Tuesday, 13 September 2016

ஓஹ்ஹோ எந்தன் பேபி


61 comments:

  1. ஓஹோ எந்தன் பேபி
    நீ வாராய் எந்தன் பேபி

    கலை மேவும் வர்ண ஜாலம்
    கொண்ட கோலம் காணலாம்

    ஓஹோ எந்தன் பேபி
    நீ வாராய் எந்தன் பேபி

    கலை மேவும் வர்ண ஜாலம்
    கொண்ட கோலம் காணலாம்

    ஓஹோ எந்தன் பேபி

    ஓஹோ எந்தன் டார்லிங்
    நீ வாராய் எந்தன் டார்லிங்

    கலை மேவும் வர்ண ஜாலம்
    கொண்ட கோலம் காணலாம்

    ஓஹோ எந்தன் டார்லிங்

    நீ வாராய் எந்தன் டார்லிங்
    கலை மேவும் வர்ண ஜாலம்

    கொண்ட கோலம் காணலாம்
    ஓஹோ எந்தன் டார்லிங்

    பூவில் தோன்றும் மென்மை உந்தன்
    பெண்மை அல்லவா

    பாவம் தென்றல் வேகும் உங்கள்
    கண்கள் அல்லவா

    பூவில் தோன்றும் மென்மை உந்தன்
    பெண்மை அல்லவா

    பாவம் தென்றல் வேகும் உங்கள்
    கண்கள் அல்லவா

    இன்னும் சொல்லவா
    அதில் மன்னன் அல்லவா

    அந்த எண்ணம் போதும் போதும்
    எந்தன் பேபி நீ வா

    ஓஹோ எந்தன் டார்லிங்
    நீ வாராய் எந்தன் டார்லிங்

    கலை மேவும் வர்ண ஜாலம்
    கொண்ட கோலம் காணலாம்

    ஓஹோ எந்தன் டார்லிங்
    கண்ணே உன்னை காணும் கண்கள்
    பின்னால் இல்லையே

    கண்ணால் காணும் வண்ணம் நானும்
    உன்னால் இல்லையே

    கண்ணே உன்னை காணும் கண்கள்
    பின்னால் இல்லையே

    கண்ணால் காணும் வண்ணம் நானும்
    உன்னால் இல்லையே

    அன்பே ஓடிவா
    என் ராஜா ஓடிவா

    வெகு தூரம் நிற்கும் காதல் போதும்
    பேபி ஓடிவா

    ஓஹோ எந்தன் பேபி
    நீ வாராய் எந்தன் பேபி

    கலை மேவும் வர்ண ஜாலம்
    கொண்ட கோலம் காணலாம்
    ஓஹோ எந்தன் பேபி

    ReplyDelete
    Replies
    1. கோபு பெரிப்பாவோட பாடல் வரிகள் படிச்சுட்டு பாட்ட கேட்டாதான் ஜாலியா இருக்கு

      Delete
    2. happy 15 September 2016 at 05:48

      //கோபு பெரிப்பாவோட பாடல் வரிகள் படிச்சுட்டு பாட்ட கேட்டாதான் ஜாலியா இருக்கு//

      எவ்வளவோ மன வருத்தங்களுக்கு இடையேயும், இங்கே நான் வரும்போது, என் செல்ல பேபியான உன்னைக் காண்பதில் மட்டுமே எனக்குக் கொஞ்சம் ஹாப்பியாக உள்ளதுடா ..... என் தங்கமே.

      மிக்க நன்றிடா செல்லம் .... என் அச்சு வெல்லம்.

      Delete
  2. படம்: தேன் நிலவு

    ஆண்டு: 1961

    பாடல்: கண்ணதாஸன்

    இசை: ஏ.எம். ராஜா

    பாடியவர்: ஏ.எம். ராஜா + எஸ். ஜானகி

    ReplyDelete
  3. அந்தக்கால ’காதல் மன்னன் ஜெமினி கணேசன்’ பாடல்களாக வெளியிட்டு அசத்தியுள்ளாய் மீனா.

    உன் அக்கா கல்யாணம் முடிந்தவுடனேயே உனக்கும் சீக்கரமாக கல்யாணம் ஆகி, நீயும் இதுபோலத் தேன்நிலவுக்கு (ஹனிமூன்) செல்லவும் ஆடிப்பாடி மகிழவும் என் நல்வாழ்த்துகள்.

    பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. முதல்ல அக்கா கல்யாணம் நல்லபடியா நடந்து முடியட்டும் கோபூஜி..

      Delete
    2. சிப்பிக்குள் முத்து. 15 September 2016 at 05:22

      //முதல்ல அக்கா கல்யாணம் நல்லபடியா நடந்து முடியட்டும் கோபூஜி..//

      உன் அக்கா மிகவும் நல்லவள். ஸாத்வீகமானவள். மிகவும் அப்பாவி. பக்கத்தாத்து மாமி பாஷையில் வாயில்லாப்பூச்சி. இப்போது மிகவும் அதிர்ஷ்டக்காரியாகவும் ஆகிவிட்டாள். அதனால் அவள் கல்யாணம் நல்லபடியாக ஜாம் ஜாம் என்று நடந்துவிடும். அதற்கு ’ஹாஜி அலி தர்ஹா’ ஆசீர்வாதமும், சாரூஜியின் அன்பான கவனிப்புகளுமே சாட்சியாகி விட்டன.

      ’உன் அக்கா மிகவும் நல்லவள்’ என்று நான் இங்கு சொல்லிவிட்டதால் நீ மிகவும் பொல்லாதவள் என அர்த்தம் இல்லையாக்கும். :)

      Delete
  4. ’மீனா’ என்று என்னால் அன்புடன் அழைக்கப்படும்
    ’முன்னா மெஹர் மாமியின் மும்பைப் பயண அனுபவம்’
    பகுதி-1

    ==========================================================

    (1)

    எங்கெங்கோ வெளிநாடுகளிலும், நம் நாட்டிலேயே தமிழ்நாட்டைத்தாண்டியுள்ள வெளி மாநிலங்களிலும், தமிழ்நாட்டிலேயே உள்ள வெவ்வேறு ஊர்களிலும் உள்ள முகம் தெரியாத நம் நட்புகள் சிலரை, நம் வலையுலகம், தமிழ்மொழி மூலமும், வலையுலக வலைப்பதிவுகளின் மூலமும், பின்னூட்டங்கள் மூலமும், இனிய நண்பர்களாக ஆக்கியுள்ளதில் நம்மில் பலருக்கும் மகிழ்ச்சியோ மகிழ்ச்சியே.

    இந்த நம் ‘சிப்பிக்குள் முத்து’ என்ற வலைப்பதிவினில் பின்தொடர்பவர்களாக நம் மீனாவையும் சேர்த்து ஒன்பது பேர்கள் உள்ளனர். (1) முருகு (2) ஆஸ் இஸ் வெல் (3) பூந்தளிர் (4) வை. கோபாலகிருஷ்ணன் (5) ஹாப்பி (6) ஷாமைன் பாஸ்கோ (7) ஜெயந்தி ஜெயா (8) ப்ராப்தம் - சாரதா (9) ’சிப்பிக்குள் முத்து’ பதிவர் முன்னா என்னும் மெஹ்ருன்னிஸா.

    இதில் ஒருசிலர் மட்டும் வேறு ஒரு சிலரை இதுவரை நேரில் சந்திக்கும் சந்தர்ப்பங்கள் கிட்டியுள்ளன.

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. ஆஹா... கோபூஜி... அறிமுகமே அசத்தலா தொடங்கி இருக்கீங்க...நன்றி..

      Delete
    2. அறிமுகமே அசத்தலா இருக்கே.. சுவாரசியமா எழுத உங்களுக்கு சொல்லியா தரணும்..

      Delete
    3. ப்ராப்தம் 17 September 2016 at 05:39

      //அறிமுகமே அசத்தலா இருக்கே.. சுவாரசியமா எழுத உங்களுக்கு சொல்லியா தரணும்..//

      அடடா, இதுபோல எதையாவதுச் சொல்லி எனக்கு ஒரேயடியா ’ஷை’ ஆக வைக்கிறாயே, சாரூ.

      யார் யாரோ, யார் யாரையோ சந்தித்தை நான் எழுத வேண்டும் என்ற ‘ப்ராப்தம்’ எனக்கு இப்போது ஏற்பட்டுள்ளது.

      எனக்குத்தான் யாரையும் [’யாரோ’வையும்] சந்திக்கப் ப்ராப்தம் இல்லாமல் போய் விட்டது. :(

      Delete
    4. இதுதான் முதல் பகுதியா.. வரேன் நிதானமாக ரசித்து படிக்கணும்

      Delete
    5. பூந்தளிர் 17 September 2016 at 21:17

      //இதுதான் முதல் பகுதியா.. வரேன் நிதானமாக ரசித்து படிக்கணும்//


      ஓஹோ எந்தன் பேபி ராஜாத்தி
      நீ வாராய் எந்தன் பேபி ரோஜாப்பூ

      கலை மேவும் வர்ண ஜாலம்
      கொண்ட கோலம் காணலாம்

      ஓஹோ எந்தன் பேபி ராஜாத்தி
      நீ வாராய் எந்தன் பேபி ரோஜாப்பூ

      கலை மேவும் வர்ண ஜாலம்
      கொண்ட கோலம் காணலாம்

      ஓஹோ எந்தன் பேபி :)))))

      Delete
    6. எல்லாம் நன்மைக்கே என்று நினைச்சுக்க வேண்டியதுதான்..

      Delete
    7. பூந்தளிர் 19 September 2016 at 05:17

      //எல்லாம் நன்மைக்கே என்று நினைச்சுக்க வேண்டியதுதான்..//

      இதைச்சொல்லியுள்ள உன் வாய்க்குள் சர்க்கரை போடணும் போல உள்ளது. நீயே எடுத்து நீயே உன் வாயில் போட்டுக்கோ !

      Delete
    8. சந்தித்த போது மிகவும் சந்தோஷமாகத்தான் இருந்தது. சில சமயம் சந்தோஷங்களே சுமையாக ஆகிவிடுகிறதே... " யாரோ" வை சந்திக்காமல் இருப்பதே நல்லதுக்குதான்......

      Delete
    9. பூந்தளிர் 20 September 2016 at 22:10

      //”யாரோ" வை சந்திக்காமல் இருப்பதே நல்லதுக்குதான்......//

      சரீங்க .... இதுபோல பெரிய வேதாந்தி போல தத்துவமெல்லாம் பேசாதீங்கோ. கோபமா வருது எனக்கு.

      ‘எல்லாம் நன்மைக்கே’ என நினைப்பவன்தான் நானும்.

      எங்கிட்டவே என் பாடத்தைப் போடுறீங்களா? ஓக்கே .... ஓக்கே. செளக்யமா சந்தோஷமா இருங்கோ, நீங்களாவது.

      Delete
    10. எங்கெங்கோ இருக்கிறவங்களையும் நட்பு வட்டத்துக்குள் சேர்த்துவைப்பது இந்த நெட் தான். மொபைல்ல நெட் உபயோகப்படுத்த ஆரம்பித்ததுமுதல் நன்னாவே புரிஞ்சுக்க முடியறது. அதுவும் எனக்கு கோபு பெரிப்பா பொக்கிஷமா கிடைச்சிருக்காங்க..

      Delete
    11. happy 23 September 2016 at 21:39

      //அதுவும் எனக்கு கோபு பெரிப்பா பொக்கிஷமா கிடைச்சிருக்காங்க..//

      எனக்கு மட்டும் என்னவாம் ... அது போலவே தான். ஆனால் அந்தப் பொக்கிஷங்கள் எதையும் நேரில் என் கண்களால் பார்க்க முடியாமல் இருப்பதில் மிகவும் வருத்தமே :(

      அதெல்லாம் கிடக்கட்டும். என் பொக்கிஷங்களை நீ இதோ இந்தப்பதிவுகளில் ஹாப்பியாப் படித்துப்பாருடா..கண்ணு.

      http://gopu1949.blogspot.in/2013/03/1.html - பகுதி-1
      12 பகுதிகள் கொண்ட மிகவும் சுவாரஸ்யமான தொடர்
      http://gopu1949.blogspot.in/2013/04/12.html - பகுதி-12

      Delete
  5. (2)

    இதில் 1ம் நம்பர் முருகு 9ம் நம்பர் முன்னாவை நேரில் சந்தித்திருக்கிறாள்.

    இதில் 3ம் நம்பர் பூந்தளிர் 8ம் நம்பர் ப்ராப்தம் சாரதாவை நேரில் சந்தித்திருக்கிறாள்.

    இதில் 4ம் நம்பர் அடியேன் VGK 7ம் நம்பர் ஜெயாவை நேரில் சந்திக்க முடிந்துள்ளது.

    இதில் 7ம் நம்பர் ஜெயா 4ம் நம்பர் ஆகிய அடியேனை நேரில் சந்தித்திருக்கிறாள்.

    இதில் 8ம் நம்பர் ’ப்ராப்தம் சாரூ’ 3ம் நம்பர் பூந்தளிரையும்
    9ம் நம்பர் முன்னாவையும் நேரில் சந்தித்திருக்கிறாள்.

    இதில் 9ம் நம்பர் மீனா (முன்னா) 1ம் நம்பர் முருகுவையும்
    8ம் நம்பர் ’ப்ராப்தம் சாரூ’வையும் நேரில் சந்தித்திருக்கிறாள்.

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. ஐயோ கோபூஜி... விஜயகாந்து போல நம்பர் கணக்கெல்லாம் சொல்லி கொளப்பாதிங்க..

      Delete
    2. ஆமா கோபால்ஜி நம்பரை படிக்க தல சுத்துது...

      Delete
    3. ப்ராப்தம் 17 September 2016 at 05:40

      //ஆமா கோபால்ஜி நம்பரை படிக்க தல சுத்துது...//

      அவளுக்கு நான் 9ம் நம்பர் கொடுக்க நேர்ந்துள்ளதால், ஒருவேளை அவளுக்கு என் மீது கோபமாக இருக்கலாம்.

      உனக்கும் எனக்கும் 8ம் நம்பர் ராசிதானே. நம் இருவரின் பிறந்த தேதி எட்டு என்றல்லவா வைத்துக்கொண்டுள்ளோம்.

      8ம் நம்பர் சிலருக்கு ராசி இல்லை என்பார்கள். ஆரம்பத்தில் பல்லாண்டுகள் நாம் இருவரும் கஷ்டப்பட்டுள்ள போதிலும் இன்று கொஞ்சம் வசதி வாய்ப்புகளுடன் உள்ளோமே, சாரூ.

      அதற்கு நம் இருவரின் பிறந்த தேதியாகிய நிர்ணயிக்கப்பட்டுள்ள 8ம் நம்பர் தானே காரணமாக இருக்க முடியும்.

      உங்களின் இந்த தலை சுற்றலுக்கு நம்பர்கள் ஏதும் காரணமே அல்ல.

      உள்ளே இருந்து உதைத்துக்கொண்டிருக்கும் நபர்கள் மட்டுமே காரணமாக இருக்கும். :))

      Delete
    4. நம்பரிலும் இவ்வளவு ஆராய்ச்சியா

      Delete
    5. பூந்தளிர் 19 September 2016 at 05:18

      //நம்பரிலும் இவ்வளவு ஆராய்ச்சியா//

      நம்பர் மிகவும் முக்கியம் அல்லவா!

      அதனால்தானே, உனக்கு உன் சாமர்த்தியங்களையெல்லாம் எடைபோட்டு, திருப்தியாகி, நான் டீச்சர் நம்பர் ஒன் (No.1) எனக் கொடுத்துள்ளேன். :)

      Delete
    6. முன்னாதான் முருகு...சாரூ வை சந்திக்க வாய்ப்பு கிடைச்சிருக்கு..சந்தோஷமாகவும் என்சாய் பண்ணிட்டு வந்திருக்காங்க...அவளின் சந்தோஷமாவது நிலைக்கட்டும்

      Delete
    7. பூந்தளிர் 20 September 2016 at 22:12

      முன்னாதான் சந்தோஷமாகவும் என்சாய் பண்ணிட்டு வந்திருக்காங்க...//

      என்னது, சந்தோஷமாக எ-ஞ்-ஜா-ய் பண்ணிட்டு வந்திருக்காளா?

      என்னிடம் அதுபற்றியெல்லாம் ஒன்றுமே மூச்சு விடவில்லையே அந்த லங்கிணி.

      உனக்கு இது எப்படித் தெரியும்?

      Delete
  6. (3)

    இதில் முன்னா முருகுவை சந்தித்த நாள் 03.07.2016. அந்த அவர்களின் இனிய சந்திப்பினைப் பற்றிய விபரங்கள் இதோ இந்தக்கீழ்க்கண்ட பதிவுகளின் பின்னூட்டப் பகுதிகளில் என்னால் ஏற்கனவே மிகவும் சுவைபட எழுதப்பட்டுள்ளன. அதற்கான இணைப்புகள்:

    http://htpsipikulmuthu.blogspot.in/2016/07/blog-post_6.html
    [ Part-1 ... 1 to 11 Points ]

    http://htpsipikulmuthu.blogspot.in/2016/07/dil-thera-diwana-hai-sanam.html
    [ Part-2 ... 12 to 24 Points ]

    http://htpsipikulmuthu.blogspot.in/2016/07/ye-mera-prem-pathr-padkar.html
    [ Part-3 ... 25 to 36 Points ]

    http://htpsipikulmuthu.blogspot.in/2016/07/neerodum-vaigaiyile.html
    திருமணம் ஆகி மஸ்கட் புறப்படும் முன்பு முருகு எழுதியிருந்த உருக்கமான மெயில் தகவல் இதில் இடம் பெற்றுள்ளது.

    -=-=-=-

    மஸ்கட் போனபிறகு, முதன்முறையாக நம் முருகு ஓர் உருக்கமான மெயில் 11.09.2016 அன்று எனக்குக்கொடுத்திருக்கிறாள். அவள் அங்கு செளக்யமாக இருக்கிறாள் என்பதை உங்கள் அனைவருக்கும் தெரிவித்துக்கொள்கிறேன். :)

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்காவது மெயில் பண்ணினாளே.. அதுவர சந்தோசம்.

      Delete
    2. சிப்பிக்குள் முத்து. 15 September 2016 at 05:27

      //உங்களுக்காவது மெயில் பண்ணினாளே.. அதுவர சந்தோசம்.//

      தனக்குத் திருமணம் ஆகும்வரை, சென்ற ஆண்டு அதாவது 2015 வரை, முருகு தன் ஏழ்மை வாழ்க்கையில் மிகவும் கஷ்டப்பட்டவள் ...... என் இளமைகால வறுமை போலவே கிட்டத்தட்ட அப்படியே டிட்டோவாகத்தான், அவளுடையதும் இருந்துள்ளது.

      அதனால் அவளைப் போன்ற ஏழை எளியவர்களிடம் என் பிரியம் இன்றும் கூடுதலாக இருப்பதில் வியப்பேதும் இல்லை.

      இன்று அவளும் ஒரு கோடீஸ்வரியாக மாறி அவள் வாழ்க்கை அமைந்துள்ளது அவளின் ஏதோ ஒரு அதிர்ஷ்டம் என்பதில் நமக்கும் மிகவும் சந்தோஷம் மட்டுமே.

      இருப்பினும் பழைய வாழ்க்கையை இன்னும் இன்றும் மறக்கவே முடியாத அவள், தன் பழைய வாழ்க்கையையும், புதிய வாழ்க்கையையும் ஒப்பிட்டு, அதனை எழுத்தினில் நேரேட் செய்து சொல்லியுள்ள வரிகளில் நான் அப்படியே மேலும் சொக்கிப்போய் இருக்கிறேன்.

      அவளின் முழு மெயிலையும் என்னால் இங்கு ஓபனாகத் தெரிவிக்க இயலாமல் இருப்பினும், ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல ..... இதோ அந்த அவளின் மெயிலின் கடைசி சில வரிகளை தங்கள் அனைவரின் பார்வைக்காகவும் அப்படியே இங்கு காட்டியுள்ளேன் :-

      -=-=-=-=-=-=-=-

      ”நானு அம்மி...அண்ணன் ஈரோட்ல இருக்கையில ரொம்ப சந்தோசமா இருந்துகிட்டம். மள பெஞ்சா ஒளுகுற ஓட்டு வூடுதா. எலி....கறப்பான் பூச்சி பல்லி லாம் குறுக்கால ஓடி வெளயாடிகிட்டே இருந்துகிடும். நெல்லரிசி சோறு வாரம் ஒர்க்காதான் ஆக்க ஏலும். விளிம்பு நசுங்கி போன அலுமினிய தட்டுலதான் சோறு துன்னுகிடுவோம்.

      வசதிதான் இல்லயே தவிர மனசுல பூரா சந்தோசம் இருந்திச்சி.. இப்ப இங்கூட்டுல வசதி அதிகப்படியாதான் இருக்குது. மனசு கனமா போச்சு.

      சந்தோசம் நிம்மதி வசதிகளால கெடைக்காதுன்னு வெளங்குது.

      சரி குருஜி.. மிஸ்டேக்கு பண்ணிகிடாதீக. உங்கள வுட்டா ஆருகிட்டால இதெல்லா சொல்லிகின ஏலும்லா... வாரன் குருஜி....”

      -=-=-=-=-=-=-=-

      //சந்தோசம் நிம்மதி வசதிகளால கெடைக்காதுன்னு வெளங்குது.//

      இது உண்மை. உண்மையோ உண்மை. இது 100 க்கு 100 மிகவும் சத்தியமான, சக்திமிக்க வார்த்தைகள்.

      Very Very Excellent Writing !

      I really appreciate her talents of narrating !!

      vgk

      Delete
    3. எம்பூட்டு அழகா சொல்லி இருக்குது..நம்ம முருகு...

      Delete
    4. என்னதான் வசதிகள் இடையில் வந்தாலும் "வேரை".... மறக்கமுடியலைதான். அதை முருகு ரொம்ப டச்சிங்கா சொல்லி இருக்கா..

      Delete
    5. ப்ராப்தம் 17 September 2016 at 05:42

      //என்னதான் வசதிகள் இடையில் வந்தாலும் "வேரை".... மறக்கமுடியலைதான். அதை முருகு ரொம்ப டச்சிங்கா சொல்லி இருக்கா..//

      நீயும் இங்கு “வேர்” என்ற வார்த்தையொன்றை மிக அழகாகவும், மிகப்பொருத்தமாகவும் போட்டு, என்னை அப்படியே சொக்க வைத்து விட்டாய். :) மிக்க மகிழ்ச்சி.

      ”வாழ்க்கையில் 30 ஆண்டுகள் சேர்ந்தாற்போல கஷ்டப்பட்டவர்களும் இல்லை. 30 ஆண்டுகள் சேர்ந்தாற்போல சுகப்பட்டவர்களும் இல்லை” எனச் சொல்லுவார்கள். ஒருசில பெரியவர்கள் மூலம் இதனை நான் கேள்விப்பட்டுள்ளேன்.

      அதற்கு நீயும், நானும், முருகுவுமே பிரத்யக்ஷமான சாட்சிகளாக இப்போது இருக்கிறோம்.

      கடவுள் நம்மை இனி கைவிட மாட்டார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

      முருகுவின் மெயில் முழுவதுமே மிகவும் டச்சிங் ஆகத்தான் உள்ளது.

      அவளும் தன் கணவருடன் மிகவும் சந்தோஷமாகவேதான் அங்கு இருக்கிறாள். ஒரு குறையும் இல்லை என்பதே பெரும் குறையாக உள்ளதாம் அவளுக்கு. :)

      Delete
    6. எல்லாரும் சௌரியமாகவும் சந்தோஷமாகவும் இருக்கட்டும்

      Delete
    7. பூந்தளிர் 19 September 2016 at 05:20

      //எல்லாரும் சௌரியமாகவும் சந்தோஷமாகவும் இருக்கட்டும்//

      ’லோகா ஸமஸ்தா சுகினோ பவந்து’ என அசரீரி வாக்குப் போலச் சொல்லியுள்ள எங்கட அம்பாள் ராஜாத்திக்கு ஒரு பெரிய ’ஜே’ போட்டுக்கொள்கிறேன்.

      Delete
    8. முருகு இப்ப மஸ்கட்ல இருக்காளா... உங்கள் பதிவுகளுக்கு நாங்க இருவரும் எவ்வளவு முட்டி மோதித்டிருக்கோம் பின்னூட்டத்துவ எதையுமே மறக்கவே முடியல..

      Delete
    9. பூந்தளிர் 20 September 2016 at 05:33

      //முருகு இப்ப மஸ்கட்ல இருக்காளா...//

      ஆமாம். அவள் இப்போ மஸ்கட்ல பிஸ்கட் (MUNAKKO BISCUITS) சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறாள்.

      //உங்கள் பதிவுகளுக்கு நாங்க இருவரும் எவ்வளவு முட்டி மோதிக்கிட்டு இருந்தோம் பின்னூட்டத்துலே. எதையுமே மறக்கவே முடியல..//

      அதெல்லாம் ஒரு பொற்காலம் என ஆகிவிட்டதே, என் ராஜாத்தி. என்னாலும்தான் மறக்கவே முடியவில்லை.

      http://gopu1949.blogspot.in/2015/12/100-2015.html

      என்ன செய்வது. காலம் மாறமாற காட்சிகளும் மாறிக்கொண்டே இருக்கின்றன.

      சண்டிக்குதிரைகளான உங்கள் இருவருக்கும்தான் என்னால் இன்னும் பரிசுத்தொகைகளைக் கொடுக்க ‘கொடுப்பிணை’ இல்லாமலேயே இருந்து வருகிறது. :(

      முன்னாவின் முழங்கால் உயரத்துக்கு, முரட்டுக்குத்து விளக்குகளாக, அதுவும் வெள்ளியில் கொடுக்கக்கூடிய + வாங்கிக்கொள்ளக் கூடிய உச்ச நிலையினில் இருக்கும் கோடீஸ்வரிகளுக்கு நான் அன்புடன் தயாரித்து வைத்திருந்த அந்த அன்பு கலந்த மிகச்சிறிய பரிசுத்தொகை துச்சமாகத்தான் இருந்திருக்கும்.

      ஏதோ என்னால் முடிந்தது அவ்வளவுதான்.

      ஏழைக்குத்தகுந்த எள்ளுரண்டை எனச் சொல்லுவார்களே ... அதுபோலத்தான் அதுவும். நினைத்தால் எனக்கே கொஞ்சம் வெட்கமாகவும் இருக்குது.

      இருப்பினும் உங்கள் இருவரின் நினைவாகவும் என்னிடம் இன்றுவரை மிகவும் பத்திரமாகப் பாதுகாத்துக்கொண்டு இருக்கிறேன்.

      Delete
  7. (4)

    01.09.2016 வியாழக்கிழமை காலை அவளின் ஊரிலிருந்து இரயில் மூலம் மும்பைக்குப் புறப்பட்டுச் சென்ற நம் முன்னா மும்பையிலிருந்து 04.09.2016 ஞாயிறு இரவு புறப்பட்டு, 06.09.2016 செவ்வாய் இரவு அவளின் ஊருக்குத் திரும்பி இருக்கிறாள்.

    முன்னாவுடன் மும்பைக்குச் சென்றவர்கள்: அவளின் அப்பா + அம்மா + அக்கா ஆகிய மூவரும்.

    நம் முன்னாவின் அக்காவுக்கு வரும் 26.09.2016 திங்கட்கிழமை நிக்காஹ் (திருமணம்) நடக்க உள்ளது என்பதை இங்கு மகிழ்ச்சியுடன் அனைவருக்கும் தெரிவித்துக்கொள்கிறேன்.

    பாஷை தெரியாத அந்த ஊரான மும்பைக்கு ஏன் இவர்களின் இந்த திடீர் பயணம்? அங்கு இரண்டு நாட்கள் தங்கியது எங்கே? சந்தித்தது யாரை? அங்கு இவர்களுக்கு உதவியவர்கள் யார்? என்ற சுவையான செய்திகள் இன்னும் தொடரும்.

    தொடர்ந்து தினமும் படிக்கத் தவறாதீர்கள்.

    oooooOooooo

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா.. நானும் காத்துகிட்டிருக்கேன்லா...

      Delete
    2. ஆவலுடன் வெயிட்டிங்க்

      Delete
    3. கோவைலேந்து மும்பை 35----40--- மணி நேரம் பிடிக்குமே. போரடிச்சுடும்...எப்படி சமாளித்தாரகளோ
      ..

      Delete
    4. பூந்தளிர் 18 September 2016 at 05:42

      //கோவைலேந்து மும்பை 35----40--- மணி நேரம் பிடிக்குமே. போரடிச்சுடும்...எப்படி சமாளித்தார்களோ..//

      முன்னாவின் அப்பாவுக்கு இரயில்வேயில் உத்யோகம். அதனால் இவர்கள் அனைவருக்குமே இரயிலில் ஃப்ரீ பாஸ் உண்டு. அதனால் அதனை பயன்படுத்திக்கொண்டுள்ளார்கள்.

      தனியாக இல்லாமல் நால்வராகச் சேர்ந்து முதன் முறையாக மும்பைக்குப் போய் இருப்பதால் போர் அடித்திருக்காது. அடிக்கடி போனால்தான் அலுப்பாகி விடும்.

      Delete
    5. ஏ... அப்பா... இவ்வளவு நேரமாகுமா...

      Delete
    6. happy 23 September 2016 at 21:48

      //ஏ... அப்பா... இவ்வளவு நேரமாகுமா...//

      ஆமாம். இரயில் பயணம் படுபோராகிவிடும்.

      ஆனால் நீயும் உன் ஆத்துக்காரரும் பிற்காலத்தில் ப்ளேனில் ஓரிரு மணி நேரங்களில் ஜில்லுன்னு பறந்தே போய் வந்துகொண்டு இருக்கலாம்.

      அதனால் நீ ஒன்றும் இப்போதே இதையெல்லாம் நினைத்துக் கவலையே படாதே! :)

      Delete
  8. இந்த தகவல் இன்னும் முன்னாலயே சொல்லி இருக்கலாம்ல...மும்பைல அக்காவுக்காக கவரிங்க ஸெட் வாங்கிட்டோம்லா..

    ReplyDelete
  9. முன்னா.. பாட்டு ரொம்ப நல்லா இருக்கு... கோபால் ஜி உங்க சுவாரசியமான தொடருக்காக வெயிட்டிங். ( இவ என்னத்தல்லாம்...ஓவரா சொல்லி வச்சிருக்காளோ...தெரியலயே..)

    ReplyDelete
    Replies
    1. ப்ராப்தம் 15 September 2016 at 05:41

      //கோபால் ஜி உங்க சுவாரசியமான தொடருக்காக வெயிட்டிங்.//

      ஏதோ நான் பிறர் மூலம் உங்களைப்பற்றிக் கேள்விப்பட்டதை அப்படியே சொல்லலாம் என்று எனக்குள் ஓர் சின்ன ஆசை மட்டுமே. அதைப்படிக்க தங்களுக்கும் சுவாரஸ்யமாக இருப்பதாகவும், அதற்காகத் தாங்களும் வெயிட்டிங் என்பதையும் கேட்க மிகவும் சந்தோஷமாக உள்ளது.

      //(இவ என்னத்தல்லாம்...ஓவரா சொல்லி வச்சிருக்காளோ...தெரியலயே..)//

      உங்களைப் பற்றித்தான் என்னிடம் இதுவரை நீங்க ஒரு வார்த்தைகூடச் சொன்னதே இல்லையே.

      11.05.2016 அன்று உங்கள் திருமண நாளில் உங்களை நேரில் சந்தித்த ‘யாரோ’ ஒரு பதிவர் ஏதோ கொஞ்சூண்டு மட்டும் எனக்குச் சொன்னதாக நினைவில் உள்ளது.

      இப்போ இந்த மீனா உங்களை நேரில் சந்தித்துள்ளதால், ஏதோ என்னிடம் மேலும் கொஞ்சூண்டு இவளும் சொல்லியிருக்கிறாள்.

      அவளும் இவளும் சொல்லும் எதுவுமே எனக்கு ஓவரா அல்லது அண்டரா எனத் தெரியாதாக்கும். :)

      அவளும் இவளும் இன்னும் என்னென்ன சொல்ல விட்டார்களோ என்றுதான் என்னால் நினைக்கத் தோன்றுகிறது.

      ஏனெனில் உங்களைப்பற்றித்தான் எனக்கு இதுவரை எதுவுமே தெரியாதே. நீங்களும் என்னிடம் கிஞ்சித் விஷயம்கூட இதுவரைச் சொன்னதே இல்லையே. ‘ப்ராப்தம்’ என்ற பெயரில் பதிவராக உள்ள தாங்கள் ஆணா பெண்ணா என்றே வெகுநாட்கள் எனக்குத்தெரியாமல் தானே இருந்து வந்தது.

      அதனால் யார் யாரோ உங்களைப்பற்றி என்னிடம் பகிர்ந்துகொள்வதையெல்லாம், நானும் அப்படியே நம்பித்தான் ஆக வேண்டியுள்ளதாக்கும்.

      உங்களைப்பற்றி பிறர் சொல்லி கேள்விப்பட்டு மட்டும் நான் எழுதும் இந்தத்தொடரினில் ஏதேனும் தவறுகள் இருந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல என்பதை மட்டும் இங்கு உங்களிடம் சொல்லிக்கொள்கிறேன். ஏனென்றால் எல்லாமே பிறர் மூலம் நான் கேள்விப்பட்ட விஷயங்கள் மட்டுமே.

      பிரியமுள்ள கோபால்ஜி

      Delete
    2. கோபால்ஜி.. எனக்கு என்ன சொல்றதுன்னேதெரியல.. நான் என்னைப்பற்றி தங்களிடம் எதுவுமே சொன்னதில்லயா.........உங்களைத்தவிர வேறுயாரிடமுமே சொன்னது கிடையாது..ஒரே ஒருவருக்கு தெரியும்தான்.. ஆனாலும் அந்த ஒரே ஒருவரும் நீங்களும் வேறு வேறு கிடையாது..... இதுக்குமேல இங்கு எதுவும் சொல்ல முடியாது..

      Delete
    3. ப்ராப்தம் 17 September 2016 at 05:37

      //கோபால்ஜி.. எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல.. நான் என்னைப்பற்றி தங்களிடம் எதுவுமே சொன்னதில்லயா......... உங்களைத்தவிர வேறுயாரிடமுமே சொன்னது கிடையாது..//

      மிக்க நன்றி, சாரூ.

      ஒவ்வொருவருடனும் எனக்கு எவ்வளவு தூரம் பழக்கம். எந்த அளவுக்கு நெருக்கம் என்பதை, வேறு பிறரிடம் நான் பொதுவாகச் சொல்லிக்கொள்வதே இல்லை. இங்கும் அதையெல்லாம் சொல்லிக் கொண்டு இருக்க வேண்டாமே என்பதால் மட்டுமே, ஒரு வேடிக்கைக்காக மேலே நான் அவ்வாறு விட்டேத்தியாக (பட்டும் படாமலும்) எழுதியுள்ளேன். தயவுசெய்து எதையும் தப்பா எடுத்துக்கொள்ளாதீங்கோ, சாரூ.

      >>>>>

      Delete
    4. ப்ராப்தம் 17 September 2016 at 05:37

      சாரூ .... உன்னை நான் நினைக்கும்போதெல்லாம் எனக்கு ஒரு பழைய பாடல் நினைவுக்கு வருவது உண்டு. அது சிவாஜி நடித்தபடம். இந்தப்பாடல் சந்தோஷமாக ஒரு முறையும், சோகமாக ஒருமுறையும் அந்தப்படத்தில் இடம்பெறும்.

      -=-=-=-=-

      படத்தின் பெயர்: ‘என் தம்பி’.

      பாடலாசிரியர்: கண்ணதாஸன்

      இசை: மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்

      பாடியவர்: டி.எம். செளந்தரராஜன்

      பாடல்: ’முத்து நகையே உன்னை நான் அறிவேன்’

      -=-=-=-=-

      முத்து நகையே உன்னை நான் அறிவேன்
      தத்தும் கிளியே என்னை நீ அறிவாய்
      நம்மை நாமறிவோம்

      நிலவும் வானும் நிலமும் நீரும்
      ஒன்றை விட்டு ஒன்று செல்லுமோ

      நீயும் நானும் காணும் உறவு
      நெஞ்சைவிட்டுச் செல்ல எண்ணுமோ

      வட்டமிடும் மனதைக் கயிறாலே
      கட்டியிழுத்தாலும் விலகாதே
      கட்டியிழுத்தாலும் விலகாதே

      சுட்டும் விழிச் சுடரே மயங்காதே
      தோளில் வைத்து வளர்ப்பேன் கலங்காதே

      பொன்னை நினைத்தா நான் வாழ வந்தேன்
      உன்னை நினைத்தே நான் காண வந்தேன்
      உன்னை நினைத்தே நான் காண வந்தேன்

      என்னை அறியும் உந்தன் மனசாட்சி
      இறைவன் இருந்தால் அவன் சாட்சி

      முத்து நகையே உன்னை நான் அறிவேன்
      தத்தும் கிளியே என்னை நீ அறிவாய்
      நம்மை நாமறிவோம்

      -=-=-=-=-

      மனித வாழ்வில் சுகமும் சோகமும் தானே இரண்டு பக்கங்கள் என்கிற வரையில் இப்பாடல் மனதில் தவழும் ..... மயிலிறகாய் வருடிக்கொடுக்கும்.

      இதை நம் மீனா (முன்னா) என் நேயர் விருப்பமாகக்கூட வெளியிடலாம்.

      ooooooooooooooo

      Delete
    5. ப்ராப்தம் 17 September 2016 at 05:37

      //ஒரே ஒருவருக்கு தெரியும்தான்.. ஆனாலும் அந்த ஒரே ஒருவரும் நீங்களும் வேறு வேறு கிடையாது..... இதுக்குமேல இங்கு எதுவும் சொல்ல முடியாது..//

      இதுவே போதும். எல்லாம் புரிகிறது. மிக்க மகிழ்ச்சி.

      உன் இந்தப் புரிதலுக்கும் அன்புக்கும் மிக்க நன்றி, சாரூ.

      Delete
    6. படிக்க படிக்க மனசுபூரா .........தவிக்கத்தான் செய்யுது.

      Delete
    7. பூந்தளிர் 19 September 2016 at 05:22

      //படிக்க படிக்க மனசுபூரா ......... தவிக்கத்தான் செய்யுது.//

      படிக்கப் படிக்க மனசுபூரா தவிக்கத்தான் செய்யும். இனிமேல் பழையபடி படிக்கமால் வேணா இருந்து பாருங்கோ.

      அது இதைவிட இன்னும் கொடுமையாக இருக்கும்.

      படிக்காட்டியும், அது நம்மைத் தவியோ தவியென தவிக்கத்தான் வைக்கும். என்ன செய்வது சொல்லுங்கோ.

      Delete
    8. படிக்காம தவிக்கறதுக்கு படிச்சுட்டே தவிக்கலாம்.....

      Delete
    9. பூந்தளிர் 20 September 2016 at 05:30

      //படிக்காம தவிக்கறதுக்கு படிச்சுட்டே தவிக்கலாம்.....//

      ஆஹா, ரொம்பவும் கரெக்ட்டா சொல்லிட்டேள்!

      எப்படியும் ஏதோ ஒரு தவிப்பு இருக்கத்தான் இருக்குதுன்னு நான் என் மனதில் நினைப்பதையே நீங்களும் கரெக்டா சொல்றீங்கோ.

      மஹாராணியாரான தங்களின் உத்தரவு எப்படியோ அப்படியே செய்திடுவோம்.

      தங்கள் ஸித்தம் .... எந்தன் பாக்யம் !

      Delete
  10. கோபு பெரிப்பா முன்னா மும்பை போயிட்டு வந்தாங்களா. அந்த பயணம் பத்தி நீங்க தொடரா எழுதப்போறேமா. நெட் நண்பர்கள் சந்திக்கறது எவ்வளவு சந்தோஷமா இருக்கும் இல்லயா..

    ReplyDelete
    Replies
    1. happy 15 September 2016 at 05:50

      //கோபு பெரிப்பா .. முன்னா மும்பை போயிட்டு வந்தாங்களா.//

      ஆமாம். என்னிடம் அப்படித்தான் சொல்லியிருந்தாங்க. நானும் அதனை அப்படியே நம்பிக்கொண்டு இருக்கிறேன்.

      //அந்த பயணம் பத்தி நீங்க தொடரா எழுதப்போறேளா?//

      ஆமாம்டா கண்ணு. அவளே நேரிடையாக எழுதினால் இன்னும் நல்லாத்தான் இருக்கும். என்னை ஏனோ அவள் தனக்கு ஒரு ஸ்டேனோவாக வைத்துக்கொண்டு டிக்டேட் செய்து, பாடாய்ப் ப-டு-த்-தி வருகிறாள்.

      //நெட் நண்பர்கள் சந்திக்கறது எவ்வளவு சந்தோஷமா இருக்கும் இல்லயா..//

      ஆமாம் .... நீயும் கல்யாணம் ஆகி அநேகமாக மும்பையில் போய் செட்டில் ஆகக்கூடும் என நான் ஜோஸியம் பார்த்து வைத்திருப்பதால், நானும் மும்பைக்கு ஒரு நாள் ப்ளேனில் பறந்து வருவேன். ஒரே கல்லில் மூன்று மாங்காய்கள் போல எனக்கு உன்னையும் சேர்த்து மூவரை சந்திக்கணும் என்று ஆசையாக உள்ளதும்மா. அதற்கு எனக்குப் ப்ராப்தம் இருக்குமோ என்னவோ ... பார்ப்போம்.

      ஈஸ்வரோ ரக்ஷது !

      Delete
    2. எவ்வளவு பதிவர்கள் எவ்வளவு பேரை சந்தித்திருக்காங்க.. படிக்கவே சந்தோஷமா இருக்கே...

      Delete
    3. happy 23 September 2016 at 21:50

      //எவ்வளவு பதிவர்கள் எவ்வளவு பேரை சந்தித்திருக்காங்க.. படிக்கவே சந்தோஷமா இருக்கே...//

      நேரில் ஒருவருக்கொருவர் சந்தித்துக்கொள்வதைவிட, இவையெல்லாம் எழுத்தில் படிக்க மட்டுமே சந்தோஷமாக இருக்கும். :)))))

      Delete
  11. மிக்க நன்றி கோபு சார்.எனது கைவண்ணங்களை தெரிந்தவர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள் என்று சொன்னதற்கு உங்களுக்கே உரித்தான பெருந்தன்மையில் இங்கனம் பகிர்ந்துள்ளிர்கள்.மிக்க நன்றி.

    இங்கனம் பதிவர்கள் முடிந்தால்
    https://www.facebook.com/Aatchis-Silk-thread-jewelery-1176184945725862/
    இந்த பக்கம் வருகை தரவும்.வேண்டுமெனில் அங்கே தொடர்புகொள்ளவும்.

    ReplyDelete
  12. ஆச்சி ஸ்ரீதர் 4 October 2016 at 00:00

    வாங்கோ ஆச்சி, நல்லா இருக்கீங்களா? உங்க வீட்டுக்காரரும், குழந்தைகள் இருவரும் செளக்யமா?

    //மிக்க நன்றி கோபு சார்.எனது கைவண்ணங்களை தெரிந்தவர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள் என்று சொன்னதற்கு உங்களுக்கே உரித்தான பெருந்தன்மையில் இங்கனம் பகிர்ந்துள்ளிர்கள்.மிக்க நன்றி.//

    இதற்கெல்லாம்போய் ‘நன்றி’ எதற்கு ஆச்சி?

    //இங்கனம் பதிவர்கள் முடிந்தால்
    https://www.facebook.com/Aatchis-Silk-thread-jewelery-1176184945725862/
    இந்த பக்கம் வருகை தரவும்.வேண்டுமெனில் அங்கே தொடர்புகொள்ளவும்.//

    இந்தக்குட்டிகளில் யாருக்காவது ஏதேனும் தேவை என்றால் உங்களை நிச்சயமாகத் தொடர்பு கொள்வார்கள். ஆல் த பெஸ்ட் ஆச்சி.

    அன்புடன் கோபு

    ReplyDelete