‘வெண்ணிலவைத் தொட்டு ... முத்தமிட ஆசை! ... மிளகாய்பொடி கொஞ்சம் ... தொட்டுக்கொள்ள ஆசை!!’ என்ற தலைப்பில் நான் எழுதி வெளியிட்டிருந்த இதோ http://gopu1949.blogspot.in/2013/03/blog-post_10.html இந்தப்பதிவினில் சொல்லியுள்ளதைப் படிச்சுட்டு அதன்படியே ஜோராக பக்குவமாக எள்ளு மணம் மணக்க மணக்க இட்லி மிளகாய்ப்பொடி பண்ணினாளாம் சாரூஜி.
இட்லிப் பொடியில் எண்ணெயைக் குழைத்துத்தடவி முதலில் தயாராக வைத்து விட்டாளாம்.
பூரி-மஸால், புளியஞ்சாதம், வத்தல்-வடாம், தயிர் சாதம், வடுமாங்காய் இப்படி எல்லாம் நிறையவே தயாரித்துத் திணற அடிச்சுட்டாங்களாம்.
பட்டாஜிதான் எண்ணெய் வெளியே லீக் ஆகமல் இருக்க ஃபாயில் பேப்பர் + பட்டர் பேப்பரில் சாப்பாட்டுப் பொட்டலங்களைத் தனித்தனி பார்ஸலாக மிகவும் பொறுமையாக அழகாகப் பேக் செய்து தந்தாங்களாம்.
[என்னைப் போலவே பொறுப்பாக, பொறுமையாக, இவற்றையெல்லாம் பேக் செய்து கொடுக்க அங்கும் ஒருவர் பட்டாஜி என்ற பெயரில் இருந்துள்ளார் போலிருக்குது :) ]
இதைத்தவிர வத்தல், வடாம், சிப்ஸ் என்று அதுவே மிகப் பெரிய லக்கேஜ் ஆக ஆகிவிட்டதாம்.
முன்னா க்ரூப் எவ்வளவோ மறுத்தும், பிடிவாதமாக புருஷன்-பொஞ்சாதி இருவரும் அதையெல்லாம் கண்டுக்காம, தங்கள் பேக்கிங் வேலைகளிலேயே மிகவும் சுறுசுறுப்பாக இருந்தார்களாம்.
"இரயிலில் 30-35 மணி நேரம் தொடர்ச்சியா நீங்கள் நால்வரும் டிராவல் பண்ணனும்; வழியிலே எதையும் வாங்கி சாப்பிட்டு வயிற்றைக் கெடுத்துக்கொள்ள வேண்டாம்"ன்னு சொல்லிட்டாங்களாம்.
முன்னாவின் அம்மா .... சாரூஜி, பட்டாஜி, பியூஷ் மூவரையும் தன் மூத்த பெண்ணின் கல்யாணத்துக்கு வரச்சொல்லி அழைத்தார்களாம்.
அதற்கு சாரூஜி, “எங்களுக்கும் ஆசைதானம்மா. இவரு பொறுப்பான வேலையிலே இருக்காங்க, அதிக நாளுக்கு லீவு போட முடியாது. பையனுக்கும் லீவு கிடைக்காது. என் இன்றைய நிலைமையில் என்னாலும் அவ்வளவு தூரப்பயணம் பண்றது கஷ்டம்மா”ன்னு சொல்லி விட்டாளாம்.
இவ்வாறான திடீர் விருந்தினர் வருகையால், சற்றே தேக சிரமங்களுடன்கூட, குத்துமதிப்பாக ரூ. 20000 முதல் ரூ. 25000 வரை (Including all overheads) சாரூஜீ+பட்டாஜி தம்பதியினருக்கு செலவும் ஆகியிருக்கலாம் என என்னால் யூகிக்க முடிகிறது.
இது அவர்களின் இன்றைய, செல்வச் செழிப்பான வசதி வாய்ப்புகளுக்கு முன்னால், ஒரு பெருந்தொகையே இல்லாமல்கூட அவர்களுக்கு ஒருவேளைத் தோன்றலாம்தான்.
இருப்பினும் இதையெல்லாம் தாண்டி, முன்பின் தெரியாத, பழக்கமே அதிகம் இல்லாத, நம் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஏதோ நால்வருக்கு, மும்பையில் தங்க இடமும், பாதுகாப்பும் அளித்து, விருந்துபசாரம் செய்த திருப்தியும், எழுத்தில் சொல்லமுடியாத ஏதோவொரு சந்தோஷமும் அவர்களுக்கும் ஏற்பட்டிருக்கக்கூடும் எனவும் நான் எனக்குள் நினைக்கிறேன்.
அதே சமயம் மிகவும் உன்னதமான இவர்களின் அறிமுகம் மட்டும் கிடைக்காமல் போயிருந்தால், நம் முன்னா க்ரூப் ஆசாமிகளில் பாடு மும்பையில் மிகவும் திண்டாட்டமாகவே ஆகியிருக்கும்.
பாஷை தெரியாத புதியதொரு ஊரில் இங்குமங்கும் அலைந்து திரிந்து ரூ. 20000 க்கு மேல், தங்களின் கைப்பணத்தையும் செலவழிக்க வேண்டியிருந்திருக்கும்.
அவ்வாறு ஒருவேளை அவர்கள், தாங்கள் தங்கவும், சாப்பிடவும், இங்குமங்கும் அலையவும், இதுபோன்றதொரு பெருந்தொகையைச் செலவழித்திருந்தாலும்கூட, இதுபோன்ற ஒரு அன்பையோ, ஆதரவையோ, அரவணைப்பையோ, பாதுகாப்பையோ அவர்களால் நிச்சயமாகப் பெற்றிருக்க முடியாமலும் போயிருந்திருக்கும்.
எதற்குமே, யாருக்குமே, எதையும் அனுபவிக்கவுமே ஒரு ’கொடுப்பிணை’ வேண்டும் என்று சொல்லுவார்கள்.
அந்தக் ’கொடுப்பிணை’ எல்லோருக்கும் எல்லா நேரங்களிலும் அமைந்து விடுவது இல்லை.
இதற்கு மிகச்சிறந்த உதாரணமாக சமீபத்தில் நடந்துள்ள சம்பவம் ஒன்றினைச் சொல்லிக்கொள்கிறேன்.
எனக்கு மிகவும் பிடித்தமான ஒரு பதிவர், ஓர் அவசர அவசிய காரணமாக, தான் வசிக்கும் ஊரிலிருந்து 6 மணி நேரங்கள் கால் டாக்ஸியில் பயணித்து, மும்பை ஏர்-போர்ட்டுக்குச் சென்று, அங்கிருந்து விமானம் மூலம் சென்னை வந்து, அங்கிருந்து வேறொரு விமானம் மூலம் திருச்சிக்கு வருவதாக இருந்தார்கள்.
நானும் அவர்களும் ஒருவரையொருவர் நேரில் சந்திக்க வேண்டும் என்ற ஆர்வமும், ஆவலும் நீண்ட நாட்களாகவே எங்கள் இருவர் மனதிலும் இருந்து வந்தும்கூட, இப்போதும் நாங்கள் ஒருவரையொருவர் சந்திக்க முடியாமல் ஏதேதோ எதிர்பாராத குறுக்கீடுகள் ஏற்பட்டு விட்டன.
எங்களுக்குள் அதற்கான ’கொடுப்பிணை’ இல்லை. :(
சரி .... அவர்களாவது, தான் திட்டமிட்டபடி, திருச்சிக்கு செளகர்யமாக வந்துவிட்டு, தன் வேலைகளை முடித்துக்கொண்டு, மீண்டும் விமானம் ஏறி செளகர்யமாக தன் இருப்பிடம் போய்ச் சேர்ந்து விட்டார்களா என்று விஜாரித்துப் பார்த்தால் அதுவும் நடக்கவே இல்லை. அதற்கும் அவர்களுக்குக் ‘கொடுப்பிணை’ இல்லை.
11.09.2016 அன்று பகல் 12 மணிக்கு மும்பை விமான நிலையத்திலிருந்து கிளம்பும் விமானத்தில், அவர்கள் தான் ஏற்கனவே திட்டமிட்டபடி சென்னைக்குப் பயணித்திருக்க வேண்டும்.
கொட்டும் மழையில் தன் வீட்டிலிருந்து விடியற்காலம் 5 மணிக்கே கிளம்பி, மும்பை செல்லும்வரை தெருவெங்கும் மழை நீர் தேங்கியிருக்க, கால் டாக்ஸியில் மும்பை வரை மிதந்தே காரில் போய்ச் சேர்ந்தும்கூட, மோசமான வானிலை + பலத்த மழை காரணமாக அனைத்து வழித்தட விமான சேவைகளும் அன்று 11.09.2016 ஒரு நாள் மட்டு மும்பை ஏர்-போர்ட்டில் ரத்து செய்யப்பட்டுள்ளன என்ற செய்தியைக்கேட்டு, மிகவும் கடுப்பாகிப்போய் உள்ளார்கள்.
ஒருசில மணி நேரங்கள் என்ன செய்வது என்றே புரியாமல் ஸ்தம்பித்துப்போய் இருந்துள்ளார்கள்.
பிறகு திரும்பவும் மும்பையிலிருந்த ஒரு கால் டாக்ஸியை அழைத்து, மீண்டும் 6 மணி நேரம் பயணம் செய்து, மனதும் உடம்பும் தளர்ந்து, சோர்வுடனும் களைப்புடனும் தன் ஊருக்கே, தன் வீட்டுக்கே அன்று இரவு 9 மணிக்குத் திரும்பியிருக்கிறார்கள்.
அனாவஸ்யமான டென்ஷனுடன், விடியற்காலத்திலிருந்து இரவு வரை 6+6=12 மணி நேரம் கால் டாக்ஸியில் வெட்டியாகப் பயணம் செய்த அவர்களுக்கு அன்று சுமார் ரூ. 15000 டாக்ஸிக்காக மட்டுமே வெட்டிச் செலவு ஆகியுள்ளது.
எதற்கும் ஒரு ’கொடுப்பிணை’ வேண்டும் என்பதற்காக மட்டுமே இதனை இங்கு நான் சொல்லியுள்ளேன்.
முன்னா ஸாரிம்மா.... பசங்களுக்கு எக்ஸாம் நடந்துகிட்டு இருக்கு.. அதான் ரெகுலரா வர முடியல. கிஷ்ணாஜியின் தொடர் பதிவு படிக்க கூட நேரம் கிடைக்கல. வரேன் நிதானமா....

’சாரூ என்றால் யாரூ’ என மிகத்துல்லியமாகத் தெரியாமலேயே இதுவரை இருந்து வந்துள்ள எனக்கு, இந்த முன்னாவின் சமீபத்திய மும்பைப்பயணம் மூலம் மட்டுமே, சாரூஜீயைப்பற்றியும், குறிப்பாக அந்த ஒரு ஜோடி வெள்ளிக் குத்துவிளக்குகள் பற்றியும், பல அரிய பெரிய இரகசியமானத் தகவல்களைக் கொஞ்சமாவது என்னால் புரிந்துகொள்ள ஏதுவாகியுள்ளது..
அதுவே என்னை மிகவும் மகிழ்வித்து, கரும்புச்சாறு போல இனிக்க வைத்துள்ளது.
உன்னத மற்றும் உத்தம தம்பதியினரான ’சாரூஜி + பட்டாஜி’ இன்று போல் என்றும் மகிழ்ச்சியுடன் பல்லாண்டுகள் வாழவும், அவர்களின் இனிய தாம்பத்திய வாழ்க்கையில் ’பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழவும்’ மனதார பிரார்த்தித்துக்கொள்கிறேன்.
ஊரெங்கும் + உலகெங்கும் ஆங்காங்கே இதுபோல நம் பதிவுலக நட்புகளும், சொந்தங்களும் இருக்கிறார்கள் என்று நினைக்கவே, நம் மனதில் மிகவும் ரம்யமாக உணர்வு ஏற்பட்டு நம்மை மிகவும் மகிழ்விக்கிறது.
-o இத்துடன் இந்த என் சிறிய தொடர் நிறைவடைகிறது. GOOD BYE TO ALL OF YOU. o-
அப்படியா, இருந்துட்டுப்போகட்டும். பாட்டுக்கேட்கும் MOOD எல்லாம் இப்போ எனக்கு இல்லையாக்கும்.
//பயணக்கட்டுரை முடிஞ்சாச்சா...//
அது ஒருவழியாக முடிஞ்சே போச்சு. நான் அதை இங்கு தொடர்ந்து எழுதுவதாக கமிட்மெண்ட் கொடுத்து விட்டதால் மட்டுமே, நீ வராவிட்டாலும் நான் தொடர்ச்சியாக இங்கு வந்து வெளியிடும்படி ஆனது. இப்போ நீ வந்து விட்டாய். ஒருவேளை நான் காணாமல் போனாலும் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றும் இல்லை.
//வரேன் வரேன்...//
எப்போ வருவாய்? எங்கு வருவாய்? புரிய மாட்டேங்குதே ... கடவுளே, கடவுளே !!
//இன்னொருவரின் பயண சங்கடங்கள் இலவச இணைப்பா......//
யாரோ இவ்வாறு பாதிக்கப்பட்ட ஒரு பதிவர் என்னிடம் சொல்லி வருத்தப்பட்டிருந்தார். அதைக் கேட்டுக்கொள்ள மட்டுமே எனக்குக் ‘கொடுப்பிணை’ இருந்தது.
‘மிகவும் பாவம் அவர்’ என எனக்குள் என் மனதில் நினைத்துக்கொண்டு, அவருக்காக நான் அன்று முழுவதும் அழுதேன்.
//கோபு பெரிப்பா... உங்களுக்குத்தான் எவ்வளவு ஃப்ரெண்ட்ஸ்... இருக்காங்க.....//
இதில் என் செல்லக்குழந்தையான நீ மட்டும்தான் என்னுடைய லேடஸ்டு ஃப்ரண்ட் .... அதுவும் குட்டியூண்டு இளம் நொங்கு போல .... ஸ்வீட்டோ ஸ்வீட்டான நொங்கு வாட்டர் போல :)
//ஓ....... மும்பை வரை வந்தவங்க என்னையும் வந்து பார்த்திருக்கலாமே.......//
அதையேதான் நானும் எனக்குள் நினைத்துக்கொண்டேன். அவர்களுக்கும் கூட மனதில் அந்த எண்ணமும் அப்போது நிச்சயமாகத் தோன்றியும் இருக்கலாம்.
அவ்வாறு பார்த்திருந்தால், உங்கள் இருவருக்குமே, ஒருவருக்கொருவர் ஓர் மன ஆறுதலாகவாவது இருந்திருக்கும்தான்.
ஆனால் அந்தப் பதிவருக்கு உங்களை ஏற்கனவே தெரியுமோ தெரியாதோ! அவர்களுக்கு ஒருவேளை தெரிந்திருந்தாலும் உங்களுக்கு அவர்களைத் தெரியுமோ தெரியாதோ!!
மேலும் அவர்கள் எங்கோ எதற்காகவோ அவசர அவசியமாகப் புறப்பட நினைத்துக் கிளம்பிவிட்டு, என்ன மாதிரி சங்கடமான மனநிலையில் அன்று அந்த மழை நேரம் தவியாய்த் தவித்துக்கொண்டு இருந்தார்களோ .. அதனால் நாம் இதனைத் தவறாகவே நினைக்கக்கூடாது, சாரூ.
’மீனா’ என்று என்னால் அன்புடன் அழைக்கப்படும்
ReplyDelete’முன்னா மெஹர் மாமியின் மும்பைப் பயண அனுபவம்’
-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-
பகுதி-11 [நிறைவுப் பகுதி]
-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-
பகுதி-1 க்கான இணைப்பு:
http://htpsipikulmuthu.blogspot.in/2016/09/blog-post_91.html
பகுதி-2 க்கான இணைப்பு:
http://htpsipikulmuthu.blogspot.in/2016/09/blog-post_15.html
பகுதி-3 க்கான இணைப்பு:
http://htpsipikulmuthu.blogspot.in/2016/09/blog-post_78.html
பகுதி-4 க்கான இணைப்பு:
http://htpsipikulmuthu.blogspot.in/2016/09/blog-post_22.html
பகுதி-5 க்கான இணைப்பு:
https://htpsipikulmuthu.blogspot.in/2016/09/blog-post_49.html
பகுதி-6 க்கான இணைப்பு:
http://htpsipikulmuthu.blogspot.in/2016/09/dil-dadap.html
பகுதி-7 க்கான இணைப்பு:
http://htpsipikulmuthu.blogspot.in/2016/09/blog-post_1.html
பகுதி-8 க்கான இணைப்பு:
http://htpsipikulmuthu.blogspot.in/2016/09/blog-post_37.html
பகுதி-9 க்கான இணைப்பு:
http://htpsipikulmuthu.blogspot.in/2016/09/blog-post_29.html
பகுதி-10 க்கான இணைப்பு:
http://htpsipikulmuthu.blogspot.in/2016/09/blog-post_94.html
>>>>>
(71)
ReplyDeleteதினமும் மத்யான சாப்பாடு ஆனதும் சாரூஜிக்குக் கொஞ்ச நேரமாவது ரிலாக்ஸ்ட் ஆகப் படுத்துக்கொள்ளணுமாம்.
’உண்ட களைப்பு தொண்டனுக்கும் உண்டு’ என்று சொல்வார்களே.
ஆனால் முன்னா க்ரூப் மும்பையைவிட்டுக் கிளம்பப்போகும் அந்த ஒருநாள் (04.09.2016 ஞாயிறு) மட்டும், மதியம் சாரூஜி படுக்கவே இல்லையாம்.
முன்னா க்ரூப்பின் நீண்ண்ண்ண்ண்ட நெடும் இரயில் பயணத்திற்கான சாப்பாடுகள் தயாரிப்பில், கோவை சரளா பாணியில் வரிஞ்சிக்கட்டிக்கிட்டு இறங்கி விட்டாளாம்.
>>>>>
(72)
ReplyDelete‘வெண்ணிலவைத் தொட்டு ... முத்தமிட ஆசை! ... மிளகாய்பொடி கொஞ்சம் ... தொட்டுக்கொள்ள ஆசை!!’ என்ற தலைப்பில் நான் எழுதி வெளியிட்டிருந்த இதோ http://gopu1949.blogspot.in/2013/03/blog-post_10.html இந்தப்பதிவினில் சொல்லியுள்ளதைப் படிச்சுட்டு அதன்படியே ஜோராக பக்குவமாக எள்ளு மணம் மணக்க மணக்க இட்லி மிளகாய்ப்பொடி பண்ணினாளாம் சாரூஜி.
இட்லிப் பொடியில் எண்ணெயைக் குழைத்துத்தடவி முதலில் தயாராக வைத்து விட்டாளாம்.
பூரி-மஸால், புளியஞ்சாதம், வத்தல்-வடாம், தயிர் சாதம், வடுமாங்காய் இப்படி எல்லாம் நிறையவே தயாரித்துத் திணற அடிச்சுட்டாங்களாம்.
பட்டாஜிதான் எண்ணெய் வெளியே லீக் ஆகமல் இருக்க ஃபாயில் பேப்பர் + பட்டர் பேப்பரில் சாப்பாட்டுப் பொட்டலங்களைத் தனித்தனி பார்ஸலாக மிகவும் பொறுமையாக அழகாகப் பேக் செய்து தந்தாங்களாம்.
[என்னைப் போலவே பொறுப்பாக, பொறுமையாக, இவற்றையெல்லாம் பேக் செய்து கொடுக்க அங்கும் ஒருவர் பட்டாஜி என்ற பெயரில் இருந்துள்ளார் போலிருக்குது :) ]
>>>>>
(73)
ReplyDeleteபூரி பார்ஸல் - 8,
இட்லி பார்ஸல் - 8,
புளியஞ்சாதப் பார்ஸல் - 8,
தயிர் சாதப் பார்ஸல் - 8
இதைத்தவிர வத்தல், வடாம், சிப்ஸ் என்று அதுவே மிகப் பெரிய லக்கேஜ் ஆக ஆகிவிட்டதாம்.
முன்னா க்ரூப் எவ்வளவோ மறுத்தும், பிடிவாதமாக புருஷன்-பொஞ்சாதி இருவரும் அதையெல்லாம் கண்டுக்காம, தங்கள் பேக்கிங் வேலைகளிலேயே மிகவும் சுறுசுறுப்பாக இருந்தார்களாம்.
>>>>>
(74)
ReplyDelete"இரயிலில் 30-35 மணி நேரம் தொடர்ச்சியா நீங்கள் நால்வரும் டிராவல் பண்ணனும்; வழியிலே எதையும் வாங்கி சாப்பிட்டு வயிற்றைக் கெடுத்துக்கொள்ள வேண்டாம்"ன்னு சொல்லிட்டாங்களாம்.
இதைத்தவிர ஒரு 5 லிட்டர் கேனில் அக்வா ஃபில்டர் வாட்டர் குடிக்க தண்ணீருக்காகக் கொடுத்தனுப்பினாங்களாம்.
ஒரு முரட்டு ஃப்ளாஸ்க் நிறைய டீ போட்டு ஜீனி போடாமல் ஊற்றிக்கொடுத்திருந்தார்களாம்.
ஜீனியை மட்டும் அவ்வப்போது டீ குடிக்கும்போது போட்டுக்கச்சொல்லி, தனியாக ஒரு பாட்டிலில் ஜீனியைப் போட்டுக் கொடுத்துட்டாங்களாம்.
டிஸ்போஸபில் ப்ளேட்ஸ்.. க்ளாஸ்.. ஸ்பூன்ஸ் எல்லாமே தனியா பேக் பண்ணி தந்தாங்களாம்.
>>>>>
(75)
ReplyDeleteஇதுபோல ஒரு ராயல் கவனிப்பு கிடைக்குமுன்னு முன்னா க்ரூப் எதிர் பார்க்கவே இல்லையாம்.
ஊர் திரும்ப, அன்று இரவு 7 மணிக்குக்கிளம்பும் இரயிலை, மும்பை தாதர் ஸ்டேஷனில் முன்னா க்ரூப் பிடிக்க வேண்டுமாம்.
இவர்களுடனேயே இரயில் ஏற்றிவிட, சாரூஜி+பட்டாஜி+பியூஷ் ஆகிய மூவருமே தாதர் ஸ்டேஷன் வரை, அந்தக்கப்பல் போன்ற அவர்களின் சொந்தக் காரில் வந்திருந்தாங்களாம்.
இரயில் பயணத்தின் போது படிக்க வேண்டி கொஞ்சம் புக்ஸ்ஸும் வாங்கி தந்தாங்களாம்.
>>>>>
(76)
ReplyDeleteமுன்னாவின் அம்மா .... சாரூஜி, பட்டாஜி, பியூஷ் மூவரையும் தன் மூத்த பெண்ணின் கல்யாணத்துக்கு வரச்சொல்லி அழைத்தார்களாம்.
அதற்கு சாரூஜி, “எங்களுக்கும் ஆசைதானம்மா. இவரு பொறுப்பான வேலையிலே இருக்காங்க, அதிக நாளுக்கு லீவு போட முடியாது. பையனுக்கும் லீவு கிடைக்காது. என் இன்றைய நிலைமையில் என்னாலும் அவ்வளவு தூரப்பயணம் பண்றது கஷ்டம்மா”ன்னு சொல்லி விட்டாளாம்.
>>>>>
(77)
ReplyDeleteஒருவருக்கொருவர் பிரியாவிடை பெற்றுக்கொண்டதும், இரயில் மும்பை தாதர் ஸ்டேஷனிலிருந்து நகரத் தொடங்கியதாம்.
”மொத்தத்துல மும்பை பயணம் மறக்க முடியாத சந்தோஷ அனுபவமா அமைஞ்சது”ன்னு முன்னா என்னிடம் சொல்லி முடித்து சந்தோஷப்பட்டுக்கொண்டாள்.
>>>>>
(78)
ReplyDeleteஇவ்வாறான திடீர் விருந்தினர் வருகையால், சற்றே தேக சிரமங்களுடன்கூட, குத்துமதிப்பாக ரூ. 20000 முதல் ரூ. 25000 வரை (Including all overheads) சாரூஜீ+பட்டாஜி தம்பதியினருக்கு செலவும் ஆகியிருக்கலாம் என என்னால் யூகிக்க முடிகிறது.
இது அவர்களின் இன்றைய, செல்வச் செழிப்பான வசதி வாய்ப்புகளுக்கு முன்னால், ஒரு பெருந்தொகையே இல்லாமல்கூட அவர்களுக்கு ஒருவேளைத் தோன்றலாம்தான்.
இருப்பினும் இதையெல்லாம் தாண்டி, முன்பின் தெரியாத, பழக்கமே அதிகம் இல்லாத, நம் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஏதோ நால்வருக்கு, மும்பையில் தங்க இடமும், பாதுகாப்பும் அளித்து, விருந்துபசாரம் செய்த திருப்தியும், எழுத்தில் சொல்லமுடியாத ஏதோவொரு சந்தோஷமும் அவர்களுக்கும் ஏற்பட்டிருக்கக்கூடும் எனவும் நான் எனக்குள் நினைக்கிறேன்.
அதே சமயம் மிகவும் உன்னதமான இவர்களின் அறிமுகம் மட்டும் கிடைக்காமல் போயிருந்தால், நம் முன்னா க்ரூப் ஆசாமிகளில் பாடு மும்பையில் மிகவும் திண்டாட்டமாகவே ஆகியிருக்கும்.
பாஷை தெரியாத புதியதொரு ஊரில் இங்குமங்கும் அலைந்து திரிந்து ரூ. 20000 க்கு மேல், தங்களின் கைப்பணத்தையும் செலவழிக்க வேண்டியிருந்திருக்கும்.
அவ்வாறு ஒருவேளை அவர்கள், தாங்கள் தங்கவும், சாப்பிடவும், இங்குமங்கும் அலையவும், இதுபோன்றதொரு பெருந்தொகையைச் செலவழித்திருந்தாலும்கூட, இதுபோன்ற ஒரு அன்பையோ, ஆதரவையோ, அரவணைப்பையோ, பாதுகாப்பையோ அவர்களால் நிச்சயமாகப் பெற்றிருக்க முடியாமலும் போயிருந்திருக்கும்.
>>>>>
(79)
ReplyDeleteஎதற்குமே, யாருக்குமே, எதையும் அனுபவிக்கவுமே ஒரு ’கொடுப்பிணை’ வேண்டும் என்று சொல்லுவார்கள்.
அந்தக் ’கொடுப்பிணை’ எல்லோருக்கும் எல்லா நேரங்களிலும் அமைந்து விடுவது இல்லை.
இதற்கு மிகச்சிறந்த உதாரணமாக சமீபத்தில் நடந்துள்ள சம்பவம் ஒன்றினைச் சொல்லிக்கொள்கிறேன்.
எனக்கு மிகவும் பிடித்தமான ஒரு பதிவர், ஓர் அவசர அவசிய காரணமாக, தான் வசிக்கும் ஊரிலிருந்து 6 மணி நேரங்கள் கால் டாக்ஸியில் பயணித்து, மும்பை ஏர்-போர்ட்டுக்குச் சென்று, அங்கிருந்து விமானம் மூலம் சென்னை வந்து, அங்கிருந்து வேறொரு விமானம் மூலம் திருச்சிக்கு வருவதாக இருந்தார்கள்.
நானும் அவர்களும் ஒருவரையொருவர் நேரில் சந்திக்க வேண்டும் என்ற ஆர்வமும், ஆவலும் நீண்ட நாட்களாகவே எங்கள் இருவர் மனதிலும் இருந்து வந்தும்கூட, இப்போதும் நாங்கள் ஒருவரையொருவர் சந்திக்க முடியாமல் ஏதேதோ எதிர்பாராத குறுக்கீடுகள் ஏற்பட்டு விட்டன.
எங்களுக்குள் அதற்கான ’கொடுப்பிணை’ இல்லை. :(
சரி .... அவர்களாவது, தான் திட்டமிட்டபடி, திருச்சிக்கு செளகர்யமாக வந்துவிட்டு, தன் வேலைகளை முடித்துக்கொண்டு, மீண்டும் விமானம் ஏறி செளகர்யமாக தன் இருப்பிடம் போய்ச் சேர்ந்து விட்டார்களா என்று விஜாரித்துப் பார்த்தால் அதுவும் நடக்கவே இல்லை. அதற்கும் அவர்களுக்குக் ‘கொடுப்பிணை’ இல்லை.
11.09.2016 அன்று பகல் 12 மணிக்கு மும்பை விமான நிலையத்திலிருந்து கிளம்பும் விமானத்தில், அவர்கள் தான் ஏற்கனவே திட்டமிட்டபடி சென்னைக்குப் பயணித்திருக்க வேண்டும்.
கொட்டும் மழையில் தன் வீட்டிலிருந்து விடியற்காலம் 5 மணிக்கே கிளம்பி, மும்பை செல்லும்வரை தெருவெங்கும் மழை நீர் தேங்கியிருக்க, கால் டாக்ஸியில் மும்பை வரை மிதந்தே காரில் போய்ச் சேர்ந்தும்கூட, மோசமான வானிலை + பலத்த மழை காரணமாக அனைத்து வழித்தட விமான சேவைகளும் அன்று 11.09.2016 ஒரு நாள் மட்டு மும்பை ஏர்-போர்ட்டில் ரத்து செய்யப்பட்டுள்ளன என்ற செய்தியைக்கேட்டு, மிகவும் கடுப்பாகிப்போய் உள்ளார்கள்.
ஒருசில மணி நேரங்கள் என்ன செய்வது என்றே புரியாமல் ஸ்தம்பித்துப்போய் இருந்துள்ளார்கள்.
பிறகு திரும்பவும் மும்பையிலிருந்த ஒரு கால் டாக்ஸியை அழைத்து, மீண்டும் 6 மணி நேரம் பயணம் செய்து, மனதும் உடம்பும் தளர்ந்து, சோர்வுடனும் களைப்புடனும் தன் ஊருக்கே, தன் வீட்டுக்கே அன்று இரவு 9 மணிக்குத் திரும்பியிருக்கிறார்கள்.
அனாவஸ்யமான டென்ஷனுடன், விடியற்காலத்திலிருந்து இரவு வரை 6+6=12 மணி நேரம் கால் டாக்ஸியில் வெட்டியாகப் பயணம் செய்த அவர்களுக்கு அன்று சுமார் ரூ. 15000 டாக்ஸிக்காக மட்டுமே வெட்டிச் செலவு ஆகியுள்ளது.
எதற்கும் ஒரு ’கொடுப்பிணை’ வேண்டும் என்பதற்காக மட்டுமே இதனை இங்கு நான் சொல்லியுள்ளேன்.
>>>>>
முன்னா ஸாரிம்மா.... பசங்களுக்கு எக்ஸாம் நடந்துகிட்டு இருக்கு.. அதான் ரெகுலரா வர முடியல. கிஷ்ணாஜியின் தொடர் பதிவு படிக்க கூட நேரம் கிடைக்கல. வரேன் நிதானமா....
ReplyDeleteமுன்னா ஸாரிம்மா.... பசங்களுக்கு எக்ஸாம் நடந்துகிட்டு இருக்கு.. அதான் ரெகுலரா வர முடியல. கிஷ்ணாஜியின் தொடர் பதிவு படிக்க கூட நேரம் கிடைக்கல. வரேன் நிதானமா....
ReplyDelete(80)
ReplyDelete’சாரூ என்றால் யாரூ’ என மிகத்துல்லியமாகத் தெரியாமலேயே இதுவரை இருந்து வந்துள்ள எனக்கு, இந்த முன்னாவின் சமீபத்திய மும்பைப்பயணம் மூலம் மட்டுமே, சாரூஜீயைப்பற்றியும், குறிப்பாக அந்த ஒரு ஜோடி வெள்ளிக் குத்துவிளக்குகள் பற்றியும், பல அரிய பெரிய இரகசியமானத் தகவல்களைக் கொஞ்சமாவது என்னால் புரிந்துகொள்ள ஏதுவாகியுள்ளது..
அதுவே என்னை மிகவும் மகிழ்வித்து, கரும்புச்சாறு போல இனிக்க வைத்துள்ளது.
உன்னத மற்றும் உத்தம தம்பதியினரான ’சாரூஜி + பட்டாஜி’ இன்று போல் என்றும் மகிழ்ச்சியுடன் பல்லாண்டுகள் வாழவும், அவர்களின் இனிய தாம்பத்திய வாழ்க்கையில் ’பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழவும்’ மனதார பிரார்த்தித்துக்கொள்கிறேன்.
ஊரெங்கும் + உலகெங்கும் ஆங்காங்கே இதுபோல நம் பதிவுலக நட்புகளும், சொந்தங்களும் இருக்கிறார்கள் என்று நினைக்கவே, நம் மனதில் மிகவும் ரம்யமாக உணர்வு ஏற்பட்டு நம்மை மிகவும் மகிழ்விக்கிறது.
-o இத்துடன் இந்த என் சிறிய தொடர் நிறைவடைகிறது. GOOD BYE TO ALL OF YOU. o-
நல்ல பாடல். பயணக்கட்டுரை முடிஞ்சாச்சா...வரேன் வரேன்... இன்னொருவரின் பயண சங்கடங்கள் இலவச இணைப்பா......
ReplyDeleteபூந்தளிர் 20 September 2016 at 05:15
Delete//நல்ல பாடல்.//
அப்படியா, இருந்துட்டுப்போகட்டும். பாட்டுக்கேட்கும் MOOD எல்லாம் இப்போ எனக்கு இல்லையாக்கும்.
//பயணக்கட்டுரை முடிஞ்சாச்சா...//
அது ஒருவழியாக முடிஞ்சே போச்சு. நான் அதை இங்கு தொடர்ந்து எழுதுவதாக கமிட்மெண்ட் கொடுத்து விட்டதால் மட்டுமே, நீ வராவிட்டாலும் நான் தொடர்ச்சியாக இங்கு வந்து வெளியிடும்படி ஆனது. இப்போ நீ வந்து விட்டாய். ஒருவேளை நான் காணாமல் போனாலும் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றும் இல்லை.
//வரேன் வரேன்...//
எப்போ வருவாய்? எங்கு வருவாய்? புரிய மாட்டேங்குதே ... கடவுளே, கடவுளே !!
//இன்னொருவரின் பயண சங்கடங்கள் இலவச இணைப்பா......//
யாரோ இவ்வாறு பாதிக்கப்பட்ட ஒரு பதிவர் என்னிடம் சொல்லி வருத்தப்பட்டிருந்தார். அதைக் கேட்டுக்கொள்ள மட்டுமே எனக்குக் ‘கொடுப்பிணை’ இருந்தது.
‘மிகவும் பாவம் அவர்’ என எனக்குள் என் மனதில் நினைத்துக்கொண்டு, அவருக்காக நான் அன்று முழுவதும் அழுதேன்.
நானும் வேறு என்னதான் செய்வது?
கோபு பெரிப்பா... உங்களுக்குத்தான் எவ்வளவு ஃப்ரெண்ட்ஸ்... இருக்காங்க.....
ReplyDeletehappy 20 September 2016 at 23:20
Delete//கோபு பெரிப்பா... உங்களுக்குத்தான் எவ்வளவு ஃப்ரெண்ட்ஸ்... இருக்காங்க.....//
இதில் என் செல்லக்குழந்தையான நீ மட்டும்தான் என்னுடைய லேடஸ்டு ஃப்ரண்ட் .... அதுவும் குட்டியூண்டு இளம் நொங்கு போல .... ஸ்வீட்டோ ஸ்வீட்டான நொங்கு வாட்டர் போல :)
ஓ....... மும்பை வரை வந்தவங்க என்னையும் வந்து பார்த்திருக்கலாமே.......
ReplyDeleteப்ராப்தம் 20 September 2016 at 23:31
Delete//ஓ....... மும்பை வரை வந்தவங்க என்னையும் வந்து பார்த்திருக்கலாமே.......//
அதையேதான் நானும் எனக்குள் நினைத்துக்கொண்டேன். அவர்களுக்கும் கூட மனதில் அந்த எண்ணமும் அப்போது நிச்சயமாகத் தோன்றியும் இருக்கலாம்.
அவ்வாறு பார்த்திருந்தால், உங்கள் இருவருக்குமே, ஒருவருக்கொருவர் ஓர் மன ஆறுதலாகவாவது இருந்திருக்கும்தான்.
ஆனால் அந்தப் பதிவருக்கு உங்களை ஏற்கனவே தெரியுமோ தெரியாதோ! அவர்களுக்கு ஒருவேளை தெரிந்திருந்தாலும் உங்களுக்கு அவர்களைத் தெரியுமோ தெரியாதோ!!
மேலும் அவர்கள் எங்கோ எதற்காகவோ அவசர அவசியமாகப் புறப்பட நினைத்துக் கிளம்பிவிட்டு, என்ன மாதிரி சங்கடமான மனநிலையில் அன்று அந்த மழை நேரம் தவியாய்த் தவித்துக்கொண்டு இருந்தார்களோ .. அதனால் நாம் இதனைத் தவறாகவே நினைக்கக்கூடாது, சாரூ.
தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கோ சாரூ .... ப்ளீஸ்ஸ்ஸ்.