காலையில் ஏழு மணிக்கு எங்கோ வெளியே போன பட்டாஜி பகல் 11 மணிக்குத் திரும்பி வந்து, அதன்பிறகே டிபன் சாப்பிட்டுள்ளார்.
முன்னாவின் அம்மா + அப்பாவை மட்டும் தனியாக ஜாலியாக பிரைவசியுடன் :) வீட்டில் இருக்குமாறு விட்டுவிட்டு, மற்ற அனைவரும் ஜாலியாகவும் + ஒருசில முக்கிய ஜோலியாகவும் ஷாப்பிங் கிளம்பியுள்ளனர்.
மிகப்பெரிய முரட்டு ஷாப்பிங் மாலுக்குச் சென்றுள்ளனர்.
முன்னாவின் அம்மாவிடம் ஏற்கனவே பல புடவைகள் உள்ளன என்று முன்னா சொன்னதை சரியென்று ஏற்றுக்கொண்ட சாரூஜி, வேறொரு கடைக்கு இவர்களைக் கூட்டிச்சென்றுள்ளார்.
அங்கு சற்றே விலை ஜாஸ்தியான (நான்கு ஸ்தான விலையில்) வெஜிடபுள் கட்டர் (காய்கறிகள் வெட்டும் மெஷின்) ஒன்றுக்கு இரண்டாக வாங்கிக்கொடுத்து அசத்தியிருக்கிறாள்.
வெஜிடபுள் கட்டரில் ஒன்று நம் முன்னா வீட்டுக்கு .... மற்றொன்று பக்கத்து வீட்டு ஐயர் மாமி வீட்டுக்கு, என் நம் சாரூஜியே சொல்லியிருக்கிறாள்.
திரட்டுப்பால் + ரிப்பன் பக்கோடா போன்ற மஸக்கை பக்ஷணங்களை, தன் கைகளாலேயே தன் வீட்டிலேயே, மடி ஆசாரமாகச் செய்துகொடுத்து, தன் ஆத்தில் இருந்த ஊறிய பதமான, காரசாரமான வடுமாங்காய்களையும் ஒரு பாட்டிலில் போட்டு, ஆசையுடன் அனுப்பி வைத்துள்ள அந்த எங்கட ஐயர் மாமியையும் மறக்காமல், சாரூஜி வெஜிடபுள் கட்டர் வாங்கிக்கொடுத்துள்ளது, அவளின் நல்ல தங்கமான மனஸையும், பெருந்தன்மையையும் மேலும் பளிச்சென்று நமக்குக் காட்டி நம்மை மகிழ்விக்கின்றது.
முன்னா வீட்டிலுள்ள மற்றவர்களுக்காக நிறைய ஸ்வீட்ஸ், காரம், ஒரு மிகப்பெரிய கூடை நிறையப்பழங்கள் என வாங்கிக்கொடுத்து அசத்தியுள்ளனர் ..... பட்டாஜி+சாரூஜி தம்பதியினர்.
”இதுபோல கலகலப்பாக பலருடன் சேர்ந்து, பேசிக்கிட்டே சாப்பிடுவதுதான் எனக்கு மிகவும் பிடித்துள்ளது”ன்னு இப்போது பூத்துக்குலுங்கும் எங்கட சாரூஜி சொல்லிச்சொல்லி பூரித்துப்போனாளாம்.
ஒவ்வொருவரும் தமிழில் பேசுவதை பட்டாஜிக்குப் புரியும்படியாக ஆங்கிலத்தில் கொஞ்சமேனும் மொழியாக்கம் செய்ய மட்டுமே முன்னா அந்த அவரின் பக்கத்து சீட்டைப் பிடித்துக் கொண்டதாக என்னிடம் சொல்லியிருந்தாள்.
பட்டாஜியும் பியூஷும் ரஸத்தை சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிடாமல், கப்பில் வாங்கி சூப் போல குடித்து மகிழ்ந்தார்களாம்.
மணமுள்ள வடுமாங்காய் ஜலத்தின் சிகப்புக்கலரைப் பார்த்ததுமே அவங்க இரண்டு பேர்களின் கண்களிலும் கண்ணீரே வந்திடுச்சாம். அவர்கள் இருவரும் சுத்தமாக காரமே சேர்த்துக்கொள்வது கிடையாதாம்.
ஆனால் பிள்ளைத்தாச்சியான சாரூஜி மட்டும், அந்த வடுமாங்காய்களை மிகவும் விரும்பி, என்னைப்போலவே, ஸாம்பார் சாதத்துக்குக்கூட தொட்டுக்கொண்டாளாம்.
நன்கு ஊறிய வடுமாங்காய் ஊறுகாய் முதலியன செய்துகொடுத்த பக்கத்து வீட்டு ஐயர் மாமியிடம் எல்லாமே படு சூப்பராக இருந்தது என்று சொல்லி, தாங்க்ஸ் சொல்லச்சொன்னாளாம், சாரூஜி.
முன்னாவின் அம்மா மட்டும், தன் வழக்கப்படி, சாரூஜியிடம் ஏதேனும் தர்மசங்கடமான எடக்கு மடக்குக் கேள்விகள் கேட்டுக் கொண்டே இருந்தார்களாம்.
உதாரணமாக “ஏன் சாரூ, நீ நல்லா தமிழ் பேசுகிறாய். உன் வீட்டுக்காரருக்கு ஏன் தமிழே தெரியலே”ன்னு ஆரம்பிச்சுட்டாங்களாம்.
முன்னா தன் அம்மாவை உடனே முறைத்துப்பார்க்க, பட்டாஜி அதனையும் கவனித்து விட்டாராம்.
உடனே அவர் “ஏன், முன்னா நீ அவங்களைப் பார்த்து முறைக்கிறாய்? அவங்க என்ன கேட்டாங்கன்னு எனக்கும் புரிகிறது. நானே அதற்கு பதில் சொல்கிறேன்” என்று ஆரம்பித்து விட்டாராம்.
சாராவோட அமைதி, வேலையில் அவள் காட்டி வந்த சின்ஸியாரிடி, அனாவஸ்யமாக பிறர் யாருடனும் சேர்ந்து அரட்டை அடிக்காமல் இருந்தது எல்லாமே எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. அவளிடம் என் விருப்பத்தைச் சொன்னேன்....” என்று சொல்லி பட்டாஜி கொஞ்சம் நிறுத்தி இடைவெளி கொடுத்த போது ......
முன்னாவின் அப்பா “அப்போ உங்க மேரேஜ் லவ் மேராஜா” என்று கேட்டுள்ளார்,
பட்டாஜி சிரித்துக்கொண்டே “ஓரளவு அப்படித்தான்;
ஆக்சுவலாக அவளுக்குக் கல்யாணம் செய்து கொள்ளும் நினைப்பெல்லாம் அப்போது இல்லவே இல்லை. ’சமூக சேவை செய்யத்தான் தனக்கு விருப்பம்’ன்னு கல்யாணத்தையே தட்டிக்கழிக்கத்தான் பார்த்தாள்;
அப்புறம் எப்படி அவள் இந்த எங்கள் கல்யாணத்திற்குச் சம்மதித்தால் என்று அவளைத்தான் நீங்க கேட்கணும்;
கல்யாணத்துக்கு முன்பு சாராவை நான் லவ் பண்ணினேன்;
இப்போ சாரா என்னை ரொம்பவும் லவ் பண்ணிக்கிட்டே இருக்கிறாள்” என்று ஜாலியாகச் சொல்லிக்கிட்டே போக, சாரூஜியின் முகம் பூராவும் ஒரே வெட்கத்திலே குங்குமம் போலச் சிவந்து போய் விட்டதாம். :)
”சாரா, நான் உண்மையைத்தானே சொல்லிக்கிட்டு இருக்கேன்” என்று சொல்லிவிட்டு, முன்னா பக்கம் திரும்பிய பட்டாஜி “முன்னா நீ கேளு ...... நான் சாராவ விரும்பினது போல உன்னை யாராச்சும் ...... ஐ .....மீன் ..... வேற ஜாதியைச் சேர்ந்த பையன் விரும்பினா, உன் அம்மா அப்பா சம்மதிப்பாங்களா”ன்னு குருட்டாம் போக்குல ஒரு கேள்வி கேட்டு விட்டார், பட்டாஜி
[நம் யாருக்குமே இதுவரை தெரியாத, நம் முன்னாவின் காதல் விஷயம் ஏதாவது ஒருவேளை மிகவும் இரகசியமாகவே இருந்து, அது மஹாஞானியாகவும், தீர்க்கதரிசியாகவும் இருக்கும் நம் பட்டாஜி + சாரூஜி தம்பதியினருக்கு மட்டும் ஒருவேளை தெரிந்திருக்குமோ என்னவோ, என எனக்குத் தோன்றியது.]
இப்படி ஒரு திடீர் குண்டைத்தூக்கிப் போடுவார் இந்த நம் பட்டாஜி என்று முன்னாவும் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லையாம்.
இவர் கேட்டுள்ள இதனை எப்படி தன் தாயார் தகப்பனாரிடம், தன் வாயாலேயே முன்னாவால் தமிழாக்கம் செய்து சொல்ல முடியும்?
மிகவும் கூச்சமாக இருந்துள்ளது, அந்த விஷமக்காரக் குட்டிக்கு.
இவளின் இந்த இடியாப்பச் சிக்கலை, நொடிப்பொழிதினில் உணர்ந்தும், புரிந்தும் கொண்டுவிட்ட நம் சாரூஜி, பெங்காலியில் பேசி பட்டாஜியின் வாயைக் கொஞ்ச நேரத்திற்கு ஸ்விட்ச் ஆஃப் செய்து விட்டு, தானே பட்டாஜி கேட்டுள்ள கேள்வியை முன்னாவின் அப்பா-அம்மாவிடம் தமிழில் அவர்களுக்குப் புரியும் படியாக எடுத்துச் சொல்லி, அவர்களின் ஒபீனியனை பதிலாகக் கேட்டிருக்கிறாள்.
[ இந்த மிகவும் சுவாரஸ்யமான இடத்தில் இன்று ‘தொடரும்’ போட நேர்ந்துள்ளது, எனக்கு! ]
>>>>> இந்தப்பயணக் கட்டுரை நாளைக்கும் தொடருமாக்கும். ஜாக்கிரதை! >>>>>
’மீனா’ என்று என்னால் அன்புடன் அழைக்கப்படும்
ReplyDelete’முன்னா மெஹர் மாமியின் மும்பைப் பயண அனுபவம்’
பகுதி-9
பகுதி-1 க்கான இணைப்பு:
http://htpsipikulmuthu.blogspot.in/2016/09/blog-post_91.html
பகுதி-2 க்கான இணைப்பு:
http://htpsipikulmuthu.blogspot.in/2016/09/blog-post_15.html
பகுதி-3 க்கான இணைப்பு:
http://htpsipikulmuthu.blogspot.in/2016/09/blog-post_78.html
பகுதி-4 க்கான இணைப்பு:
http://htpsipikulmuthu.blogspot.in/2016/09/blog-post_22.html
பகுதி-5 க்கான இணைப்பு:
https://htpsipikulmuthu.blogspot.in/2016/09/blog-post_49.html
பகுதி-6 க்கான இணைப்பு:
http://htpsipikulmuthu.blogspot.in/2016/09/dil-dadap.html
பகுதி-7 க்கான இணைப்பு:
http://htpsipikulmuthu.blogspot.in/2016/09/blog-post_1.html
பகுதி-8 க்கான இணைப்பு:
http://htpsipikulmuthu.blogspot.in/2016/09/blog-post_37.html
>>>>>
(51)
ReplyDeleteகாலையில் ஏழு மணிக்கு எங்கோ வெளியே போன பட்டாஜி பகல் 11 மணிக்குத் திரும்பி வந்து, அதன்பிறகே டிபன் சாப்பிட்டுள்ளார்.
முன்னாவின் அம்மா + அப்பாவை மட்டும் தனியாக ஜாலியாக பிரைவசியுடன் :) வீட்டில் இருக்குமாறு விட்டுவிட்டு, மற்ற அனைவரும் ஜாலியாகவும் + ஒருசில முக்கிய ஜோலியாகவும் ஷாப்பிங் கிளம்பியுள்ளனர்.
மிகப்பெரிய முரட்டு ஷாப்பிங் மாலுக்குச் சென்றுள்ளனர்.
>>>>>
(52)
ReplyDeleteபுதுமணப்பெண்ணான முன்னாவின் அக்காவுக்கு அதிக விலையில் நிறைய ஜரிகை வேலைப்படுகள் உள்ள ட்ரெஸ் எடுத்துக்கொடுத்துள்ளனர், சாரூஜி தம்பதியினர்.
அடுத்து உடனடியாகக் கல்யாணப் பெண்ணாக ஆக, ரெடியோ ரெடியாகத் துடித்துக் கொண்டிருக்கும் நம் முன்னாவுக்கும் ஒரு ரிச் ட்ரெஸ் எடுத்துக் கொடுத்துள்ளனர்.
முன்னாவின் அம்மாவுக்கும் ஒரு ஸாரி எடுக்கப்போனபோது, முன்னாவே முன்னின்று அதைத்தடுத்து நிறுத்தி விட்டதாகத் தெரிகிறது.
>>>>>
(53)
ReplyDeleteமுன்னாவின் அம்மாவிடம் ஏற்கனவே பல புடவைகள் உள்ளன என்று முன்னா சொன்னதை சரியென்று ஏற்றுக்கொண்ட சாரூஜி, வேறொரு கடைக்கு இவர்களைக் கூட்டிச்சென்றுள்ளார்.
அங்கு சற்றே விலை ஜாஸ்தியான (நான்கு ஸ்தான விலையில்) வெஜிடபுள் கட்டர் (காய்கறிகள் வெட்டும் மெஷின்) ஒன்றுக்கு இரண்டாக வாங்கிக்கொடுத்து அசத்தியிருக்கிறாள்.
வெஜிடபுள் கட்டரில் ஒன்று நம் முன்னா வீட்டுக்கு .... மற்றொன்று பக்கத்து வீட்டு ஐயர் மாமி வீட்டுக்கு, என் நம் சாரூஜியே சொல்லியிருக்கிறாள்.
திரட்டுப்பால் + ரிப்பன் பக்கோடா போன்ற மஸக்கை பக்ஷணங்களை, தன் கைகளாலேயே தன் வீட்டிலேயே, மடி ஆசாரமாகச் செய்துகொடுத்து, தன் ஆத்தில் இருந்த ஊறிய பதமான, காரசாரமான வடுமாங்காய்களையும் ஒரு பாட்டிலில் போட்டு, ஆசையுடன் அனுப்பி வைத்துள்ள அந்த எங்கட ஐயர் மாமியையும் மறக்காமல், சாரூஜி வெஜிடபுள் கட்டர் வாங்கிக்கொடுத்துள்ளது, அவளின் நல்ல தங்கமான மனஸையும், பெருந்தன்மையையும் மேலும் பளிச்சென்று நமக்குக் காட்டி நம்மை மகிழ்விக்கின்றது.
முன்னா வீட்டிலுள்ள மற்றவர்களுக்காக நிறைய ஸ்வீட்ஸ், காரம், ஒரு மிகப்பெரிய கூடை நிறையப்பழங்கள் என வாங்கிக்கொடுத்து அசத்தியுள்ளனர் ..... பட்டாஜி+சாரூஜி தம்பதியினர்.
>>>>>
(54)
ReplyDeleteமதியம் ஒரு மணிக்கு எல்லோரும் சேர்ந்து லஞ்ச் சாப்பிட டைனிங் டேபிளில் சுற்றிலும் உட்கார்ந்துகொண்டு விட்டார்கள்.
சாரூஜி விருப்பப்படி ஸாம்பார், ரஸம், பொரியல், கூட்டு அவியல், அப்பளம்ன்னு ஜோரான விருந்து சாப்பாடு நடந்துள்ளது.
ஊர்க்கதைகளை பேசிக்கிட்டே ஜாலியாக சாப்பிட்டுள்ளனர்.
”இதுபோல கலகலப்பாக பலருடன் சேர்ந்து, பேசிக்கிட்டே சாப்பிடுவதுதான் எனக்கு மிகவும் பிடித்துள்ளது”ன்னு இப்போது பூத்துக்குலுங்கும் எங்கட சாரூஜி சொல்லிச்சொல்லி பூரித்துப்போனாளாம்.
>>>>>
(55)
ReplyDeleteசாப்பிடும்போது பட்டாஜியின் ஒருபுறம் பியூஷும் மறுபுறம் முன்னாவும் அமர்ந்துள்ளனர்.
ஒவ்வொருவரும் தமிழில் பேசுவதை பட்டாஜிக்குப் புரியும்படியாக ஆங்கிலத்தில் கொஞ்சமேனும் மொழியாக்கம் செய்ய மட்டுமே முன்னா அந்த அவரின் பக்கத்து சீட்டைப் பிடித்துக் கொண்டதாக என்னிடம் சொல்லியிருந்தாள்.
பட்டாஜியும் பியூஷும் ரஸத்தை சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிடாமல், கப்பில் வாங்கி சூப் போல குடித்து மகிழ்ந்தார்களாம்.
மணமுள்ள வடுமாங்காய் ஜலத்தின் சிகப்புக்கலரைப் பார்த்ததுமே அவங்க இரண்டு பேர்களின் கண்களிலும் கண்ணீரே வந்திடுச்சாம். அவர்கள் இருவரும் சுத்தமாக காரமே சேர்த்துக்கொள்வது கிடையாதாம்.
ஆனால் பிள்ளைத்தாச்சியான சாரூஜி மட்டும், அந்த வடுமாங்காய்களை மிகவும் விரும்பி, என்னைப்போலவே, ஸாம்பார் சாதத்துக்குக்கூட தொட்டுக்கொண்டாளாம்.
நன்கு ஊறிய வடுமாங்காய் ஊறுகாய் முதலியன செய்துகொடுத்த பக்கத்து வீட்டு ஐயர் மாமியிடம் எல்லாமே படு சூப்பராக இருந்தது என்று சொல்லி, தாங்க்ஸ் சொல்லச்சொன்னாளாம், சாரூஜி.
>>>>>
(56)
ReplyDeleteமுன்னாவின் அம்மா மட்டும், தன் வழக்கப்படி, சாரூஜியிடம் ஏதேனும் தர்மசங்கடமான எடக்கு மடக்குக் கேள்விகள் கேட்டுக் கொண்டே இருந்தார்களாம்.
உதாரணமாக “ஏன் சாரூ, நீ நல்லா தமிழ் பேசுகிறாய். உன் வீட்டுக்காரருக்கு ஏன் தமிழே தெரியலே”ன்னு ஆரம்பிச்சுட்டாங்களாம்.
முன்னா தன் அம்மாவை உடனே முறைத்துப்பார்க்க, பட்டாஜி அதனையும் கவனித்து விட்டாராம்.
உடனே அவர் “ஏன், முன்னா நீ அவங்களைப் பார்த்து முறைக்கிறாய்? அவங்க என்ன கேட்டாங்கன்னு எனக்கும் புரிகிறது. நானே அதற்கு பதில் சொல்கிறேன்” என்று ஆரம்பித்து விட்டாராம்.
>>>>>
(57)
ReplyDelete’குற்றம் செய்த நெஞ்சு குறுகுறுக்கும்’ என்பார்கள்.
அதுபோல பட்டாஜி தன் விஷயங்கள் எதனையாச்சும், போட்டு உடைத்துச் சொல்லிடுவாங்களோன்னு முன்னாவுக்கு ஏதோ உதறல் எடுத்துள்ளது போலத்தெரிகிறது, எனக்கு.
அப்போ ..... அவளுக்குள்ளும் ஏதேனும் மர்மங்கள் இருக்குமோ என்னவோ ! ’எந்தப்புற்றில் எந்த பாம்பு இருக்குமோ’ன்னு ஒரு பழமொழி சொல்லுவார்கள்.
சரி.... சரி.... நமக்கு எதற்கு வீணான ஊர் வம்ப்ஸ்? :)
இப்போது பட்டாஜி முன்னாவின் அம்மாவைப் பார்த்துச் சொன்னது:
”ஆண்டீ, நானும் சாராவும் [சாரூஜியை சாரா என்றே பட்டாஜி அழைப்பது வழக்கம்] ஒரே ஆபீஸிலே ஒரு 5-6 வருஷமா சேர்ந்தே வேலை பார்த்து வந்தோம்.
அங்கு நான் ஜெனரல் மேனேஜர். சாரா அப்போது என் கீழ் வேலை பார்த்துவந்த ஓர் ’குட்டி’ (குட்டியூண்டு) அதிகாரி;
>>>>>
(58)
ReplyDeleteசாராவோட அமைதி, வேலையில் அவள் காட்டி வந்த சின்ஸியாரிடி, அனாவஸ்யமாக பிறர் யாருடனும் சேர்ந்து அரட்டை அடிக்காமல் இருந்தது எல்லாமே எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. அவளிடம் என் விருப்பத்தைச் சொன்னேன்....” என்று சொல்லி பட்டாஜி கொஞ்சம் நிறுத்தி இடைவெளி கொடுத்த போது ......
முன்னாவின் அப்பா “அப்போ உங்க மேரேஜ் லவ் மேராஜா” என்று கேட்டுள்ளார்,
பட்டாஜி சிரித்துக்கொண்டே “ஓரளவு அப்படித்தான்;
ஆக்சுவலாக அவளுக்குக் கல்யாணம் செய்து கொள்ளும் நினைப்பெல்லாம் அப்போது இல்லவே இல்லை. ’சமூக சேவை செய்யத்தான் தனக்கு விருப்பம்’ன்னு கல்யாணத்தையே தட்டிக்கழிக்கத்தான் பார்த்தாள்;
அப்புறம் எப்படி அவள் இந்த எங்கள் கல்யாணத்திற்குச் சம்மதித்தால் என்று அவளைத்தான் நீங்க கேட்கணும்;
கல்யாணத்துக்கு முன்பு சாராவை நான் லவ் பண்ணினேன்;
இப்போ சாரா என்னை ரொம்பவும் லவ் பண்ணிக்கிட்டே இருக்கிறாள்” என்று ஜாலியாகச் சொல்லிக்கிட்டே போக, சாரூஜியின் முகம் பூராவும் ஒரே வெட்கத்திலே குங்குமம் போலச் சிவந்து போய் விட்டதாம். :)
>>>>>
(59)
ReplyDelete”பட்டா .... நீங்க பாட்டுக்கு என்னலாமோ சொல்லிட்டு இருக்கீங்களே” ன்னாங்களாம் சாரூஜி.
”சாரா, நான் உண்மையைத்தானே சொல்லிக்கிட்டு இருக்கேன்” என்று சொல்லிவிட்டு, முன்னா பக்கம் திரும்பிய பட்டாஜி “முன்னா நீ கேளு ...... நான் சாராவ விரும்பினது போல உன்னை யாராச்சும் ...... ஐ .....மீன் ..... வேற ஜாதியைச் சேர்ந்த பையன் விரும்பினா, உன் அம்மா அப்பா சம்மதிப்பாங்களா”ன்னு குருட்டாம் போக்குல ஒரு கேள்வி கேட்டு விட்டார், பட்டாஜி
[நம் யாருக்குமே இதுவரை தெரியாத, நம் முன்னாவின் காதல் விஷயம் ஏதாவது ஒருவேளை மிகவும் இரகசியமாகவே இருந்து, அது மஹாஞானியாகவும், தீர்க்கதரிசியாகவும் இருக்கும் நம் பட்டாஜி + சாரூஜி தம்பதியினருக்கு மட்டும் ஒருவேளை தெரிந்திருக்குமோ என்னவோ, என எனக்குத் தோன்றியது.]
>>>>>
(60)
ReplyDeleteஇப்படி ஒரு திடீர் குண்டைத்தூக்கிப் போடுவார் இந்த நம் பட்டாஜி என்று முன்னாவும் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லையாம்.