பிறகு ஒருவழியாக, பட்டாஜியும், முன்னாவின் அப்பாவும் தங்கள் கை நிறைய பானிபூரி, பேல் பூரி, பாவ் பாஜி ன்னு என்னென்னவோ நிறைய வாங்கிட்டு வந்திருந்தார்களாம். இவற்றின் படங்கள் மட்டும் எனக்கும் என் பசி வேளையில் அனுப்பப்பட்டிருந்தன. :(
”அதிலே பச்சை வெங்காயம் போட்டிருக்கும் .... அதனால் அது எனக்கு வேண்டாம்”ன்னு சாரூஜி சொன்னாங்களாம்.
நம் சாரூஜி இரண்டு விளக்குகள் ஏற்றினாள் என்று மேலே சொல்லியிருக்குது அல்லவா. அவை சாதாரண விளக்குகள் அல்ல.
மிக உயரமான நம் முன்னா எழுந்து நின்றால் அவளின் முழங்கால் உயரத்துக்கு இருக்கும் நல்ல மஹா முரடான, பளிச்சென்ற வெள்ளிக் குத்து விளக்குகளாம்.
முன்னாவே நல்ல உயரமாக இருப்பாள் என நான் யூகிப்பதால், அவளின் முழங்கால் உயரம் தரையிலிருந்து 2 அல்லது 2-1/2 அடி இருக்கக்கூடும். :)
அந்த மிக உயரமான, பிரும்மாண்டமான, பளிச்சென்று மின்னும் ஒரு ஜோடி வெள்ளிக்குத்து விளக்குகளைப் பார்த்து, பிரமித்துப்போன முன்னாவின் அம்மா “சாரூ ... இந்த இரண்டு வெள்ளி விளக்குகளும் மிகவும் ஜோரா புதுசா பள-பளன்னு இருக்குதே .... இப்போ சமீபத்தில் இங்கே எங்காவது வாங்கினாயா?” என்று கேட்டார்களாம்.
அதற்கு சாரூ “இல்லையம்மா. எங்க கல்யாணத்துக்கு ஒரு நெட் ஃப்ரண்டு வந்திருந்தாங்க. அவங்கதான் எனக்கு கிஃப்ட் ஆக இவற்றை பிரசண்ட் பண்ணினாங்க. நான் தினமும் இரண்டு வேளையும் விளக்கேற்றி ஸ்வாமி கும்பிடும்போதெல்லாம் அவங்க நினைவும் இன்னொரு அற்புதமான ஃப்ரண்டு நினைவும் வந்துகிட்டே இருக்கும்”ன்னு எங்கட சாரூஜி சொன்னாளாம்.
இதைக்கேட்ட நம் முன்னாவுக்கு ஏதோ பற்பல விஷயங்கள் புரிந்தும் புரியாததுமாக இருந்ததாம். எனக்கும்கூடத்தான். !!!!!!
இவ்வளவு அழகான, மிகப்பெரிய வெள்ளிக்குத்து விளக்குகளை ஒரு ஜோடியாக ப்ரசண்ட் செய்யணும் என்றால், அவற்றைக் கொடுத்த அந்த நெட் ஃப்ரண்டு ‘யாரோ’வுக்கும், பெற்றுக்கொண்டவரான சாரூஜிக்குமான அன்பு எத்தனை ஆழமாக இருக்க வேண்டும்!!
அந்த ‘யாரோ’வின் மனதுதான் எத்தனை விசாலமானதாக இருக்க வேண்டும் .... என எனக்குள் நான் நினைத்து வியந்து மகிழ்ந்து கொண்டேன்.
அந்த ஒரு ஜோடி அன்புள்ளங்களும், இவ்வுலகில் எங்கிருந்தாலும், எப்படியிருந்தாலும், இதே அன்பு என்றும் அவர்கள் இருவரின் மனதுக்குள்ளும் நீடித்து, அவர்கள் இருவரும் நீடூழி வாழ்க என வாழ்த்தி மகிழ்கிறேன்.
‘யாரோ .... அவர் யாரோ .... ஊர் பேர்தான் தெரியாதோ ....’ என்ற இனிய பாடல் இப்போது என் நினைவுக்கு வருகிறது. :)
இப்போது இந்தப்பதிவினில் பின்னூட்டமிட ‘ரோபோ’ ப்ராப்ளம் வந்து குறுக்கிட்டு வருவதால், இதன் தொடர்ச்சி நீண்ட இடைவேளைக்குப் பின் மீண்டும் இன்றே தொடரும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இரவு சமையலுக்கு சாரூஜி கிட்சனுக்குள் போனபோது, முன்னாவின் அம்மா தடுத்து நிறுத்தி “சாரூம்மா, காலையிலே இருந்து எல்லா வேலைகளையும் நீ தானே பண்ணினே. இரவு சாப்பாடு மட்டும் என் பெரிய பொண்ணு பண்ணிடுவா. என்ன பண்ணனும்ன்னு மட்டும் சொல்லு” என்றார்களாம்.
இதைக்கேட்ட சாரூஜிக்கு மிகவும் சந்தோஷமாகவே இருந்துள்ளது.
“நானே சமைத்து நானே சாப்பிட எனக்கும் போராகுது. நீங்க பண்ணிப்போடறேன்னு சொன்னதே சந்தோஷமா இருக்குது. ஆனால் வீட்டுக்கு வந்தவர்களை வேலை வாங்காதேன்னு எங்க வீட்டுக்காரர் சொல்லுவாங்கம்மா.....” என்று தயங்கினாளாம்.
”அதெல்லாம் நா பாத்துக்கறேன். நீ அந்த சேருல போயி கம்முன குந்திகிடுனாங்களாம்” அந்தப் பாசமுள்ள பண்புள்ள அன்புள்ள தாய்.
03.09.2016 இரவு முன்னாவின் அக்கா கைப்பட சுடச்சுட இட்லிகள் தயாரிக்கப்பட்டு, தொட்டுக்கொள்ள சுவையான தேங்காய் சட்னியும் செய்யப்பட்டு, எல்லோரும் பேசிக்கொண்டே சேர்ந்து சாப்பிட்டு மகிழ்ந்தார்களாம்.
தரையில் பாயை விரித்து ஆனந்தமாக தங்கள் வீட்டில் சேர்ந்து படுத்தே பழகிய முன்னா க்ரூப் ஆசாமிகளுக்கு இந்த ஏ.ஸி. பெட்ரூம், ஃபோம் மெத்தை, தனித்தனி ரூம்களில் அதுவும் கட்டிலில் படுக்கை என்பதெல்லாம் ஒரு மாதிரியாகி, புது இடமாகவும் இருந்துள்ள படியால் தூக்கமே வராமல் இருந்துள்ளது என அறிகிறோம்.
முன்னா புரண்டு புரண்டு படுத்தும் நள்ளிரவு வரை அவளுக்கு ஏனோ தூக்கமே வரவில்லையாம். அதற்கு வேறு ஏதாவது குறிப்பிட்ட காரணங்களும் கூட இருக்கலாம். :)
[பாலிருக்கும் ... பழமிருக்கும் ... பசியிருக்காது ... பஞ்சணையில் காற்று வரும் ... தூக்கம் வராது .... என்ற பாடல் வரிகள் ஏனோ இப்போது என் நினைவுக்கு வருகிறது]
நள்ளிரவு 12 மணி ஆகியும் தூக்கம் வராத முன்னா, கடைசியாக அங்குள்ள பெட்ஷீட் ஒன்றை எடுத்து தரையில் விரித்துக்கொண்டு, தலைக்கு ஓர் தலையணி மட்டும் வைத்துக்கொண்டு, வேறு ஒரு போர்வையால் தலையோடு கால் போர்த்திக்கொண்டு, படுத்த பிறகே, நிம்மதியான சுகமான இன்பக் கனவுகளுடன் ..... ஒரு வழியாகத் தூக்கமே வந்ததாம்.
அது என்ன சுகமான இன்பக்கனவோ ..... என்னிடம் அதை மட்டும், அந்த லங்கிணி சொல்லவே இல்லையாக்கும்.
இவள் என்னிடம் ஓபனாகச் சொல்லாவிட்டாலும், எனக்கு அதுபற்றி கற்பனை செய்துகொள்ளத் தெரியாதாக்கும் !
காலை 7 மணிக்கு விழித்துக்கொண்ட முன்னா, பட்டாஜி மட்டும் எங்கேயோ வெளியே புறப்பட்டுச் செல்வதை கவனித்திருக்கிறாள்.
அதுபற்றி விசாரித்ததில், பட்டாஜி நான்கு மாதங்களுக்கு ஒருமுறை, தன்னார்வத்துடன் இரத்த தானம் செய்யச் செல்வாராம். அவருடைய இரத்தம் பொதுவாக எங்குமே சுலபத்தில் கிடைக்காத அபூர்வமான வகை (RARE GROUP) இரத்தமாம்.
அது தவிர வருஷம் ஒருமுறை ஆதரவற்றோர் இல்லங்களுக்கு ரொக்கம் + பல்வேறு பொருட்களைக் கொண்டுபோய்க் கொடுத்து உதவுவாராம்.
பொதுவாகப் பணம் உள்ளவர்களுக்குக் கொடுக்க மனம் இருக்காதுன்னு சொல்லுவார்கள். ஆனா பட்டாஜி அவர்களிடம் பணத்துடன் கூட கொடுக்கும் மனமும் சேர்ந்து உள்ளது என்பதை மிகவும் பாராட்டப்பட வேண்டியதோர் விஷயமாக என்னிடம் முன்னா சொல்லி பூரித்துப்போனாள். எனக்கும் இது மிகவும் நியாயமாகவே பட்டது.
நாமும் அவரின் இந்த விசேஷ குணங்களைப் போற்றிப் பாராட்டுவோம்.
04.09.2016 ஞாயிறு காலை, சாரூஜியை அடுப்படிப்பக்கமே விடாமல், முன்னாவின் அம்மாவும், அக்காவுமே காலை டிபன் + மதிய சாப்பாடுக்கான சமையல் வேலைகளைத் துவங்கி விட்டார்கள்.
இருப்பினும் சாரூஜியிடம் அவ்வப்போது, டேஸ்டில் அவர்கள் குடும்பத்தாரின் விருப்பு-வெறுப்புக்களைக் கேட்டுக்கொண்டு, அவள் சொல்லிக்கொடுத்த வழிகாட்டுதல்களின்படியே, அனைத்துச் சமையல் வேலைகளையும் பக்குவமாகச் செய்து முடித்துள்ளார்கள்.
காலை டிபனாக, ப்ரட் ரோஸ்ட், காய்கறி ஸ்டஃப் ஸாண்ட்விச் சாப்பிட்டுள்ளார்கள் எனக் கேள்விப்படுகிறோம்.
>>>>> இந்தப் பயணக்கட்டுரை நாளையும் தொடரும் ..... ஜாக்கிரதை ! >>>>>
முன்னா ரொம்ப நாள் கழிச்சு வறேன்ல....நல்லா இருக்கு பாட்டு...
ReplyDeleteபூந்தளிர் 17 September 2016 at 20:44
Delete//முன்னா ரொம்ப நாள் கழிச்சு வறேன்ல....நல்லா இருக்கு பாட்டு...//
வாராய் என் தோழி வாராயோ ! வணக்கம்.
இவ்வளவு நாட்கள் எங்கு போனாயோ?
உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல ..... என இங்கு நாங்கள் அழுது புலம்பிக்கொண்டு இருக்கிறோமாக்கும்.
அன்புள்ள மீனா, வணக்கம்மா.
ReplyDeleteஉன்னுடைய வலைப்பதிவின் வெற்றிகரமான இன்றைய 400-வது பதிவுக்கு என் மனம் நிறைந்த இனிய பாராட்டுகள் + நல்வாழ்த்துகள்.
ஹப்பா....400----வது பதிவாஆஆஆஊஊ..செம ஸ்பீடுதான்...
Delete’மீனா’ என்று என்னால் அன்புடன் அழைக்கப்படும்
ReplyDelete’முன்னா மெஹர் மாமியின் மும்பைப் பயண அனுபவம்’
பகுதி-8
பகுதி-1 க்கான இணைப்பு:
http://htpsipikulmuthu.blogspot.in/2016/09/blog-post_91.html
பகுதி-2 க்கான இணைப்பு:
http://htpsipikulmuthu.blogspot.in/2016/09/blog-post_15.html
பகுதி-3 க்கான இணைப்பு:
http://htpsipikulmuthu.blogspot.in/2016/09/blog-post_78.html
பகுதி-4 க்கான இணைப்பு:
http://htpsipikulmuthu.blogspot.in/2016/09/blog-post_22.html
பகுதி-5 க்கான இணைப்பு:
https://htpsipikulmuthu.blogspot.in/2016/09/blog-post_49.html
பகுதி-6 க்கான இணைப்பு:
http://htpsipikulmuthu.blogspot.in/2016/09/dil-dadap.html
பகுதி-7 க்கான இணைப்பு:
http://htpsipikulmuthu.blogspot.in/2016/09/blog-post_1.html
>>>>>
(41)
ReplyDeleteபிறகு ஒருவழியாக, பட்டாஜியும், முன்னாவின் அப்பாவும் தங்கள் கை நிறைய பானிபூரி, பேல் பூரி, பாவ் பாஜி ன்னு என்னென்னவோ நிறைய வாங்கிட்டு வந்திருந்தார்களாம். இவற்றின் படங்கள் மட்டும் எனக்கும் என் பசி வேளையில் அனுப்பப்பட்டிருந்தன. :(
”அதிலே பச்சை வெங்காயம் போட்டிருக்கும் .... அதனால் அது எனக்கு வேண்டாம்”ன்னு சாரூஜி சொன்னாங்களாம்.
”இல்லை சாரா, உனக்கு தனியா வெங்காயம் போடாம வாங்கி வந்திருக்கிறேன்”ன்னு பட்டாஜி அன்புடனும் பொறுப்புடனும் சொல்லிக்கொண்டே கொடுத்தாராம்.
’என்னே ஒரு தனி பாசம் + அன்பு + அக்கறை .... தன் மனைவி மீது’ என நினைத்து முன்னா அசந்துப்போய் ஆச்சர்யப்பட்டுப் பெருமூச்சு விட்டுக்கொண்டாளாம். :)
எல்லோரும் நல்லா சாப்பிட்டுவிட்டு அதன் பின் டீ சாப்பிட்டார்களாம்.
அப்போது மணி இரவு 7 ஆகி விட்டதாம். உடனே வீடு திரும்பினார்களாம்.
>>>>>
(42)
ReplyDeleteவீட்டுக்கு வந்த சாரூஜி நேராக பாத் ரூம் போய் கை, கால், முகம் கழுவிக்கொண்டு வந்ததும், நேராக பூஜை ரூமுக்குப்போனாளாம்.
விளக்குகள் இரண்டையும் ஏற்றி, ஊதுபத்தி கொளுத்தி விட்டு ஸ்வாமி கும்பிட்டாளாம்.
கிட்சன் பக்கத்திலேயே ஸ்வாமி ரூம் கட்டி இருக்கிறார்களாம். பூஜை அறை பூராவும் மார்பிள் தானாம்.
பொதுவாக வீட்டின் எல்லாத்தரைகளுமே மார்பிள் தானாம்.
ஸ்வாமி ரூமின் சின்னக்கதவுகளில், குட்டிக்குட்டியா சிறுசிறு மணிகள் தொங்கவிடப் பட்டுள்ளதாம்.
திறந்து மூடும் போது அவை கிண்-கிணி சப்தம் எழுப்புவது இனிமையாக உள்ளதாம்.
>>>>>
(43)
ReplyDeleteநம் சாரூஜி இரண்டு விளக்குகள் ஏற்றினாள் என்று மேலே சொல்லியிருக்குது அல்லவா. அவை சாதாரண விளக்குகள் அல்ல.
மிக உயரமான நம் முன்னா எழுந்து நின்றால் அவளின் முழங்கால் உயரத்துக்கு இருக்கும் நல்ல மஹா முரடான, பளிச்சென்ற வெள்ளிக் குத்து விளக்குகளாம்.
முன்னாவே நல்ல உயரமாக இருப்பாள் என நான் யூகிப்பதால், அவளின் முழங்கால் உயரம் தரையிலிருந்து 2 அல்லது 2-1/2 அடி இருக்கக்கூடும். :)
அந்த மிக உயரமான, பிரும்மாண்டமான, பளிச்சென்று மின்னும் ஒரு ஜோடி வெள்ளிக்குத்து விளக்குகளைப் பார்த்து, பிரமித்துப்போன முன்னாவின் அம்மா “சாரூ ... இந்த இரண்டு வெள்ளி விளக்குகளும் மிகவும் ஜோரா புதுசா பள-பளன்னு இருக்குதே .... இப்போ சமீபத்தில் இங்கே எங்காவது வாங்கினாயா?” என்று கேட்டார்களாம்.
அதற்கு சாரூ “இல்லையம்மா. எங்க கல்யாணத்துக்கு ஒரு நெட் ஃப்ரண்டு வந்திருந்தாங்க. அவங்கதான் எனக்கு கிஃப்ட் ஆக இவற்றை பிரசண்ட் பண்ணினாங்க. நான் தினமும் இரண்டு வேளையும் விளக்கேற்றி ஸ்வாமி கும்பிடும்போதெல்லாம் அவங்க நினைவும் இன்னொரு அற்புதமான ஃப்ரண்டு நினைவும் வந்துகிட்டே இருக்கும்”ன்னு எங்கட சாரூஜி சொன்னாளாம்.
இதைக்கேட்ட நம் முன்னாவுக்கு ஏதோ பற்பல விஷயங்கள் புரிந்தும் புரியாததுமாக இருந்ததாம். எனக்கும்கூடத்தான். !!!!!!
>>>>>
(44)
ReplyDeleteஇவ்வளவு அழகான, மிகப்பெரிய வெள்ளிக்குத்து விளக்குகளை ஒரு ஜோடியாக ப்ரசண்ட் செய்யணும் என்றால், அவற்றைக் கொடுத்த அந்த நெட் ஃப்ரண்டு ‘யாரோ’வுக்கும், பெற்றுக்கொண்டவரான சாரூஜிக்குமான அன்பு எத்தனை ஆழமாக இருக்க வேண்டும்!!
அந்த ‘யாரோ’வின் மனதுதான் எத்தனை விசாலமானதாக இருக்க வேண்டும் .... என எனக்குள் நான் நினைத்து வியந்து மகிழ்ந்து கொண்டேன்.
அந்த ஒரு ஜோடி அன்புள்ளங்களும், இவ்வுலகில் எங்கிருந்தாலும், எப்படியிருந்தாலும், இதே அன்பு என்றும் அவர்கள் இருவரின் மனதுக்குள்ளும் நீடித்து, அவர்கள் இருவரும் நீடூழி வாழ்க என வாழ்த்தி மகிழ்கிறேன்.
‘யாரோ .... அவர் யாரோ .... ஊர் பேர்தான் தெரியாதோ ....’ என்ற இனிய பாடல் இப்போது என் நினைவுக்கு வருகிறது. :)
>>>>>
இப்போது இந்தப்பதிவினில் பின்னூட்டமிட ‘ரோபோ’ ப்ராப்ளம் வந்து குறுக்கிட்டு வருவதால், இதன் தொடர்ச்சி நீண்ட இடைவேளைக்குப் பின் மீண்டும் இன்றே தொடரும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
ReplyDeleteஇந்த புறா ஆட வேண்டுமானால் இளவரசர் பாட வேண்டும்
ReplyDeleteஓ.. பாட வேண்டுமா
வசந்த முல்லை போலே வந்து அசைந்து ஆடும் பெண் புறாவே
வசந்த முல்லை போலே வந்து அசைந்து ஆடும் பெண் புறாவே
மாயமெல்லாம் நான் அறிவேனே... வா.. வா.. ஒடி வா...
வசந்த முல்லை போலே வந்து அசைந்து ஆடும் பெண் புறாவே
மாயமெல்லாம் நான் அறிவேனே... வா.. வா.. ஒடி வா...
வசந்த முல்லை போலே வந்து அசைந்து ஆடும் பெண் புறாவே
இசையினில் மயங்கியே.. இன்புறும் அன்பே வா........
ஆ...... ஆ ஆ.......
இசையினில் மயங்கியே.. இன்புறும் அன்பே வா
ஈடிலா உன்னையே... என்... மனம் நாடுதே....
ஈடிலா உன்னையே... என்... மனம் நாடுதே....
வசந்த முல்லை போலே வந்து அசைந்து ஆடும் பெண் புறாவே
மாயமெல்லாம் நான் அறிவேனே... வா.. வா.. ஒடி வா...
வசந்த முல்லை போலே வந்து அசைந்து ஆடும் பெண் புறாவே
சிந்தனை விருந்தாகி சீரிய கனவாகி விந்தைகள் புரிந்தாய் நான் அறியாமலே.......
சிந்தனை விருந்தாகி சீரிய கனவாகி விந்தைகள் புரிந்தாய் நான் அறியாமலே...
மந்திர கண்ணாலே தந்திர வலை வீசும் சுந்தர வடிவே உன் துணை காணவா......
மந்திர கண்ணாலே தந்திர வலை வீசும் சுந்தர வடிவே உன் துணை காணவா...
இந்திர வில் நீயே... சந்திர ஒளி நீயே...
இந்திர வில் நீயே... சந்திர ஒளி நீயே...
ஈடிலா உன்னையே... என்... மனம் நாடுதே....
ஈடிலா உன்னையே... என்... மனம் நாடுதே....
வசந்த முல்லை போலே வந்து அசைந்து ஆடும் பெண் புறாவே
படம்: சாரங்கதாரா
ReplyDeleteபாடியவர்: டி.எம்.செளந்தரராஜன்
நடிப்பு:
சிவாஜி கணேசன் வாய் அசைத்துப் பாட
ராஜ சுலோசனா நடனம்
பாடல் வரிகள்: மருதகாசி
இசை: ஜி. இராமநாத ஐயர்
மிகவும் இனிமையானதோர் இந்தப் பாடல் பகிர்வுக்கு என் நன்றிகள்.
ReplyDelete(45)
ReplyDeleteஇரவு சமையலுக்கு சாரூஜி கிட்சனுக்குள் போனபோது, முன்னாவின் அம்மா தடுத்து நிறுத்தி “சாரூம்மா, காலையிலே இருந்து எல்லா வேலைகளையும் நீ தானே பண்ணினே. இரவு சாப்பாடு மட்டும் என் பெரிய பொண்ணு பண்ணிடுவா. என்ன பண்ணனும்ன்னு மட்டும் சொல்லு” என்றார்களாம்.
இதைக்கேட்ட சாரூஜிக்கு மிகவும் சந்தோஷமாகவே இருந்துள்ளது.
“நானே சமைத்து நானே சாப்பிட எனக்கும் போராகுது. நீங்க பண்ணிப்போடறேன்னு சொன்னதே சந்தோஷமா இருக்குது. ஆனால் வீட்டுக்கு வந்தவர்களை வேலை வாங்காதேன்னு எங்க வீட்டுக்காரர் சொல்லுவாங்கம்மா.....” என்று தயங்கினாளாம்.
”அதெல்லாம் நா பாத்துக்கறேன். நீ அந்த சேருல போயி கம்முன குந்திகிடுனாங்களாம்” அந்தப் பாசமுள்ள பண்புள்ள அன்புள்ள தாய்.
>>>>>
(46)
ReplyDelete03.09.2016 இரவு முன்னாவின் அக்கா கைப்பட சுடச்சுட இட்லிகள் தயாரிக்கப்பட்டு, தொட்டுக்கொள்ள சுவையான தேங்காய் சட்னியும் செய்யப்பட்டு, எல்லோரும் பேசிக்கொண்டே சேர்ந்து சாப்பிட்டு மகிழ்ந்தார்களாம்.
>>>>>
(47)
ReplyDeleteஇரவு எல்லோரும் இன்பக்கனவுகளுடன் (தூங்கும்) சயன நேரம் நெருங்கிவிட்டதாம்.
முன்னாவின் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் மட்டும் தனியாக ஒரு பெட் ரூம் ஒதிக்கித் தரப்பட்டதாம்.
முன்னாவுக்கும் அவளின் அக்காவுக்கும் மட்டும் தனி பெட் ரூம் ஒதிக்கித்தரப்பட்டதாம்.
பியூஷ் மட்டும் எப்போதும்போல அவனின் ஓர் தனி பெட் ரூமில் போய் படுத்து விட்டானாம்.
சாரூஜியும் பட்டாஜியும் வழக்கம்போல அவர்களின் மாஸ்டர் பெட்ரூமில் .... .... .... .... :))
>>>>>
(48)
ReplyDeleteதரையில் பாயை விரித்து ஆனந்தமாக தங்கள் வீட்டில் சேர்ந்து படுத்தே பழகிய முன்னா க்ரூப் ஆசாமிகளுக்கு இந்த ஏ.ஸி. பெட்ரூம், ஃபோம் மெத்தை, தனித்தனி ரூம்களில் அதுவும் கட்டிலில் படுக்கை என்பதெல்லாம் ஒரு மாதிரியாகி, புது இடமாகவும் இருந்துள்ள படியால் தூக்கமே வராமல் இருந்துள்ளது என அறிகிறோம்.
முன்னா புரண்டு புரண்டு படுத்தும் நள்ளிரவு வரை அவளுக்கு ஏனோ தூக்கமே வரவில்லையாம். அதற்கு வேறு ஏதாவது குறிப்பிட்ட காரணங்களும் கூட இருக்கலாம். :)
[பாலிருக்கும் ... பழமிருக்கும் ... பசியிருக்காது ... பஞ்சணையில் காற்று வரும் ... தூக்கம் வராது .... என்ற பாடல் வரிகள் ஏனோ இப்போது என் நினைவுக்கு வருகிறது]
நள்ளிரவு 12 மணி ஆகியும் தூக்கம் வராத முன்னா, கடைசியாக அங்குள்ள பெட்ஷீட் ஒன்றை எடுத்து தரையில் விரித்துக்கொண்டு, தலைக்கு ஓர் தலையணி மட்டும் வைத்துக்கொண்டு, வேறு ஒரு போர்வையால் தலையோடு கால் போர்த்திக்கொண்டு, படுத்த பிறகே, நிம்மதியான சுகமான இன்பக் கனவுகளுடன் ..... ஒரு வழியாகத் தூக்கமே வந்ததாம்.
அது என்ன சுகமான இன்பக்கனவோ ..... என்னிடம் அதை மட்டும், அந்த லங்கிணி சொல்லவே இல்லையாக்கும்.
இவள் என்னிடம் ஓபனாகச் சொல்லாவிட்டாலும், எனக்கு அதுபற்றி கற்பனை செய்துகொள்ளத் தெரியாதாக்கும் !
>>>>>
(49)
ReplyDeleteகாலை 7 மணிக்கு விழித்துக்கொண்ட முன்னா, பட்டாஜி மட்டும் எங்கேயோ வெளியே புறப்பட்டுச் செல்வதை கவனித்திருக்கிறாள்.
அதுபற்றி விசாரித்ததில், பட்டாஜி நான்கு மாதங்களுக்கு ஒருமுறை, தன்னார்வத்துடன் இரத்த தானம் செய்யச் செல்வாராம். அவருடைய இரத்தம் பொதுவாக எங்குமே சுலபத்தில் கிடைக்காத அபூர்வமான வகை (RARE GROUP) இரத்தமாம்.
அது தவிர வருஷம் ஒருமுறை ஆதரவற்றோர் இல்லங்களுக்கு ரொக்கம் + பல்வேறு பொருட்களைக் கொண்டுபோய்க் கொடுத்து உதவுவாராம்.
பொதுவாகப் பணம் உள்ளவர்களுக்குக் கொடுக்க மனம் இருக்காதுன்னு சொல்லுவார்கள். ஆனா பட்டாஜி அவர்களிடம் பணத்துடன் கூட கொடுக்கும் மனமும் சேர்ந்து உள்ளது என்பதை மிகவும் பாராட்டப்பட வேண்டியதோர் விஷயமாக என்னிடம் முன்னா சொல்லி பூரித்துப்போனாள். எனக்கும் இது மிகவும் நியாயமாகவே பட்டது.
நாமும் அவரின் இந்த விசேஷ குணங்களைப் போற்றிப் பாராட்டுவோம்.
>>>>>
(50)
ReplyDelete04.09.2016 ஞாயிறு காலை, சாரூஜியை அடுப்படிப்பக்கமே விடாமல், முன்னாவின் அம்மாவும், அக்காவுமே காலை டிபன் + மதிய சாப்பாடுக்கான சமையல் வேலைகளைத் துவங்கி விட்டார்கள்.