Thursday, 30 June 2016

daga daga ena aada vaa


9 comments:

 1. தகதகதக தகதகவென ஆடவா
  ஓடுங்கால் ஓடி உள்ளம் உருகி
  இசை பாடுங்கால் பாட வந்தேன் பரம்பொருளே (2)

  ஆடுங்கால் எடுத்து நடமிடுவாய் இறைவா
  உன் தமிழமுதை படித்த நான் பாடும் படி ( 2)

  தகதகதக தகதகவென ஆடவா
  சிவ சக்தி சக்தி சக்தியோடு ஆடவா (தகதக)

  ஆலகாலனே ஆலங்காட்டினில் ஆடிடும் நாயகனே
  நீலகண்டனே வேத நாயகா நீதியின் காவலனே(ஆலகாலனே)

  தாள வகைகளோடு மேள துந்துபிகள் முழங்கிட ஓர் கணமே
  காலைத்தூக்கியே ஆனந்தத் தாண்டவம் ஆடுக மன்னவனே(தாள)

  முத்து கொடி சக்தி குலமகள் வித்துகொரு
  வெள்ளம் துணையென பக்திகொடி
  படரும் நெஞ்சினில் விளையாட

  தித்தித்திப்பது இறைவன் செயலென
  பற்றுதரும் பரமன் துணையென
  சுத்தத்தொடு மனிதர் குலமொரு இசை பாட

  கற்று தரும் ஒரு வகை அறிவினில்
  முற்றும் தெரிவது போல் மனிதர்கள்
  கற்று புகழ்பெறுவார்கள்
  அவர்களும் உறவாட

  திக்கு பல திமிதிமியென
  தக்கத்துணை தகதகவென
  தக்கக்கடல் அலையென நடமிடுஉலகாள

  இம்மைக்கும் ஏழேழு
  பிறவிக்கும் பற்றாகி
  எழிலோடு எமையாளவா

  இயல் இசை நாடக
  முத்தமிழ் தம்மிலே
  இயங்கியே உலகாளாவா

  அம்மைக்கும் நாயகா
  அப்பனே அய்யனே
  அரசனே நடமாடவா

  ஆடுகிற காலழகில் காடு பொடியாகவென
  அம்மையுடன் நீயாடவா

  சிரிப்புக்குள் நெருப்பொன்று வரச்செய்த நீ
  நெருப்புக்குள் நீரொன்று தரச்செய்த நீ(சிரிப்புக்குள்)

  கருப்பைக்குள் இருப்புக்கும் உயிர்தந்த நீ
  களிப்புக்குள் உலகங்கள் நடமாடவா (கருப்பைக்குள்)

  உலகத்து நிதியே
  சமயத்து பொருளே

  இதயத்து அறிவே
  இருளுக்கு ஒளியே

  ஆடவா நடமாடவா
  விளையாடவா உலகாடவா (ஆடவா)

  நாத கீத போத வேத
  பாவ ராக தாளமோடு (நாத)

  அடியவர் திருமுடி வணங்கிட
  கொடி உயர்ந்திட படை நடுங்கிட

  தகதகதக தகதகவென ஆடவா
  சிவ சக்தி சக்தி சக்தியோடு ஆடவா (தகதக)

  ஓம் நமச்சிவாய(4)

  ReplyDelete
 2. பாடல்வரிகள்: கண்ணதாசன்

  பாடியவர் : கேபி சுந்தராம்பாள்.

  திரைப்படம் : காரைக்கால் அம்மையார்

  ReplyDelete
 3. இந்த ஆடல் பாடல் நம் முருகுவுக்குப் பிடிக்காமல்
  ஒருவேளை அது முறுக்கிக்கொள்ளலாம்.

  எனினும் பாடல் பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
 4. //இந்த ஆடல் பாடல் நம் முருகுவுக்குப் பிடிக்காமல்
  ஒருவேளை அது முறுக்கிக்கொள்ளலாம்.//

  கரீட்டோ கரீட்டு..... இன்னா குத்தாட்டம் போடுறாக இவுக..... இதுபோல ஆட்டம் பாட்டெல்லா எங்கட குருஜியாலதா ரசிச்சுகிட ஏலும்....

  ReplyDelete
  Replies
  1. mru 1 July 2016 at 03:23

   **இந்த ஆடல் பாடல் நம் முருகுவுக்குப் பிடிக்காமல்
   ஒருவேளை அது முறுக்கிக்கொள்ளலாம்.**

   //கரீட்டோ கரீட்டு..... இன்னா குத்தாட்டம் போடுறாக இவுக..... இதுபோல ஆட்டம் பாட்டெல்லா எங்கட குருஜியாலதா ரசிச்சுகிட ஏலும்....//

   என்னாலேயே சகிக்க / ரசிக்க முடியவில்லையே முருகு !

   Delete
 5. முருகு... ஸ்பெஷல்னு... இந்த பாட்டு போட்டா அவ எப்படி ரசிப்பா...

  ReplyDelete
  Replies
  1. பூந்தளிர் 1 July 2016 at 03:33

   //முருகு... ஸ்பெஷல்னு... இந்த பாட்டு போட்டா அவ எப்படி ரசிப்பா...//

   அதானே .... அதுவும் ஒளவையார் என்ற தமிழ்க்கிழவி பாடும் பாடல் .... முருகுவின் அம்மிக்கே பிடிக்குமோ பிடிக்காதோ ...... கல்யாணப்பொண்ணு முருகுவுக்கு எப்படிப்பிடிக்கும் !

   ஒருவேளை அவர்கள் இருவரின் (சிவன்+ஷக்தி யின்) குத்தாட்டம், முருகுவுக்குப் பிடிக்குமோ என இந்தப்பதிவரம்மா இதனைத் தேர்ந்தெடுத்து வெளியிட்டுப்பாங்களோ என்னவோ.

   Delete
 6. ஹிந்து கடவுளரின் வித்யாசமான குத்தாட்டம் போல இருக்கு... பாட்டு ரொம்ப நல்லா இருக்கு....

  ReplyDelete
 7. ப்ராப்தம் 1 July 2016 at 22:04

  //ஹிந்து கடவுளரின் வித்யாசமான குத்தாட்டம் போல இருக்கு...//

  குத்தாட்ட முடிவில் 5:53 to 5:56 என்ற இடத்தில் பாருங்கோ சாரூஊஊஊ.

  சிவனும் சக்தியும் ஒருவரோடு ஒருவர் அப்படியே சூப்பராகப் பின்னிப்பிணைந்து, ஒன்றரக் கலந்து, அர்த்தநாரீஸ்வரர் ஆகி விடுகிறார்களே !

  அதுதான் இதில் மிகவும் முக்கியமான சமாச்சாரமாகும் !!

  உங்களுக்குத் தெரியாததா, நான் இங்கு புதிதாகச் சொல்லிவிடப் போகிறேன்?

  ReplyDelete