Thursday 23 June 2016

thedinen vanthathu

27 comments:

  1. தேடினேன் வந்தது நாடினேன் தந்தது
    வாசலில் நின்றது வாழவா என்றது

    தேடினேன் வந்தது நாடினேன் தந்தது
    வாசலில் நின்றது வாழவா என்றது

    என் மனத்தில் ஒன்றை பற்றி
    நான் நினைத்ததெல்லாம் வெற்றி

    என் மனத்தில் ஒன்றை பற்றி
    நான் நினைத்ததெல்லாம் வெற்றி

    நான் இனி பறைக்கும் மலரனைத்தும்
    மணம்பரப்பும் சுத்தி

    நான் இனி பறைக்கும் மலரனைத்தும்
    மணம்பரப்பும் சுத்தி

    பெண் என்றால் தெய்வ மாளிகை
    திறந்து கொள்ளாதோ
    ஓ…

    தேடினேன் வந்தது நாடினேன் தந்தது
    வாசலில் நின்றது வாழவா என்றது

    இனி கலக்கம் என்றும் இல்லை
    இதில் விளக்கம் சொல்வதுமில்லை

    இனி கலக்கம் என்றும் இல்லை
    இதில் விளக்கம் சொல்வதுமில்லை

    இனி உறக்கம் உண்டு விழிப்பதுண்டு
    மயக்கம் உண்டு நெஞ்சே

    பெண் என்றால் தெய்வ மாளிகை திறந்து கொள்ளாதோ..
    ஓ…

    தேடினேன் வந்தது நாடினேன் தந்தது
    வாசலில் நின்றது வாழவா என்றது

    ReplyDelete
  2. படம்: ஊட்டி வரை உறவு (1967)

    இசை: எம்.எஸ். விஸ்வநாதன்

    பாடலாசிரியர்: கண்ணதாஸன்

    பாடியவர்: பி. சுசிலா

    ReplyDelete
  3. ஊட்டி வரை உறவு எல்லா பாடல்களும் கோபூஜியோட நேயர் விருப்ப பாடல்கள்தான்... சீக்கிரமே வந்துட்டீங்க

    ReplyDelete
    Replies
    1. சிப்பிக்குள் முத்து. 23 June 2016 at 20:58

      //ஊட்டி வரை உறவு எல்லா பாடல்களும் கோபூஜியோட நேயர் விருப்ப பாடல்கள்தான்... சீக்கிரமே வந்துட்டீங்க//

      ஆமாம். நான் எப்போதோ சொல்லியுள்ளதை இன்னும் நன்கு நினைவில் வைத்துக்கொண்டுள்ளீர்கள் .... முன்னா. :)

      மனதுக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது. அதனால் சீக்கரமே வந்துட்டேன் போலிருக்கு. :)

      Delete
  4. இந்த ஆடியோ வீடியோ சரியா வருதா.. கோபூஜி... இங்க எனக்கு வரல......

    ReplyDelete
    Replies
    1. சிப்பிக்குள் முத்து. 23 June 2016 at 21:08

      //இந்த ஆடியோ வீடியோ சரியா வருதா.. கோபூஜி... இங்க எனக்கு வரல......//

      இங்கு எனக்கு ஆடியோ வீடியோ எல்லாம் சரியாகக் கிடைக்கிறது.

      ஆனாலும், அந்த என் இளம் வயதினில் இந்தப்பாட்டில் நான் சொக்கிப்போய் வெகுவாக ரஸித்ததுபோல இப்போது என்னால் ரஸிக்க முடியவில்லையே எனவும் நினைக்கத்தோன்றுகிறது.

      ஒருவேளை எனக்கு இப்போது கொஞ்சம் வயதானதால் ஒருவித மெச்சூரிட்டி ஏற்பட்டிருக்குமோ?

      எனக்கு மிகவும் பிடித்த புன்னகை அரசி கே.ஆர்.விஜயாவும் இன்று என்னைவிட KB ஆகி விட்டாளே ! :)

      [KB = கிழ போல்ட் :) ]

      Delete
    2. //ஒருவேளை எனக்கு இப்போது கொஞ்சம் வயதானதால் //

      ஹா ஹா...65-- வயசு... கொஞ்சம் வயசாஆஆஆஆஆ

      Delete
    3. சிப்பிக்குள் முத்து. 23 June 2016 at 21:25

      **ஒருவேளை எனக்கு இப்போது கொஞ்சம் வயதானதால்**

      //ஹா ஹா...65-- வயசு... கொஞ்சம் வயசாஆஆஆஆஆ//

      ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ........

      இதை எங்கட ________ ’கோமாதா என் குலமாதா’ கேட்க வேண்டும். உங்களை தன் மிகப்பெரிய, முரட்டுக் கொம்புகளால் கொந்தி எறியபோவது சர்வ நிச்சயம். ஜாக்கிரதை, முன்னா.

      65 இல் ஆறும் ஐந்தும் உள்ளது அல்லவா. ஆறும் ஐந்தும் சேர்ந்தால் ஆரஞ்சு அல்லவா. என் மனம் எப்போதும் மிக இளமையாக ஆரஞ்சு போல .... கமலாரஞ்சு போல .... சுவையோ சுவையாக .... இளமையோ இளமையாக இன்றும் உள்ளதே .... நான் என் செய்வேன் ! :)))))

      Delete
    4. ஆஹா..... ரசனையான பதில்......

      Delete
    5. ப்ராப்தம் 23 June 2016 at 22:17

      //ஆஹா..... ரசனையான பதில்......//

      :))))))))))))))))))))))))))))))))))

      மிக்க நன்றி..டா சாரூ.

      இதை நீ இங்கு சொல்லியுள்ளதில் நான் மகிழ்ச்சியின் உச்சிக்கே போய் விட்டேன். மிக்க நன்றி. :)))))

      இதை ஒரு வேளை படிக்க நேர்ந்து ‘கோ மாதா என் குல மாதா’ என்னை முட்ட வந்தால், நான் மகிழ்ச்சி என்ற மலை உச்சியிலிருந்து தொபக்கடீர்ன்னு கீழே விழுந்துடுவேனோ என்று பயமாகவும் உள்ளதுடா, சாரூ.

      கடவுளே ..... கடவுளே ..... என்னைக் காப்பாத்து.

      Delete
  5. இந்தப்படம் வந்தபோது எனக்கு ஸ்வீட் சிக்ஸ்டீன் வயது முடிந்து 17 வயது நடந்துகொண்டிருந்தது.

    வேறொருவர் தயவால் இந்தப்படத்தை, வெளியான முதல் வாரத்திலேயே, அந்தக்காலத்தில் இருந்த திருச்சி ராஜா தியேட்டரில் (இப்போது அந்த தியேட்டர் இல்லை) பார்த்து ரஸித்து மகிழ்ந்தேன்.

    முதன் முதலாக ஈஸ்ட்மென் கலரில் மிக அழகாக எடுக்கப்பட்ட படம் இது. இதன் கதை முழுக்க எனக்குத் தெரியும். அவற்றை விரிவாகச் சொல்லத்தான் ஆசையாக உள்ளது. அதையெல்லாம் இப்போது யார் ரஸிக்கப்போகிறார்கள்? எனவே நானும் இங்கு சொல்லவில்லை.

    இது ஒரு துப்பறியும் கதை போல இருக்கும். நகைச்சுவையாகவும் இருக்கும். விறுவிறுப்பாகவும் இருக்கும். நான் பலமுறை விரும்பிப் பார்த்த படம் இது.

    இதில் நடிக்கும் புன்னகை அரசி கே.ஆர். விஜயாவுக்கும் அப்போது 18-20 வயதுதான் இருக்கும்.

    அந்தப்படத்தில் வரும் அனைத்துப் பாடல்களும் அருமையோ அருமையாக இருக்கும். இதுதான் அதில் வரும் முதல் பாடல்.

    இந்தப்பாடலை அவள் ஆடிப்பாடி முடிந்ததும், சிவாஜி கைதட்டி பாராட்டிவிட்டு, பிறகு பளார் என அவளின் கன்னத்தில் ஓர் அறை கொடுப்பார். அதில் ஓர் மிகப்பெரிய சஸ்பென்ஸ் + கதையின் முடிச்சு உள்ளது.

    சிவாஜியின் தந்தைக்குப் பிறந்த வப்பாட்டி மகள்தான் நான் எனச் சொல்லிக்கொண்டு, சிவாஜி வீட்டுக்குள் கே.ஆர்.விஜயா, தனக்கு ஓர் புகலிடமும் பாதுகாப்பும் தேடி நுழைகிறாள்.

    அவள் தன் தங்கை அல்ல என்பதை, அவள் கொண்டுவரும் ஒரு டைரி மூலம் படித்துத் தெரிந்துகொண்டுவிடும் சிவாஜி, அவளை ஓர் அறைவிட்டு, உண்மையை அவளிடமிருந்து வரவழைக்கிறார்.

    இருப்பினும் அவளைத் தன்னுடன் தன் வீட்டிலேயே தங்க வைத்துக்கொண்டு, பிறகு அவளை காதலிக்கவும் செய்கிறார்.

    தன் தந்தை வாயால் தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொள்ள வைத்து வரவழைக்க வேண்டும் என்பதே சிவாஜியின் திட்டமாகும். மிகவும் அருமையான கதை அற்புதமாக பலவித ட்விஸ்ட் களுடன் எடுத்துள்ளார்கள்.

    ReplyDelete
  6. 16, 17---வயசுலயே எல்லாத்தையும் ரசிக்க ஆரம்பிச்சாச்சா.. வெரிகுட்... அந்த ரசனை இப்ப வரை குறையவேயில்லையே எப்பூஊஊஊடி......

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர் 23 June 2016 at 21:33

      //16, 17---வயசுலயே எல்லாத்தையும் ரசிக்க ஆரம்பிச்சாச்சா.. வெரிகுட்...//

      ஓடும் பாம்பைக்கூட மிதிக்கும் வயதல்லவா 16 to 25 ! அந்த இளம் வயதினில் ரஸனைக்கா பஞ்சம்?

      //அந்த ரசனை இப்ப வரை குறையவேயில்லையே எப்பூஊஊஊடி......//

      அதற்கெல்லாம் ‘யாரோ’ ஒருவர் மட்டுமே காரணமாக்கும். அதையெல்லாம் நான் என் வாயால் இங்கு வெளிப்படையாகச் சொல்ல முடியாதாக்கும்.

      Delete
    2. எப்ப பாத்தாலும் அந்த " யாரோ" வ வம்பிழுப்பது நீங்கதானே.....
      .

      Delete
    3. பூந்தளிர் 25 June 2016 at 21:20

      //எப்ப பாத்தாலும் அந்த " யாரோ" வ வம்பிழுப்பது நீங்கதானே.....//

      சரி .... இனிமேல் யாரையும் வம்பிழுக்காமல் சிவனேன்னு இருந்து விடுகிறேன். ஓக்கேயா?

      Delete
  7. இன்னா ஆட்டம் போடுறாக....

    ReplyDelete
    Replies
    1. mru 23 June 2016 at 21:50

      //இன்னா ஆட்டம் போடுறாக....//

      அதெல்லாம் எங்காளு மிகவும் சூப்பராவே ஆடுவா.

      அவளின் குலுக்கல் அத்தனையையும் (கைகளுக்கு இடையே வழியும் வியர்வைக் கசிவு ஈரம் உள்பட) எப்படி கேமராமேன் கவரேஜ் செய்துள்ளார் பாருங்கோ ..... :)

      Delete
    2. http://gopu1949.blogspot.in/2014/07/vgk-25.html இதோ என் இந்தப்பதிவின் 5-ம் பகுதியை மட்டுமாவது மீண்டும் படித்துப் பாருங்கோ ....

      அங்கும் ஒரே வியர்வை கொட்டிக்கொண்டே உள்ளது.

      Delete
    3. சே...சே..... இதல்லா ஆரு பாப்பாங்க......

      Delete
    4. mru 25 June 2016 at 20:53

      //சே...சே..... இதல்லா ஆரு பாப்பாங்க......//

      MIRROR இல்லாமல் உங்களால் பார்க்க முடியாதுதான்.

      ஆனால் அவரு இனி ஜோரா பார்த்து ரஸிப்பாரு. :) இனிய நல்வாழ்த்துகள்....டா முருகு.

      Delete
  8. எங்கட குருஜிக்கெல்லா வயசு ஏறவே ஏறாதாக்கும்.... வெளங்கிச்சா.......

    ReplyDelete
    Replies
    1. mru 23 June 2016 at 21:52

      //எங்கட குருஜிக்கெல்லா வயசு ஏறவே ஏறாதாக்கும்.... //

      ஹைய்ய்ய்ய்ய்யோ, நாளுக்கு நாள் வயது குறையுமாக்கும்? என்றும் மார்க்கண்டேயன் போல 16 வயதாகவே இருந்தால் எவ்வளவு ஜோராக இருக்கும் !!

      //வெளங்கிச்சா.......//

      _________ க்கு மட்டுமே இது கொஞ்சம் வெளங்கியிருக்கும். மற்றவர்களால் வெளங்கிக்கிட ஏலாது....டா, முருகு.

      ஏனெனில் மற்றவர்களுடன் எனக்கு அதிக நெருக்கமோ தொடர்புகளோ ஏதும் இல்லவே இல்லையே ... முருகு.

      Delete
    2. //ஏனெனில் மற்றவர்களுடன் எனக்கு அதிக நெருக்கமோ தொடர்புகளோ ஏதும் இல்லவே இல்லையே ... முருகு.//

      யாரு இப்படி சொல்லுறது.. எங்கட கோபூஜியா... அவரா சொன்னார்....... இருக்காது...... அப்படி எதுவும் இருக்காது.....நம்ப முடியவில்லை இல்லை இல்லை.......)))))

      Delete
    3. சிப்பிக்குள் முத்து. 24 June 2016 at 20:44

      **ஏனெனில் மற்றவர்களுடன் எனக்கு அதிக நெருக்கமோ தொடர்புகளோ ஏதும் இல்லவே இல்லையே ... முருகு.**

      //யாரு இப்படி சொல்லுறது.. எங்கட கோபூஜியா... அவரா சொன்னார்....... இருக்காது...... அப்படி எதுவும் இருக்காது..... நம்ப முடியவில்லை இல்லை இல்லை.......))))) //

      ’முன்னா’வா .... அப்படின்னா யாரு எனக் கேட்கும்படியாக ஆகிவிடும் போலிருக்கு ..... என் இன்றைய நிலைமை. இப்போதெல்லாம் என்னிடம் நீங்க எதுவுமே சொல்லுவது இல்லையாக்கும். என்னிடம் மட்டும் வைராக்யமாக உள்ளீர்கள் என நினைக்கிறேன். எப்படியோ க்ஷேமமா, செளக்யமா, சந்தோஷமாக இருங்கோ ... அதுவே எனக்குப் போதும்.

      -=-=-=-=-=-=-

      இந்தத்தங்களின் பின்னூட்டத்தில் கீழ்க்கண்ட பாடலை நினைவூட்டியுள்ளதற்கு என் நன்றிகள். :)

      படம்: செல்வம் (1966)
      நடிப்பு: சிவாஜி + கே.ஆர்.விஜயா
      பாடல் வரிகள்: வாலி
      இசை: K V மஹாதேவன்
      பாடியவர்: TMS


      பல்லவி

      அவளா சொன்னாள் இருக்காது
      அப்படி எதுவும் நடக்காது
      நடக்கவும் கூடாது
      நம்ப முடியவில்லை... இல்லை... இல்லை...

      இசை சரணம் - 1

      உள்ளத்தில் உள்ளது உதட்டிலே வந்ததா
      உதட்டிலே வந்தது உள்ளமே நினைத்ததா

      அவளா சொன்னாள் இருக்காது
      அப்படி எதுவும் நடக்காது
      நடக்கவும் கூடாது
      நம்ப முடியவில்லை... இல்லை... இல்லை...

      இசை சரணம் - 2

      உப்பு கடல் நீரும் சர்க்கரை ஆகலாம்
      முப்பது நாளிலும் நிலவை பார்க்கலாம்
      சுட்ட உடல் கூட எழுந்து நடக்கலாம்
      சுட்ட உடல் கூட எழுந்து நடக்கலாம்
      நீ சொன்னது எப்படி உண்மை ஆகலாம்...

      நம்ப முடியவில்லை... இல்லை ...இல்லை...

      இசை சரணம்-3

      அன்னை தந்த பால் விஷமும் ஆகலாம்
      என்னை பெற்ற தாய் என்னை கொல்லலாம்
      அன்னை தந்த பால் விஷமும் ஆகலாம்
      என்னை பெற்ற தாய் என்னை கொல்லலாம்
      உன்னை மறந்து நான் உயிரை தாங்கலாம்
      உன்னை மறந்து நான் உயிரை தாங்கலாம்
      நீ சொன்னது எப்படி உண்மை ஆகலாம்...
      நம்ப முடியவில்லை... இல்லை... இல்லை...

      அவளா சொன்னாள் இருக்காது
      அப்படி எதுவும் நடக்காது
      நடக்கவும் கூடாது
      நம்ப முடியவில்லை... இல்லை... இல்லை...

      :)))))))))))))))))))))))))))))))))))))))))))))))

      Delete
    4. என்னத்த சொல்ல கோபூஜி.... வழக்கம்போல மெயில்.... சாட் மெஸேஜ் பாட்டு கமெண்ட் எல்லாத்தையும் கண்டுகிடாம டெலிட் பண்ணிகிட்டுருக்கேனே அதைச்சொல்லவா......சிலர் சரிப்பார் சிலர் அழுவார் நான் அழுதுகொண்டே சிரிப்பதை சொல்லவா.. எதைச்சொல்ல.....

      Delete
    5. சிப்பிக்குள் முத்து. 25 June 2016 at 02:26

      //என்னத்த சொல்ல கோபூஜி....//

      நம்பிக்கையுடன் இருங்கோ. எதிலும் இப்போது அவசரமோ, பதட்டமோ வேண்டாம். பொறுமையைக் கடைபிடிக்கவும்.

      காலம் ஒருநாள் மாறும். நம் கவலைகள் எல்லாம் தீரும்.

      நடந்துள்ள எதுவும் ஓர் முடிவு அல்ல. முடிவும் நம் கையில் ஏதும் இல்லை. எது நல்லதோ அது நமக்கு நிச்சயமாக ஒருநாள் நடக்கும். கவலை வேண்டாம்.

      இப்போது மன அமைதியுடன் இருங்கோ, ப்ளீஸ்.

      I am always praying for you. Don't worry.

      Delete
  9. இன்று ஜூன் 24.

    கவியரசர் கண்ணதாஸன் பிறந்த நாள்: 24.06.1927

    மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் பிறந்த நாள்: 24.06.1928

    இருவரையும் தமிழ் திரையுலக ரஸிகர்களாகிய நாம் எல்லோரும் இன்று நினைத்து மகிழ்வோம்.

    ReplyDelete