Saturday, 11 June 2016

antha sivakami makanidam

38 comments:

 1. ஏன் முன்னா சிவகாமி பேர போட்டே போரடிக்குறே.......

  ReplyDelete
  Replies
  1. பூந்தளிர் 11 June 2016 at 21:30

   //ஏன் முன்னா சிவகாமி பேர போட்டே போரடிக்குறே.......//

   சிவகாமி என்றால் சிவன் மேல் அதாவது லிங்கத்தின் மேல் அதிக காமம் [ஆசை + காதல்] கொண்டவள் என்று அர்த்தம். அது பூந்தளிராகிய உனக்கு போரடிக்குதாக்கும்?

   மிகவும் புத்திசாலியான நம் முன்னா அதனை உனக்காக ஒன்றும் இங்கு வெளியிடவில்லை என்பதை முதலில் உணரவும்.

   பளீரென்று மும்பை VT யில் மின்னல்கொடி போல பச்சைப்பட்டுப்புடவையில் வந்து இறங்கிய சிவகாமி தன் தரிஸனத்தைக் காமிக்க மாட்டாளா என ஏங்குவோர் என்னைப்போலவே பலரும் உண்டு அல்லவா!

   11.05.2016 to 11.06.2016 சுத்தமா நேற்றுடன் ஒரு மாதம் ஆகிவிட்டது.

   அதுபோல ’அந்த’ ஜோரான மாம்பழக்கலரில் அரக்கு பார்டர் போட்டப் புதுப்புடவையிலும் காட்சி கொடுக்க மாட்டாளா என்ற எனது ஏக்கத்தையும் அதனால் ஏற்பட்டுள்ள என் தூக்கமின்மையையும் யார் அறிவார்? :(((((

   எதுவுமே கேட்டால் உடனே கொடுக்கணும் ’காமி’க்கணும் என்ற எண்ணமே கிடையாதோ? :(((((

   கஞ்சம் ..... மஹா கஞ்சம்.

   Delete
  2. ஆமா கஞ்சம்தான்....

   Delete
  3. பூந்தளிர் 13 June 2016 at 21:35

   //ஆமா கஞ்சம்தான்....//

   கஞ்சம் மட்டுமா? கல் நெஞ்சமும்கூடத்தான். சரி எப்படியோ போங்கோ ..... எனக்கென்ன?

   Delete
  4. //எப்படியோ போங்கோ ..... எனக்கென்ன? //

   போயிடவா ......

   Delete
  5. பூந்தளிர் 15 June 2016 at 23:30

   **எப்படியோ போங்கோ ..... எனக்கென்ன?**

   //போயிடவா ......//

   நோஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ .... அப்புறம் நான் உங்களைத் தொலைச்சுப்புடுவேனாக்கும். ஜாக்கிரதை!!!

   //போயிடவா ......//

   எங்கே??????

   மும்பை கல்யாணத்திற்குப் போனதுபோல இப்போ முருகு கல்யாணத்திற்கா? அதெல்லாம் உங்கள் இஷ்டம் மட்டுமே. என்னை ஒன்றும் பெர்மிஷன் கேட்க வேண்டாமாக்கும்.

   Delete
  6. //எப்படியோ போங்கோ ..... எனக்கென்ன? //

   //மும்பை கல்யாணத்திற்குப் போனதுபோல இப்போ முருகு கல்யாணத்திற்கா? //

   போயிடவான்னு கேட்டது ...... உங்கள விட்டு பர்மனன்டா விலகி போயிடவான்னு... ஏற்கனவே ஒருகல்யாணத்துக்கு போயிட்டு ஏண்டாப்பா போனோம்னு நொந்து போயிட்டேன்..... மறுபடியும் அதே தப்ப மறந்துகூட செய்ய மாட்டேன்பா....

   Delete
  7. //ஒருகல்யாணத்துக்கு போயிட்டு ஏண்டாப்பா போனோம்னு நொந்து போயிட்டேன்....//. மறுபடயுமா

   ஏன் ரோஜா மேடம் விருப்பப்பட்டுதானே வந்தீங்க ஆசைஆசையா எனக்கு எல்லா விதத்திலும் ஹெல்பா இருந்தீங்க.. உங்க வீட்டு விருந்துக்கும் அழைத்து திகட்ட திகட்ட உபசரித்தீங்க.. அவ்வளவு அன்பா இருந்தவங்க திடீருன்னு முகம் திருப்பிகிட்டா மனசுக்கு கஷ்டமா இருக்கே. உங்க மனசு வருத்தப்படும்படியா நான்.ஏதாவது நடந்துகிட்டேனா.. பத்து மெயில் அனுப்பினேன்..நோ ரிப்ளை போன் ஸ்விட்ச் ஆஃப.. ஏன் ஏன் பியூஷ் டெய்லி ரோஜாகிட்ட பேசியே ஆகணும்னு அடம் பிடிக்கறான் சமாளிக்கவே முடியல... ஏன் இப்படி பண்றீங்க காரணமே தெரியாம குழப்பமா இருக்கு ப்ளீஸ் ரிப்ளை....

   Delete
 2. ஆ……ஆ……ஆ..ஆ..ஆ..ஆ

  அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி – என்னைச்
  சேரும் நாள் பார்க்கச் சொல்லடி
  வேறு எவரோடும் நான் பேச வார்த்தை ஏதடி – வேலன்
  இல்லாமல் தோகை ஏதடி

  அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி…

  கண்கள் சரவணன் சூடிடும் மாலை
  கன்னங்கள் வேலவன் ஆடிடும் சோலை
  பெண்ணென பூமியில் பிறந்த பின்னாலே
  வேலை வணங்காமல் வேறென்ன வேலை

  நெஞ்சே தெரியுமா அன்றொரு நாளிலே
  நிழலாடும் விழியோடும் ஆடினானே – அன்று
  நிழலாடும் விழியோடும் ஆடினானே – என்றும்
  கண்ணில் நின்றாடச் சொல்லடி

  மலையின் சந்தனம் மார்பின் சொந்தம்
  மங்கையின் இதயமோ காளையின் சொந்தம்
  நிலையில் மாறினால் நினைவும் மாறுமோ
  நெஞ்சம் நெருங்கினால் பேதங்கள் தோன்றுமோ
  காலம் மாறினால் காதலும் மாறுமோ

  மாறாது மாறாது இறைவன் ஆணை – என்றும்
  மாறாது மாறாது இறைவன் ஆணை

  இந்த சிவகாமி மகனுடன் சேர்ந்து நில்லடி – இன்னும்
  சேரும் நாள் பார்ப்பதென்னடி

  வேறு எவரோடும் நான் பேச வார்த்தை ஏதடி – தோகை
  இல்லாமல் வேலன் ஏதடி…

  ஆ……ஆ……ஆ..ஆ..ஆ.ஆ

  அந்த சிவகாமி மகனிடம்…
  அந்த சிவகாமி மகனிடம்…
  அந்த சிவகாமி மகனிடம்…
  சேதி சொல்லடி… என்னைச்
  சேரும் நாள் பார்க்கச் சொல்லடி….

  ReplyDelete
 3. படம் : பட்டணத்தில் பூதம்
  பாடலாசிரியர் : கண்ணதாசன்
  இசை : திரு.கோவர்த்தனம்
  குரல் : T.M.S., P. சுசீலா
  நடிகர்கள் : ஜெய்சங்கர்+கே.ஆர்.விஜயா

  ReplyDelete
 4. ஆஹா ..... மீண்டும் இன்றும் ’சிவ....காமி’ யா ? ...

  சிவ சிவா ! சிவ சிவா ! சிவ சிவா ! சிவ சிவா ! சிவ சிவா !

  சிவனேன்னு எங்கோ இருக்கும் எனக்கு ஏன் இந்த சோதனை?

  ReplyDelete
  Replies
  1. முன்னா குருஜிய ஏன் கஸ்டப் படுத்துறே

   Delete
  2. mru 12 June 2016 at 22:18

   //முன்னா குருஜிய ஏன் கஸ்டப் படுத்துறே//

   என் கஷ்டம் ஒருவேளை அவளுக்கு இஷ்டமாக இருக்குமோ என்னவோ ! யாரு கண்டா?

   இன்று ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான கஷ்டம்.

   கஷ்டத்தோடு இல்லாமல் எனக்கு ’அது’ தினமும் நஷ்டமும் ஆகிறது.

   மொத்தத்தில் கஷ்டம்.....கஷ்டம் ! மஹா கஷ்டம்....டா முருகு.

   Delete
  3. //என் கஷ்டம் ஒருவேளை அவளுக்கு இஷ்டமாக இருக்குமோ என்னவோ ! யாரு கண்டா? //

   என்ன கோபூஜி இப்படி சொல்லிட்டிங்க.. யாருமே கஷ்டமே படக்கூடாது.. எல்லாருமே நல்லா இருக்கணும்னு.....

   Delete
  4. சிப்பிக்குள் முத்து. 13 June 2016 at 20:43

   **என் கஷ்டம் ஒருவேளை அவளுக்கு இஷ்டமாக இருக்குமோ என்னவோ ! யாரு கண்டா?**

   //என்ன கோபூஜி இப்படி சொல்லிட்டிங்க.. யாருமே கஷ்டமே படக்கூடாது.. எல்லாருமே நல்லா இருக்கணும்னு.....//

   ஆஹா, என்னைப் போலவே உயர்ந்த உள்ளம் உங்களுக்கும். வாழ்க ! மிக்க நன்றிம்மா.

   Delete
 5. எனக்கு மிகவும் பிடித்தமான நடிகையான புன்னகை அரசி கே.ஆர்.விஜயா நடித்த படத்திலிருந்து ஓர் அழகான பாடலை வெளியிட்டுள்ள எங்கட முன்னாக்குட்டிக்கு ஓர் ஜே ! :)

  ReplyDelete
 6. நல்ல பாட்டுதானே போட்டிருக்கா. முன்னா...

  ReplyDelete
 7. //அந்த சிவகாமி மகனிடம்… சேதி சொல்லடி… என்னைச்
  சேரும் நாள் பார்க்கச் சொல்லடி….//

  என்ற வரிகளை

  அந்த எங்கட சிவகாமியிடமே சேதி சொல்லடி ....
  என்னைச் சேரும் நாள் பார்க்கச் சொல்லடி .....

  என நான் மாற்ற விரும்புகிறேனாக்கும். :)

  ReplyDelete
 8. //அந்த எங்கட சிவகாமியிடமே சேதி சொல்லடி ....
  என்னைச் சேரும் நாள் பார்க்கச் சொல்லடி .....//

  சரி சேதி கெடச்சது... அடுத்து..என்ன.......

  ReplyDelete
  Replies
  1. பூந்தளிர் 13 June 2016 at 00:18

   **அந்த எங்கட சிவகாமியிடமே சேதி சொல்லடி ....
   என்னைச் சேரும் நாள் பார்க்கச் சொல்லடி .....**

   //சரி சேதி கெடச்சது... அடுத்து..என்ன.......//

   அவசரப்படாதே .... அததற்கு ஒரு நல்ல நேரம் காலம் அழகா அமைந்து வரணுமோள்யோ ! :)

   அததற்கு ஓர் ப்ராப்தமும் (இங்கு ப்ராப்தம் என்றால் எங்கட சாரூ அல்ல) இருக்கணுமோள்யோ !!

   Delete
  2. இங்கயும் சாரூ... வந்திட்டாளா.......

   Delete
  3. பூந்தளிர் 14 June 2016 at 23:23
   இங்கயும் சாரூ... வந்திட்டாளா.......//

   ஏதோ தெரியாமல் வந்துட்டா. கோச்சுக்காதீங்கோ.....

   Delete
 9. இந்தப் பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும்.
  ஆனால் சில பழைய பாடல்களில் கொடுமை என்னன்னா கேட்கப் பிடிக்கும், பார்க்கப் பிடிக்காது. அதுல இதுவும் ஒண்ணு.

  ReplyDelete
 10. ஹை.... ஜெயந்தி மேடம் வாங்க வாங்க.. ரொம்ப பிஸியா இருக்கீங்களா.. இங்க வந்தது சந்தோஷமா இருக்குது.. நன்றி.....

  ReplyDelete
 11. பூந்தளிர் 16 June 2016 at 23:36

  **எப்படியோ போங்கோ ..... எனக்கென்ன?**

  //போயிடவான்னு கேட்டது ...... உங்கள விட்டு பர்மனன்டா விலகி போயிடவான்னு...//

  உன்னைப் பிச்சுப்புடுவேன் பிச்சு ..... ஜாக்கிரதை.

  ReplyDelete
 12. இங்கு சிலரின் பின்னூட்டங்களைப் படித்த எனக்கு ஓர் உண்மைக்கதை நினைவுக்கு வந்தது. அதன் சுருக்கத்தை மட்டும் இங்கு நான் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்:

  -oOo-


  ’சீனப்ப நாயக்கர்’ என்ற பெயரில் மிகப்பெரிய பணக்காரர் வைர வியாபாரியாக இருந்து வருகிறார். அவரது காலம் 1484 to 1564 சுமார் 80 ஆண்டுகள் வாழ்ந்துள்ளார் எனத் தெரியவருகிறது.

  அந்தக்காலத்திலேயே அதாவது இன்றிலிருந்து 500 ஆண்டுகளுக்கு முன்பே, ஒன்பது கோடி ரூபாய்க்கு மேல் சொத்துக்கள் உண்டு அவருக்கு. பரம்பரை பணக்காரர் அவர்.

  வியாபாரத்தில் மிகவும் கெட்டிக்காரரான அவர், தான தர்மங்கள் செய்வதில் கொஞ்சமும் இஷ்டமில்லாத மஹா கஞ்சனாகவே இருந்து வந்துள்ளார். அவருடைய பத்நிக்கு (மனைவிக்கு) தான தர்மங்கள் செய்யணும் என்பதில் மனதுக்குள் ஓர் ஆசை உண்டு. இருப்பினும் தன் பர்த்தாவை (கணவரை) மீறி எதுவும் செய்யமுடியாமல் தவித்து வந்தாள்.

  மேலும் சீனப்ப நாயக்கருக்கு தெய்வ பக்தி கொஞ்சமும் இல்லாமல், உலக வாழ்க்கையில் மற்ற அனைவரையும் போலவே, காம்னி காஞ்சனங்களில் சிக்கித் தவித்துள்ளார்.

  ooooooooooooo

  ReplyDelete
 13. 2

  [காம்னி = பெண்களின் மூலம் கிடைக்கும் சிற்றின்ப சுகம். அதாவது பெண்ணாசை.

  காஞ்சனம் = அளவுக்கு மேல் செல்வம் சேர்த்தல். (அதாவது பணம், நிலம், பொன், பொருட்கள், சொத்துக்கள், மண் ஆசை, பொன் ஆசை முதலியன)

  காம்னி காஞ்சனங்களில் சிக்காதவர்களே, வைராக்யம் என்ற சம்பத்தை அடைந்தவர்கள் என்று நம் முன்னோர்கள் + பெரியோர்கள் எல்லோருமே சொல்கிறார்கள். வைராக்யம் என்ற சம்பத்துக்கு மேல் உயர்வானதோர் சம்பத்து எதுவுமே இந்த உலகில் கிடையவே கிடையாது என்றும் அடித்துச் சொல்லுகிறார்கள்.]

  ooooooooooooo

  ReplyDelete
 14. 3

  சீனப்ப நாயக்கரின் முப்பதாவது வயதில் பகவான் ஸ்ரீ பாண்டுரங்கன் அவரைத் தடுத்தாட்கொள்கிறான்.

  இதன் பின்னணியில் ஓர் மிகச் சுவையானதோர் சம்பவம் அவர் வாழ்க்கையில், பகவத் க்ருபையால் மட்டுமே நிகழ்ந்துள்ளது. அதைப்பற்றி நான் விரிவாக என் வலைப்பதிவினில் என்றாவது ஒருநாள் எழுதணும் என்று ஆசையுடன் அந்தப் பொன்னான நாட்களில் (2011 to 2015) நினைத்திருந்தேன். ஏனோ அது முடியாமலேயே போய் விட்டது, எனக்கு.

  {பகவான் இவரைத் தடுத்தாட்கொண்ட அந்தக்கதையினைக் கேட்க மிகவும் த்ரில்லிங் ஆக இருக்கும். திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள *ஸ்ரீ ஹரிஜீ* என்ற உபந்யாசகர் சொல்லி, இந்தக்கதையை நான் பலமுறை ஆடியோவாகக் கேட்டு மகிழ்ந்துள்ளேன். இந்த *ஸ்ரீ ஹரிஜி* அவர்களின் மனைவிதான் பிரபல சங்கீத உபந்யாசகர் திருமதி. விஸாஹா ஹரி அவர்கள் ஆவார்கள். அவர்களைப்பற்றி நான் எழுதியுள்ள இரு பதிவுகளுக்கான இணைப்புகள் இதோ:

  http://gopu1949.blogspot.in/2012/03/svanubhava-2012-1-of-2.html
  http://gopu1949.blogspot.in/2012/03/svanubhava-2012-2-of-2.html }

  ooooooooooooo

  ReplyDelete
 15. 4

  பகவான் இவரைத் தடுத்தாட்கொண்டதும், தான் யார்? தான் ஏன் பிறந்தோம்? தான் என்ன செய்வதற்காக இந்த மனிதப் பிறவி எடுத்துள்ளோம்? அடடா மூன்று வயது முதலே பக்தி செய்யாமல், இந்த முப்பது வருடங்களை விரக்தமாக்கி (வீணாக்கி) விட்டோமே, என்பதையெல்லாம் உணர்ந்து கொள்கிறார்.

  உடனே தன் பணத்தையோ, சொத்துக்களையோ, பகட்டான வாழ்க்கையினையோ திரும்பியே பார்க்காமல், அனைத்தையும் அப்படியே உதறித்தள்ளிவிட்டு, தன் மனைவி (லக்ஷ்மிபாய்) மற்றும் இரு சின்னக் குழந்தைகளுடன் வீட்டைவிட்டுப் புறப்பட்டுவிடுகிறார். அன்றுமுதல் இவருக்கு தன் வாழ்க்கையில் அபார ஞானமும், வைராக்யமும் ஏற்பட்டு பரம பாகவதர் ஆகிவிடுகிறார்.

  ooooooooooooo

  ReplyDelete
 16. 5

  லஜ்ஜையை (வெட்கத்தை) விட்டு,

  கால்களில் கஜ்ஜையைக்கட்டிக்கொண்டு (காலில் சலங்கைகள்),

  கையில் தம்பூராவுடனும்,

  உஞ்சவிருத்தி எடுப்பதற்காகக் (பகவன்நாமாக்களைச் சொல்லி பிக்ஷை எடுத்தல்) கழுத்தில்-தோளில் தொங்கவிடப்பட்ட ஓர் அக்ஷய பாத்திரத்துடனும்,

  பண்டரீபுரம் நோக்கி பாதயாத்திரையாகவே புறப்படுகிறார்.

  ooooooooooooo

  ReplyDelete
 17. 6

  உடனே இவரின் உறவினர்கள், பந்துக்கள், தாயாதிகள், பங்காளிகள் போன்ற அனைவரும் (இதுவரை இவரின் செல்வச் செருக்கினைக் கண்டு பொறாமைப்பட்டுக் கொண்டிருந்தவர்கள்கூட) ஓடி வந்து இவரிடம் கேள்விகள் பல கேட்கின்றார்கள். இவரின் திடீர் மாற்றத்துடன் கூடிய இந்தச் செயலை வன்மையாகக் கண்டிக்கிறார்கள்.

  நேற்றுவரை பலகோடிகளுக்கு அதிபதியாக இருந்தவர் + மஹா கஞ்சனாக இருந்தவர், இன்று அனைத்தையும் உதறித்தள்ளிவிட்டு, உஞ்சவிருத்தி வாங்கிச் சாப்பிட ஓர் அக்ஷய பாத்திரத்துடன் எங்கோ பரதேசிபோலப் பாதயாத்திரையாகப் புறப்படுகிறார் என்றால் ஊரும் உலகமும் கேள்வி கேட்காமல் சும்மாவா இருக்கும்?

  ooooooooooooo

  ReplyDelete
 18. 7

  ”சீனப்பா .... என்ன நடந்ததுப்பா .... ஏன் இப்படி புறப்பட்டு விட்டாய்? எங்கு புறப்பட்டுவிட்டாய்?” என பலகேள்விகள் கேட்கிறார்கள்.

  அதற்கு சீனப்ப நாயக்கர் ......

  “என்ன நடந்தது என்று என்னால் எடுத்துச் சொல்லவும்
  =======================================================
  முடியாது. அப்படியே நான் சொன்னாலும்
  ===========================================
  உங்களுக்கெல்லாம் அது புரியவும் புரியாது”
  =============================================

  என்கிறார்.

  ooooooooooooo

  ReplyDelete
 19. 8

  ஹம்பி என்ற ஊருக்குச் சென்று, வியாசராயர் என்ற மஹானிடம் வைஷ்ணவ தீக்ஷை பெற்றுக்கொள்கிறார். பரம வைஷ்ணவன் ஆகி விடுகிறார். அன்று முதல் ‘புரந்தரதாஸர்’ என் அழைக்கப்படுகிறார்.

  பகவன்நாமா சொல்லிக்கொண்டு, பிக்ஷை எடுத்துக்கொண்டு (உஞ்சவிருத்தி தர்மம் மேற்கொண்டு), அதில் கிடைத்ததைச் சாப்பிட்டுக்கொண்டு ஸாதுக்களுக்கு சேவைகள் செய்து வருகிறார்.

  தன் குருவிடம் உத்தரவு வாங்கிக்கொண்டு, பண்டரீபுரம் சென்று, சந்திரபாஹா நதியில் ஸ்நானம் செய்துவிட்டு, ஸ்ரீ பாண்டுரங்கனை ஸேவித்துவிட்டு, அங்குள்ள பாகவதாள் அனைவரையும் ஆலிங்கனம் செய்துகொண்டுவிட்டு, ஸ்ரீ பாண்டுரங்கனிடமும் விடைபெற்றுக்கொண்டு, ஆஸேது ஹிமாசலம் (இராமேஸ்வரம் முதல் இமயமலை வரை) நடந்தே பயணம் மேற்கொண்டு எல்லா பெருமாள் கோயில்களிலும் கீர்த்தனைகள் பாடியுள்ளார். ஒவ்வொரு கோயில்களிலும் தன் அபாரமான கீர்த்தனைகளால் மங்களாசாசனம் செய்துள்ளார்.

  இவர் இயற்றியுள்ள கிருதிகள் சுமார் ஐந்து லக்ஷத்திற்கும் மேல் உள்ளன.

  கர்நாடக சங்கீதத்திற்கே பிதாமஹர் இவர் மட்டுமே ஆவார்.

  ooooooooooooo

  ReplyDelete
 20. 9

  அதன்பிறகு திருவாரூர் / திருவையாறு மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகப்பிரும்மம் கர்நாடக சங்கீதத்தை மேலும் வளர்த்துள்ளார் என்று சொல்லுகிறார்கள்.

  தியாகப் பிரும்மத்தின் அம்மாவே அவருக்கு, புரந்தரதாஸர் கிருதிகளைத்தான் சிறுவயதில் சொல்லி வைத்திருக்கிறாள்.

  தன் எல்லா பாடல்களிலும் இறுதி வரியில் ‘புரந்தர விட்டலா’ என்று தன் கடவுளை அழைத்து அவருக்கே அந்த பாடல்களை அர்ப்பணித்தார், புரந்தரதாஸர்.

  மனித வாழ்க்கையின் மூன்று தூண்களான ஞானம் (அறிவு), பக்தி, வைராக்கியத்தை தன் அனைத்து பாடல்களிலும் வலியுறுத்தி பாடியுள்ள தாஸர், தன் வாழ்நாள் முழுக்க எண்ணத்திலும், செயலிலும் எளிமையையும் தூய்மையையும் கடைபிடித்து மற்றவர்களுக்கும் அதையே அறிவுறுத்தியுள்ளார்.

  கர்நாடக இசையில் ஆரம்ப பாடமாக சொல்லித் தரப்படும் ‘மாயாமாயவகௌள’ ராகத்தை வடிவமைத்தவரும் புரந்தரதாஸர்தான்.

  கர்நாடக சங்கீதத்தை எப்படி சொல்லிக் கொடுக்க வேண்டுமென்பதை நெறிமுறைப்படுத்தியவர் நம் தாஸர். அந்த நெறிமுறையே இன்றளவும் பயன்படுத்தப் படுகிறது.

  ஸ்வரம்... ராகம்... லயங்களுக்கு ஏற்றவாறு மொழியை அழகாக வடிவமைத்து இசையமைத்து பாடியவர், தாஸர். அவரை நாரதரின் அவதாரம் எனச் சொல்வது உண்டு.

  ooooooooooooo

  ReplyDelete
 21. 10

  எம்.எஸ். சுப்புலக்ஷ்மியின் குரலில் ஒலிக்கும், ’ஜகதோத் தாரண.....’ என்னும் ஸ்ரீ கிருஷ்ணனின் லீலைகளை வர்ணிக்கும் கீர்த்தனை, எம்.எல். வஸந்த குமாரியின் குரலில் ஒலிக்கும் வேங்கடவனைப் பற்றிய ‘வேங்கடாசல நிலையம்’ என்னும் கீர்த்தனை ஆகியவற்றின் மூலம் புரந்தரதாஸர் இன்றும் நம்மிடையே வாழ்ந்து வருகிறார்.

  ooooooooooooo

  ReplyDelete
 22. 11

  ’நடப்பதெல்லாம் நாராயணன் செயல் மட்டுமே’ என்று நாம் ஒவ்வொருவரும் உணர்வோமாக !

  வைராக்யம் என்ற சம்பத்தை நாமும் நமக்குள் வளர்த்துக்கொள்வோமாக !!

  //“என்ன நடந்தது என்று என்னால் எடுத்துச் சொல்லவும் முடியாது. அப்படியே நான் சொன்னாலும் உங்களுக்கெல்லாம் அது புரியவும் புரியாது” - சீனப்ப நாயக்கர் என்ற புரந்தர தாஸர் //

  பகவான் தன்னைத் தடுத்தாட்கொண்டதை அவரால் எப்படி பிறருக்கு எடுத்துச் சொல்லிப் புரிய வைக்க முடியும்?

  ooooooooooooo

  ReplyDelete
 23. என்ன அற்புதமான கதை.. ஸாயங்காலம் வீட்டுக்கு போனதுமே பக்கத்து வீட்டு மாமிக்கு படிச்சு காட்டணும். ரொம்ப சந்தோஷ படுவாங்க.. இதிலெல்லாம் அவங்களுக்கு ரொம்ப ஆர்வம் இருக்கு...
  இப்ப இந்த கதை இங்கு ஏன்.சொன்னீங்கன்னு தான் புரியல...

  ReplyDelete
  Replies
  1. சிப்பிக்குள் முத்து. 17 June 2016 at 21:33

   //என்ன அற்புதமான கதை..//

   சீனப்ப நாயக்கர் என்று அழைக்கப்பட்ட புரந்தரதாஸர் பற்றிய இது, அவரின் வாழ்க்கை வரலாறின் மிகச் சிறியதோர் பகுதி மட்டுமே.

   பகவான் அவரைத் தடுத்தாட்கொண்டது தான் மிகவும் சுவாரஸ்யமான, நகைச்சுவைகள் கலந்த, எனக்கு மிகவும் பிடித்த, மெயினான கதைப்பகுதியாகும். அதை நான் இங்கு இப்போது சொல்லவில்லை. அதைப்பற்றி விரிவாக அழகாக ஒன்றும் விடாமல் சொன்னால்தான் அனைவருமே மிகவும் ரஸித்து மகிழமுடியும்.

   //ஸாயங்காலம் வீட்டுக்கு போனதுமே பக்கத்து வீட்டு மாமிக்கு படிச்சு காட்டணும். ரொம்ப சந்தோஷ படுவாங்க.. இதிலெல்லாம் அவங்களுக்கு ரொம்ப ஆர்வம் இருக்கு...//

   மிகவும் சந்தோஷம். இறைவன் அவரைத் தடுத்து ஆட்கொண்ட இதன் மெயின் கதையில் மிகவும் விலை உயர்ந்த ‘வைர மூக்குத்தி’ முக்கிய இடம் பெறும்.

   ஒருவேளை உங்கள் பக்கத்தாத்து மாமிக்கும்கூட அந்தக்கதை தெரிந்திருக்கலாம்.

   //இப்ப இந்த கதை இங்கு ஏன் சொன்னீங்கன்னு தான் புரியல...//

   ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ..... நீங்கள் உள்பட இதில் சம்பந்தப்பட்டுள்ள எல்லோருக்குமே ஏதோ கொஞ்சம் புரிந்திருக்கும். அதுபோதும் எனக்கு.

   ”என்னதான் நடந்தது, இப்ப இந்த கதையை இங்கு ஏன் நான் சொன்னேன் என்று என்னால் மேலும் விளக்கமாக எடுத்துச் சொல்லவும் முடியாது. அப்படியே நான் சொன்னாலும் உங்களுக்கெல்லாம் அது புரியவும் புரியாது” - vgk :)

   Delete