Sunday, 29 May 2016

nallathoru kudumbam

12 comments:

 1. நல்லதொரு குடும்பம்... பல்கலைக் கழகம்...

  நல்லதொரு குடும்பம் பல்கலைக் கழகம்
  அன்பு மணி வழங்கும் சுரங்கம் வாழ்க வாழ்க

  எங்கள் வீடு கோகுலம்
  என் மகன் தான் கண்ணனாம்
  தந்தை வாசுதேவனோ தங்கமான மன்னனாம்

  எங்கள் வீடு கோகுலம்
  என் மகன் தான் கண்ணனாம்
  தந்தை வாசுதேவனோ தங்கமான மன்னனாம்

  நல்லதொரு குடும்பம் பல்கலைக் கழகம்
  அன்பு மணி வழங்கும் சுரங்கம் வாழ்க வாழ்க

  அன்னை என்னும் கடல் தந்தது
  தந்தை என்னும் நிழல் கொண்டது

  அன்னை என்னும் கடல் தந்தது
  தந்தை என்னும் நிழல் கொண்டது

  பிள்ளை செல்வம் என்னும் வண்ணம்
  கண்ணன் பிறந்தான்

  நன்றி என்னும் குணம் கொண்டது
  நன்மை செய்யும் மனம் கொண்டது

  எங்கள் இல்லம் என்னும் பேரை
  கண்ணன் வளர்ப்பான்

  நல்லதொரு குடும்பம் பல்கலைக் கழகம்
  அன்பு மணி வழங்கும் சுரங்கம் வாழ்க வாழ்க

  வெள்ளம் போல ஓடுவான்
  வெண் மணல் மேல் ஆடுவான்

  கானம் கோடி பாடுவான்
  கண்ணன் என்னைத் தேடுவான்

  கானம் கோடி பாடுவான்
  கண்ணன் என்னைத் தேடுவான்

  மாயம் செய்யும் மகன் வந்தது
  ஆயர்பாடி பயம் கொண்டது

  அந்த பிள்ளை செய்யும் லீலை நானறிவேன்

  இந்த பிள்ளை நலம் கொள்ளவும்
  என்னை பார்த்து எனை வெல்லவும்

  கண்ணில் வைத்து நெஞ்சில் வைத்து
  நான் வளர்பேன்

  நல்லதொரு குடும்பம் பல்கலைக் கழகம்
  அன்பு மணி வழங்கும் சுரங்கம் வாழ்க வாழ்க

  கோலம் கொண்ட பாலனே
  கோவில் கொண்ட தெய்வமாம்

  தாயில் பிள்ளை பாசமே
  தட்டில் வைத்த தீபமாம்

  பாசம் என்று எதை சொல்வது
  பக்தி என்று எதை சொல்வது

  அன்னை தந்தை காட்டும் நல்ல
  சொந்தம் அல்லவா

  பிள்ளை என்னும் துணை வந்தது
  உள்ளம் எங்கும் இடம் கொண்டது

  இல்லம் கண்டு தெய்வம் தந்த
  செல்வம் அல்லவா

  நல்லதொரு குடும்பம் பல்கலைக் கழகம்
  அன்பு மணி வழங்கும் சுரங்கம் வாழ்க வாழ்க

  ReplyDelete
 2. சிவாஜி + கே.ஆர்.விஜயா நடித்த படம்

  படத்தின் பெயர்: தங்கச்சுரங்கம் (1974)

  பாடல் வரிகள்: கவிஞர் கண்ணதாசன்

  பாடியவர்கள்: டி.எம்.செளந்தர ராஜன் + பி. சுசிலா

  இசை: எம்.எஸ். விஸ்வநாதன்.

  ReplyDelete
  Replies
  1. படத்தின் பெயர்: தங்கச்சுரங்கம் (1974) = தவறு

   படத்தின் பெயர்: தங்கப் பதக்கம் (1974) = சரி

   Delete
 3. பொதுவாக குழந்தைகள் பெரியதாக வளரும் வரை .......

  ’நல்லதொரு குடும்பம் பல்கலைக் கழகம்’ ஆக இருப்பது உண்டு.

  பிறகுதான் (அதாவது பெண்ணோ/பிள்ளையோ குழந்தைகள் பருவம் அடைந்த பின்புதான்) எல்லாப்பிரச்சனைகளும் விஸ்வரூபம் எடுத்து குடும்பத்திற்கே தலைகுனிவை ஏற்படுத்துவது உண்டு என்பதை மிக அழகாக விவரித்துச் சொல்லும் அருமையான கதை .. இந்தப்படம்.

  இந்தப்படம் நிறைய தடவை நான் விரும்பிப் பார்த்துள்ளேன். இதில் சிவாஜி ஓர் மிக நேர்மையான போலீஸ் அதிகாரி. அரசாங்கத்திடம் தங்கப்பதக்கமே பெற்றவர். சமூகத்தில் கெளரவமாக வாழ்ந்து வருபவர். அவருக்குப் பிறக்கும் மகன்கள் அவ்வாறு இல்லை. லஞ்சம் வாங்குபவர்கள். மிகவும் சொகுசு வாழ்க்கையை விரும்புபவர்கள். கடைசியில் அவராலேயே கைதுசெய்யப்பட்டு தண்டனைக்கு உட்படுத்த வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்படுவது மிகவும் கொடுமையாக இருக்கும்.

  பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
 4. //அவருக்குப் பிறக்கும் மகன்கள் அவ்வாறு இல்லை. //

  என ஏதோ ஒரு அவசரத்தில் தவறாக நான் எழுதியுள்ளேன். அந்தப்படத்தில் சிவாஜி+கே.ஆர்.விஜயா ஆகியோருக்கு ஒரு மகன் (ஸ்ரீகாந்த்) மட்டுமே.

  அவனே இந்த நல்லதொரு குடும்ப கெளரவத்தைக் கெடுத்து குட்டிச்சுவராக்கி விடுவான்.

  அவனுக்கு மனைவியாக வருபவள் ஓரளவு நல்லவளாக மாமியார் மாமனார் உள்பட எல்லோரையும் அனுசரித்துப் போகும் பெண்ணாக வருவாள். தன் கணவன் செய்யும் தகாத செயல்கள் அவளுக்கே பிடிக்காததாகத்தான் இருக்கும்.

  ReplyDelete
 5. ஸாரி கோபூஜி தங்க சுரங்கம் இல்லியோனு தோணுதே...ஒருவேள தங்க பதக்கமோ.....

  ReplyDelete
 6. பாட்டு ரொம்ப நல்லா இருக்கு...

  ReplyDelete
 7. சிப்பிக்குள் முத்து. 30 May 2016 at 03:00

  //ஸாரி கோபூஜி தங்க சுரங்கம் இல்லியோனு தோணுதே...ஒருவேள தங்க பதக்கமோ.....//

  யூ ஆர் கரெக்ட் முன்னா.

  நானும் உங்களைப்போலவே நம்மாளு ஒருவரால் இப்போது மிகவும் மனம் குழம்பியுள்ளேன். மைண்ட் வெரி மச் டிஸ்டர்ப்ட். அதனால் இதில் ஓர் சின்ன தவறு நடந்துவிட்டது. ஸாரிம்மா.....

  இந்தப்பாடல் வரும் படம் ’தங்கப்பதக்கம்’ தான்.

  ‘தங்கச் சுரங்கம்’ என்றும் சிவாஜி நடித்ததோர் படம் 1969-இல் வந்துள்ளது. அதனாலும் இந்தக்குழப்பம் எனக்கு நேர்ந்திருக்கலாம்.

  என் தவறினைச் சுட்டிக்காட்டியுள்ளதற்கு மிக்க நன்றி, முன்னா.

  ReplyDelete
  Replies
  1. எதுக்கு மைண்ட் டிஸ்டர்ப் ஆகணும்.. அதான் டெய்லி மெயில் வருதுல்ல........

   Delete
  2. பூந்தளிர் 31 May 2016 at 22:09

   //எதுக்கு மைண்ட் டிஸ்டர்ப் ஆகணும்.. அதான் டெய்லி மெயில் வருதுல்ல........//

   ஆமாம் ......... உப்புச்சப்பு இல்லாத மெயில் வருது :( ... அதுவும் டெய்லியா வருது? எப்போதாவது அபூர்வமாக மயில் பறந்து வருவது போல மெயில் வருது. :(((((

   Delete
 8. இந்த பாட்டு நல்லாகீது.....

  ReplyDelete
 9. ரொம்ப நல்ல பாட்டு.. காட்சி அமைப்பும் நல்லாருக்கும்...

  ReplyDelete