Thursday 5 May 2016

mere naina

21 comments:

  1. வெரி குட் ஸாங்க்..தாங்க்ஸ் முன்னா.....

    ReplyDelete
  2. இந்த பாட்டு எனிக்கு ரொம்ப புடிச்ச பாட்டுலா...

    ReplyDelete
  3. நல்ல பாடல் பகிர்வுக்கு நன்றி முன்னா.....

    ReplyDelete
  4. எல்லாரும் வந்துட்டீங்க.... நம்ம ஹீரோஜிய காணோமே..... தூக்கமா...............

    ReplyDelete
  5. பச்சையில் எனக்குள்ள இச்சையால்
    முதல் காட்சிமுதல் அப்படியே நான்
    சொக்கிப்போய் விட்டேன்.

    >>>>>

    ReplyDelete
  6. நடுவில் அந்தப்பச்சை, தன் பின்பக்கப் பாவாடையை ஆட்டியபடி, துப்பட்டாவை பின்னால் தழையத்தழைய தொங்கவிட்டபடி, தரையில் அதனைப் பிரளவிட்டபடி, எங்கோ வேகமாக ஓடிப்போய்விட்டு, பிறகு சிகப்புக்கலரில் தள தளன்னு தக்காளி போல ஓடியாந்து விட்டதே !

    கடைசியில் தன் மிகப்பெரிய காது வளையங்களுடன் அவன் கால்களில் சரண்டர் ஆகி விழுந்து விட்டதே !!

    நல்ல பாட்டாகவே இருப்பினும், பாட்டு ஒன்னும் என்னால் வெளிங்கிக்கிட ஏலலை.

    >>>>>

    ReplyDelete
  7. பதிவிட உதவியுள்ள பச்சைக்கும்,
    பதிவிட்ட சிகப்புக்கும்
    என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்..... ப்பா. :)

    ReplyDelete
  8. சிப்பிக்குள் முத்து.5 May 2016 at 22:56

    //எல்லாரும் வந்துட்டீங்க.... நம்ம ஹீரோஜிய காணோமே..... தூக்கமா...............//

    நல்ல நாளிலேயே தினமும் இரவு நேரங்களில் தூங்காமல், தூக்கம் வராமல் ஏங்கிக்கொண்டு, நெட்டில் ஏதேனும் ’கடவுளே கடவுளே’ காட்சிகளை ரஸித்துக்கொண்டு இருப்பேன்.

    பிறகு டயர்ட் ஆகி, களைத்துப்போய் ஒருவழியாகப் படுக்கும் போது நள்ளிரவு 2 அல்லது 3 மணி ஆகிவிடும். இதனால் காலையில் மிகவும் லேட்டாகத்தான் எழுந்திருப்பேன்.

    நான் வலையுலகுக்கு வந்தபின் கடந்த 5 ஆண்டுகளாக இது என் வழக்கமாகிப்போய் விட்டது. மாற்ற முடியாமல் உள்ளது. இதுபற்றி சிலருக்கு மட்டும் ஏற்கனவே தெரியும்.

    இன்று அமாவாசை வேறு. அமாவாசையன்று ஐயருக்கு இருக்கும் வேலைகள் ஒன்றா இரண்டா?

    அதையெல்லாம் கவனித்தபிறகு என் வீட்டுக்காரி ஒரு டஜன் முரட்டு வாழைக்காய்களை என்னிடம் வைத்துவிட்டுப்போனாள். வழக்கம் போல நான் காய்கறி நறுக்கித்தரும் வேலையையும் கவனிக்க வேண்டியதாகப் போய்விட்டது.

    அதன்பின் எனக்கு வந்து குவிந்துள்ள மெயில்களைப் படித்துப் பார்த்து, யார் யாருக்கு என்னென்ன ஆறுதல் வார்த்தைகள் என்னால் சொல்ல முடியுமோ, அதையெல்லாம் சொல்லிவிட்டு, இங்கு வர இவ்வளவு தாமதம் ஆகிவிட்டது.

    இன்னும் நான் காலையிலிருந்து (இருமுறை காஃபி தவிர) ஏதும் சாப்பிடக்கூட இல்லை.

    ஹீரோஜி ..... ஜீரோஜியாக இல்லாமல், ஏதோ இப்போதாவது வந்துள்ளேனே என நினைத்து மகிழுங்கோ, முன்னாக்குட்டி :)))))

    ReplyDelete
    Replies
    1. ஒரு டஜன் வாழைக்காய்களூ..... உங்க வீட்ல எவ்வளவு பேரு இருக்கீங்க.....

      Delete
    2. ப்ராப்தம் 7 May 2016 at 01:37

      //ஒரு டஜன் வாழைக்காய்களூ..... உங்க வீட்ல எவ்வளவு பேரு இருக்கீங்க.....//

      நிரந்தரமாக நான்கு பெரிய தலைகள் மட்டுமே.

      இதைத்தவிர உள்ளூரிலேயே தனியாக வேறு இடத்தில் உள்ள என் வாரிசுகளில் நால்வர் + அடிக்கடி வருவோர் போவோர் + என் உறவினர்கள் + வெளி விருந்தாளிகள் என பலவிதங்களும் உண்டு.

      என் வீட்டில் நான், என் மனைவி, 3 பிள்ளைகள், 3 மருமகள்கள், 1 பேத்தி + 3 பேரன்கள் என எல்லோரும் சேர்ந்து கூடும்போது எண்ணிக்கை ஆக மொத்தம் 12 ஆகும்.

      அதுபோல என் குடும்பத்தின் மொத்த உறுப்பினர்களும் கூடி அந்த எண்ணிக்கை 12 ஆக ஆவது, வருடத்தில் ஏதாவது ஒரு 12 நாட்களுக்கு மட்டுமே நிகழக்கூடிய உலக அதிசயமாகும். :)

      Delete
    3. அமாவாசைக்கு அமாவாசை வாழைக்காய் கட்டாயமாகச் சேர்ப்போம். வாழைக்காய் கறி ஒருவேளை மீதம் நிறைய மிஞ்சிப்போய் இருந்தால் சாயங்காலம் டிபன் போல, ஆளுக்குக் கொஞ்சமாக தனியாக வாழைக்காய் கறியாகவே தின்று தீர்ப்போம்.

      அதே வாழைக்காய்களைப் பொடிமாஸாகச் செய்தால் மீதி நிறையத் தங்காது. அதன் ருசியில் பகலிலேயே ஓரளவுக்குக் காலியாகிவிடும்.

      காய்கறிகளுக்கு நாங்கள் எங்கள் வீட்டில் கொஞ்சம் அதிகமே காசு செலவழிப்போம். காய்கறிகள் + தேங்காய் + தக்காளி + கருவேப்பிலை + கொத்தமல்லி + சாம்பாருக்கான தான்கள் (முருங்கைக்காய், அவரைக்காய், பூசணிக்காய், வெங்காயம் போன்றவை) முதலியவற்றிற்கே தினமும் ரூ. 100 முதல் 125 வரை ஆகிறது.

      காலை + இரவு எங்கள் எல்லோருக்கும் அடை, தோசை, இட்லி, உப்புமா, சேவை போன்ற டிபன் மட்டுமே.

      மதியம் ஒருவேளை மட்டுமே சாப்பாடு.

      ஸ்ட்ராங்க் காஃபி நான் தினமும் நாலு தடவை குடிக்கிறேன். மற்றவர்கள் 2-3 தடவை மட்டுமே.

      Delete
    4. ஹீரோஜி..... என்னைக்குமே..... ஜீரோஜி ஆக மாட்டாங்க.... அப்படி ஆகவும் விட்டுட மாட்டோம்.....

      Delete
    5. ஏன் குருஜி.... அமாசியன்னக்கு வாளக்கா தான் ஆக்குவீகளா.....

      Delete
    6. பூந்தளிர் 7 May 2016 at 21:51

      //ஹீரோஜி..... என்னைக்குமே..... ஜீரோஜி ஆக மாட்டாங்க.... அப்படி ஆகவும் விட்டுட மாட்டோம்.....//

      ஹைய்யோ !!!! இதனை என் ராஜாத்தி வாயால் கேட்க மிகவும் சந்தோஷமாகத்தான் உள்ளது. :)

      உடம்பில் எங்கெல்லாமோ சும்மா ... சும்மா ... சும்மாப் புல்லரிக்குது. அரிப்பு தாங்கலை. சீப்பும் கையுமாகவே இருக்க வேண்டியுள்ளது. :)))))

      Delete
    7. mru 8 May 2016 at 00:27

      //ஏன் குருஜி.... அமாசியன்னக்கு வாளக்கா தான் ஆக்குவீகளா.....//

      பெரும்பாலும் அப்படித்தான் வழக்கம் முருகு.

      அப்பா, அம்மா திதி நாட்கள் (இறந்த நாட்கள்) என்று வருடத்திற்கு இரண்டு நாட்கள் வரும். வேதம் படித்த நிறைய ஐயர்களை வரவழைத்து ஹோமம் செய்து ஏராளமாகச் செலவு செய்வோம். நிறைய பேர்கள் சாப்பிடுவார்கள். இன்றைய தேதியில் அந்த ஒவ்வொரு நாட்களுக்கும் சுமார் 15000 ரூபாய் செலவாகும். ஐயர் தக்ஷிணை + சமையல் கார மாமி தக்ஷிணை உள்பட.

      அன்று வெல்லப் பாயஸம், வெள்ளரிக்காய் தயிர் பச்சடி, வெல்லத்துடன் மாம்பழப்பச்சடி, நல்ல ஒஸத்தியான பச்சரிசி சாதம், மாங்காய் ஊறுகாய், கருவேப்பிலைத் தொகையல், கீழ்க்கண்ட *5 கறிகள்* மட்டும், புடலங்காய் பொறித்த கூட்டு, மிளகு குழம்பு, சேப்பங்கிழங்கு போட்ட மோர்க்குழம்பு, மிளகு ரஸம், தயிர், வடை, அதிரஸம், எள்ளு உருண்டை, பயத்தம் லாடு, திரட்டுப்பால், ஒஸத்தியான மாம்பழங்கள், மலை வாழைப்பழங்கள், பலாப்பழச் சுளைகள், தேன், நெய், மஸித்து வேக வைத்த பாசிப்பருப்பு போன்றவைகளுடன் நுனி இலை போட்டு தடபுடல் சாப்பாடாக இருக்கும்.

      இதில் கறி செய்ய சேர்க்கக்கூடிய காய்கறிகள் இந்த ஐந்து மட்டுமே அலவுடு :

      வாழைக்காய், வாழைத்தண்டு, பாகற்காய், அவரைக்காய், ப்ளாமுசு என்னும் பிஞ்சான பழுக்காத பலாக்காய்.

      மேலே சொன்னவைகளைத் தவிர வேறு எதுவும் சேர்க்கவே கூடாது என்பது எங்கள் சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ள விதி. இவை அனைத்தும் புதியதாக அன்றே செய்யப்பட வேண்டும், அதுவும் மடியாகவும் ஆச்சாரமாகவும்.

      அப்போதுதான் இறந்துபோன முன்னோர்களின் ஆசிகள் முழுவதுமாக நம் குடும்பத்திற்குக் கிடைக்கும் என்பது ஓர் நம்பிக்கை.

      Delete
    8. ஏதுமே வெளங்கிகிட ஏலலியே..

      Delete
    9. mru 8 May 2016 at 21:38

      //ஏதுமே வெளங்கிகிட ஏலலியே..//

      மி-க-வு-ம் ச-ந்-தோ-ஷ-ம்.

      Delete
  9. ’மேரே நைனா’ என்றால் ’என் அப்பா’ என்றுதானே அர்த்தம்?

    தெரிந்தவர்கள் யாராவது விளக்குங்கோ, ப்ளீஸ்.

    ReplyDelete
  10. ஹா ஹா....... இது அந்த "நைனா".......இல்ல...... மேரேநைனா.... என் கண்கள்னு அர்த்தம்பா...... அதாவது எண்ணங்கள் மழை பொழியும் மேகங்களுடன் இருக்கு.... ஆனா என் உள் மனதோ மிகுந்த தாகத்துடன் இருக்குன்னு... கவித்துவமான பாடல் வரிகள்.......

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர் 7 May 2016 at 00:50
      //ஹா ஹா....... இது அந்த "நைனா".......இல்ல...... மேரேநைனா.... என் கண்கள்னு அர்த்தம்பா......//

      அப்படியா! சரி நைனா ..... சரிடா என் கண்ணே.

      //அதாவது எண்ணங்கள் மழை பொழியும் மேகங்களுடன் இருக்கு.... ஆனா என் உள் மனதோ மிகுந்த தாகத்துடன் இருக்குன்னு... கவித்துவமான பாடல் வரிகள்.......//

      அருமை .... மிகவும் அருமை .... தாகத்துடன் உள்ள என் உள்மனதுக்கு, தங்களின் எண்ணங்களை மழை மேகமாகப் பொழிந்து, நன்கு கவித்துவமாக விளக்கிப் புரிய வைத்து விட்டீர்கள். மிக்க நன்றீங்க. :)

      Delete
  11. இதுகோட நல்லாதா கீது...

    ReplyDelete