Monday 20 June 2016

eraatha malai thanile

28 comments:

  1. பக்கத்து வீட்டு மாமி நேயர் விருப்பம்....

    ReplyDelete
  2. அப்பமே கோட குத்து பாட்டெலா கீதூ......

    ReplyDelete
  3. ஹா ஹா..... முருகு போலவே நானும் சொல்லிடறேன்......

    ReplyDelete
  4. ரொம்பவே பழய பாட்டோ... நல்லாதான் இருக்கு..

    ReplyDelete
  5. கோபூஜிய காணோமே... ஹனிமூன் போயிட்டிங்களா....

    ReplyDelete
  6. தூக்குத்தூக்கி என்ற அந்தக்கால மிகச்சிறந்த படத்தில் மொத்தம் மிக அருமையான எட்டு பாடல்கள் உண்டு.

    அதுவரை சினிமா பாடல்கள் பாடுவதில் மிகப் பிரபலமாக இருந்தவர் திருச்சி லோகநாதன் மட்டுமே. அவர் ஒவ்வொரு பாடலுக்கும் ரூ.500 வீதம் மொத்தம் ரூ 4000 கேட்டதாலும், படம் எடுத்தவர்களால் அது மிக அதிகத்தொகையாகக் கருதப்பட்டதாலும் ஒப்பந்தம் செய்ய முடியவில்லை.

    அப்போது திருச்சி லோகநாதனே மதுரையைச் சேர்ந்த ’தொகுளுவ மீனாட்சி அய்யங்கார் செளந்தரராஜன்’ என்கிற டி.எம்.எஸ். என்ற புதியதொரு பாடகரைப் பாடச்சொல்லுங்கள், மலிவான சம்பளத்தில் பாடிக்கொடுப்பார் எனப் பரிந்துரைத்தார்.

    அதுபோலவே தனக்குக் கிடைத்த இந்த அரிய பெரிய சான்ஸை ஏற்றுக்கொண்டு, எட்டு பாட்டுக்குமாக ரூ. 2000 மட்டும் சம்பளம் பெற்றுக்கொண்டு டி.எம்.எஸ். அவர்கள் பாடிக்கொடுத்தார்.

    தூக்குத்தூக்கி என்ற இந்தப் படத்தில் அவர் பாடிய எட்டுப் பாடல்களும் மிகப் பிரபலமாகி, அவருக்கு தமிழ் திரை உலகில், இதுவரை யாருமே எட்டாத புகழையும் பெருமையையும் தேடித்தந்துள்ளன.

    இன்று கணக்கெடுத்தால் டி.எம்.எஸ். அளவுக்கு தமிழில் பிரபலமான சினிமா பாடல்கள் பாடியவர் யாருமே இல்லை என்றுதான் நாம் சொல்ல வேண்டும்.

    >>>>>

    ReplyDelete
  7. ’தூக்குத்தூக்கி’ என்ற தமிழ்த்திரைப்படக் கதையின் கருவை மட்டும் இங்கு நான் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்:

    1) கொண்டுவந்தால் தந்தை

    2) கொண்டுவந்தாலும் கொண்டுவராவிட்டாலும் தாய்

    3) சீர் கொடுத்தால் சகோதரி

    4) கொலையும் செய்வாள் பத்தினி

    5) உயிர்காப்பான் தோழன்

    இதுபோன்ற மிகப்பெரிய தத்துவம் விளம்பரம் போல ஓர் இடத்தில் எழுதி வைக்கப்பட்டிருக்கும். படத்தின் ஆரம்பத்தில் அதைப்பார்க்கும் சிவாஜிகணேசன் அவற்றை ஒத்துக்கொள்ள முடியாமல் கேலி செய்வார். ஆனால் அவரின் சொந்த வாழ்க்கையிலேயே இவை அனைத்தும் நடக்கும். அது தான் இந்தத் தூக்குத்தூக்கி என்ற கதையின் சிறப்பாகும்.

    >>>>>

    ReplyDelete
  8. ‘பாகவதர் போலவே பாடுகிறவர் ஒருவர் மதுரையில் தோன்றி இருக்கிறார்’ என்று ஒரு செய்தி அப்போது பரவிக்கொண்டிருந்தது.

    ‘தூக்குத்தூக்கி’ என்ற படம் 1954ல் வந்தது. அப்படம்தான் தமிழகம் டி.எம்.எஸ் என்ற பாடகரைக் கவனிக்க வைத்தது.

    அப்படமும் அதன் கதையும் மிகவும் ஆட்சேபகரமானவை. ஆனால் அது மிகவும் வெற்றிகரமாக ஓடு ஓடுவென்று ஓடியது.

    அந்த ஆண்டில் பாட்டுக்காகவென்று ஓடிய ஒன்றிரண்டு படங்களில் அது ஒன்று.

    டி.எம்.எஸ்ஸை விட அப்படத்தின் ‘சுந்தரி சௌந்தரி நிரந்தரியே’ என்ற பாடல்தான் பல விதங்களில் உயர்ந்தது, மக்களைக் கவர்ந்தது.

    சிவாஜி கணேசனோடு பாடகரும் சேர்ந்து உரத்துப் பாடுவார். ஆனால் அன்று அந்த உரத்தப் பாடல்கள் மிகவும் ரஸிக்கப்பட்டன.

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. ஒரு பாட்டை ரசிப்பது கூடவே எவ்வளவு விவரங்கள் தெரிஞ்சு வச்சிருக்கீங்க...நினைவு சக்தில நீங்க ஒரு யானை தான்.....))))

      Delete
    2. பூந்தளிர் 21 June 2016 at 21:55

      //ஒரு பாட்டை ரசிப்பது கூடவே எவ்வளவு விவரங்கள் தெரிஞ்சு வச்சிருக்கீங்க...//

      நெட்டில் தேடினால் பலவிஷயங்கள் (நல்லதோ/கெட்டதோ) கிடைத்து விடுகிறதே. தெரியாத விபரங்களை அங்கிருந்து நான் சமயத்தில் தெரிந்து கொள்வதும் உண்டு.

      //நினைவு சக்தில நீங்க ஒரு யானை தான்.....))))//

      ஆமாம். யானைதான். 94 கிலோ எடையுள்ள குட்டி யானைதான். உன்னைப்போல 50 கேஜி தாஜ் மஹால் ஆகணும்ன்னு மிகவும் ஆசைதான். என்ன செய்வது? முடியவில்லையே.

      94 + 50 = 144 / 2 = 72 Kg each என ஆக முடியுமா?

      அதுவும் தெரியவில்லையே. :(

      Delete
  9. சிவாஜி - எம்.ஜி.ஆர் .. மக்கள் நினைவில் உள்ளவரை, தமிழர்கள் மனதில், திரைப்படப்பாடகர் டி.எம்.எஸ். அவர்களும் நிலைத்து நிற்பார்.

    பாடல் பகிர்வுக்கு முன்னாவுக்கு என் நன்றிகள்.

    இந்தப்பாடலை நேயர் விருப்பமாகக் கேட்டுள்ள பக்கத்தாத்து மாமிக்கு என் நமஸ்காரங்கள்.

    ReplyDelete
  10. ஹப்பாடா கோபூஜி உங்கள கண்டதும்தான் சந்தோஷமாச்சி எவ்வளவு விஷயங்களை தெரிஞ்சு வச்சிருக்கீங்க.. சுந்தரி சௌந்தரி அபாய அறிவிப்பு என்று மூணு பாட்ட இன்னிக்கு அப்லோடு பண்ணினேன் இது ஒன்னுதான் சொதப்பாம வந்திச்சி...

    ReplyDelete
    Replies
    1. http://www.thamizhisai.com/album/thookku-thookki/sundari-soundari-video.php

      Song: Sundari soundari பாடல்: சுந்தரி சௌந்தரி
      Movie: thookku thookki திரைப்படம்: தூக்கு தூக்கி
      Lyrics: Maruthakasi பாடலாசிரியர்: மருதகாசி
      Music: G. Ramanathan இசை: ஜி. ராமநாதன்
      Singers: T.M. Sownthararajan, M.S. Rajeswari
      பாடியோர்: டி.எம். சௌந்தரராஜன், எம்.எஸ்.ராஜேஸ்வரி Year: 1954 ஆண்டு: 1954

      சுந்தரி சௌந்தரி நிரந்தரியே!
      சுந்தரி சௌந்தரி நிரந்தரியே!
      சூலியெனும் உமையே!
      சூலியெனும் உமையே குமரியே!
      குமரியே சூலியெனும் உமையே குமரியே!
      சுந்தரி சௌந்தரி நிரந்தரியே!
      சுந்தரி சௌந்தரி நிரந்தரியே!

      அந்தமும் ஆதியும் இல்லா ஜோதியே!
      அந்தமும் ஆதியும் இல்லா ஜோதியே!
      அந்தமும் ஆதியும் இல்லா ஜோதியே!
      அந்தமும் ஆதியும் இல்லா ஜோதியே!
      அந்தமும் ஆதியும் இல்லா ஜோதியே!

      அந்தமும் ஆதியும் இல்லா ஜோதியே!
      அமரி எனும் மாயே - மாயே!
      அமரி எனும் மாயே!
      பகவதி நீயே அருள் புரிவாயே பைரவி தாயே!
      உன் பாதம் சரணமே உன் பாதம் சரணமே

      சுந்தரி சௌந்தரி நிரந்தரியே!

      சீலமும் வீரமும் சீரும் செல்வமும்
      சீலமும் வீரமும் சீரும் செல்வமும்
      சீலமும் வீரமும் சீரும் செல்வமும்
      சீலமும் வீரமும் சீரும் செல்வமும்

      சீலமும் வீரமும் சீரும் செல்வமும்
      தேர்ந்த கலைஞானம் கானம் நிதானம் - நிதானம்
      மாந்தரின் மானம் - மானம் காத்திட வேணும் - வேணும்
      கண்காணும் தெய்வமே கண்காணும் தெய்வமே!

      சுந்தரி சௌந்தரி நிரந்தரியே!
      சூலியெனும் உமையே குமரியே!
      சுந்தரி சௌந்தரி நிரந்தரியே!

      குமரியே சுந்தரி சௌந்தரி நிரந்தரியே!

      Delete
    2. சிப்பிக்குள் முத்து. 21 June 2016 at 01:40

      //ஹப்பாடா கோபூஜி உங்கள கண்டதும்தான் சந்தோஷமாச்சி.//

      வழக்கம்போல இன்று நான் எழுந்ததே மிகவும் தாமதமாக மட்டுமே. பிறகு ஓர் மிக முக்கிய இளம் பெண் விருந்தினர் வருகை. ஒரு முக்கியமான கன்சல்டிங் விஷயமாக என்னிடம் வந்திருந்தாள். அவளின் ’கோகில கண்டமான’ பேச்சிலே மயங்கி ஸ்தம்பித்து அமர்ந்து விட்டேன். அதனாலும் இங்கு வருகைதர மேலும் தாமதமாகிவிட்டது.

      //எவ்வளவு விஷயங்களை தெரிஞ்சு வச்சிருக்கீங்க.. சுந்தரி சௌந்தரி அபாய அறிவிப்பு என்று மூணு பாட்ட இன்னிக்கு அப்லோடு பண்ணினேன் இது ஒன்னுதான் சொதப்பாம வந்திச்சி...//

      இந்தப்படம் வெளிவந்த ஆண்டுதான் (05.01.1954) என் மனைவி பிறந்தாள். எனக்கு அப்போது 4 வயது மட்டுமே.

      பிறகு இப்போதுதான் சமீபத்தில் ஒருநாள் இந்தப்படத்தினை நாங்கள் இருவருமாக சேர்ந்து பார்க்க நேர்ந்தது. என் மனைவிக்கு பாட்டு என்றால் மிகவும் பிடிக்கும். அவளே இனிமையான குரலுடன் மிக நன்றாகப் பாடுபவள் என அவளின் தோழிகள் என்னிடம் அடிக்கடிச் சொல்லிக் கேள்விப்பட்டுள்ளேன். :)

      { http://gopu1949.blogspot.in/2013/10/62.html இதோ இந்த என் பதிவின் இறுதியில் அந்தப்பிரபலப் பாடகியின் புகைப்படத்தினையும்கூட நீங்க பார்க்கலாம். }

      இதில் வரும் பாடல்களுக்காகவே இந்தப்படம் அவளுக்கு (என் மனைவிக்கு) மிகவும் பிடித்து விட்டது.

      இன்றும் இந்தப்பாடலை தங்கள் மூலம் என் மனைவி கேட்டு மகிழ்ந்தாள். அவளுக்காக ‘சுந்தரி செளந்தரி’ பாடலையும் எடுத்துப் போட்டுக்காட்டி மகிழ்வித்தேன்.

      Delete
    3. மனைவிக்கு மரியாதையா....ம் ம் ம்... கொடுத்து வச்சவங்க....

      Delete
    4. பூந்தளிர் 21 June 2016 at 21:57

      //மனைவிக்கு மரியாதையா....ம் ம் ம்... கொடுத்து வச்சவங்க....//

      அவள் மிகவும் கொடுத்து வைத்தவள் தான். அதில் ஒன்றும் சந்தேகமே இல்லை.

      மேலும் என் வாயை நீ அல்வா போலக் கிளற வேண்டாம்.

      Delete
  11. பக்கத்து வீட்டு மாமிக்கு 50--- வயசுதான் ஆகுது கோபூஜி.....

    ReplyDelete
    Replies
    1. சிப்பிக்குள் முத்து. 21 June 2016 at 01:41

      //பக்கத்து வீட்டு மாமிக்கு 50--- வயசுதான் ஆகுது கோபூஜி.....//

      ஓஹோ .... அப்படியா .... மிக்க மகிழ்ச்சி.

      இருந்தாலும், பெரியவரோ சிறியவரோ, ஒருவருக்கொருவர் நேரில் சந்திக்கும்போதே ‘நமஸ்காரம்’ எனச் சொல்லி கைகூப்பிக் கும்பிடுவதுதானே நமது கலாச்சாரம். :)))))

      அப்படித்தானே எங்கட ஹிந்தி டீச்சர் என்னைவிடச் சிறியவளாகவே இருப்பினும், டீச்சர் என்பவர் ’குரு’ என்ற உயர்ந்த ஸ்தானத்தில் எனக்கு இருப்பதாகத் தோன்றுவதால், அடிக்கடி அவளை நானும் விழுந்து விழுந்து கும்பிட்டுத்தானே வருகிறேன். :)))))

      Delete
  12. அன்புள்ள முன்னா, வணக்கம்.

    நாளை வெளியாக இருக்கும் தங்களின் வெற்றிகரமான 200-வது பதிவுக்கு என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.

    My Very Sweet & Heartiest Congratulations.

    இதில் சரிபாதியை எங்கட ராஜாத்தி, ரோஜா, அபிராமி, சிவ..காமி, கோமதி, டீச்சரம்மா, யாரோ, மிகவும் ஷார்ப்பான முரட்டுக் கொம்புகளுடன் என்னை அடிக்கடி முட்ட வரும் பசுமாடு, (இன்னும் என்னென்ன விட்டுப்போச்சோ.....) முதலியவர்களுக்கு பிரித்துத் தந்துவிடணுமாக்கும்.

    ஹிந்திப்பாட்டு வெளியீடுகளுக்கு, உங்களுக்கு தினமும் இடுப்புப் பிடித்து விடுபவர்கள் அவர்கள் அல்லவோ .... அதனால் சரிபாதி அவர்களுக்குத்தானாக்கும். ஞாபகம் இருக்கட்டும்.

    -=-=-=-=-=-=-=-=-=-=-

    ஆ...பேல்... முஜே....மார்.....

    அப்படின்னா

    “வா.. மாடே... வந்து... என்னை... முட்டு”ன்னு.... அர்த்தமாக்கும்......

    இது ஒரு மராட்டிப் பழமொழியாக்கும்.

    ’யாரோ’ எனக்கு என்னிக்கோச் சொல்லிக்கொடுத்ததாக்கும்.

    ReplyDelete
    Replies
    1. அவங்க அந்த "யாரோ" கரெக்டாதானே சொல்லியிருக்காங்க..))

      Delete
    2. முன்னா தாங்க்ஸ் நீயாவது என்னை சப்போர்ட் பண்ணுறியே.. அந்த "யாரோ" வுக்கும் புரிஞ்சா சரி......

      Delete
    3. சிப்பிக்குள் முத்து. 21 June 2016 at 21:20

      //அவங்க அந்த "யாரோ" கரெக்டாதானே சொல்லியிருக்காங்க..))//

      அவள் என் ராஜாத்தி அல்வா / அல்லவா .... அதனால் அவள் எதுசொன்னாலும் எப்போதும் கரெக்டாத்தான் இருக்கும்.

      Delete
    4. பூந்தளிர் 21 June 2016 at 21:58

      //முன்னா தாங்க்ஸ் நீயாவது என்னை சப்போர்ட் பண்ணுறியே.. அந்த "யாரோ" வுக்கும் புரிஞ்சா சரி......//

      இதற்கு நான் என்ன பதில் சொல்ல ..... கீழ்க்கண்ட பாட்டைத்தவிர .......

      -=-=-=-=-=-=-=-=-=-=-=-
      இதோ அந்தப் பாடல்
      -=-=-=-=-=-=-=-=-=-=-=-

      என்னை தெரியுமா என்னை தெரியுமா
      நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன்
      என்னை தெரியுமா

      உங்கள் கவலை மறக்க கவிதை பாடும்
      கவிஞன் என்னை தெரியுமா

      என்னை தெரியுமா
      நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன்
      என்னை தெரியுமா

      உங்கள் கவலை மறக்க கவிதை பாடும்
      கவிஞன் என்னை தெரியுமா

      ஆஹா ரசிகன் ஆஹா ரசிகன்
      நல்ல ரசிகன் நல்ல ரசிகன்
      உங்கள் ரசிகன் உங்கள் ரசிகன்

      நான் புதுமையானவன்
      உலகை புரிந்து கொண்டவன்

      நல்ல அழகை தெரிந்து மனதை கொடுத்து
      அன்பில் வாழ்பவன்

      ஆடலாம் பாடலாம் அனைவரும் கூடலாம்
      வாழ்வை சோலை ஆக்கலாம்

      இந்த காலம் உதவி செய்ய
      இங்கு யாரும் உறவு கொள்ள

      அந்த உறவு கொண்டு மனித இனத்தை
      அளந்து பார்க்கலாம்

      இசையிலே மிதக்கலாம் எதையுமே மறக்கலாம்
      இசையிலே மிதக்கலாம் எதையுமே மறக்கலாம்

      என்னை தெரியுமா –

      நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன்
      என்னை தெரியுமா

      உங்கள் கவலை மறக்க கவிதை பாடும் கவிஞன்
      என்னை தெரியுமா

      ஆஹா ரசிகன் ஆஹா ரசிகன்
      நல்ல ரசிகன் நல்ல ரசிகன்
      உங்கள் ரசிகன் உங்கள் ரசிகன்

      ஒரு சிலையை கண்டேனே
      அது சிரிக்க கண்டேனே

      இந்த அழகு என்ன அழகு
      என்று மயங்கி நின்றேனே

      வானிலே ஒரு நிலா நேரிலே இரு நிலா
      காதல் அமுதை பொழியலாம்

      அவள் அருகில் வந்து பழக
      நான் மெழுகு போல உருக

      இதழ் பிழிய பிழிய தேனை எடுத்து
      எனக்கு தந்தாளே

      கொடுத்ததை நினைக்கலாம்
      கொடுத்தவள் மறக்கலாம்

      கொடுத்ததை நினைக்கலாம்
      கொடுத்தவள் மறக்கலாம்

      நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன்
      என்னை தெரியுமா

      உங்கள் கவலை மறக்க கவிதை பாடும் கவிஞன்
      என்னை தெரியுமா

      Delete
  13. நம் ஒவ்வொரு பதிவும் நமக்கு ஒரு பிரஸவம் போலத்தான். உங்கள் வலைத்தளத்தினில் இவரை 199 சுகப்பிரஸவங்கள் நிகழ்ந்துள்ளன. நாளை விடிந்தால் வெற்றிகரமான 200-வது + 201-வது இரட்டைப் பிரஸவங்கள் நிகழ உள்ளன.

    ஒரு பெண்ணின் பிரஸவ நேரத்தில் அவளைப்பெற்ற தாயாரானவள், நல்லபடியாக பிரஸவமாகி தாயும் சேயும் பிழைக்கணுமே என நினைத்து, தன் மனதுக்குள் மிகுந்த கவலைகள் இருப்பினும் அதனைக் கொஞ்சமும் வெளிக்காட்டிக்கொள்ளாமல், பிள்ளைத்தாச்சிப் பெண்ணான அவளுக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டே, அவளின் மிகப்பெரிய தொந்தியையும், இடுப்பினையும் இதமாகப் பதமாகத் தடவி விட்டபடி, இருப்பது வழக்கமாகும்.

    அதையே பொதுவாக இடுப்புப்பிடித்து விடுதல் என நாங்கள் சொல்லுவோம்.

    அதனைத்தான் நான் மேலே இப்படிச் சொல்லியுள்ளேன்:
    //ஹிந்திப்பாட்டு வெளியீடுகளுக்கு, உங்களுக்கு தினமும் இடுப்புப் பிடித்து விடுபவர்கள் அவர்கள் அல்லவோ ....// வேறு ஏதும் தவறாக நினைக்க வேண்டாம்.

    மேலும் எங்கட பளிச் பளிச் ராஜாத்தி டீச்சர் அம்மா கையால் இடுப்புப்பிடித்துவிட, ’முன்னா மாமி’ மிகவும் கொடுத்து வைத்திருக்க வேண்டுமாக்கும். :)

    ReplyDelete
    Replies
    1. //மேலும் எங்கட பளிச் பளிச் ராஜாத்தி டீச்சர் அம்மா கையால் இடுப்புப்பிடித்துவிட, ’முன்னா மாமி’ மிகவும் கொடுத்து வைத்திருக்க வேண்டுமாக்கும்.//

      :)
      வேணாமே இந்த கிண்டல்... அழுதுடுவேன்...(((

      Delete
    2. பூந்தளிர் 21 June 2016 at 22:00

      //:)
      வேணாமே இந்த கிண்டல்... அழுதுடுவேன்...((( //

      எனக்கே நாளுக்கு நாள் இப்போ இடுப்பு வலி ஜாஸ்தியாகி வருகிறது. உங்கள் உதவி தேவையாக்கும். :)

      Delete
  14. கோபூஜி என்னலாமோ சொல்லுறீங்க...நான்லாம் வெறும் காப்பி பேஸ்ட் பதிவருதானே.. ஸோ..... வலிலாம் கெடயாது......

    ReplyDelete
    Replies
    1. சிப்பிக்குள் முத்து. 21 June 2016 at 21:18

      //கோபூஜி என்னலாமோ சொல்லுறீங்க... நான்லாம் வெறும் காப்பி பேஸ்ட் பதிவருதானே.. ஸோ..... வலிலாம் கெடயாது......//

      ’காப்பி பேஸ்ட் பதிவருதானே’ என்றாலும்...............

      எப்படியாயினும் அதற்கும் ஓர் பொறுமையும், பொறுப்பும், உழைப்பும், ஆசையும், ஆர்வமும் தேவைதானே!

      அதெல்லாம் உங்களிடம் நிறையவே உள்ளன. பாராட்டுகள் + நல்வாழ்த்துகள்.

      Delete