Monday 30 May 2016

aadaludan padalai kettu rasipathilethan

13 comments:

  1. எனக்கு மிகவும் பிடித்த அருமையான பாடல். இதில் வாத்யார் MGR அந்த வயதிலும் என்ன ஆட்டம் ஆடி நடித்துள்ளார் என நினைத்து அடிக்கடி நான் ஆச்சர்யப்படுவது உண்டு.

    ReplyDelete
  2. ஒவ்வொரு வரிகளிலும் காதல் ரஸம் சொட்டோ சொட்டெனச் சொட்டும் மிக அழகான பாடல்.

    >>>>>

    ReplyDelete
  3. போலீஸ் வெளியே வந்து இறங்கும் நேரம், டான்ஸ் ஆடும் அவளின் பாவாடை என்னமா சுற்றிச்சுழண்டு மேல் நோக்கி பறந்தாடுகிறது ... !!!!!! காணக் கண்கோடி வேண்டும் என்பார்களே, அது ஒருவேளை இதைத்தானோ?

    ReplyDelete
  4. ஆடலுடன் பாடலை கேட்டு ரசிப்பதிலே தான் சுகம் சுகம் சுகம்
    ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஹோய்
    ஆடலுடன் பாடலை கேட்டு ரசிப்பதிலே தான் சுகம் சுகம் சுகம்
    ஆசை தரும் பார்வையிலெல்லாம் ஆயிரம் எண்ணம் வரும் வரும் வரும்

    ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஹோய்

    ஆசை தரும் பார்வையிலெல்லாம் ஆயிரம் எண்ணம் வரும் வரும் வரும்

    கண்ணருகில் பெண்மை குடியேற
    கையருகில் இளமை தடுமாற
    தென்னை இளநீரின் பதமாக
    ஒன்று நான் தரவா இதமாக ஏ..ஏ..ஹேய்…

    கண்ணருகில் பெண்மை குடியேற
    கையருகில் இளமை தடுமாற
    தென்னை இளநீரின் பதமாக
    ஒன்று நான் தரவா இதமாக

    செங்கனியில் தலைவன் பசியாற
    தின்ற இடம் தேனின் சுவையூற
    பங்கு பெற வரவா துணையாக
    ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஹோய்

    செங்கனியில் தலைவன் பசியாற
    தின்ற இடம் தேனின் சுவையூற
    பங்கு பெற வரவா துணையாக

    மண ஊஞ்சலின் மீது பூமழை தூவிட உரியவன் நீதானே

    ஆடலுடன் பாடலை கேட்டு ரசிப்பதிலே தான் சுகம் சுகம் சுகம்
    ஆசை தரும் பார்வையிலெல்லாம் ஆயிரம் எண்ணம் வரும் வரும் வரும்

    கள்ளிருக்கும் மலரே வளைந்தாடு
    களைப்பாற மடியில் இடம்போடு
    உள்ளிருக்கும் நினைவில் உறவாடு
    உலகையே மறந்து விளையாடு ம்ம்.. ஹோய்…

    கள்ளிருக்கும் மலரே வளைந்தாடு
    களைப்பாற மடியில் இடம்போடு
    உள்ளிருக்கும் நினைவில் உறவாடு
    உலகையே மறந்து விளையாடு

    விம்மி வரும் அழகில் நடைபோடு
    வந்திருக்கும் மனதை எடைபோடு
    வேண்டியதை பெறலாம் துணிவோடு
    ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஹோய்

    விம்மி வரும் அழகில் நடைபோடு
    வந்திருக்கும் மனதை எடைபோடு
    வேண்டியதை பெறலாம் துணிவோடு
    ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஹோய்

    உன்பாதையிலே நான் ஊர்வலம் வருவேன் புதுமையை நீ பாடு

    ஆடலுடன் பாடலை கேட்டு ரசிப்பதிலே தான் சுகம் சுகம் சுகம்
    ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஹோய்

    ஆசை தரும் பார்வையிலெல்லாம் ஆயிரம் எண்ணம் வரும் வரும் வரும்

    ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஹோய்

    ஆடலுடன் பாடலை கேட்டு ரசிப்பதிலே தான் சுகம் சுகம் சுகம்
    ஆசை தரும் பார்வையிலெல்லாம் ஆயிரம் எண்ணம் வரும் வரும் வரும்

    ReplyDelete
  5. படம்: குடியிருந்த கோயில்

    ஆண்டு: 1968

    பாடலாசிரியர்: வாலி அவர்கள்

    பாடியவர்கள்: TMS + P. சுசிலா

    இசை: M S விஸ்வநாதன்

    ReplyDelete
  6. இதில் வரும் எனக்குப்பிடித்த மிகவும் அற்புதமான வரிகள்:
    ============================================================

    கண்ணருகில் பெண்மை குடியேற
    கையருகில் இளமை தடுமாற
    தென்னை இளநீரின் பதமாக
    ஒன்று நான் தரவா இதமாக ஏ..ஏ..ஹேய்…

    செங்கனியில் தலைவன் பசியாற
    தின்ற இடம் தேனின் சுவையூற
    பங்கு பெற வரவா துணையாக
    ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஹோய்

    கள்ளிருக்கும் மலரே வளைந்தாடு
    களைப்பாற மடியில் இடம்போடு
    உள்ளிருக்கும் நினைவில் உறவாடு
    உலகையே மறந்து விளையாடு ம்ம்.. ஹோய்…

    விம்மி வரும் அழகில் நடைபோடு
    வந்திருக்கும் மனதை எடைபோடு
    வேண்டியதை பெறலாம் துணிவோடு
    ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஹோய்

    அற்புதமான வரிகளை ஆங்காங்கே போட வேண்டிய இடத்தில் மிக அழகாக போட்டு கவிதையாக எழுதியுள்ள கவிஞர் வாலி அவர்களுக்கு என் ஸ்பெஷல் நன்றிகள். :)))))

    ReplyDelete
  7. போங்க குருஜி......ஒங்கட ரசனையே வேடிக்கையா இருக்குது....... இஞ்ச் பை இஞ்சியா ரசிக்கீங்களே... ஒச்ஙகட வூட்டம்மா கண்டுகிடுதில்லாயா.......

    ReplyDelete
    Replies
    1. mru 31 May 2016 at 05:36

      //போங்க குருஜி......ஒங்கட ரசனையே வேடிக்கையா இருக்குது....... இஞ்ச் பை இஞ்சியா ரசிக்கீங்களே...//

      :))))) அது என் சுபாவம், முருகு. தீனி உள்பட எதையுமே நன்கு ருசித்து ரஸித்து தனி ஸ்டைலில் பதமாக இதமாகப் பார்க்க விரும்புபவன் நான். :)))))

      //ஒங்கட வூட்டம்மா கண்டுகிடுதில்லாயா.......//

      இதற்கான என் பதில் தனியே தங்களுக்கு மட்டும் வரும்.

      Delete
    2. ஹை குருஜி மெயிலில் சொல்லிகினிகளா.... நானுகோட வெகு நாட்களாக மெயிலே போடலாம் லா.. ஸாரி குருஜி....

      Delete
  8. நல்லாதான் குத்தாட்டம் போடுறாங்களே.. அத ரசிக்கவும் ஆளுங்க இருக்காங்களே........

    ReplyDelete
  9. ஆட்டமும் பாட்டும் மனசை சந்தோஷப்படுத்துது....

    ReplyDelete
  10. இது ஒரு EVER GREEN பாட்டு. கண்ண மூடி கேட்டா (அது ரொம்ப கஷ்டம்) கையும், காலும் தானா ஆடும்.

    ReplyDelete
    Replies
    1. Jayanthi Jaya 1 June 2016 at 23:01

      //இது ஒரு EVER GREEN பாட்டு. கண்ண மூடி கேட்டா (அது ரொம்ப கஷ்டம்) கையும், காலும் தானா ஆடும்.//

      கையும், காலும் மட்டும்தானா?

      எனக்கு சர்வாங்கமுமே ஆடுமே ஜெயா :)

      Delete