Thursday 23 June 2016

dil kya kare

18 comments:

  1. இந்த பாட்ட போட்டுட்டியா... மஹா ரசிகர்.... என்ன மாதிரி கமெண்ட போட போறாங்கமோஓஓஓ

    ReplyDelete
  2. ரோஸ் கலர் குட்டைப்பாவாடையுடன், சும்மா மூக்கும் முழியுமாக, பல்வேறு ஏக்கங்களுடன், அந்தக்கதாநாயகி காட்சியளிப்பதாலும், எனக்கு எங்கட _______ ‘யாரோ’ நினைவுக்கு வந்துவிட்டதாலும், எதையும் என்னால் வெளிப்படையாக இங்கு சொல்ல முடியவில்லை.

    மொத்தத்தில் நான் இன்றும் MOOD OUT !

    அழகான அசத்தலான பகிர்வு கொடுத்துள்ள இருவருக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. நீங்க எப்பதான் எதுக்கெல்லாம்தான் மூட் அவுட் ஆவிங்கனு புரியவே மாட்டேங்குதே.....இந்த வாரம் பூரா முருகு ஸ்பெஷலாம்.. என்னோட ஹிந்திய ஓரம் கட்டிட்டாளே......

      Delete
    2. பூந்தளிர் 25 June 2016 at 21:18

      //நீங்க எப்பதான் எதுக்கெல்லாம்தான் மூட் அவுட் ஆவிங்கனு புரியவே மாட்டேங்குதே.....//

      அது வரவர எனக்கே புரிய மாட்டேங்குதுங்கோ :)

      //இந்த வாரம் பூரா முருகு ஸ்பெஷலாம்.. என்னோட ஹிந்திய ஓரம் கட்டிட்டாளே......//

      அதனால் என்ன? எந்த ஓரத்தில் எங்கட ஹிந்தி டீச்சர் ஒதுங்கியுள்ளீர்கள் எனச் சொன்னால் நானும் அங்கேயே உங்களுடன் ஒதுங்கிக்கொள்வேனே ..... ஹிந்திப்பாடம் படிக்க மட்டுமே தான். :)

      Delete
  3. ஆ...ம்..மா..... இதுபோல பாட்டெல்லா போடச்சொல்லிகினு பொறவால குருஜிய வம்பிளுக்குறீக......

    ReplyDelete
    Replies
    1. mru 23 June 2016 at 21:51

      //ஆ...ம்..மா..... இதுபோல பாட்டெல்லா போடச்சொல்லிகினு பொறவால குருஜிய வம்பிளுக்குறீக......//

      தேங்க் யூ....டா முருகு.

      இன்னும் 8 நாட்களே இடையில் இடைவெளியாக உள்ளது. அதன் பிறகு எங்கட முருகுவின் இடைக்கு இடைவெளியே கிடைக்காதூஊஊஊஊஊ. :)

      அட்வான்ஸ் நல்வாழ்த்துகள் :)))))

      Delete
    2. குருஜி....... ஷை ஆகுதுல்லா......

      Delete
    3. mru 25 June 2016 at 20:51

      //குருஜி....... ஷை ஆகுதுல்லா......//

      அப்படியா? அட்வான்ஸ் நல்வாழ்த்துகள் ... முருகு :)))))

      Delete
  4. படம் பேரு ஜூலி..... பாட்டு எல்லாமே நல்லா இருக்கும்... கல்யாணத்துக்கு முன்னயே ப்ரெக்னட் ஆயிடுவா ஹீரோயின்... ஹீரோ வீட்ல சொல்ல பயந்து ஓடி போயிடுவன் கிறிஸ்டியன் பொண்ணு ஹிந்து பையன் லவ் ஸ்டோரி....

    ReplyDelete
    Replies
    1. ப்ராப்தம் 23 June 2016 at 22:12

      //படம் பேரு ஜூலி.....//

      கேட்கவே ஒரே ஜாலியாக உள்ளது. :)

      //பாட்டு எல்லாமே நல்லா இருக்கும்...//

      ஓஹோ :)

      //கல்யாணத்துக்கு முன்னயே ப்ரெக்னட் ஆயிடுவா ஹீரோயின்...//

      அதில் ஒன்றும் தப்பே இல்லை. கல்யாணத்திற்கும் ப்ரெக்னென்ஸிக்கும் என்ன பெரிய சம்பந்தம் இருக்க முடியும்?

      //ஹீரோ வீட்ல சொல்ல பயந்து ஓடி போயிடுவன்.//

      அதுக்கு மட்டும் பயமில்லை. இதுக்கு மட்டும் பயமாக்கும்? சுத்த கோழையாக இருக்கிறானே?

      //கிறிஸ்டியன் பொண்ணு ஹிந்து பையன் லவ் ஸ்டோரி....//

      ஓஹோ. காதலிக்கும்போதுதான் ஜாதியோ, மதமோ, இனமோ, மொழியோ, வயது வித்யாசமோ தெரியவே தெரியாதே.

      அதுதான் காதலின் தனிச்சிறப்பும் மஹிமையும் ஆகும்.

      இதெல்லாம் காதலித்தவர்களால் + காதலித்துக் கொண்டிருப்பவர்களால் மட்டுமே உணர முடியும். :)

      காதல் என்பது எப்போதுமே மிகவும் இனிய நினைவலைகள். ஆனால் காதல் என்பது வேறு. கல்யாணம் என்பது வேறு.

      கல்யாணம் ஆனபின் (தன் மனைவி/கணவன் அல்லது பிறரையோ) காதலிப்பவர்களும் ஆங்காங்கே உண்டு.

      முதல் காதலை யாராலும் எப்போதும் மறக்கவே முடியாது.

      படத்தைப்பற்றிய தங்களின் விளக்கங்களுக்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், சாரூஊஊஊஊ.

      Delete
    2. //அதுக்கு மட்டும் பயமில்லை. இதுக்கு மட்டும் பயமாக்கும்? சுத்த கோழையாக இருக்கிறானே?//

      ஹா ஹா எப்படில்லாம் கமெண்ட் போடுறீங்க....

      Delete
    3. ப்ராப்தம் 25 June 2016 at 23:43

      **அதுக்கு மட்டும் பயமில்லை. இதுக்கு மட்டும் பயமாக்கும்? சுத்த கோழையாக இருக்கிறானே?**

      //ஹா ஹா எப்படில்லாம் கமெண்ட் போடுறீங்க....//

      பின்ன என்ன? அவளை ஜாலிலோ ஜிம்கானாவாக நன்கு ஜிஞ்சாமிர்தம் செய்துவிட்டு, கசக்கிப் பிழிந்து பஞ்சாமிர்தம் ஆக்கிவிட்டு, வயிற்றில் ஓர் வாரிசையும் கொடுத்துவிட்டு, எஸ்கேப் ஆனால் எப்படி? கேட்கவே நமக்குக் கோபமாக வருகிறது அல்லவா.

      Delete
  5. ரொம்ப கரெக்டா சொல்லி இருக்கீங்க கோபூஜி... எதைனு கேக்க கூடாது.... )))))

    ReplyDelete
    Replies
    1. சிப்பிக்குள் முத்து. 24 June 2016 at 20:40

      //ரொம்ப கரெக்டா சொல்லி இருக்கீங்க கோபூஜி...//

      மிக்க மகிழ்ச்சி. :)

      //எதைனு கேக்க கூடாது.... )))))//

      கேட்கவே மாட்டேன் முன்னா. நானாக யாரிடமும் எதுவும் கேட்கவே மாட்டேன்.

      அதுபோல யாரிடமும் யாரைப்பற்றியும் எந்த விஷயமும் சொல்லவும் மாட்டேன்.

      இந்த என் ஸ்பெஷல் குவாலிடீஸ்களால் மட்டுமே எல்லோரும் என்னிடம் எல்லாவற்றையும் சொல்லி ஒரு சின்ன ஆறுதல் அடைகிறார்கள்.

      ஓர் சின்ன மன ஆறுதல் வேண்டி என்னிடம் மெயில் மூலம் அடைக்கலம் அடைபவர்களுக்கு ......

      கேட்டதும் கொடுப்பவனே ...... கிருஷ்ணா .. கிருஷ்ணா !

      { கிருஷ்ணா = கோபாலகிருஷ்ணா }

      Delete
  6. இப்படி உங்க கிட்ட எல்லாரும் தங்க பர்ஸனல் சொல்லி ஆறுதல் தேடுறதுல உங்களுக்கு கஷ்டமா இல்லியா கோபூஜி....

    ReplyDelete
    Replies
    1. சிப்பிக்குள் முத்து. 25 June 2016 at 02:20

      //இப்படி உங்க கிட்ட எல்லாரும் தங்க பர்ஸனல் சொல்லி ஆறுதல் தேடுறதுல உங்களுக்கு கஷ்டமா இல்லியா கோபூஜி.... //

      இரு கோடுகள் தத்துவம் உங்களுக்குத் தெரியும் என நினைக்கிறேன்.

      நமக்கு ஒரு பிரச்சனை வருகிறது என்றால் அது ஒரு சின்னக் கோடு மாதிரி . அதைவிட பூதாகரமானதோர் பிரச்சனை மீண்டும் நமக்கு வரும்போது அது இதைவிட பெரிய கோடு ஆகிவிடுகிறது.

      சின்னக்கோட்டுக்கு அருகில் ஒரு பெரிய கோட்டினைப் போட்டுவிட்டால், சின்னக்கோட்டிலேயே நம் சிந்தனை இருக்காது என்பது இறைவன் நம்மிடம் செய்யும் திருவிளையாடல்களில் ஒன்று.

      அதுபோலத்தான் எனக்கும் நிறைய பெர்சனல் பிரச்சனைகள் உள்ளன. யாரிடமும் நான் அவற்றைச் சொல்லிக்கொள்வது இல்லை.

      பிரச்சனை என்றால் உடனே பணம், சொத்து சுகம், உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க வசதியான இடம் என்றெல்லாம் மட்டுமே என மிகச் சுலபமாக சாதாரணமாக நினைத்துவிட வேண்டாம்.

      இதையெல்லாம் தாண்டி, விரட்டி அடிக்கவும் முடியாமல், விட்டு விலகவும் முடியாமல், வெளியில் சொல்லிக்கொள்ளவும் முடியாமல், பல்வேறு பிரச்சனைகள் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் இருக்கக்கூடும். அதுபோல எனக்கும் உண்டு. தீர்வுதான் தெரியாமல் தொடர்கதையாக உள்ளது. இதனால் அவ்வப்போது மன நிம்மதி கெட்டு வருகிறது.

      அதை மறக்கவே முன்பெல்லாம் நான் வலைப்பதிவுப் பக்கம் அடிக்கடி வருவதும் உண்டு.

      ’மிடில் க்ளாஸ் மாதவி’ என்ற புனைப்பெயரில் ஓர் பெண் பதிவர் இருக்கிறார்கள். அவர்கள் மிகவும் புத்திசாலி. முன்பெல்லாம் 2011+2012 என் பதிவுகளையெல்லாம் படித்துப் பின்னூட்டம் இட்டுள்ளார்கள்.

      எங்களுக்குள் முன்பெல்லாம் மெயில் தொடர்புகள் + ஒருவருக்கொருவர் பின்னூட்டத் தொடர்புகள் மட்டும் உண்டு.

      இன்று வரையும் அவர்களைப்பற்றி எனக்கு அவர்கள் என்னிடம் சொல்லியுள்ள ஒருசில விஷயங்களுக்கு மேல் எதுவுமே தெரியவே தெரியாது.

      நான் ஏதும் அவர்களிடம் சொல்லாமலேயே எனக்குள் உள்ள சோகத்தை உணர்ந்துகொண்டு, என்னிடம் வற்புருத்தி ஒருநாள் மெயிலில் கீழ்க்கண்டவாறு கேட்டார்கள்.

      “நான் யார் என்றே உங்களுக்கு இதுவரை தெரியாது, சார். அதனால் உங்களின் மன வருத்தங்களையும் சோகங்களையும் என்னிடம் தாராளமாக மனம் விட்டு பகிர்ந்து கொள்ளுங்கோ, சார் ..... இதனால் உங்கள் மனதுக்குக் கொஞ்சம் பாரம் குறைந்ததுபோல இருக்கும்” என என்னிடம் வற்புருத்திக் கேட்டார்கள். இருப்பினும் அவர்களிடமும் நான் எதையும் சொல்லிக்கொள்ளவில்லை.

      இதை எப்படியோ அவர்கள் உணர்ந்து என்னிடம் இவ்வாறு கேட்டதுதான் எனக்கு இன்றுவரை ஒரே ஆச்சர்யமாக இருந்து வருகிறது.

      பிறர் நம் மீது ஏதோவொரு நம்பிக்கை வைத்து, அவர்களின் சொந்தப்பிரச்சனைகளை என்னிடம் சொல்லும்போது, அவற்றை நானும் பொறுமையாகக் கேட்டுக்கொண்டு, என்னால் முடிந்த ஆலோசனைகளையும் சொல்லி, ஆறுதல் தந்து வருகிறேன். அவர்களுக்காக, அவர்கள் கஷ்டம் விலகி மன நிம்மதி கிடைக்க நான் எனக்குள் பிரார்த்தனையும் செய்துகொள்கிறேன்.

      இவ்வாறு சிலர் தங்களின் பிரச்சனைகளைப் பகிர்ந்து கொள்ளும்போது, என் சொந்தப் பிரச்சனைகள் எனக்கு ஓர் மிகப்பெரிய பிரச்சனையாகவே தெரியாமல் சின்னக்கோடு போலத் தோன்றுவதும் உண்டு.

      அதனால் இதை என் நலம் விரும்பிகள் சிலருக்கு மட்டும் ஓர் சேவையாகச் செய்து வருகிறேன். இதில் இதுவரை எனக்கு ஒன்றும் கஷ்டமாகத்தெரியவில்லை.

      Delete
    2. ரொம்ப கரெக்டா சொல்லி இருக்கீங்க கோபால்ஜி... உங்க பிரார்த்தனையின் பலனை நான் இப்ப அனுபவித்து சந்தோஷமாகவும் அமைதியாகவும் இருக்கேன்....

      Delete
    3. ப்ராப்தம் 25 June 2016 at 23:46

      //ரொம்ப கரெக்டா சொல்லி இருக்கீங்க கோபால்ஜி...//

      மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி.

      //உங்க பிரார்த்தனையின் பலனை நான் இப்ப அனுபவித்து சந்தோஷமாகவும் அமைதியாகவும் இருக்கேன்....//

      மிகவும் சந்தோஷம் சாரூஊஊஊஊ. நான் எனக்காகச் செய்துகொள்ளும் பிரார்த்தனைகளைவிட, நான் பிறருக்காகச் செய்துகொள்ளும் பிரார்த்தனைகள் அடிக்கடி பலித்துவிடுகின்றன என்பதை நினைக்கும்போது எனக்கும் சந்தோஷமாகவே உள்ளது.

      மிகவும் சந்தோஷம்.....டா சாரூஊஊஊஊ.

      இனி எப்போதும் சந்தோஷமாகவும் மன அமைதியுடனும் இருங்கோ. அதுவே என் ஆசையும் கூட. :)

      Delete