Saturday 25 June 2016

kuthu samba passarisi

22 comments:

  1. இது நம்ம வீட்டு கல்யாணம்.. எல்லாரும் வந்து போடுங்க...

    ReplyDelete
  2. பாட்டு ஆட்டம் நல்லாதா இருக்குது..

    ReplyDelete
  3. இந்த பாட்டுகூட நல்லா இருக்கே.....

    ReplyDelete
  4. அடி ராக்காயி மூக்காயி குப்பாயி
    செவப்பாயி கஸ்தூரி மீனாக்‌ஷி
    தங்கப்பல் கரையா
    தங்கமகளுக்கும் வாத்யாரையாவுக்கும்
    தை மாசம் கல்யாணம் நெல்லு குத்த வாங்கடியோ

    சுத்த சம்பா பச்ச நெல்லு குத்தத்தா வேணும்
    முத்து முத்தா பச்சரிசி அள்ளதா வேணும்
    முல்லை வெள்ளி போல அன்னம் பொங்கதா வேணும்
    நம்ம வீட்டு கல்யாணம் இது நம்ம வீட்டு கல்யாணம்

    சுத்த சம்பா பச்ச நெல்லு குத்தத்தா வேணும்
    முத்து முத்தா பச்சரிசி அள்ளதா வேணும்
    முல்லை வெள்ளி போல அன்னம் பொங்கதா வேணும்
    நம்ம வீட்டு கல்யாணம் இது நம்ம வீட்டு கல்யாணம்

    பத்தோடு ஒண்ணு பலகாரம் பன்ன
    சத்தாக மாவிடிங்க

    ஓ ஒய்யா

    கல்லோடு உமியும் சேராம பாத்து பக்குவமா இடிங்க
    பஞ்சு பஞ்சாக வரணும் பணியாரம்
    வெள்ளி நூலாக வரணும் இடியாப்பம்
    பஞ்சு பஞ்சாக வரணும் பணியாரம்
    வெள்ளி நூலாக வரணும் இடியாப்பம்
    இதுதானே கல்யாண விருந்தென்று
    ஊரே பாரட்ட வேணும்

    சுத்த சம்பா பச்ச நெல்லு குத்தத்தா வேணும்
    முத்து முத்தா பச்சரிசி அள்ளதா வேணும்
    முல்லை வெள்ளி போல அன்னம் பொங்கதா வேணும்
    நம்ம வீட்டு கல்யாணம் இது நம்ம வீட்டு கல்யாணம்

    லல்லி லல்லி லாலி லல்லி லாலி லாலி லாலி லல்லி லாலி லல்லி
    லல்லி லாலி லாலி லாலி லல்லி

    மாப்பிள்ளை பொண்ணு மணவரை காண
    போனாலே கோலமிடுங்க

    ஓ ஒய்யா

    மாவிலை தென்னை இளங்குருதாக
    வீடெங்கும் ஆடவிடுங்க
    வள்ளி மானக வரணும் மணபொண்ணு
    தங்க வேலாக வரணும் மாப்பிள்ளை
    வள்ளி மானக வரணும் மணபொண்ணு
    தங்க வேலாக வரணும் மாப்பிள்ளை
    இதுதானே கல்யாணமென்று
    ஊரே பாரட்ட வேணும்

    சுத்த மஞ்சள் பட்டுசேல கட்டதான் வேணும்
    முத்து முத்தா மல்லிகை பூ சூடத்தான் வேணும்

    சுத்த மஞ்சள் பட்டுசேல கட்டதான் வேணும்
    முத்து முத்தா மல்லிகை பூ சூடத்தான் வேணும்

    முல்லை வெள்ளி போல பொண்ணு மின்னதான் வேணும்
    நம்ம வீட்டு கல்யாணம் இது நம்ம வீட்டு கல்யாணம்

    நம்ம வீட்டு கல்யாணம் இது நம்ம வீட்டு கல்யாணம்
    நம்ம வீட்டு கல்யாணம் இது நம்ம வீட்டு கல்யாணம்

    ReplyDelete
  5. படம்: அன்னக்கிளி (1976)

    இசை: இளையராஜா

    பாடல் வரிகள்: பஞ்சு அருணாசலம்

    பாடியவர்: எஸ். ஜானகி

    ReplyDelete
  6. ஆஹா, நம் செல்லக்குட்டி முருகுவின் நிக்காஹ் வுக்காக,

    ’இது நம்ம வீட்டுக்கல்யாணம் .... எல்லோரும் வந்து போடுங்க’

    என அழைப்பு விட்டு இந்தப்பாடலை அழகாகத் தேர்ந்தெடுத்துத் தந்துள்ள எங்கட முன்னாக்குட்டிக்கு என் முதற்கண் நன்றிகள்.

    ReplyDelete
  7. இந்தப்பாடல் காட்சிகளில், ஒவ்வொருத்தியும் மிக நீண்ட கெட்டியான உறுதியான, விரைப்பான, உலக்கையைக் கையில் பிடித்துக்கொண்டு குத்தோ குத்தெனக் குத்துவது சூப்பரோ சூப்பராக உள்ளது.

    இவ்வாறு குத்தக்குத்த அந்த உரல்களுக்கும் உலக்கைகளுக்கும் எவ்வளவு சந்தோஷமாக இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. உரலுக்கு வலிக்காதோஓஓஓ

      Delete
    2. பூந்தளிர் 26 June 2016 at 22:25

      //உரலுக்கு வலிக்காதோஓஓஓ//

      கொஞ்சம் வலிக்கும்தான். இன்ப வலி அல்லவா .... அதனால் பொறுத்துக்கொள்ளுமோ என்னவோ !

      உரலின் இன்ப உணர்வுகளைப் பற்றி உலக்கையிடம் போய்க் கேட்டால் எப்படி உலக்கையால் பதில் சொல்ல முடியும்?

      ooooooooooooooo

      ’தங்கப்பதக்கம்’ என்ற சிவாஜி நடித்த படத்தில் 'சோதனை மேல் சோதனை .... போதுமடா சாமி; வேதனைதான் வாழ்க்கையென்றால் தாங்காது பூமி’ என்று ஆரம்பிக்கும் ஓர் பாடலில் ஒருசில வரிகள் இவ்வாறு வரும்:


      அடி தாங்கும் உள்ளம் இது
      இடி தாங்குமோ ...........

      இடி போலப் பிள்ளை வந்தால்
      மடி தாங்குமோ ............”

      Delete
  8. இந்தக் காலத்தில் உரல் + உலக்கையைப் பலரும் பார்த்திருக்கவே மாட்டார்கள்.

    அந்தக்காலத்தில் நெல்லைப்போட்டு இதுபோலக் குத்திக்குத்தித்தான் கைக்குத்தல் அரிசியே தயாரிப்பார்கள்.

    அரிசி தனியாகவும் உமி தனியாகவும் உரலில் தங்கிவிடும். பிறகு அதனை முறங்களில் வைத்து கையால் புடைத்து ஆட்டுவார்கள். அப்போது உமி மட்டும் பிரிந்து பறந்து கீழே விழுந்துவிடும். அதனைத் திரட்டி மாடுகளுக்கு தீவனமாகத் தருவார்கள்.

    முறங்களில் பச்சரிசி மட்டுமே தங்கிவிடும். இந்த கைக்குத்தல் அரிசி உடம்புக்கு மிகவும் நல்லது. அதில் உள்ள சத்து போகவே போகாது.

    இப்போதெல்லாம் மூட்டை மூட்டையாக மிகச்சுலபமாக நெல் அரைத்துக்கொடுக்க மிஷின்கள் வந்துவிட்டன. அதனால் உரல் + உலக்கைகளுக்கு வேலையே இல்லை.

    மிஷினில் அரைப்பதாலும் பிறகு அரிசியைப் பாலிஷ் செய்து விடுவதாலும் அதிலுள்ள சத்துக்களும் போய்விடுகின்றன. வெறும் சக்கையை மட்டுமே நாம் பச்சரிசி சோறு என்ற பெயரில் இன்று சாப்பிட்டு வருகிறோம்.

    உரல் + உலக்கை பற்றியே நான் மிகவும் நகைச்சுவையாக ஓர் கதை எழுதியுள்ளேன். எல்லோரும் படித்துப்பாருங்கோ. இதோ இணைப்பு:
    http://gopu1949.blogspot.in/2011/02/blog-post_13.html

    ReplyDelete
  9. ”இவள் மிகவும் கெட்டிக்காரி ..... கமுக்கட்டை தெரியாமல் நெல் குத்துவாள்”

    என கிண்டலாக அந்தக்காலத்தில் ஒரு பழமொழி சொல்லுவார்கள்.

    அந்தக்காலத்தில் பெரும்பாலும் பெண்கள் ரவிக்கையே அணிய மாட்டார்கள்.

    அவளைவிட உயரமான உறுதியான உலக்கையை இரு கைகளிலும் மாற்றி மாற்றிப் பிடித்துக்கொண்டு, தன்னுடைய கமுக்கட்டை தெரியாமல் எப்படி நெல் குத்த முடியும்?

    பிறருக்குத் தெரியாமல் எந்தக்காரியமும் நாம் செய்யவே முடியாது என்பதைச் சொல்லத்தான், இந்தப் பழமொழி ஏற்பட்டுள்ளது என்பதை உணர்ந்துகொள்வோமாக ! :)

    ReplyDelete
  10. அப்பாடா இந்த விஷயங்க எல்லாமே இப்தான் கேள்வி படுறேன்.. கோபூஜி தயவுல.....

    ReplyDelete
    Replies
    1. சிப்பிக்குள் முத்து. 25 June 2016 at 23:26

      //அப்பாடா இந்த விஷயங்க எல்லாமே இப்பத்தான் கேள்வி படுறேன்.. கோபூஜி தயவுல.....//

      மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி.

      http://gopu1949.blogspot.in/2011/02/blog-post_13.html உலக்கை பற்றிய இதனை அவசியமாகப் படியுங்கோ, முன்னா. :)

      என் உலக்கை எப்படி என்று கமெண்ட்ஸ் எழுதுங்கோ.

      Delete
    2. //என் உலக்கை எப்படி என்று கமெண்ட்ஸ் எழுதுங்கோ.//

      உங்க உலக்கிய பத்தி அவ கமெண்ட் போடணுமா......))))))

      Delete
    3. பூந்தளிர் 28 June 2016 at 00:42

      **என் உலக்கை எப்படி என்று கமெண்ட்ஸ் எழுதுங்கோ.**

      //உங்க உலக்கிய பத்தி அவ கமெண்ட் போடணுமா......))))))//

      அடாடா !

      என்னம்மா இப்பூடியெல்லாம் சொல்றீங்களேம்மா......!

      Delete
  11. ஆமா பாட்டும் நல்லா இருக்கு கோபால்ஜியின் விளக்கங்களும் சூப்பரா இருக்கு....

    ReplyDelete
    Replies
    1. ப்ராப்தம் 25 June 2016 at 23:35

      //ஆமா பாட்டும் நல்லா இருக்கு; கோபால்ஜியின் விளக்கங்களும் சூப்பரா இருக்கு....//

      மிக்க நன்றி.....டா சாரூஊஊஊஊ.

      Delete
  12. வீடியோவில் 1:50 to 1:60 மீண்டும் கவனித்துப்பாருங்கோ .....

    ’மேயற மாட்ட நக்கற மாடு கெடுத்துச்சாம்’ என்று ஒரு பழமொழி சொல்லுவார்கள். அதுபோல உள்ளது இதுவும்.

    ஒருத்தி மாங்குமாங்குன்னு உலக்கையாலே உரலில் இடித்துக்கொண்டு இருக்கும்போது, இன்னொருத்தி அவளின் பின்புறம், தன் பின்புறத்தால் நன்னாத் தேய்ச்சுட்டுப்போறாளே !

    ReplyDelete
    Replies
    1. ஹையோ... ஹயயோ..... என்னா ரசன என்னா ரசன..... இப்படில்லாம் சொன்னா எங்க பாட்டி ஒரு பழமொழி சொல்வாங்க... அத இங்க சொல்ல கூடாது......

      Delete
    2. பூந்தளிர் 28 June 2016 at 00:44

      //ஹையோ... ஹயயோ..... என்னா ரசன என்னா ரசன.....//

      :)))))

      //இப்படில்லாம் சொன்னா எங்க பாட்டி ஒரு பழமொழி சொல்வாங்க... அத இங்க சொல்ல கூடாது......//

      அடடா, அந்தத் தங்களின் பாட்டி சொன்னப் பழமொழி என்னவென்று தெரியாமல், என் மண்டையே வெடித்திடும் போலிருக்கே. இப்படியொரு சஸ்பென்ஸ் கொடுத்தால் எப்பூடி ? ஏற்கனவே படுத்தால் தூக்கம் வருவது இல்லை. இன்று இதுபோல மேலும் ஒரு பிரச்சனை.

      ‘சோதனை மேல் சோதனை .... போதுமடா சாமி; வேதனைதான் வாழ்க்கையென்றால் தாங்காது பூமி’

      Delete
  13. ஹா ஹா சிரிப்பாணி பொத்துகிச்சே.

    ReplyDelete
    Replies
    1. சிப்பிக்குள் முத்து. 26 June 2016 at 06:55

      //ஹா ஹா சிரிப்பாணி பொத்துகிச்சே.//

      :)))))

      Delete