என் அக்கா கல்யாணம் வரும் 26.09.2016 திங்கட்கிழமை எங்கள் ஊரில் காலை 10 மணிக்கு மேல் 12 மணிக்குள் நடைபெற உள்ளது என்பதை பெரும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
நம் வலையுலக நட்புகள் அனைவரும் நேரில் வருகை தந்து, என் அக்கா கல்யாணத்தை சிறப்பாக நடத்திக்கொடுத்து, மணமக்களை ஆசீர்வதிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
”சாரூ, நாங்கள் ஒன்றும் காதல் கல்யாணத்திற்கு எதிரி இல்லை.
என் பெரிய பொண்ணுக்குப் பெரிய படிப்பும் இல்லை. வேலைக்கும் அவள் போகவில்லை. வீட்டு வேலைகள், சமையல் எல்லாம் சூப்பரா பண்ணுவா. பெரியவங்க கிட்ட மரியாதையா நடந்து கொள்வாள். தம்பி தங்கச்சிகிட்ட பாசமா அன்பா இருப்பாள். இந்த அவளின் நல்ல குணங்கள் எதுவும் யாரு கண்ணுலையும் படவில்லை.
அதனாலேயே அவளுக்கு 28 வயது முடிஞ்ச பிறகுதான், இப்போதுதான் கல்யாணமே செய்ய ப்ராப்தமே ஏற்பட்டுள்ளது. அதுவும் தானாகவே வரவில்லை.
முன்னாவுக்கு நெட் நண்பர்களில் யாரோ ஒரு ஐயரு சாமியும் இருக்காங்க. முன்னா அவங்ககிட்டச் சொல்லி இருப்பா போலிருக்குது. அவரிடம் சொன்ன ஒரு மாதத்திலேயே இந்த இடம் அமைந்திடுச்சு. அந்த ஐயர் சாமிக்கு ரொம்ப நல்ல மனது. அவங்க பிரார்த்தனை ஆசீர்வாதத்துலேதான் இந்தக் கல்யாணம் கூடி வந்திச்சு. அந்த ஐயரு எங்கே இருந்தாலும் 100 வருஷம் ஆரோக்யமா இருக்கோணும்”ன்னு ஏதேதோ சொல்ல ஆரம்பித்து விட்டார்களாம்.
[ அந்த ஐயர் சாமி ..... ’யாரோ ..... அவர் யாரோ?’ ..... பாவம் ..... அவர் தலை மும்பையில் எங்கோகூட அன்று நன்கு உருட்டப்பட்டுள்ளது. ]
உடனே முன்னா முந்திக்கொண்டு “அம்மா, நாம கடயநல்லூருக்கு 'முருகு'ன்னு ஒரு பொண்ணு கல்யாணத்துக்குப் போனோமில்லே, அந்தக் கல்யாணமும், அந்த முருகுவின் அண்ணன் கல்யாணமும், அம்புட்டு ஏன் .... நம்ம இந்த சாரூஜியோட கல்யாணமும் எல்லாமே அந்த கோபூஜி ஐயரோட ஆசீர்வாதத்திலேதான் நடந்துச்சு” என மிகவும் ஆர்வத்துடன், குறுக்கே புகுந்து சொல்லி இருக்கிறாள்.
உடனே சாரூஜி குறுக்கிட்டு, “அதெல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும்மா. நான் கேட்ட கேள்விக்கு வெளிப்படையான பதில் சொல்லுங்கம்மா” என்று நேரிடையாகவே கேட்டிருக்கிறாள்.
அவ்வளவு ஒரு ஆர்வம் .... நம் முன்னா மேல் எங்கட சாரூஜிக்கு.
[ அந்த அளவுக்கு சாரூஜியை, முன்னா முன்கூட்டியே நன்கு முடுக்கி விட்டிருப்பாளோ என்னவோ, யாரு கண்டா? :) ]
முன்னாவின் அம்மாவும் இப்போ கொஞ்சம் மனம் திறந்து பேச ஆரம்பித்து விட்டார்களாம்.
“சாரூ, முன்னா நிறைய படிச்சு இருக்கா. நல்ல வேலையில் அமர்ந்து, கை நிறைய சம்பாதிக்கவும் செய்கிறாள். அவள் அக்காவுக்கு கல்யாணம் தட்டிக்கொண்டே வந்ததுபோல இவளுக்கு ஆகவே ஆகாது.
இன்னிக்கு வரைக்கும் தன் வீடு உண்டு, தன் ஆபீஸ் உண்டு என்றுதான், எங்க முன்னா இருந்து வருகிறாள். அவளைப்பத்தி எந்த ஒரு கம்ப்ளெயிண்டும் எங்க காதுவரை வரவில்லை.
எங்க பரமக்குடி சின்ன ஊருதான். அவள் எங்கே யாருகூட சுத்தினாலும், எங்க கவனத்துக்கு அது உடனே வந்துடும்.
முன்னா இதுவரை எந்த ஒரு ஃப்ரண்ட் வீட்டுக்கும் போனது கிடையாது. அவள் தன் ஃப்ரண்டுன்னு யாரையும் எங்க வீட்டுக்கும் கூட்டி வந்தது கிடையாது.
மிஞ்சி மிஞ்சிப்போனால் பக்கத்து வீட்டிலே இருக்கும் ஓர் ஐயர் மாமி கிட்டால போய் அரட்டை அடிச்சுட்டு வருவாள். இதுவரை எங்களுக்கு அடங்கின பொண்ணாத்தான் இருக்கிறாள். அப்படியே எங்களுக்கே தெரியாம யாராவது பையன், அவளை விரும்பினா, முன்னா எங்களிடம் அதை மறைக்கவே மாட்டாள்.
[ அடடா, எவ்வளவு ஒரு அசைக்க முடியாத நம்பிக்கை அந்த தாய்க்குத்தான் ..... தன் சேய்மீது, வெரி குட் ! வெரி வெரி இண்டரெஸ்டிங் ஸ்பீச்.... :) ]
பெரும்பாலான முஸ்லீம்கள், ஜாதி விட்டு ஜாதிலே பொண்ணு எடுப்பதும் இல்லை ..... பொண்ணு கொடுப்பதும் இல்லை. ஆனால் எங்களைப் பொறுத்தவரை எங்க பொண்ணோட சந்தோஷம்தான் முக்கியம். மனசு ஒத்து வாழப்போறவங்க அந்தச் சின்னஞ்சிறுசுகள் தானே; இதில் நாம் ஏன் வரட்டுப்பிடிவாதம் பிடிக்கணும்ன்னு தெளிவாகத்தான் இருக்கிறோம்.
[ அடடா, அம்மான்னா சும்மா ... இப்படித்தான் இருக்கணும். முன்னா மிகவும் கொடுத்து வைத்தவள், போலிருக்குது!!!!. சபாஷ் மீனா ! :) ]
எங்கப் பக்கத்து வீட்டிலே ஐயருதான் இருக்காங்க. மூணு வருஷமா எங்களுக்குள் நல்ல பழக்கம் இருக்குது. அவர்களை நல்ல நண்பர்களாகத்தான் நினைக்கத் தோன்றுகிறதே தவிர .... அவங்க ப்ராமின்ஸ் .... நாங்க முஸ்லீம் என்ற எண்ணமே தோன்றுவது இல்லை.
அவங்க வீட்டிலே என்ன பலகாரம், பட்சணம் பண்ணினாலும் எங்க வீட்டுக்கும் தாராளமாகத் தருவாங்க;
எங்க வீட்டிலிருந்து யாரு அவங்க வீட்டுக்குப்போனாலும், சமையல் கட்டுவரை உள்ளே வர அனுமதிப்பாங்க;
ஆனாக்க எங்க வீட்டு வாசல்படி தாண்டி உள்ளேயே வர மாட்டாங்க. எங்க வீட்டிலே தண்ணி கூடக் குடிக்க மாட்டாங்க. அவங்களுக்குன்னு சில கட்டுப்பாடுகள் இருக்கலாம்தான்;
சாரூ ..... இப்போ நீங்க கேட்ட கேள்விக்கு நான் சொல்லும் பதில்:- நானும் முன்னாவின் அப்பாவும், முன்னாவின் சந்தோஷத்துக்காக, அவள் யாரையாவது விரும்புகிறேன் என்று எங்களிடம் சொன்னால் நாங்க சம்மதிக்கத்தான் செய்வோம்” என்று சொல்லி முடித்துள்ளார்கள்.
தன் அம்மா இவ்வாறு மூச்சுவிடாமல் பேசியதைக் கேட்ட முன்னாவுக்கு ஒரே ஆச்சர்யமாக இருந்துள்ளது. இதை அவளும் எதிர்பார்க்கவே இல்லையாம்.
முன்னா மனசுக்குள்ளே யாரு இருக்காங்களோ ..... நமக்குத் தெரியாது. அது நமக்கெல்லாம் தெரிய வேண்டிய அவசியமும் இல்லை.
முன்னாவின் பெற்றோர்கள் சார்பில் முன்னாவின் அம்மா இப்போ, பொதுவாகக் காதலுக்குப் பச்சைக்கொடி காட்டியிருக்காங்க. இது வரவேற்கத்தக்க + பாராட்டப்பட வேண்டிய விஷயம்.
இனி முன்னா என்ற எக்ஸ்ப்ரஸ் வண்டி, அது தன் இஷ்டத்துக்கு, தன் விருப்பபடியே ஸ்பீடாக ஓட வேண்டியதுதான் பாக்கி.
//முன்னா.... என்ன விஷயம்.. கோபால்ஜி.... என்னமோ சொல்றாங்களே.. நீகூட என்கிட்ட ஏதுமே சொல்லல....//
உங்க கிட்டயே அவள் ஏதும் சொல்லவில்லை என்பது ஒருவேளை உண்மையானால் ... அதுபோன்றெல்லாம் ஒரு விஷயமும் இல்லாமலும்கூட இருக்கலாம்.
என்னிடம் மட்டும் அந்த லங்கிணி இரகசியமாக ஏதோ சொல்லி, அதன் அடிப்படையில் நான் இவ்வாறு எழுதியிருப்பதாக தயவுசெய்து நினைக்க வேண்டாம்.
உங்கள் இருவரின் சந்திப்பு நடந்த அன்று, ஏற்பட்டுள்ளதோர் கலந்துரையாடலில், பொதுவாக முன்னாவின் அம்மா, காதலுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர்களாக இல்லாமல், பெண்ணின் விருப்பத்திற்கு மட்டுமே முன்னுரிமை கொடுப்போம் எனச்சொல்லி அவ்வாறு ஏற்படக்கூடும் காதலை ஆதரிப்பவர்களாக மட்டுமே இருப்பதாக, அவர்களின் பேச்சுக்களிலிருந்து நமக்குத் தெரிவதால், ஒருவேளை முன்னாவுக்கு அதுபோல ஏதேனும் மனதில் ஆசை இருந்தால் அதனை தைர்யமாகத் தெரிவிக்கலாம் என மட்டுமே நானும் மேலே சொல்லியுள்ளேன் என்பதை இங்கு உங்களுக்கு மீண்டும் நான் தெளிவு ப-டு-த்-தி-க்கொள்கிறேன்.
நம் முன்னாவும், தன் பெற்றோர்களுக்கும், தன் குடும்ப கெளரவங்களுக்கும், எந்தவொரு தர்மசங்கடங்களையும் எப்போதும் கொடுக்கவே விரும்பாத மிகவும் நல்ல பொண்ணு என்பது எனக்கும் நன்றாகவே தெரியும்.
எனினும் நாளை நடக்கப்போவதை நாம் யாருமே இன்றே அறியோம்.
முடிந்தால் முன்னா கல்யாணத்திற்கு முன்னதாகவே போய் நாமும் அவள் மனதைக் கவர்ந்த அந்த (க் கள்வன்) அதிர்ஷ்டசாலி மாப்பிள்ளை யார் என்று பார்த்துவிட்டு வருவோம்.
அவளின் மனம் போல் மாங்கல்யமாக, முன்னா கல்யாணமும் அடுத்துத் துரத்திக்கொண்டு வெகு விரைவில் வரலாம் என்ற நம்பிக்கை, என்னுள் இப்போது கொஞ்சம் துளிர் விட்டுள்ளது, என்பதில் எனக்கும் முன்னாவைவிட மிகவும் மகிழ்ச்சியே.
’ஈஸ்வரோ ரக்ஷது!’ என்று சொல்லிக்கொள்கிறேன்.
[ஈஸ்வரோ ரக்ஷது என்றால் ’கடவுள் காப்பாற்றுவார்’ என்று ஒரு பொதுவான அர்த்தமும் ’கடவுளால் மட்டுமேதான் காதலர்களைக் காப்பாற்ற முடியும்’ என்று ஒரு ஸ்பெஷல் அர்த்தமும் உண்டு. :) ]
பட்டாஜியும், சாரூஜியும் அழாக்குறையாக, இவர்களின் பயணத்தை ஒத்திப்போட்டு விடும்படியும், மும்பையிலேயே மேலும் ஒரு வாரமோ பத்து நாட்களோ இருந்து, அவசியம் பார்க்க வேண்டிய பல இடங்களையெல்லாம் சுற்றிப்பார்த்துவிட்டு, மெதுவாகப் போகலாமே என்றும் சொல்லியுள்ளனர்.
இந்தக்காலத்தில் இப்படியும் சிலர் !!!!!
அதற்கு நம் முன்னா “இல்லீங்க. நாள் நெருங்கிவிட்ட எங்கள் வீட்டுக்கல்யாணத்திற்கு-வேறு நாங்கள் லீவு எடுக்கணும். சாரூஜியும் இப்போ முழுகாம மாஸமா இருக்காங்கோ. இந்த நேரம் உங்களை நாங்கள், இதற்கும் மேல் தொந்தரவு பண்ணுவதும் சரியாக இருக்காது.....
வெகு விரைவில் இன்னொரு முறை எனக்குப் ’ப்ராப்தம்’ இருந்தால் நான் மட்டும் எங்காளுடன் ஜோடியாக ஹனிமூன் கொண்டாட இங்கு மும்பைக்கே வருகிறேன்” எனச் சொல்லியிருப்பாள் என்பது எனது கற்பனையாகும்.
இரண்டு நாட்கள் மட்டுமே தங்கி இனிமையாகப்பழகிய இவர்களை வழியனுப்பி வைக்க பட்டாஜி & சாரூஜி தம்பதியினருக்கு ஏனோ மனஸோ இஷ்டமோ இல்லை போலிருக்குது.
இப்படியும் இந்தக் கலிகாலத்தில் சில நல்ல மனிதநேயம் மிக்க மனிதர்கள் வட இந்தியாவில் இருப்பதால் மட்டுமே அவ்வப்போது அங்கு மட்டும் நல்ல மழை பெய்து வருகிறது. :)
ஆனால் இங்கு நம் தமிழ்நாட்டில் நன்கு வெயில் கொளுத்தி அடித்து, நம் ஜீவ நதியாம் காவிரியே வரண்டு போய் உள்ளது. :(
>>>>> நாளையும் தொடரும் .... ஆனால் நாளையுடன் முடியும் >>>>>
இந்த பக்கம் அடிக்கடி வந்து பார்த்து கேட்டு ரசிச்சுகிட்டுதான் இருக்கேன்.. பின்னூட்டம்தான் போடுறதில்ல.. கோபால் ஸாரோட எழுத்துக்டள் எனக்கு ரொம்பவே பிடிக்கும்.. அதை தொடர்பதிவா பின்னூட்ட பெட்டியில் போடுவது புதுமையான சூப்பரான ஐடியாவாக இருக்கு. அக்கா கல்யாணத்துகுகு வாழ்த்துகள்.. மேல ஆல் இஸ் வெல... அவங்க சொல்லி இனுப்பதுபோல விவரம் சொல்லி இருக்கலாமே..
//கோபால் ஸாரோட எழுத்துக்டள் எனக்கு ரொம்பவே பிடிக்கும்.. அதை தொடர்பதிவா பின்னூட்ட பெட்டியில் போடுவது புதுமையான சூப்பரான ஐடியாவாக இருக்கு.//
ஆஹா, மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.
என் வலைத்தளத்தில் இன்னும் ஒருசில நாட்களுக்குள், ஒரு மிகச்சிறிய தொடர் பதிவு கொடுக்கப்பட வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. அதற்கான ஆயத்த வேலைகளில் நான் இப்போது மூழ்கியுள்ளேன். இது உங்கள் தகவலுக்காக மட்டுமே.
கோபூஜி ரொம்ப நாள் முன்ன கேட்டிருந்தாங்க... ரொம்ப சீக்கிரமாக போட்டிருக்கேன்
ReplyDeleteசிப்பிக்குள் முத்து. 19 September 2016 at 05:35
Delete//கோபூஜி ரொம்ப நாள் முன்ன கேட்டிருந்தாங்க... ரொம்ப சீக்கிரமாக போட்டிருக்கேன்//
மிக்க நன்றி, மீனா.
’அவள் ஒரு நவரச நாடகமே’தான். அதில் எந்தவிதமான சந்தேகமுமே எனக்கு இல்லை. மிகவும் சந்தோஷமாக உள்ளது. மீண்டும் என் நன்றிகள்.
முன்னா பாத்தும்மா....ரொம்ப சுறுசுறுப்பாலாம் ஆகாதே.....
Deleteபூந்தளிர் 20 September 2016 at 05:20
Delete//முன்னா பாத்தும்மா....ரொம்ப சுறுசுறுப்பாலாம் ஆகாதே.....//
ஆமாம். எங்கட ‘அவள் ஒரு நவரச நாடகம்’ ஆன டீச்சர்-1 அவர்களே சொல்லிட்டாங்கோ.
அதனால் அவள் (முன்னா-மூனா-மீனா-மெஹர் மாமி) வழக்கப்படி சுத்த சோம்பேறியாகவே இனி இருக்கக்கடவது. :)
அன்புடையீர்,
ReplyDeleteஅனைவருக்கும் என் அன்பான வணக்கங்கள்.
என் அக்கா கல்யாணம் வரும் 26.09.2016 திங்கட்கிழமை எங்கள் ஊரில் காலை 10 மணிக்கு மேல் 12 மணிக்குள் நடைபெற உள்ளது என்பதை பெரும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
நம் வலையுலக நட்புகள் அனைவரும் நேரில் வருகை தந்து, என் அக்கா கல்யாணத்தை சிறப்பாக நடத்திக்கொடுத்து, மணமக்களை ஆசீர்வதிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
அன்புடன்
முன்னா +
முன்னா குடும்பத்தார்
தங்களின் இந்த அழைப்பிதழைக் காண மிகவும் சந்தோஷமாக உள்ளது.
Deleteதங்கள் அக்கா கல்யாணம் மிகச்சிறப்பாக நடைபெறவும், புதுமண தம்பதிகள் சீரும் சிறப்புமாக பல்லாண்டுகள் மகிழ்ச்சியுடன் வாழவும் பிரார்த்தித்துக்கொள்கிறோம்.
எங்கள் நல்வாழ்த்துகளை இப்போதே முன்கூட்டியே அட்வான்ஸ் ஆகச் சொல்லிக்கொள்கிறோம்.
:))))) வாழ்க ! :)))))
அவள் ஒரு நவரச நாடகம்
Deleteஆனந்த கவிதையின் ஆலயம்
தழுவிடும் இனங்களில் மானினம்
தமிழும் அவளும் ஓரினம்
அவள் ஒரு நவரச நாடகம்
ஆனந்த கவிதையின் ஆலயம்
மரகத மலர் விடும் பூங்கொடி
மழலை கூறும் பைங்கிளி
மரகத மலர் விடும் பூங்கொடி
மழலை கூறும் பைங்கிளி
நிலவில் ஒளிவிடும் மாணிக்கம்
என் நெஞ்சில் தந்தேன் ஓரிடம் அஹஹஹா
அவள் ஒரு நவரச நாடகம்
ஆனந்த கவிதையின் ஆலயம்
அறுசுவை நிரம்பிய பால்குடம்
ஆடும் நடையே நாட்டியம்
அறுசுவை நிரம்பிய பால்குடம்
ஆடும் நடையே நாட்டியம்
ஊடல் அவளது வாடிக்கை
ஊடல் அவளது வாடிக்கை
என்னைத் தந்தேன் காணிக்கை
அஹஹஹா
அவள் ஒரு நவரச நாடகம்
ஆனந்த கவிதையின் ஆலயம்
-=-=-=-=-=-
படம்: உலகம் சுற்றும் வாலிபன்
இசை: MS விஸ்வநாதன்
பாடியவர்: SP பாலசுப்ரமணியம்
ஆஹா....கல்யாண அழைப்பையே பின்னூட்டத்ல சொல்லிட்டயூ.. சூப்பர்தான்.... மணமக்களுக்கு வாழ்த்துகள்...
Deleteஊடல் அவளது வாடிக்கை
Deleteஊடல் அவளது வாடிக்கை
என்னைத் தந்தேன் காணிக்கை
அஹஹஹா
அவள் ஒரு நவரச நாடகம்
ஆனந்த கவிதையின் ஆலயம் !
வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஇனிதே திருமணம் நடந்து, பல பிறைகள் கண்டு, வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்
வாங்க ஜெயந்தி மேடம். நம்ம பக்கம் ரொம்ப நாளா வரவேல்ல.. பிஸியா.. பரவால்ல.. இப்பமாச்சும் வந்திங்களே சந்தோஷம்..நன்றி..
Delete’மீனா’ என்று என்னால் அன்புடன் அழைக்கப்படும்
ReplyDelete’முன்னா மெஹர் மாமியின் மும்பைப் பயண அனுபவம்’
பகுதி-10
பகுதி-1 க்கான இணைப்பு:
http://htpsipikulmuthu.blogspot.in/2016/09/blog-post_91.html
பகுதி-2 க்கான இணைப்பு:
http://htpsipikulmuthu.blogspot.in/2016/09/blog-post_15.html
பகுதி-3 க்கான இணைப்பு:
http://htpsipikulmuthu.blogspot.in/2016/09/blog-post_78.html
பகுதி-4 க்கான இணைப்பு:
http://htpsipikulmuthu.blogspot.in/2016/09/blog-post_22.html
பகுதி-5 க்கான இணைப்பு:
https://htpsipikulmuthu.blogspot.in/2016/09/blog-post_49.html
பகுதி-6 க்கான இணைப்பு:
http://htpsipikulmuthu.blogspot.in/2016/09/dil-dadap.html
பகுதி-7 க்கான இணைப்பு:
http://htpsipikulmuthu.blogspot.in/2016/09/blog-post_1.html
பகுதி-8 க்கான இணைப்பு:
http://htpsipikulmuthu.blogspot.in/2016/09/blog-post_37.html
பகுதி-9 க்கான இணைப்பு:
http://htpsipikulmuthu.blogspot.in/2016/09/blog-post_29.html
>>>>>
(61)
ReplyDeleteஅப்படி சாரூஜி கேட்டதும், அம்மா என்ன பதில் சொல்லப்போறாங்கன்னு கேட்க, முன்னாவும் மிகவும் ஆர்வமாகவே இருந்திருக்கிறாள் போலிருக்குது.
[இந்த இடத்தில் ’அவாள் அவாள் கவலை அவாள் அவாளுக்கு’ என்று நான் எனக்குள் நினைத்துச் சிரித்துக் கொண்டேன் :) ]
முன்னாவின் அம்மா ஓர் மிகப்பெரிய பிரசங்கமே செய்திருக்கிறார்கள்.
அதை நாமும் இப்போது இங்கு கேட்போமா?
>>>>>
(62)
ReplyDelete”சாரூ, நாங்கள் ஒன்றும் காதல் கல்யாணத்திற்கு எதிரி இல்லை.
என் பெரிய பொண்ணுக்குப் பெரிய படிப்பும் இல்லை. வேலைக்கும் அவள் போகவில்லை. வீட்டு வேலைகள், சமையல் எல்லாம் சூப்பரா பண்ணுவா. பெரியவங்க கிட்ட மரியாதையா நடந்து கொள்வாள். தம்பி தங்கச்சிகிட்ட பாசமா அன்பா இருப்பாள். இந்த அவளின் நல்ல குணங்கள் எதுவும் யாரு கண்ணுலையும் படவில்லை.
இந்தக்காலப் பசங்க வேலைக்குப்போற பொண்ணாத்தான் எதிர்பார்க்கிறார்கள். அவள் சம்பாதித்துக் கொண்டுவரும் பணத்தில் மட்டுமேதான் குறியா இருக்காங்க.
அதனாலேயே அவளுக்கு 28 வயது முடிஞ்ச பிறகுதான், இப்போதுதான் கல்யாணமே செய்ய ப்ராப்தமே ஏற்பட்டுள்ளது. அதுவும் தானாகவே வரவில்லை.
முன்னாவுக்கு நெட் நண்பர்களில் யாரோ ஒரு ஐயரு சாமியும் இருக்காங்க. முன்னா அவங்ககிட்டச் சொல்லி இருப்பா போலிருக்குது. அவரிடம் சொன்ன ஒரு மாதத்திலேயே இந்த இடம் அமைந்திடுச்சு. அந்த ஐயர் சாமிக்கு ரொம்ப நல்ல மனது. அவங்க பிரார்த்தனை ஆசீர்வாதத்துலேதான் இந்தக் கல்யாணம் கூடி வந்திச்சு. அந்த ஐயரு எங்கே இருந்தாலும் 100 வருஷம் ஆரோக்யமா இருக்கோணும்”ன்னு ஏதேதோ சொல்ல ஆரம்பித்து விட்டார்களாம்.
[ அந்த ஐயர் சாமி ..... ’யாரோ ..... அவர் யாரோ?’ ..... பாவம் ..... அவர் தலை மும்பையில் எங்கோகூட அன்று நன்கு உருட்டப்பட்டுள்ளது. ]
>>>>>
(63)
ReplyDeleteஉடனே முன்னா முந்திக்கொண்டு “அம்மா, நாம கடயநல்லூருக்கு 'முருகு'ன்னு ஒரு பொண்ணு கல்யாணத்துக்குப் போனோமில்லே, அந்தக் கல்யாணமும், அந்த முருகுவின் அண்ணன் கல்யாணமும், அம்புட்டு ஏன் .... நம்ம இந்த சாரூஜியோட கல்யாணமும் எல்லாமே அந்த கோபூஜி ஐயரோட ஆசீர்வாதத்திலேதான் நடந்துச்சு” என மிகவும் ஆர்வத்துடன், குறுக்கே புகுந்து சொல்லி இருக்கிறாள்.
[அவ்வப்போது சான்ஸ் கிடைத்தால், என் மண்டையைப்போட்டு உருட்டா விட்டால், இந்தக்குட்டிகளுக்கெல்லாம் பொழுதே போவது இல்லை.]
>>>>>
பின்ன... உங்கள சும்மா விட்டுடுவமா....நல்லா மாட்டிகிட்டிங்களா...
Deleteசிப்பிக்குள் முத்து. 19 September 2016 at 22:13
Delete//பின்ன... உங்கள சும்மா விட்டுடுவமா....//
ஹைய்யோ ! கடிச்சுக் குதறிடுவீங்களோன்னு ஒரே பயமாக்கீதூஊஊஊஊ !
//நல்லா மாட்டிகிட்டிங்களா...//
நல்லா மாட்டிக்கிட்டது என்னவோ வாஸ்தவம்தான்.
சான்ஸ் கிடைத்தால் உருவிக்கொண்டு ஓடித் தப்பிக்கவும் நினைத்துக் கொண்டிருக்கிறேனாக்கும்!!
(64)
ReplyDeleteஉடனே சாரூஜி குறுக்கிட்டு, “அதெல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும்மா. நான் கேட்ட கேள்விக்கு வெளிப்படையான பதில் சொல்லுங்கம்மா” என்று நேரிடையாகவே கேட்டிருக்கிறாள்.
அவ்வளவு ஒரு ஆர்வம் .... நம் முன்னா மேல் எங்கட சாரூஜிக்கு.
[ அந்த அளவுக்கு சாரூஜியை, முன்னா முன்கூட்டியே நன்கு முடுக்கி விட்டிருப்பாளோ என்னவோ, யாரு கண்டா? :) ]
>>>>>
(65)
ReplyDeleteமுன்னாவின் அம்மாவும் இப்போ கொஞ்சம் மனம் திறந்து பேச ஆரம்பித்து விட்டார்களாம்.
“சாரூ, முன்னா நிறைய படிச்சு இருக்கா. நல்ல வேலையில் அமர்ந்து, கை நிறைய சம்பாதிக்கவும் செய்கிறாள். அவள் அக்காவுக்கு கல்யாணம் தட்டிக்கொண்டே வந்ததுபோல இவளுக்கு ஆகவே ஆகாது.
இன்னிக்கு வரைக்கும் தன் வீடு உண்டு, தன் ஆபீஸ் உண்டு என்றுதான், எங்க முன்னா இருந்து வருகிறாள். அவளைப்பத்தி எந்த ஒரு கம்ப்ளெயிண்டும் எங்க காதுவரை வரவில்லை.
எங்க பரமக்குடி சின்ன ஊருதான். அவள் எங்கே யாருகூட சுத்தினாலும், எங்க கவனத்துக்கு அது உடனே வந்துடும்.
முன்னா இதுவரை எந்த ஒரு ஃப்ரண்ட் வீட்டுக்கும் போனது கிடையாது. அவள் தன் ஃப்ரண்டுன்னு யாரையும் எங்க வீட்டுக்கும் கூட்டி வந்தது கிடையாது.
மிஞ்சி மிஞ்சிப்போனால் பக்கத்து வீட்டிலே இருக்கும் ஓர் ஐயர் மாமி கிட்டால போய் அரட்டை அடிச்சுட்டு வருவாள். இதுவரை எங்களுக்கு அடங்கின பொண்ணாத்தான் இருக்கிறாள். அப்படியே எங்களுக்கே தெரியாம யாராவது பையன், அவளை விரும்பினா, முன்னா எங்களிடம் அதை மறைக்கவே மாட்டாள்.
[ அடடா, எவ்வளவு ஒரு அசைக்க முடியாத நம்பிக்கை அந்த தாய்க்குத்தான் ..... தன் சேய்மீது, வெரி குட் ! வெரி வெரி இண்டரெஸ்டிங் ஸ்பீச்.... :) ]
>>>>>
(66)
ReplyDeleteபெத்தவங்களாகிய நாங்க எங்க பொண்ணுக்கு மாப்பிள்ளை தேடும்போது, பையனோட குணம், வேலை, குடும்பம், நம்ம பொண்ணைக் கடைசிவரை நல்லா பார்த்துக்கொள்வானா போன்ற பல விஷயங்களை யோசித்துத்தானே, நாங்களும் முடிவெடுப்போம்.
பெரும்பாலான முஸ்லீம்கள், ஜாதி விட்டு ஜாதிலே பொண்ணு எடுப்பதும் இல்லை ..... பொண்ணு கொடுப்பதும் இல்லை. ஆனால் எங்களைப் பொறுத்தவரை எங்க பொண்ணோட சந்தோஷம்தான் முக்கியம். மனசு ஒத்து வாழப்போறவங்க அந்தச் சின்னஞ்சிறுசுகள் தானே; இதில் நாம் ஏன் வரட்டுப்பிடிவாதம் பிடிக்கணும்ன்னு தெளிவாகத்தான் இருக்கிறோம்.
[ அடடா, அம்மான்னா சும்மா ... இப்படித்தான் இருக்கணும். முன்னா மிகவும் கொடுத்து வைத்தவள், போலிருக்குது!!!!. சபாஷ் மீனா ! :) ]
>>>>>
(67)
ReplyDeleteஜாதி என்னங்க பெரிய ஜாதி;
எங்கப் பக்கத்து வீட்டிலே ஐயருதான் இருக்காங்க. மூணு வருஷமா எங்களுக்குள் நல்ல பழக்கம் இருக்குது. அவர்களை நல்ல நண்பர்களாகத்தான் நினைக்கத் தோன்றுகிறதே தவிர .... அவங்க ப்ராமின்ஸ் .... நாங்க முஸ்லீம் என்ற எண்ணமே தோன்றுவது இல்லை.
அவங்க வீட்டிலே என்ன பலகாரம், பட்சணம் பண்ணினாலும் எங்க வீட்டுக்கும் தாராளமாகத் தருவாங்க;
எங்க வீட்டிலிருந்து யாரு அவங்க வீட்டுக்குப்போனாலும், சமையல் கட்டுவரை உள்ளே வர அனுமதிப்பாங்க;
ஆனாக்க எங்க வீட்டு வாசல்படி தாண்டி உள்ளேயே வர மாட்டாங்க. எங்க வீட்டிலே தண்ணி கூடக் குடிக்க மாட்டாங்க. அவங்களுக்குன்னு சில கட்டுப்பாடுகள் இருக்கலாம்தான்;
எதுக்குச் சொல்றேன்னா ஜாதி மதங்கள் நாம மனுஷங்களாப் பார்த்துப் பிரிச்சு வைச்சுக்கிட்டதுதானே !
[ காட்டாற்று வெள்ளம் போல சும்மாப் பிச்சு உதறியிருக்காங்க, அந்த முன்னாவின் அம்மா. கேட்கவே சந்தோஷமா இருக்குது ]
>>>>>
(68)
ReplyDeleteசாரூ ..... இப்போ நீங்க கேட்ட கேள்விக்கு நான் சொல்லும் பதில்:- நானும் முன்னாவின் அப்பாவும், முன்னாவின் சந்தோஷத்துக்காக, அவள் யாரையாவது விரும்புகிறேன் என்று எங்களிடம் சொன்னால் நாங்க சம்மதிக்கத்தான் செய்வோம்” என்று சொல்லி முடித்துள்ளார்கள்.
தன் அம்மா இவ்வாறு மூச்சுவிடாமல் பேசியதைக் கேட்ட முன்னாவுக்கு ஒரே ஆச்சர்யமாக இருந்துள்ளது. இதை அவளும் எதிர்பார்க்கவே இல்லையாம்.
முன்னா மனசுக்குள்ளே யாரு இருக்காங்களோ ..... நமக்குத் தெரியாது. அது நமக்கெல்லாம் தெரிய வேண்டிய அவசியமும் இல்லை.
முன்னாவின் பெற்றோர்கள் சார்பில் முன்னாவின் அம்மா இப்போ, பொதுவாகக் காதலுக்குப் பச்சைக்கொடி காட்டியிருக்காங்க. இது வரவேற்கத்தக்க + பாராட்டப்பட வேண்டிய விஷயம்.
இனி முன்னா என்ற எக்ஸ்ப்ரஸ் வண்டி, அது தன் இஷ்டத்துக்கு, தன் விருப்பபடியே ஸ்பீடாக ஓட வேண்டியதுதான் பாக்கி.
நல்வாழ்த்துகள் .... முன்னா-மெஹர்-மீனா மாமி.
>>>>>
முன்னா.... என்ன விஷயம்.. கோபால்ஜி.... என்னமோ சொல்றாங்களே.. நீகூட என்கிட்ட ஏதுமே சொல்லல....
Deleteப்ராப்தம் 20 September 2016 at 23:36
Delete//முன்னா.... என்ன விஷயம்.. கோபால்ஜி.... என்னமோ சொல்றாங்களே.. நீகூட என்கிட்ட ஏதுமே சொல்லல....//
உங்க கிட்டயே அவள் ஏதும் சொல்லவில்லை என்பது ஒருவேளை உண்மையானால் ... அதுபோன்றெல்லாம் ஒரு விஷயமும் இல்லாமலும்கூட இருக்கலாம்.
என்னிடம் மட்டும் அந்த லங்கிணி இரகசியமாக ஏதோ சொல்லி, அதன் அடிப்படையில் நான் இவ்வாறு எழுதியிருப்பதாக தயவுசெய்து நினைக்க வேண்டாம்.
உங்கள் இருவரின் சந்திப்பு நடந்த அன்று, ஏற்பட்டுள்ளதோர் கலந்துரையாடலில், பொதுவாக முன்னாவின் அம்மா, காதலுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர்களாக இல்லாமல், பெண்ணின் விருப்பத்திற்கு மட்டுமே முன்னுரிமை கொடுப்போம் எனச்சொல்லி அவ்வாறு ஏற்படக்கூடும் காதலை ஆதரிப்பவர்களாக மட்டுமே இருப்பதாக, அவர்களின் பேச்சுக்களிலிருந்து நமக்குத் தெரிவதால், ஒருவேளை முன்னாவுக்கு அதுபோல ஏதேனும் மனதில் ஆசை இருந்தால் அதனை தைர்யமாகத் தெரிவிக்கலாம் என மட்டுமே நானும் மேலே சொல்லியுள்ளேன் என்பதை இங்கு உங்களுக்கு மீண்டும் நான் தெளிவு ப-டு-த்-தி-க்கொள்கிறேன்.
நம் முன்னாவும், தன் பெற்றோர்களுக்கும், தன் குடும்ப கெளரவங்களுக்கும், எந்தவொரு தர்மசங்கடங்களையும் எப்போதும் கொடுக்கவே விரும்பாத மிகவும் நல்ல பொண்ணு என்பது எனக்கும் நன்றாகவே தெரியும்.
எனினும் நாளை நடக்கப்போவதை நாம் யாருமே இன்றே அறியோம்.
’ஈஸ்வரோ ரக்ஷது !’
(69)
ReplyDeleteமுடிந்தால் முன்னா கல்யாணத்திற்கு முன்னதாகவே போய் நாமும் அவள் மனதைக் கவர்ந்த அந்த (க் கள்வன்) அதிர்ஷ்டசாலி மாப்பிள்ளை யார் என்று பார்த்துவிட்டு வருவோம்.
அவளின் மனம் போல் மாங்கல்யமாக, முன்னா கல்யாணமும் அடுத்துத் துரத்திக்கொண்டு வெகு விரைவில் வரலாம் என்ற நம்பிக்கை, என்னுள் இப்போது கொஞ்சம் துளிர் விட்டுள்ளது, என்பதில் எனக்கும் முன்னாவைவிட மிகவும் மகிழ்ச்சியே.
’ஈஸ்வரோ ரக்ஷது!’ என்று சொல்லிக்கொள்கிறேன்.
[ஈஸ்வரோ ரக்ஷது என்றால் ’கடவுள் காப்பாற்றுவார்’ என்று ஒரு பொதுவான அர்த்தமும் ’கடவுளால் மட்டுமேதான் காதலர்களைக் காப்பாற்ற முடியும்’ என்று ஒரு ஸ்பெஷல் அர்த்தமும் உண்டு. :) ]
>>>>>
(70)
ReplyDeleteபட்டாஜியும், சாரூஜியும் அழாக்குறையாக, இவர்களின் பயணத்தை ஒத்திப்போட்டு விடும்படியும், மும்பையிலேயே மேலும் ஒரு வாரமோ பத்து நாட்களோ இருந்து, அவசியம் பார்க்க வேண்டிய பல இடங்களையெல்லாம் சுற்றிப்பார்த்துவிட்டு, மெதுவாகப் போகலாமே என்றும் சொல்லியுள்ளனர்.
இந்தக்காலத்தில் இப்படியும் சிலர் !!!!!
அதற்கு நம் முன்னா “இல்லீங்க. நாள் நெருங்கிவிட்ட எங்கள் வீட்டுக்கல்யாணத்திற்கு-வேறு நாங்கள் லீவு எடுக்கணும். சாரூஜியும் இப்போ முழுகாம மாஸமா இருக்காங்கோ. இந்த நேரம் உங்களை நாங்கள், இதற்கும் மேல் தொந்தரவு பண்ணுவதும் சரியாக இருக்காது.....
வெகு விரைவில் இன்னொரு முறை எனக்குப் ’ப்ராப்தம்’ இருந்தால் நான் மட்டும் எங்காளுடன் ஜோடியாக ஹனிமூன் கொண்டாட இங்கு மும்பைக்கே வருகிறேன்” எனச் சொல்லியிருப்பாள் என்பது எனது கற்பனையாகும்.
இரண்டு நாட்கள் மட்டுமே தங்கி இனிமையாகப்பழகிய இவர்களை வழியனுப்பி வைக்க பட்டாஜி & சாரூஜி தம்பதியினருக்கு ஏனோ மனஸோ இஷ்டமோ இல்லை போலிருக்குது.
இப்படியும் இந்தக் கலிகாலத்தில் சில நல்ல மனிதநேயம் மிக்க மனிதர்கள் வட இந்தியாவில் இருப்பதால் மட்டுமே அவ்வப்போது அங்கு மட்டும் நல்ல மழை பெய்து வருகிறது. :)
ஆனால் இங்கு நம் தமிழ்நாட்டில் நன்கு வெயில் கொளுத்தி அடித்து, நம் ஜீவ நதியாம் காவிரியே வரண்டு போய் உள்ளது. :(
>>>>> நாளையும் தொடரும் .... ஆனால் நாளையுடன் முடியும் >>>>>
சந்தோஷம் முன்னாஜி.. பின்னூட்ட பாக்ஸ்லயே கல்யாணத்துக்கு அழைத்தது புதுமையான ஐடியாதான்.. என்னங்க வெறும்ன கல்யாணத்துக்கு வாங்கன்னா எப்படி வரமுடியும்.. எந்த ஊருல.... எந்த கல்யாண மண்டபத்துல மணமக்கள் பெயரு எதுவுமே சொல்லாம அழச்சா எப்படிண்க வர முடியும்... விவரம் சொல்லுங்க ஜி..
ReplyDeleteமுன்னா அக்கா கல்யாணமா... ஸோ.... உங்க லைன் க்ளியர்.....சந்தோஷம்மா... இங்கேந்தே வாழ்த்துகளை தெரிவிச்சுக்கறேன்
ReplyDeleteமுன்னாஜி அக்கா கல்யாணத்துக்கு வாழ்த்துகள்... அடுத்து உங்க கல்யாண அழைப்புதானே.. அதை இப்படி சாதானணமால்லாம் அனுப்பக்கூடாது.. பத்திரிகையே காப்பி பண்ணி அனுப்பணும் சரியா..
ReplyDeleteஇந்த பக்கம் அடிக்கடி வந்து பார்த்து கேட்டு ரசிச்சுகிட்டுதான் இருக்கேன்.. பின்னூட்டம்தான் போடுறதில்ல.. கோபால் ஸாரோட எழுத்துக்டள் எனக்கு ரொம்பவே பிடிக்கும்.. அதை தொடர்பதிவா பின்னூட்ட பெட்டியில் போடுவது புதுமையான சூப்பரான ஐடியாவாக இருக்கு. அக்கா கல்யாணத்துகுகு வாழ்த்துகள்.. மேல ஆல் இஸ் வெல... அவங்க சொல்லி இனுப்பதுபோல விவரம் சொல்லி இருக்கலாமே..
ReplyDeleteஸ்ரத்தா, ஸபுரி... 19 September 2016 at 22:30
Delete//கோபால் ஸாரோட எழுத்துக்டள் எனக்கு ரொம்பவே பிடிக்கும்.. அதை தொடர்பதிவா பின்னூட்ட பெட்டியில் போடுவது புதுமையான சூப்பரான ஐடியாவாக இருக்கு.//