Sunday 22 May 2016

aayiram nilave vaa

24 comments:

  1. கல்யாண கோபூஜி யோட நேயர் வருப்பம்

    ReplyDelete
  2. ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா
    இதழோடு சுவை சேர புதுப் பாடல் ஒன்று பாடப் பாட

    (ஆயிரம்)

    நல்லிரவு துணையிருக்க நாமிருவர் தனியிருக்க
    நாணமென்ன பாவமென்ன நடைதளர்ந்து போவதென்ன
    நல்லிரவு துணையிருக்க நாமிருவர் தனியிருக்க
    நாணமென்ன பாவமென்ன நடைதளர்ந்து போவதென்ன

    இல்லை உறக்கம் ஒரே மனம் என்னாசை பாராயோ (2)

    உன் உயிரிலே என்னை எழுத பொன்மேனி தாராயோ

    (ஆயிரம்)

    மன்னவனின் தோளிரண்டை மங்கை எந்தன் கை தழுவ
    கார் குழலும் பாய் விரிக்கும் கண் சிவந்து வாய் வெளுக்கும்

    மன்னவனின் தோளிரண்டை மங்கை எந்தன் கை தழுவ
    கார் குழலும் பாய் விரிக்கும் கண் சிவந்து வாய் வெளுக்கும்

    இந்த மயக்கம் எழில் முகம் முத்தாக வேர்க்காதோ (2)

    அந்த நினைவில் வந்து விழுந்தேன் கொத்தான பூவாக

    (ஆயிரம்)

    அல்லி மலர் மேனியிலே ஆடை என நான் இருக்க
    கள்ள விழிப் பார்வையிலே காணும் இன்பம் கோடி பெற

    அல்லி மலர் மேனியிலே ஆடை என நான் இருக்க
    கள்ள விழிப் பார்வையிலே காணும் இன்பம் கோடி பெற

    சின்ன இடையில் மலர் இதழ் பட்டாலும் நோகாதோ (2)

    இன்பம் இதுவோ இன்னும் எதுவோ தந்தாலும் ஆகாதோ

    (ஆயிரம்)

    பொய்கை எனும் நீர்மகளும் பூவாடை போர்த்திருந்தாள்
    தென்றல் எனும் காதலனின் கை விலக்க வேர்த்து நின்றாள்

    பொய்கை எனும் நீர்மகளும் பூவாடை போர்த்திருந்தாள்
    தென்றல் எனும் காதலனின் கை விலக்க வேர்த்து நின்றாள்

    என்ன துடிப்போ அவள் நிலை நீ உணர மாட்டாயோ
    அந்த நிலையில் அந்த சுகத்தை நான் உணரக் காட்டாயோ

    (ஆயிரம்)

    ReplyDelete
  3. பாடல்: ஆயிரம் நிலவே வா
    திரைப்படம்: அடிமைப் பெண்
    பாடலாசிரியர்: கவிஞர் புலமைப் பித்தன்
    இசை: கே.வி. மஹாதேவன்
    பாடியோர்: : எஸ்.பி. பாலசுப்பிரமணியம், பி. சுசீலா
    ஆண்டு: 1969

    ReplyDelete
  4. எனது நேயர் விருப்பமாக இந்தப்பாடலை இன்று வெளியிட்டுள்ளதும், மற்ற சில செய்திகளும் எனக்கு ஒரே இன்ப அதிர்ச்சியைக் கொடுத்து விட்டது, முன்னாக்குட்டி. :)

    இன்னும் என்னால் அந்த இன்ப அதிர்ச்சிகளிலிருந்து வெளிவரவே முடியவில்லை. :)))))))))))))))))))))

    எனினும் என் மனமார்ந்த இனிய நல்வாழ்த்துகள்....ப்பா.

    இப்படிக்கு அன்புடன் தங்கள்,
    கல்யாண கோபாலகிருஷ்ணன்

    ReplyDelete
    Replies
    1. அது என்ன இன்ப அதிர்ச்சி செய்திகள். சொன்னா நாங்களும் தெரிந்து சந்தோஷபட்வோமே....

      Delete
    2. பூந்தளிர் 24 May 2016 at 02:00
      அது என்ன இன்ப அதிர்ச்சி செய்திகள். சொன்னா நாங்களும் தெரிந்து சந்தோஷபடுவோமே....//

      நேரம் வரும்போது நேர்த்தியாகச் சொல்லப்படும். :)))))

      வேறென்ன .... எல்லாம் .... மேற்படி மேட்டர் பற்றிதான்.

      Delete
    3. ஒன்னுமே புரியலே உலகத்துல என்னமோ நடக்குது மர்மமா இருக்குது....

      Delete
    4. :))))))))))))))))))))))))))))))

      இதுவும் ஒரு மர்மமே தான், மர்மக்கதை போலத்தான்.

      இதில் கடைசியில் என்னென்ன திருப்பங்கள் ஏற்படுமோ !

      நம் சாரூவுக்கு ஏற்பட்டது போல இவளுக்கும் ஏதேனும் MIRACLE ஏற்பட்டால் மட்டுமே நல்லது.

      Delete
  5. ஆயிரம் நிலவே வா ! ... ... ஓர் ஆயிரம் நிலவே வா !!

    என்ற தலைப்பில் நான் கொடுத்துள்ளதோர் பதிவுக்காண இணைப்பு இதோ: http://gopu1949.blogspot.in/2013/08/blog-post.html

    ReplyDelete
  6. முன்னா தன் மனதில் நினைத்துள்ளதெல்லாம், நினைத்தபடியே, மேள தாளங்களுடன் மங்களகரமாக வெகு விரைவில் நடைபெற்றிட நம் ’முன்னா நாச்சியாரை’ அவர்களை ’கல்யாண கோபாலகிருஷ்ணப் பெருமாள்’ நன்கு ஆசீர்வதிக்கிறார் :)

    பெருமாள் கோயில்களில் சே(ர்)த்தித் திருவிழா என மிகச் சிறப்பாக நடைபெறுவது உண்டு. பெருமாளையும் அவரின் அன்புக்குரிய தேவியான நாச்சியாரையும் சேர்த்துவைத்து அமர்க்களமாகக் கொண்டாடி மகிழ்வார்கள்.

    திருச்சி உறையூரில் நாச்சியார் கோயில் என்றே தனியாக ஒரு கோயில் உள்ளது. ஸ்ரீரங்கம் பெருமாள் ஆண்டுதோறும் நேரில் புறப்பட்டு அங்கு சே(ர்)த்தித் திருவிழாவில் கலந்துகொள்ள மேளதாளங்களுடன் ஜோராக மாப்பிள்ளை போல வருவார். :)

    இதுபற்றி மேலும் பல விபரங்களுக்கு இதோ இணைப்புகள்:

    http://jaghamani.blogspot.com/2013/10/blog-post_23.html
    ஆச்சர்யம் நிறைந்த ஸ்ரீரங்கம் - ஸ்ரீரங்கம் பெருமாள் பற்றி
    (எனது ஏராளமான பின்னூட்டங்களுடன்)

    http://jaghamani.blogspot.com/2012/03/blog-post_7035.html
    பாங்காய் அருளும் பங்குனி உத்திரம் + சே(ர்)த்தித் திருவிழா

    http://jaghamani.blogspot.com/2013/03/blog-post_25.html
    பங்குனி உத்திரத் திருநாள் + சே(ர்)த்தித் திருவிழா

    ReplyDelete
  7. தகவல் களுக்கு நன்றி கல்யாண கோபூஜி.....

    ReplyDelete
  8. என்ன நடக்குது இங்க... ரெண்டு நாள் வரலைனா.. முன்னா நாச்சியார்.. கல்யாண கோபூஜின்னு பெயர்லாம் புதுசு புதுசா மாறிட்டு....

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர் 24 May 2016 at 02:02

      //என்ன நடக்குது இங்க... ரெண்டு நாள் வரலைனா.. முன்னா நாச்சியார்.. கல்யாண கோபூஜின்னு பெயர்லாம் புதுசு புதுசா மாறிட்டு....//

      என்னுடன் பழக ஆரம்பிக்கும் எல்லோருக்கும், ஏதோவொரு நல்லது உடனே நடக்குதாம். குறிப்பாக கல்யாணம் நடக்காமல் இருக்கும் கோபியர்களுக்கு (கன்னிகளுக்கு) உடனடியாக கல்யாணம் குதிர்ந்து விடுகிறதாம். அதனால் என் பெயரை ’கல்யாண கோபாலகிருஷ்ணன்-ஜி’ன்னு மாற்றிவிட்டாளாம் இந்த முன்னாக்குட்டி. :)))))

      வேறு ஒன்றும் எனக்குத்தெரியாது ..... டீச்சர். என் வாயைக் கிளறாதீங்கோ ..... அப்புறம் ஏதாவது நான் உளறிப்புடுவேன். பிறகு என்மீது நம் முன்னாவுக்குக் கோபம் வந்துடுமாக்கும். :)

      Delete
    2. ஓ.... ஓ..கே... முன்னாவும் கல்யாணத்துக்கு ரெடியா இருக்காளா.... அட்வான்ஸ் வாழ்த்துகள் முன்னா....

      Delete
  9. டீச்சரம்மா கேக்குதயே நானு கேட்டுபிட்டன்லா..ரிப்ளை ப்ளீஸ்
    ....

    ReplyDelete
    Replies
    1. mru 24 May 2016 at 02:28

      //டீச்சரம்மா கேக்குதயே நானு கேட்டுபிட்டன்லா..ரிப்ளை ப்ளீஸ்.//

      மேலே டீச்சரம்மாவுக்கே நேரிடையாக ரிப்ளை கொடுத்துப் போட்டேன். அதுவே மின்னலு முருகுவுக்கும் சேர்த்துத்தான். இருவரும் சண்டை போடாமல் சமத்தாக அந்த சமாச்சாரத்தை பிரித்துக்கொள்ளவும் :)

      Delete
  10. அதெல்லா போதாது.... எனிகுகு தனியா சொல்லிபோடோணும்லா......

    ReplyDelete
    Replies
    1. mru 24 May 2016 at 22:59

      //அதெல்லா போதாது.... எனிகுகு தனியா சொல்லிபோடோணும்லா......//

      தனியாவே (’கொத்தமல்லி விரை’யாகவே) சொல்லிப்போடுவோம். :)

      ஒரு ஆறு மாதங்களாவது பொறுமையாக இருங்கோ, முருகு.

      முன்னாவின் அக்காவுக்கு நிக்காஹ் .... இன்னும் நான்கு மாதங்களில் .... அதன்பின் தான் முன்னா சங்கிதி வெளியே வருமாக்கும். :)))))

      Delete
    2. நம்ம முன்னாவின் அழகுக்கும், படிப்புக்கும், அறிவுக்கும், அடக்கத்துக்கும், சம்பாத்யத்திற்கும் மாப்பிள்ளைப் பயலுக எல்லோரும் நான்-நீ என போட்டி போட்டுக்கொண்டு நீண்ண்ண்ண்ண்ண்ட க்யூவில் வந்து நீட்டிக்கிட்டு நிற்பாங்களாக்கும் ..... அவளை அப்படியேக் கொத்திக்கொண்டு போக :)))))

      யார் அந்த அதிர்ஷ்டசாலியோ? :)))))))))))))

      Delete
    3. மேலே உள்ளவற்றில் அவசரத்தில் ஒருசில வார்த்தைகள் விட்டுப்போய் விட்டன. அதனால் அதனை இப்படி மீண்டும் படிக்கவும்:

      நம்ம முன்னாவின் ....

      அழகுக்கும்,
      அறிவுக்கும்,
      அடக்கத்துக்கும்,
      படிப்புக்கும்,
      சம்பாத்யத்திற்கும்,
      பக்குவத்திற்கும்,
      பருவத்திற்கும்,
      பண்புக்கும்,
      அன்புக்கும்,
      பெர்சனாலிடிக்கும்

      மாப்பிள்ளைப் பயலுக எல்லோரும் நான்-நீ என போட்டி போட்டுக்கொண்டு நீண்ண்ண்ண்ண்ண்ட க்யூவில் வந்து நீட்ட்ட்ட்ட்ட்ட்டிக்கிட்டு நிற்பாங்களாக்கும் ..... அவளை அப்படியேக் கொத்திக்கொண்டு போக :)))))

      யார் அந்த அதிர்ஷ்டசாலியோ? :)))))))))))))

      Delete
  11. ஐயய்யோ இந்த கயூ வு சங்காத்தமே வாணாம்.. ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு கிடைச்சாலே பெரிய விஷயம்........

    ReplyDelete
    Replies
    1. சிப்பிக்குள் முத்து. 25 May 2016 at 01:22

      //ஐயய்யோ இந்த க்யூ வு சங்காத்தமே வாணாம்.. ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு கிடைச்சாலே பெரிய விஷயம்........//

      அந்த ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு உங்கள் விருப்பம் போல அமையக்கடவது.

      ’மனம் போல மாங்கல்யம்’ என எங்கட ஐயர் ஆளுங்க சொல்லுவாங்க.

      அதுவே உங்களுக்கும் அப்படியே பலிக்கட்டும். அதற்கு என் இனிய வாழ்த்துகளும் பிரார்த்தனைகளும். :)

      Delete
  12. கோபூஜி..... எல்லாம் தெரிஞ்சுகிட்டும் எப்படி உங்களால வாழ்த்து சொல்ல முடியுது.......

    ReplyDelete
    Replies
    1. சிப்பிக்குள் முத்து. 26 May 2016 at 00:56

      //கோபூஜி..... எல்லாம் தெரிஞ்சுகிட்டும் எப்படி உங்களால வாழ்த்து சொல்ல முடியுது.......//

      பிறருக்காக நான் செய்துவரும் நியாயமான பிரார்த்தனைகள் உடனுக்குடன் எவ்வாறு எதனால் நிறைவேறி வருகின்றன என்பதற்கான உண்மையான காரணங்களை நான் இன்று உங்களுக்கு ஓர் தனி மெயில் மூலம் அனுப்பியுள்ளேன்.

      அதன் அடிப்படையில், இதுவும் ஒருவேளை நியாயமாக இருக்கக்கூடும் என்ற ஓர் சின்ன நம்பிக்கையில் மட்டுமே, நான் உன்னை என் மனதார வாழ்த்தியுள்ளேன். பார்ப்போம்.

      என்ன நடக்குமோ ..... எல்லாம் அவன் (கடவுள்) செயல் மட்டுமே. நம் கையில் ஒன்றுமே இல்லை என்பதை தயவுசெய்து உணர்ந்து கொள்ளவும்.

      நாம் எப்போதும் நல்லதே நினைப்போம் ...
      நமக்கும் எப்போதும் நல்லதே நடக்கட்டும்.

      மீண்டும் என் அன்பு நல்வாழ்துகள் + ஆசிகள்.

      Delete