Monday 23 May 2016

naan kaviganum alla

19 comments:

  1. திரைப்படம்: படித்தால் மட்டும் போதுமா
    பாடலாசிரியர்:கவியரசு கண்ணதாசன்
    குரல்: T.M.சௌந்தராஜன்
    இசை:விஸ்வநாதன் ராமமூர்த்தி

    ReplyDelete

  2. நான் கவிஞனும் இல்லை ,நல்ல ரசிகனும் இல்லை ..
    நான் கவிஞனும் இல்லை ,நல்ல ரசிகனும் இல்லை ..
    காதலென்னும் ஆசையில்லா பொம்மையும் இல்லை ..

    நான் கவிஞனும் இல்லை ,நல்ல ரசிகனும் இல்லை ..
    நான் கவிஞனும் இல்லை ,நல்ல ரசிகனும் இல்லை ..
    காதலென்னும் ஆசையில்லா பொம்மையும் இல்லை ..

    இரவு நேரம் பிறரைப்போலே என்னையும் கொள்ளும் ,
    துணை இருந்தும் இல்லை என்று போனால் ஊர் என்ன சொல்லும்,

    இரவு நேரம் பிறரைப்போலே என்னையும் கொள்ளும் ,
    துணை இருந்தும் இல்லை என்று போனால் ஊர் என்ன சொல்லும்,

    நான் கவிஞனும் இல்லை ,நல்ல ரசிகனும் இல்லை ..
    நான் கவிஞனும் இல்லை ,நல்ல ரசிகனும் இல்லை ..
    காதலென்னும் ஆசையில்லா பொம்மையும் இல்லை ..

    காட்டு மானை வேட்டையாட தயங்கவில்லையே ,
    இந்த வீட்டு மானின் உள்ளம் ஏனோ விளங்கவில்லையே,
    கூட்டு வாழ்க்கை குடும்ப வாழ்க்கை புரியவில்லையே....

    கூட்டு வாழ்க்கை குடும்ப வாழ்க்கை புரியவில்லையே....
    நான் கொண்டு வந்த பெண் மனதில் பெண்மை இல்லையே ,

    நான் கவிஞனும் இல்லை ,நல்ல ரசிகனும் இல்லை ..
    நான் கவிஞனும் இல்லை ,நல்ல ரசிகனும் இல்லை ..
    காதலென்னும் ஆசையில்லா பொம்மையும் இல்லை ..

    நான் கவிஞனும் இல்லை ,நல்ல ரசிகனும் இல்லை ..
    நான் கவிஞனும் இல்லை ,நல்ல ரசிகனும் இல்லை ..
    காதலென்னும் ஆசையில்லா பொம்மையும் இல்லை ..

    ReplyDelete
    Replies
    1. இந்தப்பாடலில் ‘கொள்ளும்’ என்று வரும் 2 இடங்களில் கொல்லும் என இருக்க வேண்டும். பாடலை அடித்தவர் தவறுதலாக அடித்துள்ளார். நானும் வெளியிடும்முன் இதனை கவனிக்கத் தவறியுள்ளேன்.

      //இரவு நேரம் பிறரைப்போலே என்னையும் கொள்ளும்// தவறு.

      //இரவு நேரம் பிறரைப்போலே என்னையும் கொல்லும்//
      சரி.

      கொள்ளும் means Capacity of the Space (கொள்ளும் இடம்)

      கொல்லும் means Kill or Killing

      (இரவு நேரம் வேதனையில் என்னை சாக அடிக்கும் என்று இங்கு பொருள் கொள்ளவேண்டும்)

      Delete
  3. நல்லதொரு படத்திலிருந்து மிக நல்லதொரு பாடல். பகிர்வுக்கு நன்றிகள்.

    இந்தப்படத்தின் கதையைப்பற்றி எனக்குக் கொஞ்சம் சொல்ல விருப்பம். நேரமிருந்தால் மீண்டும் அதுபற்றி சொல்ல வருவேன்.

    ReplyDelete
  4. நம் ரோஜா டீச்சர் எங்கே முன்னா? ஆளையே காணுமே! எனக்கு மிகவும் கவலையாக உள்ளது.

    தங்களின் தொடர்பு எல்லைக்குள் ஒருவேளை அவர்கள் வந்தால், நான் மிகவும் அவர்களை விஜாரித்ததாகச் சொல்லவும்.

    அவர்களைப் பார்த்தே பல யுகங்கள் ஆனதுபோல ஒரு அவஸ்தை என்னுள் இப்போது உள்ளது :((((((

    ReplyDelete
    Replies
    1. இதோ வந்துட்டேன் கிருஷ்..... ப்ளாக் ஓபனாகல அதான்..... இந்த படத்த பத்தி என்னமோ சொல்றேன்னு சொன்னீங்களே... என்க்காக வெயிட்டிங்காஆஆஆஆஆ

      Delete
    2. பூந்தளிர் 24 May 2016 at 01:57

      //இதோ வந்துட்டேன் கிருஷ்.....//

      அப்பாடீஈஈஈஈ. இப்போத்தான் எனக்கு போன உசுரு திரும்பி வந்துள்ளது. :)

      //ப்ளாக் ஓபனாகல அதான்.....//

      உங்களுக்கு அது ஓபன் ஆகலையா? :)

      ஒருவேளை அது ஏதாவது ப்ளாக் ஆகியிருக்குமோ என்னவோ? :))

      //இந்த படத்த பத்தி என்னமோ சொல்றேன்னு சொன்னீங்களே... என்க்காக வெயிட்டிங்காஆஆஆஆஆ//

      யெஸ் யெஸ் ..... ’உனக்கே உனக்காக’ மட்டுமே வெயிட்டிங் ....... புரிஞ்சுக்கோ.

      மெயில் பார்த்தேன். சந்தோஷம். விரிவாக பதில் எழுதணும் என நினைத்துள்ளேன். :))))))

      Delete
    3. இரவு தானே மெயில் பார்ப்பீங்க. பொறுமை இல்லையோ.....

      Delete
  5. ஆமாங்க ரெண்டு பேரும் சொல்லாம கொள்ளாம எங்க போயிட்டாங்க.. வரட்டும் வச்சிக்கறேன் கச்சேரிய....

    ReplyDelete
  6. அம்மாடி கச்சேரில்லாம் வேணாம்மா உன் பதிவே கச்சேரி யாதான இருக்குது...

    ReplyDelete
  7. ஓ...கே... ஸ்டார்ட்... மியூஸிக்... கச்சேரி.... முன்னா.... நா ரெடி... நீ ரெடியா..... குருஜி முன்னா கச்சேரி பண்ண போறா வெரதா வெரசா ஓடி வந்து போடுங்க...

    ReplyDelete
    Replies
    1. mru 24 May 2016 at 02:26

      //ஓ...கே... ஸ்டார்ட்... மியூஸிக்... கச்சேரி.... முன்னா.... நா ரெடி... நீ ரெடியா..... குருஜி முன்னா கச்சேரி பண்ண போறா வெரதா வெரசா ஓடி வந்து போடுங்க..//

      முன்னாவோட விசித்திரமான கச்சேரிகளை நான் தனியாக் கேட்டு ரஸித்துவிட்டேன். ஐயரான என்னையே அப்படியே சொக்கிப்போக வைத்துவிட்டாள். அந்த வியப்பிலிருந்து என்னால் இன்னும் வெளியே வரவே முடியலையாக்கும். :) நான் அப்படியே ஆடிப்போய் அசந்துபோய் இருக்கிறேன். :))

      ஒருத்தியைப்பார்க்க ஒருத்தி மிகவும் கில்லாடிகளாகத்தான் உள்ளீர்கள்!!!!!!

      Delete
    2. இன்னா குருஜி இப்பூடி சொல்லி போட்டீக....நாங்கல்லா கில்லாடி இல்ல.... கில்லி களாக்கும் வெளங்கிச்சா..

      Delete
    3. mru 24 May 2016 at 22:57

      //இன்னா குருஜி இப்பூடி சொல்லி போட்டீக.... நாங்கல்லா கில்லாடி இல்ல.... கில்லி களாக்கும் வெளங்கிச்சா..//

      எல்லோரும் ’கில்லி’ன்னாக்க நீ ’கள்ளி’ .....
      அதுவும் திருட்டுக் கள்ளியாக்கும் :)))))))))

      உங்கட ஆளின் உள்ளத்தை இப்படி ஒரேயடியாகத் திருடிக்கொண்டு விட்டாயே !

      அதனால் திருட்டுக்கள்ளி மட்டுமேவாக்கும். :)

      Delete
  8. Kind Attn: My Dear ராஜாத்தி ..... :)

    இந்தப்படத்தை நான் பலமுறை பார்த்து ரஸித்துள்ளேன்.

    இந்தப்படத்தில் சிவாஜி படிக்காதவன். முரட்டுத்தனம் உள்ளவன். துப்பாக்கியால் புலி சிங்கம் போன்ற கொடிய மிருகங்களையும் சுட்டு வேட்டையாடி விளையாடுவதில் கில்லாடி. படிக்காதவனாகிய அவனுக்குள்ளும் சில வீர தீர ஸ்பெஷல் திறமைகள் உண்டு. வீர தீர விளையாட்டுப் போட்டிகளில் பலமுறை கோப்பைகள் வென்று தன் வீடுபூராவும் குவித்து வைத்துள்ளவன். தான் கொன்றுள்ள புலியின் தலையை தன் வீட்டுச் சுவற்றில் தொங்க விட்டுள்ளவன்.

    சிவாஜிக்கு ஓர் அண்ணன். அவன் நன்கு படித்தவன்.

    அண்ணன் தம்பி இருவருக்கும், ஒரே நாளில், ஒரே மேடையில் திருமணம் செய்து வைக்க, அவர்களின் மிகப் பணக்காரப் பெற்றோர்கள் விரும்புகிறார்கள்.

    ஒரு மாறுதலாக, புதுமையாக, தன் அண்ணனுக்குப் பெண் பார்க்க சிவாஜியும், தம்பியான சிவாஜிக்குப் பெண் பார்க்க அவரின் அண்ணனும் கிளம்பிச் செல்கிறார்கள்.

    சிவாஜி புறப்படும் முன்பு. அங்கு அந்த மிகவும் படித்த நாகரீகமான பெண் வீட்டில், எப்படி எப்படியெல்லாம் நாகரீகமாக நடந்துகொள்ளணும் என அண்ணன் கற்றுத் தருகிறார். YES / NO / OK / VERY GOOD / FINE / THANKS போன்ற ஒருசில ஆங்கில வார்த்தைகள் பேசவும் கற்றுக்கொடுத்து சிவாஜியை அனுப்பி வைக்கிறார். சிவாஜியும் தன் அண்ணனுக்குப் பெண் பார்க்க பெண் வீட்டுக்குச் செல்கிறார். அண்ணன் சொல்லிக்கொடுத்தபடியே சிவாஜியும் மிகவும் நாகரீகமாக நடந்துகொண்டு, பெண் வீட்டாரின் பார்வையில் நல்ல மதிப்பெண்கள் பெற்றுக்கொள்கிறார்.

    சிவாஜியின் அண்ணன் சிவாஜிக்காகப் பார்க்கச் சென்ற பெண் அதிகம் படிக்காதவள். கிராமத்துப்பெண், பண்பானவள். அன்பானவள். அழகானவள். எளிமையானவள். அவளைப் பார்த்ததும் சிவாஜியின் அண்ணனுக்கு மிகவும் பிடித்துபோய் விடுகிறது. சுயநலக்காரரான அவர் அவளைத் தானே திருமணம் செய்துகொள்ள விரும்பி, இரண்டு பெண்கள் வீடுகளுக்கும் மொட்டைக் கடுதாசி போட்டு சில கோல்மால் வேலைகள் செய்துவிடுகிறார்.

    மொட்டைக் கடுதாசி கிடைத்ததால், பெண்ணைப் பெற்றவர்கள் இருவரும், தங்கள் பெண்ணைப் பார்க்க வந்துபோன தங்களின் மகனுக்கே, தங்கள் பெண்ணைத் தர விரும்புகிறோம் எனச் சொல்லிவிடுகிறார்கள்.

    அதன்படி இரண்டு ஜோடிகளுக்கும் கல்யாணம் நடைபெற்று முடிந்துவிடுகிறது.

    முதலிரவின் போது மட்டுமே, சிவாஜி ஒரு படிக்காத முரடன் என்பதைத் தெரிந்துகொள்ளும், அவனின் மிகவும் படித்த, மென்மையான குணங்கள் உள்ள மனைவி, அவனை சுத்தமாக வெறுத்து ஒதுக்கி விடுகிறாள். இலக்கிய இலக்கணங்களில் ஆர்வமுள்ள அவள், படிக்காதவனை அடியோடு வெறுக்கிறாள்.

    மேலும், அன்புள்ளம் கொண்ட அவள், புலிகள் போன்ற கொடிய மிருகங்களை தன் துப்பாக்கியால் வேட்டையாடும் மிருக குணம் கொண்ட கணவனின் வீரதீரச் செயல்களைக் கேட்டதும், அவனைக் காணவே பிடிக்காதவளாக மிகவும் வெறுக்கத் தொடங்கிவிட்டாள். கணவனுடன் ஒத்துழைக்காமல், அவனுடன் படுக்கவே மறுத்து, வெறுத்து, ஒதுக்கியும் விடுகிறாள்.

    இதில் தன் தவறாக ஏதும் செய்யாத சிவாஜிக்கு, ஒன்றுமே புரியவில்லை. இதுவரை தனக்கு தாம்பத்ய சுகம் கிடைக்காததில் கோபம் கோபமாக வருகிறது. முதல் ஒருமாதம் வரை பல வழிகளில் அவளிடம் கெஞ்சி, கொஞ்சிப் பார்த்தும் பயனில்லை எனத் தெரிந்ததும், நன்றாக குடி போதையில் ஒருநாள் அவளிடம் வந்து இந்தப்பாடலைப் பாடிவிட்டு, அவளிடம் தன் மிருக பலத்துடன், படுக்கையில் அவளைக் கட்டாயப்படுத்தி, பலவந்தமாக நடந்துகொண்டு தன் காரியத்தை .... மேட்டரை .... முடித்துக்கொள்கிறார். தனது வெறியை இவ்வாறாக ஒருவழியாகத் தணித்துக்கொள்கிறார்.

    இப்போது இந்தக்கதைச் சுருக்கத்தைப் படித்த பின், மீண்டும் ஒருமுறை இதே பாடலைக் கேட்டு ரஸிக்கவும்.

    -=-=-=-=-=-=-=-

    {படித்தால் மட்டும் போதுமா? படித்தவருக்குப் பண்பு இருக்க வேண்டாமா? தனது சுயநலத்திற்காக, தவறுதலாகப் புரிந்துகொள்ளும்படி பெண் வீட்டாருக்கு மொட்டைக்கடுதாசி போடலாமா?

    இதனால் ஒரு படித்த பண்புள்ள பெண்ணின் வாழ்க்கை + ஒரு பாவமும் அறியாத அப்பாவியான சிவாஜியின் வாழ்க்கை என இருவரின் வாழ்க்கைகளும் அல்லவா இப்போது வீணாகிவிட்டது.

    மொட்டை கடுதாசிகள் பற்றியும், இதில் சிவாஜியின் தவறு ஏதும் கிடையவே கிடையாது என்பது பற்றியும், கடைசியில் க்ளைமாக்ஸ் காட்சியில் மட்டுமே அனைவருக்கும் புரியவரும்.}

    ReplyDelete
  9. பழய படங்களில் நல்ல கதை இருக்கு இல்லையா...... பாடல்களும் வார்த்தை புரியும்படி நல்லா இருக்கு...

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர் 24 May 2016 at 05:26
      பழய படங்களில் நல்ல கதை இருக்கு இல்லையா...... பாடல்களும் வார்த்தை புரியும்படி நல்லா இருக்கு...//

      Thank you, Dear :)

      Delete