Thursday 26 May 2016

நினைக்கத்தெரிந்த மனமே

8 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  2. நினைக்கத்தெரிந்த
    மனமே உனக்கு
    மறக்க தெரியாதா

    பழக தெரிந்த
    உயிரே உனக்கு
    விலகத் தெரியாதா
    உயிரே
    விலகத் தெரியாதா

    நினைக்கத் தெரிந்த
    மனமே......

    மயங்க தெரிந்த
    கண்ணே உனக்கு
    உறங்க தெரியாதா

    மலர தெரிந்த
    அன்பே உனக்கு
    மறையத்தெரியாதா
    அன்பே
    மறையத்தெரியாதா

    நினைக்க.....

    எடுக்கத்தெரிந்த
    கரமே உனக்கு
    கொடுக்கத்தெரியாதா

    இனிக்கத்தெரிந்த
    கனியே உனக்கு
    கசக்கத்தெரியாதா

    படிக்கத்தெரிந்த
    இதழே உனக்கு
    முடிக்கத்தெரியாதா

    படரத்தெரிந்த
    பனியே உனக்கு
    மறையத்தெரியாதா
    பனியே
    மறையத்தெரியாதா

    நினைக்கத்தெரிந்த
    மனமே....

    கொதிக்கத்தெரிந்த
    நிலவே உனக்கு
    குளிரத்தெரியாதா

    குளிரும்
    தென்றல் காற்றே
    உனக்கு
    பிரிக்கத்தெரியாதா

    பிரிக்கத்தெரிந்த
    இறைவா உனக்கு
    இணைக்கத்தெரியாதா

    இணையத்தெரிந்த
    தலைவா உனக்கு
    என்னைப் புரியாதா
    தலைவா
    என்னை புரியாதா

    நினைக்கத் தெரிந்த
    மனமே உனக்கு....

    ReplyDelete
  3. தேன் கிண்ணத்தின் விளிம்பில் அமர்ந்து தேனைக் கொஞ்சம் ருசிக்கப்போன ஈ ஒன்று, தேன் தந்த சுகத்தாலும், அதன் இனிமையாலும், மயங்கிப்போய், அந்தத் தேன் கிண்ணத்தின் உள்ளே தடுமாறி விழுந்து விடுகிறது. அதன் இறக்கைகள் தேனின் பிசுபிசுப்பால் ஒட்டிக்கொண்டு விடுகிறது. அதனால் அந்தத் தேன் கிண்ணத்திலிருந்து வெளியே வரவே முடியாமல், மூழ்கிப்போய் விடும் ஆபத்தான நிலைமை அந்த ஈ க்கு ஏற்பட்டு விடுகிறது.

    இதில் தேன் கிண்ணம் என்பது .... ஒவ்வொரு பெண்ணுக்கும் பருவத்திலே வந்து போகும் ’காதல்’ என்பது மட்டுமே.

    இங்கு ஈ என்பது, காதலில் சிக்குண்டு தவிக்கும் ஒரு பெண் என வைத்துக்கொள்ளலாம்.

    ஈ என்பது தன் இறக்கைகளை படபடப்பாக விரித்து சுதந்திரமாகப் பறந்து மகிழப் பிறந்தது மட்டுமே.

    தேன் கிண்ணத்தில் மூழ்கிப்போய் திண்டாடப் பிறந்தது அல்ல.

    ReplyDelete
  4. காலத்துக்கு ஏற்ற + சூழ்நிலைக்கு ஏற்றதோர் பாடல் பகிர்வுக்கு நன்றிகள்.

    ஈஸ்வரோ ரக்ஷது

    'ஈஸ்வரோ ரக்ஷது' means 'கடவுள் தான் காப்பாற்றணும்' !

    ReplyDelete
  5. திரைப்படம்: ஆனந்த ஜோதி

    திரைக்கதை, வசனம் ஜாவர் சீதாராமன்

    நடிகர்கள்: எம்.ஜி. ராமச்சந்திரன், தேவிகா, எம்.ஆர். ராதா, எஸ்.ஏ. அசோகன், எஸ்.வி. சஹஸ்ரநாமம், எஸ்.வி. ராமதாஸ், ஜாவர் சீதாராமன், கமலஹாசன், பி.எஸ். வீரப்பா, மனோரமா

    பாடலாசிரியர்கள் கவிஞர் கண்ணதாசன்

    இசை எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி

    தயாரிப்பு பி.எஸ். வீரப்பா, ஹரிஹரன் ஃபில்ம்ஸ்

    இயக்குனர் வி.என். ரெட்டி

    படம் வெளிவந்த ஆண்டு: 1963

    ReplyDelete
  6. முன்னா... இன்னாச்சி ஒனக்கு அளுமூஞ்சி பாட்டாவே போடுறே... குருஜி ஒனக்கு கோட வெரசா நிக்காஹ் வந்துபோடும்னு சொல்லினாக......

    ReplyDelete
  7. வார்த்தைகள் ரொம்ப நல்லா இருக்கு.. சோகப்பாட்டுனா கூட ரசிக்க நல்லா இருக்கு...

    ReplyDelete