Friday, 6 May 2016

purusan viitil vazapokum penne

9 comments:

 1. சாரூ...ஜி கல்யாணத்துக்கு இன்னும் நாலு நாளு தானே...இருக்கு......நாலு நாளும் கல்யாண சம்மந்த பட்ட பாட்டு போட நினைச்சேன்....உங்க எல்லாருக்கும்... ஓ..கே..தானே...இது கொஞ்சம் ஓல்ட் ஸாங்க் தான்... பட்... அர்த்தமுள்ள வரிகள்.....

  ReplyDelete
 2. புருஷன் வீட்டில் வாழப்போகும் பெண்ணே
  தங்கச்சி கண்ணே - சில
  புத்திமதிக சொல்லுறன் கேளு முன்னே
  தங்கச்சி கண்ணே - சில
  புத்திமதிக சொல்லுறன் கேளு முன்னே

  அரசன் வீட்டுப் பொண்ணாக இருந்தாலும் - அம்மா
  அகந்தை கொள்ளக் கூடாது எந்நாளும்
  புருஷன் வீட்டில் வாழப்போகும் பொண்ணே
  தங்கச்சி கண்ணே - சில
  புத்திமதிகள் சொல்லுறேன் கேளு முன்னே

  மாமனாரை மாமியாளை மதிக்கணும் - உன்னை
  மாலையிட்ட கணவனையே துதிக்கணும்
  சாமக்கோழி கூவையிலே முழிக்கணும் குளிச்சு
  சாணம் தெளிச்சு கோலம் போட்டு
  சமையல் வேலை துவக்கணும்

  புருஷன் வீட்டில் வாழ்ப்போகும் பொண்ணே
  தங்கச்சி கண்ணே - சில
  புத்திமதிக சொல்லுறன் கேளு முன்னே

  கண்ணால் பேசும் பயக முன்னே நில்லாதே - நீ
  காணாததைக் கண்டேனுன்னு சொல்லாதே
  கண்ணால் பேசும் பயக முன்னே நில்லாதே - நீ
  காணாததை கண்டேனுன்னு சொல்லாதே - இந்த

  அண்ணே சொல்லும் அமுதவாக்குத் தள்ளாதே - நம்ம
  அப்பன் பாட்டன் பேரைக் கெடுத்துக் கொள்ளாதே
  புருஷன் வீட்டில் வாழப்போகும் பொண்ணே
  தங்கச்சி கண்ணே - சில
  புத்திமதிக சொல்லுறன் கேளு முன்னே

  புருஷன் உயிரை மீட்டுத் தந்தவ பொண்ணுதான் - ஓடும்
  பொழுதை அங்கே நில்லுன்னு சொன்னவ பொண்ணுதான் -
  அரசன் நடுக்க நீதி சொன்னவ பொண்ணுதான் - அவுங்க
  ஆஸ்திக் கணக்கு சொன்னாக் கற்பு ஒண்ணுதான்
  ஆஸ்திக் கணக்கு சொன்னாக் கற்பு ஒண்ணுதான்

  புருஷன் வீட்டில் வாழப்போகும் பொண்ணே
  தங்கச்சி கண்ணே - சில
  புத்திமதிக சொல்றேன் கேளு முன்னே

  புருஷன் கூட நீ இருந்து பூவும் மணமும் போல மகிழ்ந்து
  கூரைச் சேலையும் தாலியும் மஞ்சளும்
  குங்குமப் பொட்டும் நகையும் நட்டும்
  கொறைஞ்சிடாம நெறைஞ்சு கிட்டு ஆஆஆஆஆ

  மக்களைப் பெத்து மனையப் பெத்து
  மக்க வயத்திலே பேரனைப் பெத்து

  பேரன் வயத்திலே புள்ளையப் பெத்து
  நோயில்லாம நொடியில்லாம

  நூறு வயசு வாழப்போற தங்கச்சி- நமக்கு
  சாமி துணை இருக்கு சாமி துணை இருக்கு தங்கச்சி

  ReplyDelete
 3. படம்: பானை பிடித்தவள் பாக்கியசாலி

  பாடியவர் : திருச்சி லோகநாதன் அவர்கள்

  ஆண்டு: 1958

  ReplyDelete
 4. மிகவும் அர்த்தமுள்ள அழகான அந்தக்காலப் பாடல்.

  இதைப்பாடியவர் எங்கள் ஊராம் திருச்சியைச் சேர்ந்த திரு. லோகநாதன் என்பவர் என்பதில் எனக்கு மேலும் மகிழ்ச்சி.

  17.11.1989 இல் மறைந்துவிட்ட இவர் பாடிய மேலும் சில பிரபல பாடல்கள்:

  கல்யாண சமையல் சாதம்
  (மாயா பஜார்)

  ஆசையே அலைபோலே
  (தை பிறந்தால் வழி பிறக்கும்)

  அடிக்கிற கைதான் அணைக்கும்
  (வண்ணக்கிளி)

  என்று தணியும் இந்த சுதந்திர தாகம்
  (கப்பலோட்டிய தமிழன்)

  உலவும் தென்றல் காற்றினிலே
  (மந்திரி குமாரி)

  புருஷன் வீட்டில் வாழப்போகும் பெண்ணே
  (பானை பிடித்தவள் பாக்கியசாலி)

  வில்லேந்தும் வீரரெல்லாம்
  (குலேபகாவலி)

  பொன்னான வாழ்வு
  (டவுன்பஸ்)

  இன்றைய இந்தப்பாடல் பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
  Replies
  1. ஓ........ உங்க ஊர்க்காரரூ.....பிறந்த ஊரு பெருமையோ..
   ......நீங்க பிறந்த ஊரு வேர ன்னு ஏதோ பதிவுல படிச்ச நினைவு......

   Delete
  2. பூந்தளிர் 7 May 2016 at 21:49

   //ஓ........ உங்க ஊர்க்காரரூ.....பிறந்த ஊரு பெருமையோ..//

   ஆமாம். அதிலென்ன சந்தேகம். எங்கட திருச்சின்னா திருச்சிதான். மலைபோல உள்ள மலைக்கோட்டை + புண்ணிய ஜீவநதியாம் காவிரி, ஏராளமான மிகப்பிரபலமான ஆலயங்கள் ஆகியவைகள் போதுமே அதன் பெருமைகளைச் சொல்ல. மேற்கொண்டு எங்கட திருச்சியின் பெருமைகள் + சிறப்புகளைப்பற்றி இதில் படியுங்கோ:

   http://gopu1949.blogspot.in/2011/07/blog-post_24.html

   //......நீங்க பிறந்த ஊரு வேற ன்னு ஏதோ பதிவுல படிச்ச நினைவு......//

   அதுபற்றி அறிய இதைப்படியுங்கோ:
   http://gopu1949.blogspot.in/2011/03/blog-post_09.html

   ஏதோ பிழைப்புக்காகப் போன இடத்தில் என்னைப் பிள்ளையாய் பெற்றுக்கொண்டு இருக்கிறாள் எங்க அம்மா.

   சிலருக்கு ப்ளேனில் பறக்கும்போதே குழந்தை பிறக்கிறதே. அந்தக்குழந்தை தன் பிறந்த ஊராக எதைச் சொல்ல முடியும்? சொல்லுங்கோ. அதுபோலத்தான் இதுவும். :)

   Delete
 5. பாடல் வரிகள் நல்லா இருக்கு..

  ReplyDelete
 6. ஓ..கே...ஓ....கே.......

  ReplyDelete
 7. இந்த பாட்டும் நல்லா இருக்கு

  ReplyDelete