Saturday 14 May 2016

vaza ninaithal vazalam

8 comments:

  1. நம்ம.... கோபூஜி அவர்களின்... நேயர்... விருப்ப பாடல்

    ReplyDelete
  2. வாழ நினைத்தால் வாழலாம்
    வழியா இல்லை பூமியில்
    ஆழக் கடலும் சோலையாக
    ஆசை இருந்தால் நீந்தி வா

    வாழ நினைத்தால் வாழலாம்
    வழியா இல்லை பூமியில்
    ஆழக் கடலும் சோலையாக
    ஆசை இருந்தால் நீந்தி வா

    பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும்
    பார்த்து நடந்தால் பயணம் தொடரும்
    பயணம் தொடர்ந்தால் கதவு திறக்கும்
    கதவு திறந்தால் காட்சி கிடைக்கும்
    காட்சி கிடைத்தால் கவலை தீரும்
    கவலை தீர்ந்தால் வாழலாம்

    வாழ நினைத்தால் வாழலாம்
    வழியா இல்லை பூமியில்
    ஆழக் கடலும் சோலையாக
    ஆசை இருந்தால் நீந்தி வா

    கண்ணில் தெரியும் வண்ணப் பறவை
    கையில் கிடைத்தால் வாழலாம்
    கருத்தில் வளரும் காதல் எண்ணம்
    கனிந்து வந்தால் வாழலாம்
    கன்னி இளமை என்னை அணைத்தால்
    தன்னை மறந்தே வாழலாம்

    வாழச் சொன்னால் வாழ்கிறேன்
    மனமா இல்லை வாழ்வினில்
    ஆழக் கடலில் தோணி போலே
    அழைத்துச் சென்றால் வாழ்கிறேன்

    ஏரிக் கரையில் மரங்கள் சாட்சி
    ஏங்கித் தவிக்கும் இதயம் சாட்சி

    துள்ளித் திரியும் மீன்கள் சாட்சி

    துடித்து நிற்கும் இளமை சாட்சி

    வாழும் காலம் முழுதும்
    ஒருவராக வாழலாம்

    வாழ நினைப்போம் வாழுவோம்
    வழியா இல்லை பூமியில்
    காதல் கடலில் தோணி போலே
    காலம் முழுதும் நீந்துவோம்
    வாழ நினைப்போம் வாழுவோம்
    வழியா இல்லை பூமியில்
    காதல் கடலில் தோணி போலே
    காலம் முழுதும் நீந்துவோம்

    ReplyDelete
  3. படம்: பலே பாண்டியா 1962
    பாடலாசிரியர்: கண்ணதாசன்
    இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
    பாடியவர்கள்: பி. சுசிலா .... டி எம் எஸ்

    ReplyDelete
  4. என் நேயர் விருப்பமாக இதனை இன்று வெளியிட்டுச் சிறப்பித்துள்ள நம் முன்னாக்குட்டிக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

    ReplyDelete
  5. ம்ம் பாட்டு நல்லாதான் இருக்கு.....

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர் 15 May 2016 at 22:01

      //ம்ம் பாட்டு நல்லாதான் இருக்கு.....//

      வாழ நினைத்தால் வாழலாம் ! அல்லவா.

      அதனால் அது நல்லாத்தான் இருக்கும்.

      ‘மண் குடிசை ..... வாசலென்றால்
      தென்றல் வர ...... மறுத்திடுமோ’

      என்ற அருமையான வரிகளுடன் ஓர் அழகான பாடல் உள்ளது. அதையும் நம் முன்னாக்குட்டி ஒருநாள் என் நேயர் விருப்பமாக வெளியிடலாம்.

      அதன் ஆரம்ப வரிகள்:
      =============================

      ‘கொடுத்ததெல்லாம் கொடுத்தான் .....
      அவன் யாருக்காகக் கொடுத்தான் .....
      ஒருத்தனுக்காக் கொடுத்தான் .... இல்லை
      ஊருக்காகக் கொடுத்தான்’ என்பதாகும்.

      Delete
  6. கவனிச்சு கேட்டா அர்த்தம் புரிஞ்க்க முடியுது சரியா புரிஞ்சுகிட்டேனான்னு மட்டும் தெரியாது

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர் 16 May 2016 at 21:47

      //கவனிச்சு கேட்டா அர்த்தம் புரிஞ்க்க முடியுது. சரியா புரிஞ்சுகிட்டேனான்னு மட்டும் தெரியாது//

      நீ புரிஞ்சுண்டவரை போதும்.

      மிகச்சாதாரணமானவனான நான் மண் குடிசையில் வாழும் ஏழையாக்கும். இருப்பினும் பாசமுள்ள என் குடிசைக்குத் தென்றல் (தென் திசைக் காற்று) வர மறுக்காது + வெறுக்காது என நினைக்கிறேன்.

      வாழ நினைத்தால் வாழலாம் ... வழியா இல்லை பூமியில்.

      ‘கொடுத்ததெல்லாம் கொடுத்தான் .....
      அவன் யாருக்காகக் கொடுத்தான் .....
      ஒருத்தனுக்காக் கொடுத்தான் .... இல்லை
      ஊருக்காகக் கொடுத்தான்’ என்பதாகும்.

      இதில் எது புரிஞ்சுதோ .... எது புரியலையோ .... என எனக்கும் புரியவே இல்லை. சரி, அதையெல்லாம் விடுங்கோ. சுத்த வெட்டிப்பேச்சுகள் ......

      Delete