Tuesday 10 May 2016

kalyana samaiyal sadam

18 comments:

  1. இந்த பாடல் நம்ம கோபூஜியின்.... நேயர் விருப்பம்..... சாரூ..ஜியின் கல்யாண நாளாகிய இன்று... கோபூஜி... நம்ம எல்லாருக்கும் வித விதமா கல்யாண விருந்து போட்டிருக்காங்க... முருகு வெரசா ஓடி வந்துபிடு... அல்லா காட்டி நானே அல்லாத்தையும் காலி பண்ணி போணுவேன்...

    ReplyDelete
    Replies
    1. ஏ...... ஆத்தாடியோ........ இன்னா முன்னா இது... இம்பூட்டு சாப்பாடு ஐட்டங்களா..... அல்லாத்தையும் அள்ளி அள்ளி துன்னுபோடலாம்போல இருக்குதே...

      Delete
  2. ஆமா முருகு எனக்கு வெகு நாளா ஒரு சந்தேகம்...... உங்கட ப்ரொபைலு.... படம்... சூப்பரா இருக்குதே.. எங்கிட்டுலேந்து சுட்டுபிட்டே........

    ReplyDelete
  3. இன்னா முன்னா இப்பூடி கேட்டு போட்டே.... இந்த படம் எஙாகட குருஜி பதிவுலேந்து அவுக பர்மிசனோடதா சுட்டுபோட்டேன்லா.... நா எத க்கேட்டு பிட்டாலும்... குருஜி மாட்டேனு சொல்லிகினவே... மாட்டாகலா.... இல்ல குருஜி.......

    ReplyDelete
    Replies
    1. mru 10 May 2016 at 22:28

      //இன்னா முன்னா இப்பூடி கேட்டு போட்டே.... இந்த படம் எஙாகட குருஜி பதிவுலேந்து அவுக பர்மிசனோடதா சுட்டுபோட்டேன்லா....//

      இதோ இந்தப்பதிவிலிருந்து அது எங்கட மின்னலு முருகுவால் சுட்டுப் போடப்பட்டுள்ளது:

      http://gopu1949.blogspot.in/2015/11/blog-post_11.html

      இந்த மேற்படிப்பதிவின் அடியினில் அவளுடைய பழைய Profile போட்டோவும் இந்தப்புதிய Profile போட்டோவும், இரண்டுமே காட்டப்பட்டுள்ளன.

      //நா எத க்கேட்டு பிட்டாலும்... குருஜி மாட்டேனு சொல்லிகினவே... மாட்டாகலா.... இல்ல குருஜி.......//

      அதில் என்ன சந்தேகம்?

      எங்கட மின்னலு முருகு எங்கள் இருவரின் செல்லக் குழந்தையல்லவா?

      அதாவது மின்னலு எனச் செல்லப் பெயர் சூட்டியவளுக்கும், முருகு என செல்லப் பெயர் சூட்டிய எனக்கும் பிறந்துள்ள செல்லக் குழந்தையாக்கும் :)))))

      அது எதுகேட்டாலும் நாங்கள் இருவருமே மாட்டேன்னு சொல்லாமல் ஆசை ஆசையாகத் தருவோம்.

      இருப்பினும் மின்னலு முருகுவுக்கு தன் அம்மாவைவிட அப்பாவிடம் அதிக செல்லமாக உள்ளது. அதில் மட்டும் அம்மாக்காரிக்குக் கொஞ்சம் கோபமாக்கும்.

      Delete
  4. ஹஹஹஹஹஹஹஹஹ
    கல்யாண சமையல் சாதம்
    ஹஹஹஹஹஹ

    கல்யாண சமையல் சாதம்
    காய் கறிகளும் ப்ரமாதம் - அந்த
    கௌரவப்ரசாதம்
    இதுவே எனக்குப் போதும்
    கல்யாண சமையல் சாதம்
    காய் கறிகளும் ப்ரமாதம் - அந்த
    கௌரவப்ரசாதம்
    இதுவே எனக்குப் போதும்
    ஹஹஹஹஹஹஹ
    ஹஹஹஹஹஹஹ
    ஹஹஹஹஹஹஹ

    அந்தார பஜ்ஜி அங்கே
    சுந்தார சொஜ்ஜி இங்கே
    அந்தார பஜ்ஜி அங்கே
    சுந்தார சொஜ்ஜி இங்கே
    சந்தோஷ மீறிப் பொங்க
    ஹஹஹஹஹஹ
    இதுவே எனக்குத் திங்க

    கல்யாண சமையல் சாதம்
    காய் கறிகளும் ப்ரமாதம் - அந்த
    கௌரவப்ரசாதம்
    இதுவே எனக்குப் போதும்
    ஹஹஹஹஹஹஹ
    ஹஹஹஹஹஹஹ
    ஹஹஹஹஹஹஹ

    புளியோதரையின் சோறு - வெகு
    பொருத்தமாய் சாம்பாரு
    புளியோதரையின் சோறு - வெகு
    பொருத்தமாய் சாம்பாரு
    பூரி கிழங்கு பாரு
    ஹஹஹஹஹஹ
    இதுவே எனக்கு ஜோரு

    கல்யாண சமையல் சாதம்
    காய் கறிகளும் ப்ரமாதம் - அந்த
    கௌரவப்ரசாதம்
    இதுவே எனக்குப் போதும்
    ஹஹஹஹஹஹஹ
    ஹஹஹஹஹஹஹ
    ஹஹஹஹஹஹஹ

    ஜோரான சேனி லட்டு
    சுவையான சீனி புட்டு
    ஜோரான சேனி லட்டு
    சுவையான சீனி புட்டு
    ஏராளமான தட்டு
    ஹஹஹஹஹஹ
    இனி இஷ்டம் போல வெட்டு

    கல்யாண சமையல் சாதம்
    காய் கறிகளும் ப்ரமாதம் - அந்த
    கௌரவப்ரசாதம்
    இதுவே எனக்குப் போதும்
    ஹஹஹஹஹஹஹ
    ஹஹஹஹஹஹஹ
    ஹஹஹஹஹஹஹ

    ReplyDelete
  5. படம்:- மாயா பஜார் - 1957
    இசை:- கண்டசாலா & S.ராஜேஸ்வர ராவ்;
    இயற்றியவர்:- தஞ்சை டி.என்.ராமையா தாஸ்;
    பாடியவர்:- திருச்சி லோகநாதன்;
    நடிப்பு:- S.V.ரெங்கா ராவ்.

    ReplyDelete
  6. ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா .....

    மிகப் பிரமாதமான விருந்து.

    என் நேயர் விருப்பமான இந்த அட்டகாசமான பாடலை, நாம் அனைவரும் ரஸித்துக் கேட்க வெளியிட்டுள்ள முன்னாக்குட்டிக்கு, திருமதி சாரதா பட்டாச்சார்யா அவர்களின் சார்பில், என் இனிய அன்பு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. குருஜி..... டவுட்டூஊஊஊஊஊ....ஒங்கட ஐயிரு... பாசைல..... பட்டருன்னா காட்டி.... ஒங்கட... கோவிலுகளுல...பூஸாரியதான... சொல்லுகிடுவீக..... சாரூ...ஜி..ஏதுக்கு ஒரு பூஸாரிய கட்டிகிட்டாக........

      Delete
    2. mru 11 May 2016 at 21:06

      //குருஜி..... டவுட்டூஊஊஊஊஊ.... ஒங்கட ஐயிரு... பாஷையில..... பட்டருன்னா காட்டி.... ஒங்கட... கோவிலுகளுலே...பூஸாரியத்தான... சொல்லுகிடுவீக.....//

      பொதுவாக தமிழ்நாட்டில் மட்டும், நாமம் போட்ட ஐயங்கார்களின் பெருமாள் (விஷ்ணு) கோயில்களில் மட்டும், கோயிலில் பூஜை செய்பவரை பட்டர் என்றோ பட்டாச்சார்யார் என்றோ அழைப்பது வழக்கம். அதுவே விபூதிப்பட்டை போடும் ஐயர் (சிவன்) கோயில்களாக இருந்தால் அவர்களைக் குருக்கள் என்றோ சிவாச்சார்யார் என்றோ சொல்லுவார்கள்.

      //சாரூ...ஜி..ஏதுக்கு ஒரு பூஸாரிய கட்டிகிட்டாக........//

      ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ..... நம்ம முன்னா சொல்வது போலவே, எங்கட சாரூஜியின் கணவர் ஒரு பெங்காலிக்காரர் மட்டுமே. சாரூஜி கட்டிக்கிட்ட அவரின் கணவர் இங்கு நம்மூர் கோயில்களில் மணி அடிக்கும் பூஸாரி அல்ல.

      அவர் ஒரு மிகப் பெரிய பிரபலமான கம்பெனியில், மிக உயர்ந்த பதவியில் பணியாற்றுபவர். மும்பையில் சொந்தமாக இரண்டு கார்கள் + பங்களாவுடன் இருப்பவர்.

      பெங்காலிகளில் இதுபோன்ற பெயர்கள் மிகவும் அதிகமாகும். அவர் பெயரை பட்டர் என்றெல்லாம் சொல்லாமல், ’பட்டா + ஆச்சார்யா’ என நாம் பிரித்துக்கொள்ளணும்.

      பட்டா என்றால் பட்டுப்போன்ற மென்மையானவர் என்றும், ஆச்சார்யா என்றால் ஆசிரியர் / வாத்யார் (குருஜி போல குரு) எனவும் பொருள் கொள்ளல் வேண்டும்.

      வட இந்தியாவில் எல்லாம் அதிக ஞானம் உள்ளவர்களை ’ஆச்சார்யா’ எனப் பெருமையாக, அவர்கள் பெயருடன்கூட ஒரு பட்டம் கொடுத்ததுபோலச் சொல்லுவார்கள்.

      இப்போதாவது வெளங்கிக்கிட ஏலுதா ..... முருகு?

      Delete
    3. வெறும் பட்டாச்சார்யாவாக இருந்த அவர் நேற்று முதல்

      ப ட் டா ச் ’ சா ரூ ’ ஐ யா ஆகிவிட்டார் ! :)))))))))

      Delete
  7. அன்புள்ள முன்னா,

    இந்த முழு நீளப் பாடல் வீடியோவில் பார்ட்-1 பார்ட்-2 என மொத்தம் இரண்டு வீடியோக்கள் உண்டு.

    பார்ட்-1 ஒன்றை மட்டுமே வெளியிட்டுள்ளீர்கள்.

    பார்ட்-2 தான் இன்னும் ஒரே சிரிப்பாக இருக்கும். அந்த ஆள் அனைத்து பதார்த்தங்களையும் வெகு வேகமாக விழுங்கிவிட்டு பாத்திரங்களைத் தூக்கித்தூக்கி எறிவார். படு தமாஷாக இருக்கும்.
    ஒரே மேஜிக் காட்சியாக சூப்பராக நகைச்சுவையாக இந்தப்படக் காட்சிகளை எடுத்திருப்பார்கள்.

    முடிந்தால் தேடி அந்த பகுதி-2 ஐயும் வெளியிடுங்கோ.

    அப்போதுதான் இந்தப்பாடலை முழுமையாகக் கண்டு களிக்க முடியும்.

    ReplyDelete
  8. ஓ..கே... கோபூஜி... தேடிபாத்து போடுறேன்

    ReplyDelete
  9. முருகு ஒங்கட அம்மி சொல்லுதா போல நீ மக்குதாண்டி.... இது அந்த பட்டருன்னா இல்லடி.. கிறுக்கு... பேரு பார்த்தா பெங்காலி போல இருக்குதுல்லா.... கோபூஜி வந்து நம்ம டவுட்ட க்ளியர் பண்ணுவாகல்லா...

    ReplyDelete
    Replies
    1. அன்புள்ள மின்னலு முருகு,

      சாருஜியின் கணவர் ஒரு மிகப் பெரிய பிரபலமான கம்பெனியில், மிக உயர்ந்த பதவியில் பணியாற்றுபவர் என்று சொல்லியுள்ளேன் அல்லவா .......

      “டில்லிக்கு ராஜாவானாலும் பாட்டி சொல்லை தட்டாதே”ன்னு ஒரு அருமையான பாட்டு, மனோரம்மா ஆச்சி நடித்த படத்தில் உண்டு.

      அதுபோலவே சாருஜியின் கணவர் ஒரு மிகப் பெரிய பிரபலமான கம்பெனியில், மிக உயர்ந்த பதவியில் பணியாற்றுபவர் என்றாலும்கூட, இதுவரை நம் சாருஜி அவர்களும் இவருக்கு அடியில் அதே கம்பெனியில் ஏதோவொரு சாதாரணப்பணியில் பணியாற்றியவர் என்றாலும் கூட, நேற்று முதல் நம் சாருஜியை தன் அன்புக்குரிய அம்பாளாகவே ஏற்றுக்கொண்டு விட்டார் இந்த பட்டாச்சார்யா அவர்கள்.

      இனி தினமும் அவளை (அவரின் அன்புக்குரிய அம்பாளை) பூஜிக்க வேண்டியது அவருடைய கடமையாகி விடுகிறது.

      திருமதி. சாரதா அம்பாளுக்கு தினமும் நன்கு அபிஷேகங்கள் செய்து (சோப்புப் போட்டுக் குளிப்பாட்டி)....

      புடவை + மற்ற ஆபரணங்கள் ஆசைதீர அணிவித்து (ட்ரெஸ்ஸிங் + மேக்-அப் செய்து)....

      வாஸம் மிகுந்த மலர்களால் அவளை அர்ச்சனைகள் செய்து (பேன் பார்த்துத் தலைவாரிப் பின்னிவிட்டு, பூச்சூட்டி, செண்ட் அடித்து விட்டு, மாலையிட்டு, பல்வேறு நகைகளால் அலங்காரங்கள் செய்து)....

      வாழைப்பழம்.... சர்க்கரைப் பொங்கல்.... அக்கார அடிசல்.... போன்றவைகளை நிவேதனமாக நன்கு ஊட்டி விட்டு....

      சூடான சுவையான கஞ்சி காய்ச்சி, நன்கு தேங்காய் நார் உரித்து அதனை சீல் உடைத்து, தாம்பூலம் கொடுத்து அவளின் பாதங்களைப் பற்றிக்கொண்டு (அந்த சாரதா அம்பாளின் கால் அடிகளைப் பற்றிக்கொண்டு) ஸ்பெஷலாக விருந்து உபசாரங்கள் செய்து அவளை கவனிக்க வேண்டியது இனி அவரின் தலையாய கடமையாகிறது.

      அதனால் அவரை நீங்கள் பூஸாரியுடன் இணைத்துச் சொன்னதும் ஒருவிதத்தில் மிகச்சரியே.

      //சாரூ...ஜி..ஏதுக்கு ஒரு பூஸாரிய கட்டிகிட்டாக........//

      என்று நீங்க கேட்டுள்ளதற்கு இதையே என் பதிலாக அளித்து இப்போது நான் நியாயப்படுத்தி விட்டேன்.

      //முருகு ஒங்கட அம்மி சொல்லுதா போல நீ மக்குதாண்டி.... இது அந்த பட்டருன்னா இல்லடி.. கிறுக்கு... - சிப்-முத்-முன்னா //

      உங்கள் கேள்வியில் உள்ள இவ்வாறான நியாயங்களை சற்றும் உணராமல் இந்த முன்னாக்குட்டி உங்களைப்போய் ‘மக்கு’ ‘கிறுக்கு’ என்றெல்லாம் சொல்லிடுச்சே. இது மிகவும் அநியாயம்.

      எனக்கு ஒரே அளுவாச்சியா வருது முருகு. :(

      Delete
  10. சாப்பாடு பிரமாதம்.. அதைவிட முருகு வின் பின்னூட்டம் சிரிப்பாணி பொத்துகிச்சே...

    ReplyDelete
  11. ஆத்தாடி முருகு இனிமேக்கொண்டு உன்னிய மக்கு கிறுக்கினுலாம் சொல்லிகிட மாட்டேம்மா.. ஒனக்குகூட கோவம் வரலா... ஒங்கட குருஜி கோவப்பட்றாங்க பாரு....

    ReplyDelete
    Replies
    1. சிப்பிக்குள் முத்து. 13 May 2016 at 22:02

      //ஆத்தாடி முருகு இனிமேக்கொண்டு உன்னிய மக்கு கிறுக்கினுலாம் சொல்லிகிட மாட்டேம்மா.. //

      அன்புள்ள முன்னா, அதை உங்க இஷ்டப்படியெல்லாம் எப்படி வேண்டுமானாலும் திட்டிக்கொள்ளுங்கோ. அதுக்கு ஏற்கனவே எதுவும் வெளங்கிக்கிட ஏலாது. இப்போ அது நிக்காஹ் கனவுகளில் மூழ்கி உள்ளது. சுத்தமா ஒன்னுமே வெளங்கிக்கிட ஏலாது. :)

      //ஒனக்குகூட கோவம் வரலா...//

      அதுக்கு ஒன்னும் கோபமே வராது. அது சமத்தோ சமத்து.

      அது பொடி வெள்ளரிப்பிஞ்சோ அல்லது முரட்டு முழு வெள்ளரிப்பழமோ ... எனக்கு இன்னும் வெளங்கிக்கிட ஏலலை. :)

      //ஒங்கட குருஜி கோவப்பட்றாங்க பாரு....//

      நானும் கொஞ்சம் கோபப்படுவதுபோல நடிக்காட்டி அது என் மேலே கோபப்படும். கட்டையைத் தூக்கிட்டு ஓடியாந்துடும் இல்லையா ..... அதனால் மட்டுமே, முன்னா.

      Delete