எனக்கு மிகவும் பிடித்தமான, நான் பைத்யம்போல என் சின்ன வயதில் பலமுறை பார்த்து ரஸித்து மகிழ்ந்துள்ள, ’வியட்நாம் வீடு’ என்ற படத்திலிருந்து இந்தக்குறிப்பிட்ட பாடலை பதிவு செய்துள்ள எங்கட மீனாக்குட்டிக்கு என் மனமார்ந்த கோடானுகோடி நன்றிகள்.
நான் என் வாழ்க்கையில், எனக்கு ரோல் மாடலாக எடுத்துக்கொண்ட கதாபாத்திரம் இந்த ‘வியட்நாம் வீடு’ படத்தில் வரும் பிரஸ்டீஜ் பத்மனாப ஐயர் .... சிவாஜிகணேசன் அவர்களை மட்டுமே.
இன்றும் நான் அதுபோல மட்டுமே எனக்குள் வாழ்ந்து வருகிறேன்.
எப்பேர்ப்பட்ட கதை; எப்பேர்ப்பட்ட நடிப்பு; ஆஹா, அத்தனையும் அருமையோ அருமையே. நெஞ்சில் நிற்கும் அருமையான கதை.
படம் என்றால் இதுதான் படம்.
தன் வயதான காலத்தில், தன் மனைவியின் அருமை பெருமைகளைத் தெரிந்து, ஓர் உண்மையான கணவன் மிக உருக்கமாகப் பாடும் பாடல் இது.
எப்போதும் மனசாட்சிக்கு பயப்படும் + நெஞ்சார உணரக்கூடிய சக்தியுள்ள அனுபவசாலிகளுக்கு மட்டுமே இது விளங்கும்.
தாம்பத்யம் என்றால் அப்படியொரு அருமையான தாம்பத்யத்தைக் குறிப்பதும் இந்தப்படத்தின் வெற்றிக்கு ஓர் மிக முக்கியமான காரணமாகும்.
ஏன் ரெண்டு பேரும் இப்புடி அழுவுறாங்க.....
ReplyDeleteஇந்த பாட்டு பாக்கும்போதே நம்ம கண்ணுலயும் கண்ணீர் வருதே...
ReplyDeleteசோ பாட்டா... உருக்கமா இருக்கு... என் தேவையை யார் அறிவார்... உன்னைப்போல்...தெய்வம் ஒன்றே அறியும்...உண்மைதான்....
ReplyDelete//என் தேவையை யார் அறிவார்... உன்னைப்போல்... தெய்வம் ஒன்றே அறியும்... உண்மைதான்....//
Delete:)))))))))))))))
"ஆழம் விழுதுகள் போல்
உறவு ஆயிரம் வந்தும் என்ன
வேர் என நீ இருந்தாய்
அதில் நான் வீழ்ந்து விடாதிருந்தேன்"
உன் கண்ணில் நீர் வழிந்தால்
ReplyDeleteஎன் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி
உன் கண்ணில் நீர் வழிந்தால்
என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி
என் கண்ணில் பாவை அன்றோ
கண்ணம்மா என்னுயிர் நின்னதன்றோ
உன் கண்ணில் நீர் வழிந்தால்
என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி
உன்னை கரம் பிடித்தேன்
உன்னை கரம் பிடித்தேன்
வாழ்க்கை ஒளிமயம் ஆனதடி
பொன்னை மணந்ததனால் சபையில்
சபையில் புகழும் வளர்ந்ததடி
உன் கண்ணில் நீர் வழிந்தால்
என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி
கால சுமைதாங்கி போலே
மார்பில் எனை தாங்கி
வீழும் கண்ணீர் துடைப்பாய்
அதில் என் விம்மல் தணியுமடி
ஆழம் விழுதுகள் போல்
உறவு ஆயிரம் வந்தும் என்ன
ஆழம் விழுதுகள் போல்
உறவு ஆயிரம் வந்தும் என்ன
வேர் என நீ இருந்தாய்
அதில் நான் வீழ்ந்து விடாதிருந்தேன்
உன் கண்ணில் நீர் வழிந்தால்
என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி
முள்ளில் படுக்கையிட்டு
இமையை மூடவிடாதிருக்கும்
பிள்ளை குலமடியோ என்ன பேதைமை செய்ததடி
பேருக்கு பிள்ளை உண்டு
பேசும் பேச்சுக்கு சொந்தமுண்டு
பேருக்கு பிள்ளை உண்டு
பேசும் பேச்சுக்கு சொந்தமுண்டு
என் தேவையை யார் அறிவார்
என் தேவையை யார் அறிவார் உன்னை போல்
தெய்வம் ஒன்றே அறியும்
உன் கண்ணில் நீர் வழிந்தால்
என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி
என் கண்ணில் பாவை அன்றோ
கண்ணம்மா என்னுயிர் நின்னதன்றோ
உன் கண்ணில் நீர் வழிந்தால் .....
எனக்கு மிகவும் பிடித்தமான, நான் பைத்யம்போல என் சின்ன வயதில் பலமுறை பார்த்து ரஸித்து மகிழ்ந்துள்ள, ’வியட்நாம் வீடு’ என்ற படத்திலிருந்து இந்தக்குறிப்பிட்ட பாடலை பதிவு செய்துள்ள எங்கட மீனாக்குட்டிக்கு என் மனமார்ந்த கோடானுகோடி நன்றிகள்.
ReplyDeleteபாடியவர்கள்: T.M.S
ReplyDeleteஇசை: K.V. மஹாதேவன்
பாடலாசிரியர்: கண்ணதாசன்
ஆண்டு: 1970 (எனக்கு அப்போது 19 முடிந்து 20 வயது)
நான் என் வாழ்க்கையில், எனக்கு ரோல் மாடலாக எடுத்துக்கொண்ட கதாபாத்திரம் இந்த ‘வியட்நாம் வீடு’ படத்தில் வரும் பிரஸ்டீஜ் பத்மனாப ஐயர் .... சிவாஜிகணேசன் அவர்களை மட்டுமே.
ReplyDeleteஇன்றும் நான் அதுபோல மட்டுமே எனக்குள் வாழ்ந்து வருகிறேன்.
எப்பேர்ப்பட்ட கதை; எப்பேர்ப்பட்ட நடிப்பு; ஆஹா, அத்தனையும் அருமையோ அருமையே. நெஞ்சில் நிற்கும் அருமையான கதை.
படம் என்றால் இதுதான் படம்.
தன் வயதான காலத்தில், தன் மனைவியின் அருமை பெருமைகளைத் தெரிந்து, ஓர் உண்மையான கணவன் மிக உருக்கமாகப் பாடும் பாடல் இது.
எப்போதும் மனசாட்சிக்கு பயப்படும் + நெஞ்சார உணரக்கூடிய சக்தியுள்ள அனுபவசாலிகளுக்கு மட்டுமே இது விளங்கும்.
தாம்பத்யம் என்றால் அப்படியொரு அருமையான தாம்பத்யத்தைக் குறிப்பதும் இந்தப்படத்தின் வெற்றிக்கு ஓர் மிக முக்கியமான காரணமாகும்.
பகிர்வுக்கு மீண்டும் என் நன்றிகள், மீனா.
இப்படி ரசிச்சு கமெண்ட் போட்டாதான் திருப்தியா இருக்குது கோபால்ஜி.
ReplyDelete.
ப்ராப்தம் 9 September 2016 at 22:23
Delete//இப்படி ரசிச்சு கமெண்ட் போட்டாதான் திருப்தியா இருக்குது கோபால்ஜி.//
தேங்க் யூ வெரி மச் .... சாரூஊஊஊஊஊஊஊ :))))))