Saturday, 10 September 2016

வாராயோ வெண்ணிலாவே


11 comments:

  1. எவ்ளோ பழய பாட்டு. பழய பாட்டுல தான் வார்த்தைகள் புரியும்படி இருக்கு...

    ReplyDelete
  2. மியூஸிக் இனிமையா இருப்பதால பாடல் வரிகளை கேட்டு ரசிக்க முடியுது..

    ReplyDelete
  3. பாடியவர்: ஏ.எம். ராஜா, ஜிக்கி
    இயற்றியவர்: தஞ்சை ராமையா தாஸ்
    திரைப்படம்: மிஸ்ஸியம்மா

    -=-=-=-=-

    வாராயோ வெண்ணிலாவே
    கேளாயோ எங்கள் கதையே

    வாராயோ வெண்ணிலாவே
    கேளாயோ எங்கள் கதையே

    வாராயோ வெண்ணிலாவே

    அகம்பாவம் கொண்ட சதியால்
    அறிவால் உயர்ந்திடும் பதி நான்

    அகம்பாவம் கொண்ட சதியால்
    அறிவால் உயர்ந்திடும் பதி நான்

    சதிபதி விரோத மிகவே
    சிதைந்தது இதந்தரும் வாழ்வே

    வாராயோ வெண்ணிலாவே
    கேளாயோ எங்கள் கதையே

    வாராயோ வெண்ணிலாவே
    கேளாயோ எங்கள் கதையே

    வாராயோ வெண்ணிலாவே

    வாக்குரிமை தந்த பதியால்
    வாழ்ந்திடவே வந்த சதி நான்

    வாக்குரிமை தந்த பதியால்
    வாழ்ந்திடவே வந்த சதி நான்

    நம்பிடச் செய்வார் நேசம்
    நடிப்பதெல்லாம் வெளி வேஷம்

    வாராயோ வெண்ணிலாவே

    தன் பிடிவாதம் விடாது
    என் மனம் போல் நடக்காது

    தன் பிடிவாதம் விடாது
    என் மனம் போல் நடக்காது

    தமக்கென எதுவும் சொல்லாது
    நம்மையும் பேச விடாது

    வாராயோ வெண்ணிலாவே

    அனுதினம் செய்வார்மோடி
    அகமகிழ்வார் போராடி

    அனுதினம் செய்வார்மோடி
    அகமகிழ்வார் போராடி

    இல்லறம் இப்படி நடந்தால்
    நல்லறமாமோ நிலவே

    வாராயோ வெண்ணிலாவே
    கேளாயோ எங்கள் கதையே

    வாராயோ வெண்ணிலாவே

    ReplyDelete
  4. சதி .... என்றால் மனைவி
    பதி .... என்றால் கணவன்

    சதி-பதி என்றால் புருஷன் பொஞ்சாதி என்று அர்த்தம்.

    இது போன்ற அந்தக்காலப் படங்களில் காதல் ஜோடிகளுக்கு இடையே குறைந்தது ஒரு கிலோமீட்டர் இடைவெளி இருக்கும்.

    தோட்டத்தில் ஒருத்தி ஒரு பூவைப் பிடித்திருப்பாள். அவளின் ஜோடி எங்கேயோ தள்ளி நின்றுகொண்டு வேறு ஏதேனும் ஒரு இலையையோ அல்லது கிளையையோ பிடித்துக்கொண்டு பாடிக்கொண்டு இருப்பான்.

    இப்போது வரும் படங்களில் ஒரே குத்தாட்டமும் க்ரூப் டான்ஸுமாக
    சர்வாங்கத்தையும் காட்டிக்கொண்டு, குடும்பத்துடனும் குழந்தைகளுடனும் நாம் சேர்ந்து பார்க்கவே சகிக்க முடியாமல் இருந்து வருகிறது.

    ReplyDelete
  5. ஆமாங்க.. காதலகூட எவ்ளவு மென்மையான சொல்லுறாங்க

    ReplyDelete
    Replies
    1. சிப்பிக்குள் முத்து. 11 September 2016 at 04:18

      //ஆமாங்க.. காதலகூட எவ்ளவு மென்மையான சொல்லுறாங்க//

      ஆமாம் மீனா. எதிலுமே ஒரு மென்மையும், மேன்மையும் இருக்க வேண்டும். அதுதான் வாழ்க்கையில் எப்போதும் நல்லதொரு இனிமையைக் கொடுக்கும். வாழ்க்கை முழுவதும் தொடர்ச்சியாக மகிழ்ச்சியாக இருக்கும்.

      Delete
  6. இப்பாலம் கால்ன்ற பேருல டைரக்டராக ஆக்ஷனில் இறங்குறாங்க.. ஒரு சில நல்லவங்களும் இருக்காங்கதான்

    ReplyDelete
    Replies
    1. சிப்பிக்குள் முத்து. 11 September 2016 at 04:20

      //இப்ப எல்லாம் காதல் என்கிற பேருல டைரக்டராக ஆக்‌ஷனில் இறங்குறாங்க..//

      அதெல்லாம் இனிமையான காதல் அல்ல. காம வெறி மட்டுமே.

      //ஒரு சில நல்லவங்களும் இருக்காங்கதான்//

      எதிலும் நல்லதும் உண்டு ... கெட்டதும் உண்டு. நாம் தான் நல்லதானவற்றை மட்டும் தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும்.

      Delete
  7. ஓர் மகிழ்ச்சியான செய்தி !
    ============================


    ’மீனா’ என்று என்னால்
    அன்புடன் அழைக்கப்படும்

    ’முன்னா மெஹர் மாமியின்
    மும்பைப் பயண அனுபவம்’

    பற்றிய குறிப்புகள்
    வெகு விரைவில் இங்கு
    இந்தப்பின்னூட்டப்பகுதியிலேயே
    என்னால் வெளியிடப்பட உள்ளன.

    காணத்தவறாதீர்கள்.

    ReplyDelete
  8. எப்போ...எப்போ.....ஆர்வமுடன்.....

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர் 18 September 2016 at 05:25

      //எப்போ...எப்போ.....ஆர்வமுடன்.....//

      வாராயோ வெண்ணிலாவே
      கேளாயோ எங்கள் கதையே

      வாராயோ வெண்ணிலாவே
      கேளாயோ எங்கள் கதையே

      வாராயோ வெண்ணிலாவே

      மொத்தம் வெளியிடுவதாக உத்தேசிக்கப்பட்டுள்ள 80 சிறுசிறு பகுதிகளில் இன்று 18.09.2016 ஞாயிறு முடிய முதல் 50 பகுதிகளை வெளியிட்டு விட்டேன்.

      எனது கம்ப்யூட்டர் + நெட் கனெக்‌ஷன்ஸ் ஒத்துழைத்தாலும், இடையே இடையே ஏற்பட்டு வரும் ரோபோ பிரச்சனைகள் ஏதும் இல்லாவிட்டாலும், இன்னும் மூன்றே நாட்களில் அந்த 30 பகுதிகளும் வெளியிட்டு விடலாம் என்ற நம்பிக்கை உள்ளது. அநேகமாக வரும் 21.09.2016 புதன் கிழமைக்குள் அனைத்தும் நிறைவடைந்துவிடும்.

      Delete