தினை நான் என் பால்ய வயதினில் பலமுறை தியேட்டரில் பார்த்து ரஸித்து மகிழ்ந்துள்ளேன்.

    முழுக்கதையும் மிகச்சிறப்பாக இருக்கும். அனைத்துப்பாடல்களும் இனிமையோ இனிமையாக இருக்கும்.

    இதன் முழுக்கதையையும் எனக்குச் சொல்லணும் போல ஆசையாகத்தான் உள்ளது. இந்தப்பழங்கதையெல்லாம் சொன்னால் யார் பொறுமையாகக் கேட்கப்போகிறார்கள். விருப்பமுள்ளவர்கள் + என்னைப்போலவே ரசனையுள்ளவர்கள் அவர்களே பார்த்து மகிழ்ந்து கொள்ளட்டும்.

    பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  4. உயர்ந்த மனிதன்:

    நடிகர் திலகம் சிவாஜியின் 125-வது படம். 1968-இல் வெளியான படம். திருச்சி பிரபாத் தியேட்டரில் வெகு நாட்கள் ஓடிய படம். நானே சுமார் 10 முறைக்கு மேல், அதே ஒரே தியேட்டரில் இந்தப்படத்தினைப் பார்த்து ரஸித்து மகிழ்ந்துள்ளேன்.

    அனைத்துப்பாடல்களும் இனிமையோ இனிமையானவை:

    முதல் பாடல் (எனக்கு மிகவும் பிடித்தமானது):

    ‘நாளை இந்த வேளை பார்த்து ஓடிவா .... நிலா.
    இன்று எந்தன் தலைவன் இல்லை சென்று வா நிலா


    -=-=-=-=-=-=-

    அதைத்தவிர

    ’ வெள்ளிக் கிண்ணம் தான் ......
    தங்கக்கைகளில்’

    என்ற அருமையானதொரு பாடல் ...
    இதுவும் எனக்கு மிகவும் பிடித்தமானதே.

    -=-=-=-=-=-=-

    http://htpsipikulmuthu.blogspot.in/2016/05/en-kelvikenna-badil.html
    ஏற்கனவே நம் முன்னா பார்க்கில் வெளியிடப்பட்டுள்ள கீழ்க்கண்ட பாடலும் இதே படத்தில் வருவதேயாகும்.

    ஆண்குரல்:

    என் கேள்விக் கென்ன பதில்
    உன் பார்வைக் கென்ன பொருள்
    மணமாலைக்கென்ன வழி
    உன் மெளனம் என்ன மொழி

    பெண் குரல்:

    ஹோஹ்ஹோஹ்ஹோஹ்ஹோ ....

    பூவையர் உள்ளத்தில் இந்த மெளனம் சம்மதமே

    >>>>>

    ReplyDelete
  5. இந்தப்படத்தினை நான் முதன் முதலாகப் பார்த்தபோது
    என் வயது : 18

    ==================================
    ’உயர்ந்த மனிதன்’ கதைச்சுருக்கம்.
    ==================================

    இந்தப்படத்தில் சிவாஜியின் தந்தை மிகப்பெரிய பணக்காரர். ஆனால் ஏழை பாழைகளிடம் அன்பற்றவர். தன் பங்களாவில் வேலை பார்க்கும் அனைவரையும் ஓர் கொத்தடிமைபோல நினைத்து வேலை வாங்குபவர். தன் வேலையாட்களில் யாரேனும் (தன் கார் டிரைவர் உள்பட) தன் எதிரில் செருப்பு அணிந்திருந்தாலே, ஓங்கி பளார் என அறைந்து விடுவார்.

    தன் அப்பாவை எதிர்த்துக்கொள்ள முடியாத ஒரே கோழை மகனான சிவாஜி, தன் மிகப்பெரிய பண்ணையில், வசித்துவரும் அழகான ஓர் ஏழைப்பெண்ணைக் (வாணிஸ்ரீ ஐக்) காதலிக்கிறார். அவளும் இவரையே மிகவும் அன்புடன் காதலிக்கிறார். இவர்களின் காதல் தீ அவ்வப்போது, பஞ்சும் நெருப்பும்போல ஜோராகப் பற்றிக்கொண்டு எரிகிறது.

    சிவாஜியின் குடும்ப டாக்டராக, கெளரவ வேடத்தில் நடிக்கும் அசோகன், அதே ஏழைப்பெண் மீது, தன் மனதுக்குள் ஒருமுகக் காதல் கொண்டு இருக்கிறார். பெரும் பணக்காரனான சிவாஜி அந்த ஏழைப்பெண்ணைக் காதலிப்பது தெரிந்ததும், தான் ஜெண்டிலாக ஒதுங்கிக் கொள்கிறார். தன் மனதில் அந்த சோகம் ஏற்படும் போதெல்லாம் நன்றாகத் தண்ணி அடிக்கிறார் ...... க்ளைமாக்ஸ் காட்சியில் இவருக்கு மட்டுமே தெரிந்த ஒருசில உண்மைகளை சிவாஜியிடம் சொல்ல வரும்போது ..... அதிக தண்ணி அடித்திருந்ததால் .... அந்த உண்மைகளை முழுமையாகச் சொல்லாமலே ..... ஏதேதோ அரைகுறையாக உளறிக்கொண்டே ..... ஹார்ட் அட்டாக் ஏற்பட்டு செத்துப்போய் விடுகிறார். படம் பார்க்கும் நமக்கே அந்த இடத்தில் மிகவும் பகீர் என சோகமாக ஆகிவிடுகிறது.

    சிவாஜியுடன் கல்யாணம் ஆகாமலேயே, நிறைமாத கர்ப்பிணியாகிவிட்ட வாணிஸ்ரீ ஐ, தனது அடியாட்களை அனுப்பி, அவளின் குடிசையோடு எரித்து விடுகிறார், சிவாஜியின் பணக்காரத் தந்தை.

    இதைக்கேள்விப்பட்ட சிவாஜியால், தன் காதலிக்காக அலறி அழ மட்டுமே முடிகிறது.

    பிறகு பெரும் பணக்காரியான செளகார் ஜானகியை சிவாஜிக்குக் கட்டாயத் திருமணம் செய்து வைக்கிறார், அவரின் தந்தை.

    அதன்பின் தந்தை நடிகர் ராமதாஸ் காலமாகிவிடுவார். சிவாஜியே எஸ்டேட் முதலாளியாகி விடுவார். அவர் எல்லோரிடமும் சகஜமாகவும் பிரியமாகவும் பழகி வருவார்.

    சிவாஜிக்கும் வாணிஸ்ரீக்கும் பிறந்துள்ள குழந்தைதான் நடிகர் சிவக்குமார் ..... சிவாஜி எஸ்டேட் வீட்டிலேயே ஒரு சாதாரண வேலைக்காரனாக வேலை பார்த்து வர நேரிடுகிறது. இது குடும்ப டாக்டர் + குடிகாரரான, அசோகனைத் தவிர வேறு யாருக்குமே தெரியாததோர் பரம இரகசியமாகும், இந்தப் படத்தில்.

    பொய் பேசவே தெரியாத, மிகவும் நல்ல பிள்ளையான சிவக்குமார் மேல், ஒருமுறை ஓர் அபாண்டப்பழியை அதாவது திருட்டுக்குற்றத்தை சுமத்தி விடுவார்கள், அந்த வீட்டில் வேலைபார்க்கும் வேறுசிலர். சிவக்குமார் மேல் உள்ள பொறாமையினால் இதுபோலச் செய்துவிடுகிறார்கள்.

    அதைக்கேள்விப்பட்டு, (அவன் தன் சொந்த மகன் என்பதே தெரியாமல்) சிவாஜி அவனை நன்றாக வெளுத்து வாங்கி அடித்து விடுவார். படம் பார்க்கும் நமக்கே பாவமாக இருக்கும் ...... அழுகை வந்துவிடும் ...... இந்தக் காட்சியில்.

    மேஜர் சுந்தரராஜன் சிவாஜியுடன் ஒன்றாகவே பள்ளியில் படித்த நல்ல அருமையான நண்பர் . மேற்படிப்பினைத் தொடர முடியாத சூழ்நிலை ஏற்பட்டு அவர் இன்று சிவாஜி வீட்டில் ஓர் கார் டிரைவராகப் பணியாற்றி வருகிறார்.

    நடு நடுவே வி.கே.ராமசாமி, மனோரம்மா நகைச்சுவைகளும் கொஞ்சம் ரஸிக்கும் படியாக இருக்கும்.

    சிவாஜியின் ஏழைக்காதலியான வாணிஸ்ரீ, சிவாஜிக்காக தானே கண்ணளவில் பனி + குளிருக்காக, ஓர் ஸ்வெட்டர் பின்னித் தைத்து அதனை சிவாஜி ஒரேயொரு முறை போட்டுக்கொண்டு, அவளை சந்தோஷப்படுத்தி இருப்பார்.

    அந்த ஸ்வெட்டரின் பைப்பக்கம் “பா” என்ற மிகப்பெரியதோர் எழுத்தினையும் பின்னியிருப்பாள் வாணிஸ்ரீ. “பா” என்றால் பார்வதி என்ற அவளின் பெயர் .... இந்தப்படத்தில்.

    தன் காதலன் சிவாஜி ஆசையுடன் அணிந்து பார்த்துக்கொடுத்துள்ள அந்த ஸ்வெட்டரை மிகவும் ஆசையுடன் தன்னிடமே ஓர் பெட்டியில் பத்திரமாக வைத்துக்கொண்டு, தினமும் அதனை ஒருமுறை எடுத்து தன் கண்களில் ஒத்திக்கொள்வாள் வாணிஸ்ரீ.

    படத்தின் முடிவினில், வாணிஸ்ரீயின் போட்டோ படம் ஒன்றும், இந்த “பா” போட்ட ஸ்வெட்டருமே நடிகர் சிவக்குமாரிடம் தங்கி இருந்து, அதனை சிவாஜி பார்க்க நேர்ந்து, அவனை தன் மகன்தான் என ஏற்றுக்கொள்ளவும் சாட்சிகளாக உதவுகின்றன.

    சிவாஜியின் அபீஸியல் மனைவியாக நடிக்கும் செளகார் ஜானகியின் நடிப்பும் மிகவும் அசத்தலாகவே இருக்கும். அவளுக்கு இந்தப்படத்தில் தனியாகக் குழந்தை ஏதும் பிறந்து குழப்பம் ஏற்படுத்தாமல் இருப்பதில் நமக்கும் ஓர் மகிழ்ச்சியாகவே இருக்கும்.

    மொத்தத்தில் மிகச்சிறப்பான கதை. அனைவரின் நடிப்பும் இதில் மிகவும் அற்புதமாக இருக்கும்.

    ReplyDelete
  6. படம் பூராவும் பார்க்க முடிந்தது... வந்து ரசித்து முழு பாடல் கதை சொன்னதுக்கு நன்றிகள் கோபூஜி.....

    ReplyDelete
  7. படம் பூராவும் பார்க்க முடிந்தது... வந்து ரசித்து முழு பாடல் கதை சொன்னதுக்கு நன்றிகள் கோபூஜி.....

    ReplyDelete
    Replies
    1. சிப்பிக்குள் முத்து. 16 July 2016 at 05:53

      //படம் பூராவும் பார்க்க முடிந்தது... வந்து ரசித்து முழு பாடல் கதை சொன்னதுக்கு நன்றிகள் கோபூஜி....//

      ஆஹா, கடந்த இரண்டு நாட்களாக, எனக்கு நானே பேசிக்கொண்டுள்ளேனோ என நினைத்து பயந்தேன்.

      பேச்சுத்துணைக்கு இன்று நீங்கள் மட்டுமாவது, என்னுடன் இருப்பது பார்க்க, மனதுக்குக் கொஞ்சம் ஆறுதலாக உள்ளது.

      மிக்க நன்றி.

      Delete
  8. எல்லாப்படங்களிலும் பொதுவாக வில்லனாக வரும் அசோகனின் நடிப்பு இந்தப்படத்தில் மட்டும் மிகவும் வித்யாசமாக இருக்கும்.

    அவ்வப்போது கொஞ்ச நேரமே இந்தப் படத்தில் கெளரவ நடிகராக இவர் காட்சியளித்திருந்தாலும், தன் நடிப்பினில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனையே தூக்கி சாப்பிடும் விதமாக மிகவும் ஜோராக நடித்திருப்பார்.

    ஏழையான கார் டிரைவரும், சிவாஜியின் உயிர் நண்பருமான மேஜர் சுந்தரராஜன் அவர்களின் பெண், பணக்கார சிவாஜியின் பிள்ளையாக இருந்தும் பரம ஏழையாக சிவாஜியிடமே பணியாற்றிவரும் சிவக்குமாரைக் காதலிப்பாள்.

    அந்த இளம் ஜோடிகள் பாடும் பாடல்தான் நீங்க ஏற்கனவே உங்களின் பதிவினில் http://htpsipikulmuthu.blogspot.in/2016/05/en-kelvikenna-badil.html வெளியிட்டுள்ள கீழ்க்கண்ட பாடல்:

    //ஆண்குரல்:
    என் கேள்விக் கென்ன பதில்
    உன் பார்வைக் கென்ன பொருள்
    மணமாலைக்கென்ன வழி
    உன் மெளனம் என்ன மொழி

    பெண் குரல்:
    ஹோஹ்ஹோஹ்ஹோஹ்ஹோ ....
    பூவையர் உள்ளத்தில் இந்த மெளனம் சம்மதமே ....//

    அன்று அந்தப்பதிவுக்கு யார் யாரோ வருகை தந்து

    //முன்னா உங்கட கோபூஜிக்கு எல்லாரையும் கேள்வி கேக்கத்தானே தெரியும்........//

    என ஓர் பின்னூட்டம் கொடுத்து நம்மை மகிழ்வித்திருந்தார்கள்.

    இன்று ......

    ”அவள் பறந்து போனாளே .... என்னை மறந்து போனாளே ....” என என்னால் மனதுக்குள் புலம்ப மட்டுமே முடிகிறது. :(

    ReplyDelete
  9. நம் முன்னா பார்க்கே இப்போதெல்லாம் பொலிவிழந்து போச்சே.:( ஒரு ஈ காக்காயையும்கூடக் காணுமே. :(

    ஒரு காலத்தில் ’பசுமை நிறைந்த நினைவுகளாக’ எப்படிப் பொலிவுடன் விளங்கிக்கொண்டு இருந்தது.

    வண்ண வண்ணப் பறவைகளாக எத்தனை பேர்கள் வருகை தந்து நம்மை மகிழ்வித்தார்கள் !!!!!

    அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே ...... நண்பிகளே ...... நண்பிகளே ...... இந்த நாள் ...... அன்று போல இன்பமாய் இல்லையே ..... அது ஏன் ஏன் ஏன் ..... நண்பிகளே ! :(

    இப்போ ஒருவேளை இலையுதிர்காலமாக இருக்குமோ.

    போகப்போக இன்னும் நம் பார்க் முழுவதும் ஒரே மொட்டை மரங்களாகி விடுமோ .... எனக்கு மிகவும் கவலையாக்கீதூஊ. :(

    ReplyDelete
  10. என்ன பண்ண முடியும் கோபால்ஜி.....எவ்வளவு வேகமா ஃபரெண்ட் ஷிப் ஏற்படுதோ அதைவிட வேகமா காணாமயும் போகுதே....

    ReplyDelete
    Replies
    1. ப்ராப்தம் 17 July 2016 at 05:34

      //என்ன பண்ண முடியும் கோபால்ஜி.....எவ்வளவு வேகமா ஃபரெண்ட் ஷிப் ஏற்படுதோ அதைவிட வேகமா காணாமயும் போகுதே....//

      நாம் (குறிப்பாக நான்) கொடுத்து வைத்தது அவ்வளவுதான்.

      கண் நிறைய கண்ணீருடனும்....
      மனம் நிறைய வலியுடனும்.....

      :(

      Delete
  11. எங்கட கோபால்ஜி எதற்காகவுமே... கண் கலங்கவோ மனம் வேதனையோ படவே கூடாது... எப்பவும் சந்தோஷமாக மட்டுமே இருக்கணும்
    .......

    ReplyDelete
    Replies
    1. ப்ராப்தம் 17 July 2016 at 22:12

      //எங்கட கோபால்ஜி எதற்காகவுமே... கண் கலங்கவோ மனம் வேதனையோ படவே கூடாது... எப்பவும் சந்தோஷமாக மட்டுமே இருக்கணும்.//

      மனதுக்குக் கொஞ்சமாவது ஆறுதல் அளிக்கும் தங்களின் அன்பான வார்த்தைகளுக்கு என் நன்றிகள்.

      இருப்பினும் ..... என்னால் முடியலே ..... :(

      Delete