Saturday 30 July 2016

chahe koie muje junglee khahe

21 comments:

  1. பனிக்கட்டிகளில் சறுக்கிச்சறுக்கி, வழுக்கிவழுக்கி லவ் செய்து பாடுவது மிகவும் அருமையாகத்தான் உள்ளது.

    அவர்களின் லவ் கடைசிவரை சறுக்காமலும் வழுக்காமலும் வெற்றிகரமாக முடிந்தால் நமக்கும் நிம்மதியே.

    நடுவில் ஓர் கழுதை வந்து எட்டிப்பார்த்ததை நினைத்ததும், யாரோ எப்போதோ என்னிடம் சொன்னதொரு கதை என் நினைவுக்கு வந்து, எனக்கு சிரிப்பாணி பொத்துக்கொண்டது. :)

    ReplyDelete
    Replies
    1. அச்சச்சோ எப்ப பாரு கழுத நெனப்புதானா.....

      Delete
    2. பூந்தளிர்

      //அச்சச்சோ எப்ப பாரு கழுத நெனப்புதானா.....//

      அது என்ன மறக்கக்கூடிய கழுதையா என்ன? தினமும் ஸதா ஸர்வ காலமும் அதே தியானமும் நினைவுகளுமே வந்து என்னை உதையோ உதை என்று உதைக்கிறது .... அந்தக் கழுதை (க்கதை). :)))))))))))))))))))

      ஏற்கனவே தூக்கம் வராத கேஸுக்கு, எப்படித்தான் இந்த ஒரு நல்ல கதையை சொன்னேளோ .... போங்கோ. வாழ்நாள் பூராவுமே என்னால் இதை மறக்கவே முடியாது. :)

      Delete
  2. பாடல் பகிர்வுக்கு என் நன்றிகள்.

    அர்த்தம் சொல்ல யாராவது வருவார்களா எனக் காத்திருப்போம்.

    ReplyDelete
    Replies
    1. அர்த்தம் சொல்ல என்னை விட்டா வேற யாரும் வருவாஜி..... எல்லாருமே என்னை காட்டான் னு சொல்வாங்க ஆமா எனக்கு அன்பை புயல்போல காட்டுத்தனமாதான் காட்டதெரியும் அதனால நான் காட்டானே தான்.... அர்த்தம் போதுமா....

      Delete
    2. ப்ராப்தம் 31 July 2016 at 04:54

      //அர்த்தம் சொல்ல என்னை விட்டா வேற யாரு வருவாஜி.....//

      தாங்கள் சொல்லுவதும் சரிதான். புரிகிறது. நீங்களாவது இங்கு வந்து ஏதேனும் சொல்வது மனதுக்கு ஓர் ஆறுதலாக உள்ளது.

      //எல்லாருமே என்னை காட்டான் னு சொல்வாங்க ஆமா எனக்கு அன்பை புயல்போல காட்டுத்தனமாதான் காட்டதெரியும் அதனால நான் காட்டானே தான்.... அர்த்தம் போதுமா....//

      மிக்க நன்றீங்கோ. :)

      Delete
  3. அது என்னா கழுதை கதை... ராஜா காது கழுதக்காதுன்னு ஸ்கூல் படிக்கையிலே ஒரு கதை வருமே அதுவா.....

    ReplyDelete
    Replies
    1. சிப்பிக்குள் முத்து. 31 July 2016 at 00:14

      //அது என்னா கழுதை கதை...//

      அதெல்லாம் எங்களுக்குள் மட்டுமே ஸ்ட்ரிக்ட்லி கான்ஃபிடென்ஷியல் வில்லங்கமான கதைகள். ஸாரி. உங்களிடமெல்லாம் சொல்ல முடியாது.

      //ராஜா காது கழுதக்காதுன்னு ஸ்கூல் படிக்கையிலே ஒரு கதை வருமே அதுவா.....//

      இல்லை. அதுபற்றியும் எனக்குத் தெரியும். அது இனி தனியாகத் தொடரும். >>>>>

      Delete
    2. தங்கமலை ரகசியம் 1957 இல் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படம். பி. ஆர். பந்துலு தயாரித்து இயக்கிய இத் திரைப்படத்தில் சிவாஜி கணேசனும் ஜமுனாவும் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். தமிழில் வெளியான அதே ஆண்டில் இத் திரைப்படம் கன்னடத்திலும் ’ரத்தினகிரி ரகசியம்’ என்ற பெயரில் வெளியானது.

      இந்தப்படத்தில்தான் சுகமாக ஒருமுறையும், சோகமாக ஒருமுறையும் பி.சுசிலா அவர்கள் பாடிய மிகப்பிரபலமான பாடலான ’அமுதைப் பொழியும் நிலவே ... நீ அருகில் வராததேனோ’ இடம் பெற்றுள்ளது.

      இந்தப்படமும் என் சிறுவயதில் (ஏழு வயதில்) என் குடும்பத்தாருடன் ஒரே ஒரு முறை மட்டும் பார்த்துள்ளேன். படத்தின் மொத்தக்கதையும் இப்போது எனக்கு என் நினைவில் இல்லை.

      இருப்பினும் அதில் வரும் ’ராஜா காது கழுதைக்காது’ என்ற நகைச்சுவைக் காட்சி மட்டும், இன்னும் பசுமையாக என் நினைவில் உள்ளது. அதைப்பற்றி நான் இப்போது இங்கு சொல்கிறேன்.

      >>>>>

      Delete
    3. டி.ஆர். இராமச்சந்திரன் என்ற அந்தக்கால நகைச்சுவை நடிகர், இந்தப்படத்தில் ராஜாவாக நடிப்பார். அவருடைய இரண்டு காதுகள் மட்டும் கழுதையின் காதுபோல இருக்கும். அதனை பிறர் யாருக்கும் தெரியாத வண்ணம், டர்பன் + கிரீடம் போன்றவற்றால் எப்போதும் மூடி மறைத்துக்கொண்டே இருப்பார்.

      இருப்பினும் வழக்கமாக அவருக்கு ஹேர் கட்டிங் + ஷேவிங் செய்துவிடும் பார்பர் ஒருவருக்கு மட்டும் இந்த இரகசியம் தெரிந்திருக்கும். வெளியே இதனைச் சொன்னால் ராஜா தண்டித்துவிடுவார் என்ற பயத்தில் அவரும் இதனை யாருக்குமே சொல்ல மாட்டார்.

      >>>>>

      Delete
    4. ஆனால் தனக்கு மட்டுமே தெரிந்துள்ள இந்த இரகசியத்தை தன் வாய் திறந்து யாரிடமாவது வெளியே சொல்லாவிட்டால் தன் வயிறு வீங்கி அது வெடித்துப்போய்விடும் போன்ற சங்கடம் அவருக்கு ஏற்பட்டுவிடும்.

      ஒருநாள் தன் மிகப்பெரிய வயிற்றினை சங்கடத்துடன் தடவிக்கொண்டே, காட்டுப்பக்கம் போய் ஓர் குழிவெட்டி, அதில் ஆசை தீர பலமுறைகள் ‘ராஜா காது கழுதைக்காது’ என சொல்லிவிட்டு, அந்தக்குழியில் ஒரு செடியை நட்டு விட்டு, குழியை மண்ணைப்போட்டு மூடி விட்டு வந்துவிடுவார். அவரின் வீங்கிய வயிறும் சுருங்கிப்போய் விடும். நிம்மதியாக வீட்டுக்கு வந்து விடுவார்.

      >>>>>

      Delete
    5. அவர் நட்ட அந்தச் செடி நாளடைவில் மிகப்பெரிய மரமாக வளர்ந்து விடும். அதே மரத்தை வெட்டி அதில் மிருதங்கம் போன்ற வாத்யக் கருவிகள் பலவும் செய்து அரண்மனைக்கு கொண்டு வந்து விடுவார்கள்.

      இசைக்கலைஞர்கள் பலரும் சேர்ந்து ராஜ சபையில் மிருதங்கம் வாசிக்க ஆரம்பிப்பார்கள்.

      முதலில் மிருதங்கத்தை ஒரு அடி அடித்ததும் ‘ராஜா’ என்ற சப்தம் வரும். அடுத்த அடி அடித்ததும் ‘காது’ என்ற சப்தம் வரும். அதற்கு அடுத்த அடி அடித்ததும் ‘கழுதை’ என்ற சப்தமும், அதற்கு அடுத்த அடி அடித்ததும் ‘காது’ என்ற சப்தம் மீண்டும் வரும்.

      தொடர்ந்து 4-5 அடி அடித்ததும், அந்த மிருதங்கத்திலிருந்து ‘ராஜா... காது... கழுதைக்... காது’ என தொடர்ந்து ஒலிக்க ஆரம்பிக்கும்.

      >>>>>

      Delete
    6. இதைக்கேட்டு கடுப்பாகிப்போன ராஜா, மஹா கோபத்தில் அந்த மிருதங்கத்தை வாங்கி ஓங்கி, தரையில் அடித்து உடைத்து விடுவார்.

      உடைந்த ஒவ்வொரு தூளும், ‘ராஜா காது கழுதைக் காது’ என தொடர்ச்சியாக ஒலித்துக்கொண்டே இருக்கும்.

      படத்தில் இந்தக்காட்சியைப் பார்க்கும் அனைவருக்குமே சிரிப்பாணி பொத்துக்கொள்ளும். :)))))

      Delete
  4. ஹா ஹா... முன்னா என்னமோ சொல்ல போக நல்ல நகைச்சுவை கதையே கிடைத்துவிட்டதே....

    ReplyDelete
    Replies
    1. ப்ராப்தம் 31 July 2016 at 04:51

      //ஹா ஹா... முன்னா என்னமோ சொல்ல போக நல்ல நகைச்சுவை கதையே கிடைத்துவிட்டதே....//

      :))))) நீங்களுக்காவது இந்த நகைச்சுவைக் கதையை ரஸித்துப் படிக்க முடிந்துள்ளதில் எனக்கும் மகிழ்ச்சியே. மிக்க நன்றீங்கோ. :)))))

      Delete
  5. இதுவானுதான் நானும் கேட்டேன் இன்னாமோ வில்லங்கமானதுன்னெல்லாம் சொல்லிபோட்டீங்களே...

    ReplyDelete
    Replies
    1. சிப்பிக்குள் முத்து. 31 July 2016 at 05:00

      //இதுவானுதான் நானும் கேட்டேன்.//

      ஓஹோ ..... அப்படியா? மிகவும் நல்லது.

      //இன்னாமோ வில்லங்கமானதுன்னெல்லாம் சொல்லிபோட்டீங்களே...//

      நான் வில்லங்கமான அதுவாக்கும் நினைச்சுப்போட்டேன். வெரி... வெரி... ஸாரீங்கோ :)

      Delete
  6. அந்த கழுத மேட்டரு இங்கியே இருக்குதே... அத எந்த கழுதையும் தின்னுபிட்டு போகல....

    ReplyDelete
    Replies
    1. சிப்பிக்குள் முத்து. 4 August 2016 at 22:29

      //அந்த கழுத மேட்டரு இங்கியே இருக்குதே... அத எந்த கழுதையும் தின்னுபிட்டு போகல....//

      இது எங்களுக்கும் தெரியும்.

      அது வேறு கழுதையாக்கும். அதற்கு நான் கொடுத்தது வேறு மேட்டராக்கும். இதோ மீண்டும் கொடுத்துள்ளேன் .... பாருங்கோ.

      -=-=-=-=-=-=-

      மீண்டும் பனிச்சறுக்கல் .... மீண்டும் வழுக்கல் .... மீண்டும் அதே கழுதை !

      மீண்டும் எனக்குள், எங்காளு எனக்கு மட்டும் சொல்லியுள்ள அதே கழுதைக்கதையின் இனிய நினைவுகள்.

      நிம்மதியாக படுக்க விடாமல் இப்படிப்
      ப-டு-த்-தா-தீ-ங்-கோ !

      -=-=-=-=-=-=-

      Delete
  7. ஐயோ ஐயய்யோ இந்த கழுதய விட்டுடுங்க சாமியோவ்

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர்

      //ஐயோ ஐயய்யோ இந்த கழுதய விட்டுடுங்க சாமியோவ்//

      அதை எப்படி நாம் விடமுடியும்? உங்கள் கதைப்படி, அதற்கு ஓரு மூடு வந்து அதுவா பார்த்து விட்டால்தானே உண்டு. :)

      Delete