Tuesday 14 June 2016

kalviya selvama veerama

8 comments:

  1. ரொம்ப நல்லபாட்டு. ஒன்றில்லாமல் மற்றொன்று உயிர்வாழுமா.....

    ReplyDelete
  2. இந்த பாட்டும் நல்லா இருக்கு..

    ReplyDelete
  3. ஐயயே இது இன்னா வேசம் தலேல கொண்ட பூவு பொட்டபுள்ள போலகீதே.. பாட்டு நல்லாதா கீது...

    ReplyDelete
    Replies
    1. mru 14 June 2016 at 23:47

      //ஐயயே இது இன்னா வேசம் தலேல கொண்ட பூவு பொட்டபுள்ள போலகீதே..//

      மேல் உலகில் தேவர்களுக்கு நடுவே நாரதர் என்றொரு மஹா முனிவர் உள்ளார். கலகம் செய்வதிலும் பிறருக்கிடையே சிண்டு முடிந்து வேடிக்கை பார்பதிலும் வல்லவர். அவரின் அலங்கார வேஷமும் அடையாளமுமே எப்போதும் தலையில் கொண்டையுடனும், பூவுடனும், பூ மாலையுடனும், கையில் வீணையுடனும் தோற்றமளிப்பது மட்டுமே.

      Delete
  4. கல்வியா செல்வமா வீரமா
    அன்னையா தந்தையா தெய்வமா
    கல்வியா செல்வமா வீரமா
    அன்னையா தந்தையா தெய்வமா
    ஒன்றில்லாமல் மற்றொன்று உருவாகுமா
    இதில் உயர்வென்றும் தாழ்வென்றும் பிரிவாகுமா
    ஒன்றில்லாமல் மற்றொன்று உருவாகுமா
    இதில் உயர்வென்றும் தாழ்வென்றும் பிரிவாகுமா
    கல்வியா செல்வமா வீரமா

    படித்தவன் கருத்தெல்லாம் சபையேறுமா
    பொருள் படைத்தவன் கருத்தானால் சபை மீறுமா
    படித்தவன் கருத்தெல்லாம் சபையேறுமா
    பொருள் படைத்தவன் கருத்தானால் சபை மீறுமா
    படித்தவன் படைத்தவன் யாராயினும்
    படித்தவன் படைத்தவன் யாராயினும்
    பலம் படைத்திருந்தால் அவனுக்கிணையாகுமா
    பலம் படைத்திருந்தால் அவனுக்கிணையாகுமா
    கல்வியா செல்வமா வீரமா

    ஒன்றுக்குள் ஒன்றாக கருவானது
    அது ஒன்றினில் ஒன்றாக பொருளானது
    ஒன்றுக்குள் ஒன்றாக கருவானது
    அது ஒன்றினில் ஒன்றாக பொருளானது
    ஒன்றை ஒன்று பகைத்தால் உயர்வேது
    ஒன்றை ஒன்று பகைத்தால் உயர்வேது
    மூன்றும் ஓரிடத்தில் இருந்தால் நிகரேது
    மூன்றும் ஓரிடத்தில் இருந்தால் நிகரேது
    கல்வியா செல்வமா வீரமா

    மூன்று தலைமுறைக்கும் நிதி வேண்டுமா
    காலம் முற்றும் புகழ் வளர்க்கும் மதி வேண்டுமா
    மூன்று தலைமுறைக்கும் நிதி வேண்டுமா
    காலம் முற்றும் புகழ் வளர்க்கும் மதி வேண்டுமா
    தோன்றும் பகை நடுங்கும் பலம் வேண்டுமா
    தோன்றும் பகை நடுங்கும் பலம் வேண்டுமா
    இவை மூன்றும் துணை இருக்கும் நலம் வேண்டுமா
    இவை மூன்றும் துணை இருக்கும் நலம் வேண்டுமா
    கல்வியா செல்வமா வீரமா

    ReplyDelete
  5. படம் : சரஸ்வதி சபதம்
    இசை : மகாதேவன்
    பாடியவர் : செளந்தர்ராஜன்
    வரிகள் : கண்ணதாசன்

    ReplyDelete
  6. நல்லதொரு மிகப்பிரபலமான பாடல் பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  7. நன்றி எல்லாருக்கும்....

    ReplyDelete