Sunday, 19 June 2016

நாகேஷ் காமெடி 3


19 comments:

 1. ஆஹா இந்த காமெடி எத்தன வாட்டி பாத்தாலும் சிரிப்பாணி பொத்துகிடும்.....

  இன்னக்கி பாட்டு கட்டா........

  ReplyDelete
 2. ஹா ஹா நல்லா சிரிச்சுட்டேன்பா......

  ReplyDelete
 3. ஆஹா, நகைச்சுவைப்பிரியனான என்னை இன்று முழுத்திருப்தியுடன் மகிழ்வித்துள்ள எங்கட முன்னாக்குட்டிக்கு என் அன்பு நன்றிகள்.

  ReplyDelete
 4. திருவிளையாடல் நகைச்சுவை-2, நகைச்சுவை-3 என ஏதேனும் ஒவ்வொன்றுக்கும் ஒரு தலைப்புக்கொடுங்கோ, ப்ளீஸ்.

  ReplyDelete
 5. கொடுத்துட்டேன் கோபூஜி...

  ReplyDelete
  Replies
  1. சிப்பிக்குள் முத்து. 20 June 2016 at 05:45

   //கொடுத்துட்டேன் கோபூஜி...//

   கேட்டதும் கொடுப்பவளே முன்னா... முன்னா...
   ’சிப்பிக்குள் முத்து’வின் நாயகியே
   முன்னா... முன்னா...

   மிக்க நன்றி, முன்னாக்குட்டி.

   oooooooooooooooooooooooooooooo

   தலைப்பில் தலைப்.....பூ வைத்ததும்தான், நல்ல நறுமணம் கமழ்கிறது .... எங்கட டீச்சர் வீட்டு டாய்லெட் போல ...... கும்மென்ற செண்ட் வாசனை. மயக்கமே வந்துவிட்டது .... எனக்கு :)))))

   Delete
 6. ”கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
  காமம் செப்பாது கண்டது மொழிமோ
  பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்
  செறியெயிற் றரிவை கூந்தலின்
  நறியவும் உளவோ நீயறியும் பூவே”

  --குறுந்தொகை 2 ஆம் பாடல் - இறையனார்

  குறுந்தொகையின் இரண்டாம் பாடலாகிய இப்பாடல் திருவிளையாடல் திரைப்படத்தால் புகழ்பெற்றது.

  இறைவனே (இறையனார்) எழுதியதாக நம்பப் படுகிறது.

  சொற்களுக்கான பொருள்:-
  ============================

  கொங்கு = பூவின் மகரந்தம்

  தேர் = தேர்நெடுக்கும்

  வாழ்க்கை = வாழும்

  அஞ்சிறைத்தும்பி =

  உள்ளே சிறகுகளை உடைய தும்பி (வண்டு)
  (அம் சிறை = அழகிய சிறகுகள்)

  காமம் செப்பாது = நான் விரும்பியதைச் சொல்லாது

  கண்டது மொழிமோ = நீ கண்டறிந்ததைக் கூறு

  பயலியது கெழீய நட்பின் =

  பல பிறவிகளிலும் நட்புடன் விளங்கும் (கெழி=நட்பு)

  மயிலியல் = மயில் போன்ற

  செறியியெற்றரிவை =

  செறிவான பற்களைக் (எகிறு) கொண்ட பெண்

  கூந்தலின் = கூந்தலை விட

  நறியவும் உளவோ = மணமிகுந்த ஏதேனும் உள்ளதோ

  நீ அறியும் பூவே = நீ அறிந்த பூக்களிடம்


  ooooooooooooooooooo

  செண்பகப் பாண்டியனுக்கு ஏற்பட்ட ஐயத்தைப் போக்க இறைவன் தருமி மூலம் கொடுத்தனுப்பிய பாடல்.

  ooooooooooooooooooo

  கருத்து:

  மலர்களில் மகரந்தங்களை எடுத்து வாழும் அழகிய சிறகுகளை உடைய தும்பியே! நீ அறிந்த பூக்களில் என்னுடன் பல பிறப்புகளில் நட்புடன் பழகும் மயில் போல் அழகுடைய + அழகிய பற்களை உடைய பெண்ணின் கூந்தலைவிட மணமுடையது ஏதேனும் உள்ளதோ? எனக்குப் பிடித்ததைக் கூறவேண்டாம். நீ கற்றறிந்ததைக் கூறு !

  ooooooooooooooooooo

  திருவிளையாடற் புராணத்திலும் இந்தப் பாடல் மேற்கோள் காட்டப் படுகிறது.

  ReplyDelete
 7. இவுக இன்னா பாசை பேசறாக... ஏதுமே வெளங்கலியே.....

  ReplyDelete
  Replies
  1. mru 20 June 2016 at 21:44

   //இவுக இன்னா பாசை பேசறாக... ஏதுமே வெளங்கலியே.....//

   கரெக்டுடா முருகு .... ஒரு எழவும் புரியவில்லைதான்.

   அதனால்தான் நான் கஷ்டப்பட்டுத்தேடி, அந்த பாடலையும் அதற்கான விளங்கங்களையும் மேலே கொடுத்துள்ளேன். :)

   Delete
  2. குருஜி ஒருநாளுல எம்பூட்டு நேரம் கம்ப்யூட்டருல வேல பாப்பீங்க.. நெறய நெறய கமண்டு எப்பூடி போட ஏலுது.. நா ரண்டு வரி கமண்டு போடவே நேரம் பத்தல.....

   Delete
  3. mru 21 June 2016 at 22:33

   //குருஜி ஒருநாளுல எம்பூட்டு நேரம் கம்ப்யூட்டருல வேல பாப்பீங்க.. நெறய நெறய கமண்டு எப்பூடி போட ஏலுது..//

   எனக்கும் மிகவும் கஷ்டமாகத்தான் இருக்குடா முருகு.

   இருப்பினும் உங்க நாலு பேருடன் கொஞ்சம் ஜாலியாகப் பழகிவிட்டதால் ... உங்களையெல்லாம் என் எழுத்தின் மூலமாவது கொஞ்சம் சந்தோஷப் படுத்த வேண்டி தினமும் ஏதாவது தோன்றியதை எழுதிக்கொண்டே இருக்கிறேன். இனி நானும் குறைத்துக்கொள்ள முயற்சிக்கிறேன்.

   //நா ரண்டு வரி கமண்டு போடவே நேரம் பத்தல.....//

   உனக்கு அதற்கெல்லாம் இப்போ நேரம் பத்தாதுதான். உன் நிலையில் நான் இருந்தால், அந்த இரண்டு வரிக் கமெண்ட்ஸ்ஸும்கூடப் போடவே மாட்டேனாக்கும். :)

   Delete
 8. முருகு இதுக்கு பேரு தமிழ்னு சொல்லுவாங்களாம்... எனக்கும் ஏதுமே வெளங்கல..
  இதல்லாம் வெளங்கி கிடதான் ஸ்பெஷலா " யாரோ" ஒருவர் இருக்காங்களே......

  ReplyDelete
  Replies
  1. பூந்தளிர் 20 June 2016 at 22:03

   //முருகு இதுக்கு பேரு தமிழ்னு சொல்லுவாங்களாம்... எனக்கும் ஏதுமே வெளங்கல.. இதல்லாம் வெளங்கி கிடதான் ஸ்பெஷலா " யாரோ" ஒருவர் இருக்காங்களே......//

   உன்னைப் பிச்சுப்புடுவேன் ....... பிச்சு.

   முருகுதான் ஏதோ புரியாமல் சொல்லுதுன்னா உடனே நீயும் அதற்கு ஒத்து ஊதுகிறாயா .... அந்த நீண்ட நாதஸ்வரத்தை கையில் பிடித்து வாயில் வைத்துக்கொண்டு ?????

   Delete
  2. கிருஷ்.... உண்மைலயே ஏதம் புரியலப்பா... ஆனா நாதஸ்வரத்த வாயில் வைத்து நல்லா.....வே..... ஊதி தள்ளிடுவேனாக்கும். பீ...கேர்...ஃபுல்.....

   Delete
  3. பூந்தளிர் 21 June 2016 at 22:04

   //கிருஷ்.... உண்மைலயே ஏதம் புரியலப்பா... ஆனா நாதஸ்வரத்த வாயில் வைத்து நல்லா.....வே..... ஊதி தள்ளிடுவேனாக்கும். பீ...கேர்...ஃபுல்.....//

   :))))))))))))

   ஹைய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யோ .... வேண்டாம், வேண்டாம். தயவுசெய்து இதற்குமேல் நீ எதுவுமே சொல்ல வேண்டாம்.

   Delete
 9. இல்ல கோபூஜி இப்படிலாம் தமிழ கடிச்சு துப்பினா ஆராலயுமே புரிஞ்சிகிட முடியாதுதான்..நம்ம டீச்சரம்மா ஸ்கூல்ல தமிழே படிச்தில்லேனு நீங்க அடிக்கடி சொல்லி இருக்கிங்க.. அவங்களால எப்படி புரிஞ்சுக்க முடியும்... எனக்கு இதெல்லாம் எப்பூடி புரியுதுன்னு உங்களுக்கே தெரியும்தானே...)))

  ReplyDelete
  Replies
  1. சிப்பிக்குள் முத்து. 21 June 2016 at 21:26

   //இல்ல கோபூஜி இப்படிலாம் தமிழ கடிச்சு துப்பினா ஆராலயுமே புரிஞ்சிகிட முடியாதுதான்..//

   கரெக்டூஊஊஊஊ.

   //நம்ம டீச்சரம்மா ஸ்கூல்ல தமிழே படிச்தில்லேனு நீங்க அடிக்கடி சொல்லி இருக்கிங்க.. அவங்களால எப்படி புரிஞ்சுக்க முடியும்...//

   ஆமாம். பாவம் அவள். அவளின் தாய்மொழி தமிழாயினும் பள்ளியில் தமிழ் படிக்க அவளுக்கு வாய்ப்பு இல்லாமல் போய் விட்டது. :(

   அப்படியும் ஏதோவொரு ஆர்வத்தில் தமிழில் இப்போதெல்லாம் மிகவும் நன்றாகவே எழுதி வருகிறாள்.

   என்ன எழுதுகிறோம், அதற்கு என்ன அர்த்தம் என சரிவரப் புரியாமலேயே சக்கை போடு போட்டு வருகிறாள். :)

   //எனக்கு இதெல்லாம் எப்பூடி புரியுதுன்னு உங்களுக்கே தெரியும்தானே...))) //

   ஏதோ கொஞ்சம் புரிந்துள்ளது. ஆனாலும் முழு விபரம் ஒன்றும் தெரியவே இல்லை. நானும் நானாகவே கேட்கக் கூடாது என மிகவும் வைராக்யமாக இருந்து வருகிறேன். நீங்களும் மேலும் சொல்லக்கூடாது என அதைவிட வைராக்யமாகவே இருந்து வருகிறீர்கள்.

   வைராக்யம் என்ற சம்பத்தைவிட வேறு ஒரு சம்பத்து இந்த உலகில் கிடையவே கிடையாது என எங்கட பெரியோர்கள் எல்லோரும் சொல்லி இருக்கிறார்கள். :) நினைவிருக்கட்டும்.

   Delete
 10. கரெக்டோ கரெக்ட்... இது யாரோ வுக்கு ஏன் புரிய மாட்டேங்குது முன்னா கேட்டு சொல்லு..

  ReplyDelete
 11. கரெக்டோ கரெக்ட்... இது யாரோ வுக்கு ஏன் புரிய மாட்டேங்குது முன்னா கேட்டு சொல்லு..

  ReplyDelete