Thursday 12 May 2016

kattodu kuzal aada aada

4 comments:

  1. கட்டோடு குழல் ஆட ஆட
    கண் என்ற மீன் ஆட ஆட
    பொட்டோடு நகை ஆட ஆட
    கொண்டாடும் மயிலேறி ஆடு
    கட்டோடு ...

    பாவாடை காத்தோடு ஆட ஆட
    பருவங்கள் பந்தாட ஆட ஆட
    காலோடு கால் பின்னி ஆட ஆட
    கள்ளுண்ட வண்டாக ஆடு
    கட்டோடு ....

    முதிராத நெல் ஆட ஆட
    முளைக்காத சொல் ஆட ஆட
    உதிராத மலர் ஆட ஆட
    சதிர்ஆடு தமிழே நீ ஆடு
    கட்டோடு ...

    தென்னை மரத் தோப்பாக தேவாரப் பாட்டாக
    புன்னை மரம் பூசொரிய
    சின்னவளே நீ ஆடு
    கண்டாங்கி முன் ஆட கன்னி மனம் பின் ஆட
    கண்டு கண்டு நான் ஆட
    செண்டாக நீ ஆடு
    கட்டோடு ....


    பச்சரிசி பல ஆட பம்பரத்து நாவாட
    மச்சானின் மனமாட வட்டமிட்டு நீ ஆடு
    வள்ளி மனம் நீராட தில்லை மனம் போராட
    ரெண்டு பக்கம் நான் ஆட
    சொந்தமே நீ ஆடு
    கட்டோடு .....

    ReplyDelete
  2. எம்.ஜி.ஆர். நடித்த படம்: பெரிய இடத்துப்பெண்.

    பாடல் பகிர்வுக்கு நன்றிகள், முன்னாக்குட்டி.

    ReplyDelete
  3. வாங்க கோபூஜி... நாம ரெண்டு பேரும்தான் ரெகுலரா வந்துகிட்டிருக்கோம்.....

    ReplyDelete
  4. இந்தப்பாட்டும் நல்லா இருக்கு...

    ReplyDelete