Wednesday, 15 June 2016

paattum naane

8 comments:

 1. நேத்துதான் இந்த பாட்டு பத்தி கமெண்ட்ல சொல்லி இருந்தேன் இன்னிக்கு போட்டுட்டியே... குட்....

  ReplyDelete
 2. ஆமா டீச்சர்.... நாளை வடுமாங்கா ஊறுதுங்கோ வருதே.......

  ReplyDelete
 3. இன்னா பாட்டு போட்டிருக்கே..முன்னா......எனிக்கு மட்டும் ஏதுமே வெளங்கிகிட ஏலலியே... ஏ......ன்.......

  ReplyDelete
  Replies
  1. mru 15 June 2016 at 23:52

   //இன்னா பாட்டு போட்டிருக்கே..முன்னா......எனிக்கு மட்டும் ஏதுமே வெளங்கிகிட ஏலலியே... ஏ......ன்.......?//

   திருவிளையாடல் என்றதோர் மிக அருமையான படத்தினை நீங்கள் பார்த்திருக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன், முருகு.

   சிவபெருமானின் திருவிளையாடல்களைப்பற்றிச் சொல்லும் மிக அருமையான வெற்றிப்படம் அது.

   மண்டை கர்வம் பிடித்த இசை மேதையொருவர் (நடிகர்: டி.எஸ்.பாலையா) ஹேமநாத பாகவதர் என்ற பெயரில் மதுரை மாநகருக்கு வருகிறார்.

   மதுரை மன்னரிடம் மிக அருமையான பாடல் ஒன்றைப் பாடுகிறார் (’ஒருநாள் போதுமா .... இன்றொருநாள் போதுமா .... நான் பாட இன்றொருநாள் போதுமா ...’ என்ற மிக அருமையான ஆச்சர்யமான பாடல் அது. பாலமுரளி கிருஷ்ணா என்ற பிரபலம் தன் குரலில் பாடிய பாடல் அது. ஜோராக இருக்கும். அதையும் கேளுங்கோ) https://www.youtube.com/watch?v=p2MLBf52OrI

   பாட்டைக்கேட்டு மகிழ்ந்த பாண்டிய ராஜா, அவரைப்போற்றிப் புகழ்ந்து பரிசு அளிக்கிறார். அந்தப்பரிசினை ’சுண்டைக்காய்’ எனச்சொல்லி அரசரிடமிருந்து பெற்றுக்கொள்ளாமல், கர்வத்துடன், ”முத்தமிழ் வளர்த்த இந்த மதுரை மாநகரில் எனக்குப் போட்டியாக எந்தப்பயலாவது பாட முடியுமா?” என கர்வத்துடன் சவால் விடுகிறார்.

   ராஜாவும் வேறு வழியின்றி, தமிழுக்கு ஓர் அவமானம், தன் ஆட்சிக்காலத்தில் ஏற்பட்டுவிடக்கூடாது என அஞ்சி, அந்த சவாலை ஏற்றுக் கொள்ள நேரிடுகிறது.

   மதுரை கோயிலில் பக்தியுடன் பக்திப்பாடல்கள் பாடும் ஓர் பக்தரை மறுநாள், ஹேமநாத பாகவதருக்குப் போட்டியாகப் பாடியே ஆக வேண்டும் என ராஜா முதல் நாள் இரவு உத்தரவு இட்டு விடுகிறார்.

   இதைக் கேட்டு நடுங்கிடும் சிவபக்தரான (படத்தில் நடிகர்: டி.ஆர். மஹாலிங்கம்) பத்தர் அன்று இரவே மதுரை மீனாக்ஷி கோயிலில் உள்ள சிவபெருமானிடம் ஓர் பாடலை உருக்கமாகப் பாடுகிறார்.

   அந்தப்பாடலும் (’இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை ..... என ஆரம்பித்து) மிக அருமையாகவே இருக்கும். அதையும் கேளுங்கோ. https://www.youtube.com/watch?v=hbigQxS62kk

   முத்தமிழ் வளர்த்த மதுரை மாநகருக்கும், அதன் அரசனுக்கும், தமிழுக்கும், தன் பக்தருக்கும் ஏற்பட்டுள்ள இந்த சோதனைகளைக் களைய சிவ பெருமானே, அன்று நள்ளிரவு, ஓர் மரம் வெட்டிபோல வேடமணிந்து வந்து இந்தப்பாட்டினை ஹேமநாத பாகவதர் கேட்கும்படி பாடுகிறார். இதில் 3:03 முதல் 3:20 வரை உள்ள வரிகளைக் கேளுங்கோ. ‘நான் அசைந்தால் அசையும் ..... அகிலமெல்லாமே ..... இதை அறிவாய் மனிதா உன் ஆணவம் பெரிதா’. எவ்வளவு அர்த்தம் உள்ள வரிகள் என நினைத்துப் பாருங்கோ.

   பகவான் பரமசிவனே பாடும் இந்தப் பாடலைக் கேட்டதும், ஹேமநாத பாகவதர் மிகவும் வெட்கப்பட்டு, தன் ஆணவம் முற்றிலுமாக அழிந்து, மன்னிப்புக்கடிதம் எழுதி அந்த விறகு வெட்டியாக வந்துள்ள சிவனிடமே கொடுத்துவிட்டு, மதுரையைவிட்டு இரவோடு இரவாக அரசரிடம்கூட சொல்லிக்கொள்ளாமல் ஓடிப்போய் விடுகிறார்.

   அந்தக்கடிதத்தை தன் பக்தனிடம் கொடுத்து, மன்னனிடம் சேர்ப்பிக்கச்சொல்லிவிட்டு , சிவபெருமான் சிவலிங்கத்திற்குள் போய் மறைந்து விடுகிறார். மிகவும் அருமையான கதை + காட்சிகள்.

   சிவன் விறகு வெட்டியாகப் புறப்பட்டு ரோட்டில் நடந்து வரும் போது ஓர் ஜாலியான பாட்டும் பாடுவார். அதுவும் நல்லா இருக்கும். அதன் ஆரம்பம்: ‘பார்த்தா பசுமரம் ..... படுத்துவிட்டா நெடுமரம் .... கேட்டா விறகுக்காகுமா ..... ஞானத்தங்கமே’ அதையும் கேளுங்கோ: https://www.youtube.com/watch?v=3Fu0546rs1g

   இப்போதாவது எங்கட முருகுவுக்கு எல்லாம் வெளங்கிக்கிட ஏலுமோ ..... தெரியவில்லை.

   Delete
 4. இதுவும் நல்லா இருக்குது...

  ReplyDelete
 5. ஆ...ஞா ஆ...ஞா ஆ...ஞா

  பாட்டும் நானே பாவமும் நானே...

  பாட்டும் நானே பாவமும் நானே
  பாடும் உனை நான் பாடவைத்தேனே
  பாட்டும் நானே பாவமும் நானே
  பாடும் உனை நான் பாடவைத்தேனே
  பாட்டும் நானே பாவமும் நானே..ஏ..ஏ..

  கூட்டும் இசையும் கூத்தின் முறையும்
  காட்டும் என்னிடம் கதை சொல்ல வந்தாயோ?

  கூட்டும் இசையும் கூத்தின் முறையும்
  காட்டும் என்னிடம் கதை சொல்ல வந்தாயோ?

  (பாட்டும் நானே..)

  அசையும்..பொருளில்..இசையும் நானே
  அசையும் பொருளில் இசையும் நானே
  ஆடும் கலையின் நாயகன் நானே
  அசையும் பொருளில் இசையும் நானே

  ஆடும் கலையின் நாயகன் நானே
  எதிலும் இயங்கும் இயக்கம் நானே
  என்னிசை நின்றால் அடங்கும் உலகே..ஏ..
  நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே..
  நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே

  அறிவாய் மனிதா உன் ஆணவம் பெரிதா ?
  நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே
  அறிவாய் மனிதா உன் ஆணவம் பெரிதா ?

  ஆலவாயனொடு பாடவந்தவனின்
  பாடும்வாயை இனி மூடவந்ததொரு
  (பாட்டும் நானே..)

  ReplyDelete
 6. பாடல்: பாட்டும் நானே பாவமும் நானே!

  படம்: திருவிளையாடல் (ஆண்டு 1965)

  பாடியவர்: T.M.செளந்தரராஜன்

  பாடலாக்கம்: கவியரசர் கண்ணதாசன்

  இசை: K.V. மகாதேவன்

  ReplyDelete
 7. மிகவும் அருமையான பாடல் .... அற்புதமான காட்சியமைப்பு.

  நேற்றுதான் என் பின்னூட்டங்கள் ஏதோவொன்றினில் இதுபற்றி //’நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே’// என நான் யாரிடமோ பேசியிருந்தேன்.

  அதற்குள் அது இன்று இங்கு வெளியிடப்பட்டுள்ளதில் மகிழ்ச்சி.

  பகிர்வுக்கு என் நன்றிகள்.

  ReplyDelete