Thursday 30 June 2016

sambanthi saapidave maataa


11 comments:

  1. சம்மந்தி சாப்பிடவே மாட்டாள்
    எங்கள் சம்மந்தி சாப்பிடவே மாட்டாள்

    வெகு சங்கோஜக்காரி எங்கள்
    சம்மந்தி சாப்பிடவே மாட்டாள்

    வெகு சங்கோஜக்காரி எங்கள்
    சம்மந்தி சாப்பிடவே மாட்டாள்

    இட்டிலியில் இருநூறு, ஜாங்கிரியில் முந்நூறு,
    மைசூர்பாகில் நானூறு, தயிர்வடையில் ஐந்நூறு
    சம்மந்தி சாப்பிடவே மாட்டாள்

    இட்டிலியில் இருநூறு, ஜாங்கிரியில் முந்நூறு,
    மைசூர்பாகில் நானூறு, தயிர்வடையில் ஐந்நூறு
    சம்மந்தி சாப்பிடவே மாட்டாள்

    புளியோதரையும் வெண்பொங்கலும்
    காராசேவும் கைமுறுக்கும்

    திரட்டுப்பாலும் தேன்குழலும்
    விதம் விதமாகவே ஒரு கை பார்ப்பாள்
    சம்மந்தி சாப்பிடவே மாட்டாள்

    புளியோதரையும் வெண்பொங்கலும்
    காராசேவும் கைமுறுக்கும்
    திரட்டுப்பாலும் தேன்குழலும்
    விதம் விதமாகவே ஒரு கை பார்ப்பாள்
    சம்மந்தி சாப்பிடவே மாட்டாள்

    குலைகுலையாக வாழைப்பழமும்
    கூடைகூடையாக திராட்சைப் பழமும்

    டசன் டசனாக ஆப்பிள் பழமும்
    தட்டுத் தட்டாக ஆரஞ்சு பழமும்

    போதாக்குறைக்கு பலாப்பழங்களும்
    தின்னுத்தின்னு தீர்ப்பாள் அலுக்கவே மாட்டாள்

    சம்மந்தி சாப்பிடவே மாட்டாள்

    குலைகுலையாக வாழைப்பழமும்
    கூடைகூடையாக திராட்சைப் பழமும்
    டசன் டசனாக ஆப்பிள் பழமும்
    தட்டுத் தட்டாக ஆரஞ்சு பழமும்
    போதாக்குறைக்கு பலாப்பழங்களும்

    தின்னுத்தின்னு தீர்ப்பாள் அலுக்கவே மாட்டாள்
    சம்மந்தி சாப்பிடவே மாட்டாள்

    அமெரிக்க பாதாம் அரேபியா பேரீச்சை
    இந்திய முந்திரி ஈராக்கி பிஸ்தா

    காஷ்மீர அக்ரூட் உலர்ந்ததிராட்சை
    குங்குமப்பூப் போட்ட கற்கண்டுப் பாலை

    குடம்குடமாக குடித்தேத் தீர்ப்பாள்

    தின்னாலும் கொண்டாலும் திருப்தியில்லாத
    சம்பந்தி சாப்பிடவே மாட்டாள்

    அமெரிக்க பாதாம் அரேபியா பேரீச்சை
    இந்திய முந்திரி ஈராக்கி பிஸ்தா
    காஷ்மீர அக்ரூட் உலர்ந்ததிராட்சை
    குங்குமப்பூப் போட்ட கற்கண்டுப் பாலை
    குடம்குடமாக குடித்தேத் தீர்ப்பாள்

    தின்னாலும் கொண்டாலும் திருப்தியில்லாத
    சம்மந்தி சாப்பிடவே மாட்டாள்

    வறுவறு சீவலும் வாசனைப்பாக்கும்
    கவுளி கவுளியாய் கும்பகோண வெற்றிலையும்
    ஜாதிக்காய், ஏலக்காய், கத்தைக்காம்பும்
    புட்டிபுட்டியாகவே கோலி சோடாவும்
    சம்மந்தி சாப்பிடவே மாட்டாள்

    வறுவறு சீவலும் வாசனைப்பாக்கும்
    கவுளி கவுளியாய் கும்பகோண வெற்றிலையும்
    ஜாதிக்காய், ஏலக்காய், கத்தைக்காம்பும்
    புட்டிபுட்டியாகவே கோலி சோடாவும்
    சம்மந்தி சாப்பிடவே மாட்டாள்

    வெகு சங்கோஜக்காரி எங்கள் சம்மந்தி
    எங்கள் சம்மந்தி

    ஆமா சம்மந்தி சாப்பிடவே மாட்டாள்
    எங்கள் சம்மந்தி சாப்பிடவே மாட்டாள்.

    ReplyDelete
  2. //கல்யாணப் பாடல்கள் பல உண்டு. அந்தப் பாடல்களில் மாம்பலம் சகோதரிகள், விஜயலக்ஷ்மி மற்றும் சித்ரா அவர்களால் பாடப்பெற்ற “சம்மந்தி சாப்பிடவே மாட்டாள்” என்ற பாடலின் வரிகள் மிகவும் நகைச்சுவையாக இருக்கும்.

    சம்மந்தியா இல்லை சம்பந்தியா?

    விஜய் டீவியில் ஒரு நாள் தேச மங்கையர்க்கரசியின் மீனாக்ஷி திருமண வைபவத்தினைப் பற்றிய சொற்பொழிவில் ”சம்பந்தி” என்பதுதான் சரி எனச் சொல்லி அதற்கு அருமையான விளக்கமும் சொன்னார்.

    சமஸ்கிருதத்தில் ”சம்” என்றால் ”நல்ல”; ”பந்தி” என்றால் ”பந்தம், உறவு” எனவும் பொருளாம்.

    சம்மந்தி என்று சொல்லும் போது பொருளே மாறி விடுகிறது. சம் என்றால் நல்ல, மந்தி என்றால் குரங்கு, ஆகவே சம்மந்தி என்றால் நல்ல குரங்கு என்று ஆகிவிடுகிறது எனச் சொன்னார்.

    இந்தப் பாடலில் மாம்பலம் சகோதரிகளும் சம்மந்தி என்றே பாடுகின்றனர்.

    தமிழ் அறிந்த அறிஞர்கள் சம்மந்தியா, சம்பந்தியா என்று சொல்லுங்களேன்…. //

    இதனை இதோ http://rasithapaadal.blogspot.com/2010/12/blog-post_25.html இந்த வலைப்பக்கத்தில் ஒரு பெண் பதிவர் ( என்னை என் வீட்டுக்கே நேரில் வந்து சந்தித்துள்ளவர் தான் ) எழுதியுள்ளார்.

    ’சம்பந்தி’ என்பதே சரியான சொல் ஆகும்

    ‘சம்மந்தி’ என்பது தவறான உச்சரிப்பாகும்

    என்பதை நான் இங்கு அனைவருக்கும் தெரிவித்துக்கொள்கிறேன்.

    ReplyDelete
  3. மிக அருமையான அழகான வேடிக்கையான பாடலைப் பகிர்ந்து கொண்டுள்ளதற்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

    எங்கள் வீட்டில் உள்ள அனைவரும் இன்று இதனை மீண்டும் மிகவும் மகிழ்ந்து ரஸித்துக் கேட்டோம். :)

    ReplyDelete
  4. ஆஹா இந்த அழகான பாடலைப்போன்ற இந்தப்பதிவின் எண்ணிக்கையும் 2 2 2 எனக்காட்டுகிறது.

    மனதுக்கு மிகவும் சந்தோஷம் அளிப்பதாக உள்ளது.

    ReplyDelete
  5. இன்னா பாட்டு இது....... ஆனா கூடி நெறய சாப்பாட்டு ஐட்டம் பேருலா வருது.... அதுனால நல்லாகீது....

    ReplyDelete
  6. ஓ....இந்த பாட்டா....செம காமெடியா இருக்குமே....... க்ருஷ் நினைவு இருக்கா..... கொஞ்ச நாள் ம்ன்ன அனுப்பினேன்ல



    ...

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர் 1 July 2016 at 03:32

      //ஓ....இந்த பாட்டா....செம காமெடியா இருக்குமே.......//

      யெஸ்.... யெஸ்.... செம காமெடியாத்தான் உள்ளது.

      //க்ருஷ் நினைவு இருக்கா..... கொஞ்ச நாள் முன்னே அனுப்பினேன்ல//

      யெஸ்... என்னால் எதையும் ‘மறக்க மனம் கூடுதில்லையே’

      Delete
    2. என்னாலயும் தான்................

      யெஸ்... என்னால் எதையும் ‘மறக்க மனம் கூடுதில்லையே’

      Delete
    3. பூந்தளிர் 3 July 2016 at 05:28

      //என்னாலயும் தான்................

      யெஸ்... என்னால் எதையும் ‘மறக்க மனம் கூடுதில்லையே’//

      இவ்வாறான இனிய நினைவுகளிலேயே இன்பம் கண்டு நாம் எப்போதும் மகிழ்வோம்.




      { வேறு என்ன செய்ய ? }

      Delete
  7. இந்த பாட்டு இப்பதான் முதல் தடவையா கேக்குறேன்... சிரிப்பாணி பொத்துகிச்சே.......

    ReplyDelete
    Replies
    1. ப்ராப்தம் 1 July 2016 at 22:02

      //இந்த பாட்டு இப்பதான் முதல் தடவையா கேக்குறேன்... சிரிப்பாணி பொத்துகிச்சே.......//

      ஆஹா ..... :)

      ”இங்கே நீ சிரிக்கும் புன் சிரிப்போ ஆனந்தச் சிரிப்பு”

      -=-=-=-=-=-

      இந்த வரிகள் இடம்பெறும் MGR படப்பாடல் ஒன்று உள்ளது:

      திரைப்படம்: ரிக்க்ஷாக்காரன்
      இசை:எம்.எஸ்.விஸ்வநாதன்
      இயற்றியவர்:வாலி
      பாடகர்கள்: டி.எம்.சௌந்தரராஜன்

      -=-=-=-=-=-

      Delete